search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174792"

    • மத்திய ரெயில்வே சார்பில் 50 ஆடை கேமராக்கள் மும்பை ரெயில்வே கோட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அநாகரிக செயல்களை தடுக்கும் விதமாக, டிக்கெட் பரிசோதகர்களின் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    புது டெல்லி:

    ஆடை கேமராக்கள் முதன்முறையாக பிரிட்டனில் அங்குள்ள போலீசார் ஆடையில் அணிந்து கொள்ளும் வகையில் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு நாடுகளில் காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில் பல்வேறு போலீஸ் படைகளில் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவிலும் பல்வேறு படைகளில் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது முதன் முறையாக ரெயில்வேயிலும் ஆடை கேமரா திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் மும்பை மண்டல ரெயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இந்த ஆடை கேமரா திட்டம் தற்போது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ரெயில்வே சார்பில் 50 ஆடை கேமராக்கள் மும்பை ரெயில்வே கோட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய ரெயில்வே மண்டலத்தில் அண்மையில் ரெயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதுபோல, ரெயில்களில் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இது போன்ற அநாகரிக செயல்களை தடுக்கும் விதமாக, டிக்கெட் பரிசோதகர்களின் ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் பரிசோதனையில் வெளிப்படைத் தன்மையையும் இது உறுதிப்படுத்தும்.

    மும்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முன்னோடித் திட்டம் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு சாதக-பாதகங்களை கணக்கில் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தலா ரூ. 9 ஆயிரம் விலையுடைய இந்த ஆடை கேமரா, தொடர்ச்சியாக 20 மணி நேரம் பதிவு செய்யும் திறன் கொண்டதாகும்.

    • சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை இயங்கி வருகிறது.
    • கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 150 பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வேளச்சேரியையும், பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரெயில் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 19 ரெயில் நிலையங்கள் உள்ளன. பறக்கும் ரெயிலில் பயணம் செய்ய குறைந்த அளவிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறக்கும் ரெயிலில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் மட்டுமே ஆகும்.

    இந்த நிலையில் பறக்கும் ரெயில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.84.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு ரெயில்வே பறக்கும் ரெயில் சேவைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கு மேல் செலவிடுகிறது. இந்த பணம் ரெயில் இயக்கம், பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்காக செலவிடப்படுகிறது. பறக்கும் ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் தெற்கு ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.17.25 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது. இந்த நிலையில் பறக்கும் ரெயில் சேவையை தெற்கு ரெயில்வேயிடம் இருந்து கையகப்படுத்த தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. எனவே விரைவில் பறக்கும் ரெயில் சேவைகள் அனைத்தும் தமிழக அரசுக்கு மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது இழப்பு ஏற்பட்டு வருவதால் ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பறக்கும் ரெயில் கட்டணம் உயருகிறது. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட உள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை கையகப்படுத்தியப் பிறகு பறக்கும் ரெயில் பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். பறக்கும் ரெயிலை தமிழக அரசு ஒரே நேரத்தில் கையகப்படுத்தினால் 150 ரெயில் பெட்டிகளை வாங்கும். அதன் விலை மட்டும் சுமார் ரூ.140 கோடி ஆகும்.

    மேலும் கையகப்படுத்த நடவடிக்கை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பறக்கும் ரெயில் சேவையை கையகப்படுத்த ரூ.500 கோடிக்கு மேல் செலுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிகிறது.

    முன்னதாக இந்த திட்டம் 2 நிலைகளில் கையகப்படுத்தப்படுவதாக இருந்தது. அதன்படி சென்னை பெரு நகர மேம்பாட்டு ஆணையம் அனைத்து பறக்கும் ரெயில் நிலையங்களையும் வணிக ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்றும், செயல்பாடு மற்றும் பராமரிப்பை தெற்கு ரெயில்வே நிர்வகிக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. அடுத்த கட்டத்தில் பறக்கும் ரெயில் சேவை முழுவதையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. பறக்கும் ரெயில் முதலில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் இணைக்கப்பட இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. சென்னை கடற்கரை மற்றும் பூங்கா ரெயில் நிலையங்களுக்கிடையே புதிய வழித் தடத்தை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக சிக்கல் எழுந்தது.

    இதனால் 2018-ம் ஆண்டு இந்த திட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன.
    • இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரெயில்க ளாக இயக்கப்பட்டு வரு கின்றன. இந்த ரெயில்களின் சேவை காலம் வருகிற 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06547) சனிக்கிழமை களில் காலை 7.50 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு கிருஷ்ணரா ஜபுரம், பங்காருபேட்டை வழியாக காலை 11.50 மணிக்கு சேலம் வந்தடை யும். இங்கிருந்து 11.55 மணிக்கு புறப்பட்டு நாமக்கல், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வழியாக இரவு 7 மணிக்கு வேளாங் கண்ணி சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் வேளாங் கண்ணி- பெங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06548) சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.10 மணிக்கு சேலம் வந்த டையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலம் தெரிவித்துள்ளது.

    • மதுரை அருகே ரெயில் மோதி பலியான வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை- கீழ் மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 3-ந் தேதி இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வலது பக்க வயிற்றில் கருப்பு மச்சமும், வலது கால் முட்டிக்கு கீழ் பழைய காயத்தழும்பும், கருப்பு மச்சமும் காணப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரவைக்காக நெல் அனுப்பப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி, 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன.

    பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் வீதம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும்.
    • நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும்.

    திருப்பூர்:

    சேலம் கோட்ட ரெயில்வே பொது மேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையம் - தொட்டிபாளையம் இடையே கான்கீரிட் சிலாப் மாற்றப்பட்டு, தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது.இதனால் நாளை 5-ந்தேதி, திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயக்கப்படும், பாசஞ்சர் ெரயில் (எண்: 16843) ஈரோடு வரை மட்டும் இயங்கும். திருப்பூர், சோமனூர் செல்லாது.

    அதைப்போல் மறுமார்க்கமாக, மே, 6-ந் தேதி, பாலக்காட்டுக்கு பதில், ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு பாசஞ்சர் (எண்:16322) இயக்கப்படும். இதைப்போல் நாளை (5ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ஈரோட்டுடன் நிறுத்தப்படும். திருப்பூர், கோவைக்கு வராது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூரோடு ரெயில் நிறுத்தப்பட்டது.
    • காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    பராமரிப்பு பணி நடைபெறுவதால் தஞ்சாவூ ரோடு ரயில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து அதில் இருந்து இறங்கிய பயணிகளில் 25-க்கும் மேற்பட்டோர் ரெயில்வே போலீசாரிடம் முறையி ட்டனர்.

    எங்களுக்கு காரைக்கால் வரை செல்வதற்கு டிக்கெட் கட்டணம் வசூலி க்கப்பட்டுள்ளது.

    ஆனால் தஞ்சாவூரோடு ரயில் நிறுத்தப்பட்டது என்றனர்.

    அதற்கு போலீசார், பராமரிப்பு பணியால் இரண்டு வாரங்களாக திருச்சியில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் மட்டும் காரைக்கால் செல்லாமல் தஞ்சாவூர் வரை மட்டுமே செல்கிறது.

    பணிகள் சில நாட்களில் முடிவடைந்து விடும். பின்னர் வழக்கம்போல் காரைக்கால் வரை செல்லும். உங்களுக்கு தஞ்சாவூரில் இருந்து வேறு நேரங்களில் செல்லும் காரைக்கால் ரெயிலில் பயணம் செய்வதற்காக கட்டணம் வசூலித்துள்ளனர்.

    வேண்டுமென்றால் நீங்கள் கவுண்டரில் சென்று மீதமுள்ள பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றனர்.

    இதைத் தொடர்ந்து அந்த பயணிகள் கவுண்டரில் சென்று மீதம் பணத்தை வாங்கிக் கொண்டு காரைக்கால் சென்றனர்.

    • இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
    • 53 வழித் தடங்களிலும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

    2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.

    சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரெயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரெயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும்.

    130 கி.மீ. வேகத்தை ரெயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.

    சென்னை-பெங்களூரு-மைசூர் வந்தே பாரத் ரெயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும்.

    தெற்கு ரெயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.

    • போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.
    • ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.

    திருப்பூர் :

    போத்தனூர் ரெயில் நிலையத்தில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால், வருகிற 30-ந் தேதி ரெயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்காது. மாறாக சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும். அங்கிருந்து கேரளா நோக்கி செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் ரெயில் திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று மங்களூரு செல்லும்.

    வழக்கமான வழித்தடமான குளித்தலை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் ரெயில் நிலையம் செல்லாது. ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.பாலக்காடு செல்லாது.

    ஷாலிமர் - நாகர்கோவில், திப்ரூகர் - கன்னியாகுமரி, இரு ரயில்களும் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.புது டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.

    நாளை 30-ந் தேதி பாட்னா - எர்ணாகுளம் நான்கு மணி நேரம், சில்சார் - திருவனந்தபுரம் ரெயில்கள் 3 மணி நேரம் 20 நிமிடம், புதுடில்லி - திருவனந்தபுரம், கேரளா எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வழித்தடத்தில் ஏதுவான பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜோத்பூர்- தாம்பரம் (06056) இடையேயான சிறப்பு ரெயில் நாளை 30, மே 7 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு ஜோத்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 7:15மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- ஜோத்பூர் (06055) சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி பிற்பகல் 2மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் புறப்பட்டு சனிக்கிழமை மாலை 5:20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.இந்த ெரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, பன்வால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்
    • ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் சகாய சிம்சன். இவரது மகன் ஷனீஸ் (வயது 26).

    இவரது தாயார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில் சகாய சிம்சனும் இறந்து விட்டதால், ஷனீஸ் தனது உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த ஷனீஸ், தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார்.

    இந்தநிலையில் நேற்று ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் பாபு, பழனி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    ஷனீஸின் மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே ஷனீஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஷனீஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தாரா?

    மாணவர் ஷனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷனீஸ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    எனவே இந்த விளை யாட்டில் ஷனீஸ் அதிக பணத்தை இழந்திருக்கலாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ரெயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 4 சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் - 06035) எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இந்த ரயில் சேவை நாளை (15-ந் தேதி) மற்றும் 22-ம் தேதிகளில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் வேளாங்கண்ணி- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06036) வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    இந்த ரயில் 16 மற்றும் 23-ந் தேதிகளில் நீடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ரெயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
    • ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும்.

    திருப்பூர் :

    வந்தே பாரத் ரெயில் வருகையை தொடர்ந்து குறிப்பிட்ட சில ெரயில்களின் வேகத்தை அதிகரிக்க ெரயில்வே முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக சென்னை - பெங்களூரு, சென்னை - கோவை சதாப்தி உள்ளிட்ட ெரயில்கள் வேகம் நடப்பாண்டு ஜூன் முதல் அதிகரிக்கப்பட உள்ளது.இதற்காக 1,445 கி.மீ., நீளத்துக்கான இணைப்பு பாதைகளின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 413 கி.மீ., தூரத்துக்கு ரெயில் பாதைகளில் அதிகபட்ச வேகம் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை - ரேணிகுண்டா இடையே 134.3 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தை 130 கி.மீட்டராகவும், அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே 145.54 கி.மீ., தூரம், 110 கி.மீ., வேகத்தில் இருந்து 130 கி.மீ., ஆக அதிகரிக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ரெயில் வேகம் அதிகரிப்பால் ஒட்டுமொத்த செயல் திறனும் மேம்படும். பயண நேரம் குறைவதுடன், சரக்கு போக்குவரத்தும் தடையின்றி சீராகும். கடந்த 2022ம் ஆண்டு 2,037 கி.மீ., நீளமுள்ள பாதையில் வேகத்தை மேம்படுத்தும் பணிகள் தெற்கு ரெயில்வேயால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் ரெயில்களின் வேகம் சூழலுக்கு ஏற்ப அதிகரிக்கப்படும். சென்னை - காட்பாடி, அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடங்களில் வேகம் அதிகரிக்கும் போது, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வந்து சேரும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கும். நேரமும் குறையும். விரைவில் இது குறித்த விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

    ×