என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"
- ஊர்வலமாக புறப்பட்டு சென்று எத்தையம்மன் கோவிலில் வழிபாடு
- தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க வாரிய அதிகாரி உறுதி
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது 11-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 10-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய, கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30 ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்டுள்ளபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.
கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
செயலாளார் வெங்கடேசன், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயலாளர் கோத ண்டபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
உண்ணாவிரதத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் நடந்தன.
இதில் நிர்வாகி புகழேந்தி, பொறுப்பாளர்கள் சுதா, சத்தியா, பிரபாவதி, மஞ்சுளா, கலையரசி, தனச்செல்வி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.
- போராட்டக்காரர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
- ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தேயிலை விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது 8-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று நடந்த போ ராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மேல்பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை, கட்டபெட்டு ஊர் தலைவர் மடியாகவுடர், மல்லிகொரெ ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், ஒன்னோரெ ஊர் தலைவர் கிருஷ்ணா கவுடர், மஞ்சிதா ஊர் தலைவர் சண்முகா கவுடர், பேரட்டி ஊர் தலைவர் காந்தி கவுடர் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் மேல்பிக்கட்டி, கீழ்பிக்கட்டி, கட்டபெட்டு, மல்லிகொரெ, ஒன்னோரெ, மஞ்சிதா, பேரட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு வந்தனர்.
அப்போது குன்னூர் போலீஸ் டி.எஸ்.பி குமார் போராட்ட களத்துக்கு வந்து நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் தேயிலை விவசாயிகள், இலை பறிக்க செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
மதுரை
திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.
திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.
திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
- தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு
கோவை,
தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.
அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.
இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.
- தேயிலை இலைகளை காதில் தொங்க விட்டு நூதன போராட்டம்
- ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரதம் நடக்கிறது
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கோத்தகிரியில் நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு தற்போது 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று 5-ம்நாள் போராட்டம் நடந்தது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெத்தளா ஊர்தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகிபோர் தொடங்கி வைத்தனர்.
5-வது நாள் உண்ணா விரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேயிலை தழைகளை காதில் மாட்டிக் கொண்டும், கைகளை ஏந்தியும் போராட்ட பந்தலில் அமர்ந்து இருந்தனர்.
ஊட்டி பகுதியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
- தினமும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தொடர் போராட்டம்
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. ஆனாலும் தேயிலை வாரியம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.
இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு பார்பத்தி ஹால கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால் 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர்.
முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
- சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
சேலம்:
குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
உண்ணாவிரதம்
அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
- சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
- நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
- முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
மதுரை
மதுரையில் ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் நடைபெற்றது.
இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர் களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
நிலவில் சந்திரயான் 1-ஐ மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2-ஐ வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3-ஐ நிலவில் அனுப்பிவெற்றி பெற்றுள்ளது. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்துள்ளார்.
நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும். அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி யார் இதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப் பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப்பொய் பேசுகிறார் கள்.
இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க. பச்சை பொய் பேசுவதை வாழ்க்கை யாகவும், அரசியல் கடமை யாகவும் கூறிவருகிறது.
தி.மு.க. அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது, நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடகமாகும். இதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பேரணி நடை பெற உள்ளது.
தஞ்சாவூர்:
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் வக்கீல் சுந்தர்ரா ஜன், முன்னாள் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் வக்கீல் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பேரணியும், நாளை மறு நாள் உண்ணாவிரதமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்