search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 184351"

    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவரை மொபட் மீது டிராக்டர் மோதி கணவன் பலி; மனைவி படுகாயமடைந்தனர்.
    • தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அல்லாளபுரம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் ( வயது 65) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி (60). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, மொபட்டில் பொம்மம்பட்டிக்கு சென்றுள்ளனர்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல பொம்மம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். அல்லாளபுரம் பகுதியில் சென்றபோது, எதிரே அல்லாளபுரத்தில் இருந்து பொம்மம்பட்டி நோக்கி அதிவேகமாக வந்த டிராக்டர், ஜெயராஜ், சுமதி தம்பதி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இருவரையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயராஜ், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மொபட் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரான வேலகவுண்டம்பட்டி அருகே சிலுவம்பட்டியைச் சேர்ந்த தமிழரசனை(50) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடன் சோகத்தில் விபரீத முடிவை தந்தை எடுத்து விட்டார்
    • மகன்கள் உருக்கம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன் பாகத்தை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள் (வயது 63). இவர் சென்னை துறைமுகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி பிரேம லதா (58). இவர்களது மகன்கள் ஆதவன் (32), மாலன் (28) ஆகியோர் சென்னையில் ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில்ஆதவன் சென்னையிலிருந்து தந்தைக்கு போன் செய்து உள்ளார்.ஆனால் ஆறுமுக நயினார் போனை எடுக்க வில்லை. எனவே மணவாளக்குறிச்சியில் உள்ள உறவினருக்கு ஆதவன் தகவல் கூறியுள்ளார்.

    அவர்கள் விரைந்து சென்று பார்க்கும்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆறுமுகபெருமாள் சோபாவிலும், பிரேமலதா தரையிலும் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தி ருப்பது தெரிய வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடன் விவகாரத்தால் கணவன்-மனைவி இருவரும் பழத்தில் விஷம் கலந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகபெருமாளின் மகன் ஆதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது தெரிய வந்தது.

    கொரோனா காரணமாக கடந்த 2 வருடமாக அந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதால் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதனை அடைக்க தனது தந்தையிடம் அவர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஆறுமுக பெருமாள் குடும்ப சொத்தை விற்று பணம் தருவதாக கூறி உள்ளார். ஆனால் குறித்த நேரத்தில் பத்திரப் பதிவு நடக்கவில்லை என கூறப்ப டுகிறது.

    சரியான நேரத்தில் மகனுக்கு உதவ முடிய வில்லை என ஆறுமுக பெருமாள் கடந்த சில நாட்களாக மன வேதனை யில் இருந்ததாக கூறப்படு கிறது. இதனால் தான் அவர் தற்கொலை முடிவை மனைவியுடன் சேர்ந்து எடுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    பெற்றோர் தற்கொலை செய்த தகவல் அறிந்ததும் அவர்களது மகன்கள் சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடன் விவகாரத்திற்காக இப்படி விபரீத முடிவை எடுத்து விட்டீர்களே என தந்தை உடலை பார்த்து அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.
    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டி சின்ன ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.

    தர்ஷித் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    மகனின் போட்டோவை எடுக்காமல் வந்து விட்ட தால், மீண்டும் வீட்டுக்கு சென்ற பூபாலன் போட்டோவை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். அப்போது, பள்ளியில் விட்டுச் சென்ற மனைவி நித்யா, குழந்தைகள் தர்ஷித், ஷிவானி ஆகியோரை காணவில்லை. இதையடுத்து அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன் என்ற கண்ணன் (வயது 41).

    இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அழுகிய நிலையில் அழகேசன் உடல் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

    இதுபற்றி உடனடியாக ராஜாக்கமங்கலம் போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அழகேசன் உடல், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அழகேசன் தற்கொலை க்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

    வெல்டிங் தொழிலாளி யான அழகேசனுக்கு திரும ணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான அவர், அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதனால் அழகேசனின் மனைவி, தனது குழந்தை களுடன், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வருகிறார். இது அழகேசனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

    இந்த வேதனையில் தான் அழகேசன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை நடை பெற்று வருகிறது.

    போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவு

    கன்னியாகுமரி:

    பளுகல் அருகே கருமானூர் பகுதியை சேர்ந்த வர் ராஜிவ் (வயது 37). கூலிவேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ஷைனி. இவர்களுக்கு 10 வயதில் ஒருமகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கணவரை பிரிந்து கேரளா வில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடந்த 6 மாத காலமாக அங்கேயே தங்கி உள்ளார். நேற்று ஷைனி தனது உறவினரான கிறிஸ்டி என்பவரது இருசக்கர வாகனத்தில் கணவர் வீட்டில் நடக்கும் சுய உதவி குழுவில் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.

    இதை அறிந்த ஷைனியின் கணவர் ராஜிவ் அங்கு சென்றார். ஷைனியை தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நீ இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷைனியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷைனி வலி தாங்காமுடியாமல் அலறியுள்ளார். மேலும் படுகாயமடைந்த ஷைனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்த புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து ஷைனியின் உறவினர் கிறிஸ்டி பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் ராஜிவ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிர மாக தேடி வருகின்றனர். கணவரே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டைட் ஜீன்ஸ்-டீ சர்ட் அணிந்தார்-இரவில் சாட்டிங் செய்தார்
    • 11 பக்க கடிதம்-வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெபபிரின்ஸா (வயது 32).

    இவர் 14 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் எபனேசரை காதலித்து பெற்றோர் எதிர்பையும் மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தை களுடன் ஜெபபிரின்ஸா தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு எபனேசர் வந்துள்ளார். பின்னர் அவர் ஜெபபிரின்சாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். மூலச்சல் ஆற்றின் கரை யோரம் சாலையில் அவர்கள் சென்ற போது 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த எபனேசர் தான் மறைத்து வைத்திருந்த அரி வாளால் மனைவி ஜெப பிரின்சாவை தலையில் வெட்டினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    காதல் மனைவியை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார், எபனேசரை தேடியபோது, அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்த போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில் மனைவியின் நடவடிக்கை சரியில்லாததே கொலைக்கான காரணம் என அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    மேலும் மனைவியை கொலை செய்யும் முன்பு எபனேசர் வெளியிட்ட 11 பக்க கடிதம் மற்றும் ஜெபபிரின்சா குறித்த வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனக்கு தெரியாமல் திரு வனந்தபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர ஊழியராக பணியாற்றிய தோடு பியூட்டிசியன் படிப்பும் ஜெப பிரின்சா படித்து வந்ததாக அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    மேலும் கைதான எபனேசர் போலீசரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜெப பிரின்சா எனக்குத் தெரியாமல் திருவனந்த புரத்தில் அழகு கலை படிப்பு படித்த போது அங்கு சில ஆண் நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார். மேலும் தினமும் அதிக அளவிலான மேக்கப்,டைட் ஜீன்ஸ், டீசர்ட் அணிவது என விரும்பதகாத செயலில் ஈடுபட்டார்.

    காலையில் வீட்டில் இருந்து செல்லும் அவர் ஆண் நண்பர்களுடன் பீச், பார்க் என டேட்டிங் செல்வதோடு இரவு தாமதமாக வீடு திரும்பினார். இரவு வீட்டிற்கு வந்த பின்பும் தனி அறையில் இருக்கும் அவர் தனது அந்தரங்க புகைப்படங்களை ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டார். என்னை படுக்கை அறையில் அனுமதிக்காததால் சந்தேகமடைந்து, அவரது செல்போனை ரகசியமாக எடுத்து பார்த்த போது தான் மேற்கண்ட விஷயங்கள் தெரியவந்தது.

    ஆண் நண்பர்களுடன் ஜெபபிரின்சா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த நான் அவரை கண்டித்தேன். இருப்பினும் அவர் ஆண் நண்பர்களுடனான தொடர்பை கைவிடாததால் ஆத்திரம் ஏற்பட்டது.

    இதில் ஏற்பட்ட தகராறில் ஜெபபிரின்சா அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். எனவே அவரை கொலை செய்யும் நோக்கத்தில் அரிவாளை மறைத்து வைத்துக் கொண்டு அங்கு சென்றேன். ஜெபபிரின்சாவிடம் நைசாக பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தேன்.

    பின்னர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன். நானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உடைகள் அணிவது-பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டதால் அதிருப்தி
    • தற்கொலைக்கு முயன்ற கணவர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்க லையை அடுத்த அழகிய மண்டபம் அருகே உள்ள தச்சகோடு பகுதியைச் சேர்ந்தவர் எபனேசர் (வயது 35). இவரது மனைவி ஜெப பிரின்சா (33). இவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர்.

    இவர்களுக்கு ஜெப சோபன் (14),ஜெப ஆகாஷ் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன் தினம் குடும்ப நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்காக ஜெப பிரின்சா, மூலச்சல் பன்றி வெட்டான் பாறை விளை யில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்தார்.

    நிகழ்ச்சி முடிந்ததும், அவர் கணவருடன் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டார். இந்த நிலையில் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு சானல்கரை பகுதியில் ஜெப பிரின்சா, தலையில் வெட்டுக் காயத்துடன் பிணமாக கிடப்பதாக அவரது தந்தை ஜெபசிங்குக்கு தகவல் கிடைத்தது.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரை கணவர் எபனேசர் வெட்டிக் கொலை செய்தி ருப்பதும், அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றிருப்பதும் தெரிய வந்தது.

    விஷம் குடித்து உயி ருக்கு போராடிய எபனேசரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர், மனைவியை வெட்டிக் கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக மாஜிஸ்திரேட்டிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருவனந்தபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில், ஜெப பிரின்சா, பியூட்டிசி யன் படிப்பில் சேர்ந்தார். இது எனக்கு பிடிக்க வில்லை. தினமும் ரெயில் மூலம் திருவனந்தபுரம் சென்று வந்த அவர், சமீப காலமாக உடைகள் அணிவதில் மாற்றம் செய்தார். இதனை நான் கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. மேலும் வீட்டுக்கு வந்ததும் செல்போனும் கையுமாக இருந்தார்.

    இதுபற்றி அவரிடம் கேட்டபோது, படிப்பு சம்பந்தமாக பார்ப்பதாக கூறினார். ஆனால் இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குடும்பத்தில் அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.ஜெப பிரின்சாவின் செயல்பாடு எனக்கு ஆத்திரத்தை ஏற்ப டுத்தியது.

    இந்த சூழலில் அவரது தம்பியின் திருமணம் தொடர்பாக, நாங்கள் அவரது வீட்டுக்குச் சென் றோம். பின்னர் அங்கி ருந்து திரும்பி வரும்போது பியூட்டிசியன் படிப்பு பற்றி பேச்சு வந்தது. அப்போதும் எனது கருத்தை ஜெப பிரின்சா கேட்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ஜெப பிரின்சா இறந்து விட்டார். பின்னர் போலீஸ் விசாரணைக்கு பயந்த நான், அங்கிருந்து தப்பி ஓடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன்.

    மேற்கண்டவாறு எபனேசர் வாக்குமூலத்தில் தெரி வித்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    இதற்கிடையில் சொந்த மாக வீடு கட்ட எபனேசர் திட்டமிட்டதாகவும் இதற்காக ஜெப பிரின்சாவின் தந்தை ஜெபசிங்கிடம் ரூ.10 லட்சம் கேட்டதாகவும் கூறப்படு கிறது. அவர் மகன் திரு மணம் முடிந்ததும் தருகி றேன் எனக் கூறியதாக தெரிகிறது.

    ஆனால், மனைவியிடம் உடனடியாக பணம் வாங்க எபனேசர் வற்புறுத்திய தாகவும், அதற்கு ஜெப பிரின்சா மறுத்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் மாமனார் வீட்டுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எபனே சருக்கு, கொலைக்கான அரிவாள் கிடைத்தது எப்படி? என்பதிலும் போலீசாருக்கு சந்ெதேகம் எழுந்துள்ளது. எனவே அவர் முன்னரே மனைவியை கொலை செய்யும் நோக்கில், அரிவாளை எங்காவது பதுக்கி வைத்திருந்தாரா? காதல் மனைவியின் கொலைக்கான உண்மை யான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்விரோதம் காரணமாக தாக்குதல்
    • பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் லைப்ரரி தெருவை சேர்ந்தவர் ஐசக் ராஜன்.

    இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராகஉள்ளார். இவருக்கும் அதே தெருவை சேர்ந்த டேவிட் அய்யாப்பழம் என்பவ ருக்கும் இடையே முன்விரோ தம் உள்ளது.

    சம்பவத்தன்று ஐசக் ராஜன், தனது மனைவி ரெமிலா (வயது29) வுடன் பைக்கில் கடைக்கு புறப்பட்டார். அப்போது அங்கு டேவிட் அய்யா பழம் வந்தார்.

    அவர், ஐசக்ராஜனை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு அவரது கழுத்தில் கிடந்த நகையை பிடித்து இழுத்ததாகவும் இதை தட்டிக் கேட்ட ரெமிலாைவ கீழே தள்ளி தாக்கியதாகவும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது அதன் அடிப்படையில் போலீசார் டேவிட் அய்யாபழம் மீது பெண்களுக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    • கந்து வட்டி புகார்
    • முக்கிய ஆவணங்கள் சிக்கியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தக்கலை மூலச்சல் பகுதியைச் சேர்ந்த சீமோன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞானஜெபின் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசை விசாரிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இன்ஸ்பெக்டர் உமா சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.ஞானஜெபின், அவரது மனைவி பெனிலா மற்றும் ஞான ஜெபியின் நண்பர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஞானஜெபின் தலைமறைவானார்.இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் இருந்த சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். கைப்பற் றப்பட்ட ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை மறைவாகியுள்ள ஞான ஜெபின் மற்றும் அவரது நண்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஞான ஜெபின் காங்கிரஸ் பிரமு கர் என்பதும் குறிப்பி டத்தக்கதாகும்.

    • தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.
    • பின்னர் முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகேயுள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன், அவரது மனைவி சங்கீதா. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை ஏற்றுக்கொள்ளாத சங்கீதாவின் தாயார் சரோஜா விஷம் குடித்து இறந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 5-ந் தேதி உடலில் தீக்காயங்களுடன் சங்கீதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தனக்குத் தானே தீவைத்து கொண்டதாக வாக்குமூலம் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நேற்று முதல் சமூக வளைதளங்களில் சங்கீதா வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கணவர் முத்துக்குமரன் தன்னை வரதட்சனை வாங்கி வரச் சொல்லி கொடுமைப் படுத்தியதாகவும், முத்துக்குமரன் அவரது சகோதரி கலையரசியும் சேர்ந்து மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், இதனை வெளியில் கூறினால் உனது பிள்ளைகளையும் மண்ணெண்ணைய் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டியதால், என்மீது யாரும் மண்ணைண்ணைய் ஊற்றி கொளுத்தவில்லை. தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக வாக்குமூலம் அளித்தாகவும் கூறியுள்ளார்.

    தனது உறவினர்கள் தன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் இப்போது இந்த உண்மையை கூறுவதாகவும் இந்த வீடியோவில் சங்கீதா கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சங்கீதா உயிரிழந்தார்.

    இதையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார் முத்துக்குமரனை கைது செய்து, அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தீக்குளிக்க முயன்ற மனைவி மீது கணவனே தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
    • ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு அத்திபடுகை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவர், காரைக்கால் பொதுப்ப ணித்துறையில், என்.எம்.ஆர். ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு வேதிகா (5) ஹர்சிதா (1) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் நடராஜனின் மனைவி மீனா, தினசரி மது அருந்திவிட்டு வந்தால், எப்படி குடும்பம் நடத்துவது? இப்படியே நீ செய்தால் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வேன் என கண்டி த்துள்ளார்.

    சம்ப வத்தன்று பகல் வழக்கம் போல், நடராஜன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி மீனா நடராஜனை கண்டி த்துள்ளார். அதை கண்டு கொள்ளாத நடராஜன் சாப்பி ட்டுவிட்டு உறங்கிவிட்டார்.மா லையில் நடரா ஜனுக்கு, மீனா டீ போட்டு கொடுத்து ள்ளார். அதை குடிக்க மறுத்து வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறை உள் பக்கமாக தழ்பாழ்போ ட்டு இருந்தது. நடராஜன் கதவை தட்டினார் ஆனால் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நடராஜன் சப்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்த்தினர் ஓடிவந்தனர்.

    அவர்கள் உதவியுடன், மீனாவை மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்கர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, நடராஜன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×