என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 184454"
- சகோதரியின் பாசப் போராட்டம் வீணானது
- அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார்
நாகர்கோவில்,மே.17-
அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவில் கோட்டார் பகுதியிலுள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இவர், பின்னர் வீடு திரும்ப வில்லை.
இதையடுத்து தாயார் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கோட்டார் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று மாலை இளம் பெண் ஒருவருடன், கோட்டார் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் இந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே வாலிபர் மாயமானது குறித்து புகார் உள்ளதால், போலீசார் அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலிபரின் தாயாரும், சகோதரியும், கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு மகனுடன் இருந்த பெண்ணைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வாலிபர், அந்தப் பெண்ணுடன் தான் வாழ்வேன் என தனது தாயாரிடம் உறுதியாக கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது தாயார், மகனிடம் மன்றாடினார்.
அவர்கள் இடையே சுமார் ஒரு மணி நேரமாக நீடித்த இந்த பாச போராட்டத்தில் மகன், தாயாரை உதறித் தள்ளினார். தனது முடிவில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் தாயாரும், சகோதரியும் அதிர்ச்சி அடைந்தனர். திருமணத்தை ஏற்க அவர்கள் மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து வாலிபரின் சகோதரி, தான் கொடுத்த நகையை திருப்பித் தருமாறு தம்பியிடம் கேட்டார். சில காலங்கள் கழித்து அதை திருப்பித் தருவதாக வாலிபர் கூறினார். இதனை சகோதரி ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் போலீசாரிடம் நகையை வாங்கித் தருமாறு கேட்டார். அதற்கு போலீசார், பிரச்சினை நடைபெற்றது அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் நகையை அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் கூறி பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
இதைத்தொடர்ந்து ஏமாற்றத்துடன் தாயும் மகளும் திரும்பி சென்றனர். 2 குழந்தைகளின் தாயாரை கரம் பிடித்த வாலிபர் போலீஸ் நிலையத்திலிருந்து அவரை அழைத்து சென்றார். இதனால் நேற்று இரவு போலீஸ நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர் கோவில் திருவிழாவிற்காக விருதுநகரில் இருந்து சாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஜெயராம் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூளக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சோதனை செய்தனர்.
- 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர் :
கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி உத்தரவுப்படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் திருப்பூர் நொச்சிபாளையம் அருகில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும்கடத்தல் தடுப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.
அந்த வழியாக வந்த மொபட்டை பின் தொடர்ந்து சென்று சோதனை செய்ததில் ரேஷன் அரிசி 450 கிலோ பதுக்கி வைத்துஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பவர் குறித்து விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் செல்லம் நகரைசேர்ந்த அன்புமணி (வயது 23) என்பதும் இவர் நொச்சிபாளையம், வீரபாண்டி பகுதிகளில்உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை பதுக்கி வைத்துவட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அன்புமணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர்.
- அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி :
அவினாசி அருகே கஞ்சா வைத்திருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி மங்கலம் ரோடு கருணை பாளையம் பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சயிராப் குமார் (25 ) என்பதும் அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 2 பெண்கள் மீது போலீசார் வழக்கு
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ரூபேஷ் (வயது 24), கோட்டார் நாராயணகுரு மண்டபம் அருகில் நின்றபோது, 2 பெண்கள் அங்கு வந்து விபசாரத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோட்டார் போலீசில் ரூபேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரத்தில் தூக்கு போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சிங்கனூர் அரசு மதுபானக்கடை எதிரே உள்ள தோட்டப்பகுதியில், மரத்தில் தூக்கு போட்ட நிலையில் ஒருவர் பிணமாக தொங்குவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் இறந்தவர் ஜெயகணேஷ்(37)என்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
பெத்தானியாபுரம் பாத்திமாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (49).இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
பி.பி.குளம் முல்லைநகர் மாரிமுத்து மகன் வினோத்குமார்(30).இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தாயார் சுமதி கொடுத்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
- இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(21) அமல்ராஜ் (22) இருவரும் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் அருகருகே வசிக்கும் இவர்கள் நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பிரகாசிற்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக இருவரும் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை தனது உபயோகத்திற்காக அமல்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தனக்கு வேலை இருப்பதா கவும் வெளியில் செல்ல வேண்டி இருப்பதா கவும் கூறி பிரகாஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷின் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பிரகாஷின் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பல் ஆனது . இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகார் என் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் கேட்டு கொடுக்காத காரணத்தால் அமல்ராஜ் மோட்டார் சைக்கிள் தீ வைத்தது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அமல்ராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளகோவில் பழைய பஸ் நிலையம் அருகே விற்பனைக்காக 80 கிராம் கஞ்சா வைத்திருந்த வெள்ளகோவில், தீரன் சின்னமலை நகர் பகுதியை சேர்ந்த பழனிகுமார் மகன் ஸ்ரீநாத் (23,)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வெள்ளகோவில் போலீசார், அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார்.
- ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
ஈரோடு மாவட்டம் கொடுமுடி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,47; பருப்பு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,45 என்பவரிடம் பொள்ளாச்சியில் பருப்பு விற்ற பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இவர் கடந்த மாதம், 27ல் பொள்ளாச்சி சென்று பணத்தை வசூல் செய்து விட்டு வரும் வழியில், பொங்கலுார், அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். பின், வந்து பார்த்த பொழுது வேனில் வைத்திருந்த, 19.54 லட்சம் ரூபாயை காணவில்லை.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மே, 5ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 26 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருடன் பணத்தை திருடி சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் மேலும் விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ராமு, 25 என்பதும், பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- இளம்பெண்-வாலிபர் தற்கொலை செய்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மதுரை
இஸ்மாயில்புரம் 6-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (28). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோச்சடை கலை சம்பளக்காரர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- பூட்டிய அறையில் பிணமாக கிடந்தார்
- ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோட்டார் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் தெருவை சேர்ந்த வர் நாகராஜன். இவரது மகன் கவுதமன் (வயது 24). இவர் சென்னை யில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வந்தார். தற்பொழுது கல்லூரிக்கு செல்லாமல் ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார்.
இந்நிலையில் கவுதமன் கடந்த சில நாட்களாக சரிவர வீட்டில் யாருடனும் பேசாமல், சாப்பிடாமல் மனவிரக்தியில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு கவுதமன் தனது அறைக்கு சென்றார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவரது அறையின் கதவு திறக்கப்பட வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் மகனை பலமுறை அழைத் துப் பார்த்தும் கதவு திறக்கப் படாததால் கதவை உடைத்து பார்த்தபோது கவுதமன் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த கவுதமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கவுதமன் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பலியான கவுத மனின் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவி னர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்