search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நண்பர்கள்"

    • இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
    • இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகரான அமிதாபச்சன் பேரன் அகஸ்தியா நந்தாவும், ஷாருக்கான் மகள் சுகானா காணும் நெருங்கிய நண்பர்கள்.

    இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஏற்கனவே இருவரும் தி ஆர்ச் சிஸ் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இவர்களின் நண்பர் வேதாந்மகாஜன் பிறந்தநாள் லண்டனில் நடந்தது. இதையொட்டி நடந்த இரவு விருந்தில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர்.

    அவர்களுடன் அஜய் தேவ்கான், கஜோல் தம்பதியரின் மகள் நைசாவும் பங்கேற்று உள்ளார். இரவு விருந்து முடிந்து சுகானா காணும், அகஸ்தியா நந்தாவும் ஒரே காரில் திரும்பி சென்றனர்.

    இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் லண்டன் விருந்தில் பங்கேற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.

    அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.

    18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

    இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

    நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

    ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.

    இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.

    55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.

    ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.

    டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.

    "3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    • திருமண மாப்பிள்ளையான சிவா சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.
    • பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக திருமண பரிசாக வழங்கினோம்.

    திருச்சுழி:

    திருமணம் என்றாலே மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்கள், நண்பர்கள், திருமணத்திற்கு வருபவர்கள் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பரிசுகள் வழங்குவது வழக்கம். உறவினர்களை பொறுத்தவரை கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் போன்றவைகளை மணமக்களுக்கு சீர் வரிசைகளாக வழங்குவார்கள்.

    இந்நிலையில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையிலும், திருமண மாப்பிள்ளைக்கு பிடித்ததுமான சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக அவரது நண்பர்கள் வழங்கினர். திருமணத்திற்கு வந்திருந்த மணமக்களின் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியடைய செய்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்த தனுஷ்கோடி என்பவரின் மகன் சிவா. இவருக்கும், இருஞ்சிறை பகுதியை சங்கரலிங்கம் மகள் துர்கா என்பவருக்கும் நரிக்குடி அருகே உள்ள வீரக்குடி கரைமேல் முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது.

    தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகள், சண்டைக்கிடாய்கள், நாட்டு இன ரக நாய்கள் என பல்வேறு விலங்குகளை ஏராளமானோர் ஆர்வமு டனும், பாசத்துடனும் வளர்த்து வருகின்றனர்.திருமண மாப்பிள்ளையான சிவாவும் சண்டை கிடாய்கள், சேவல்களை வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

    இந்த நிலையில் அவருக்கு திருமணம் நடந்தததால், சண்டை கிடாய்கள், சண்டை சேவல், நாட்டு இன நாய் உள்ளிட்டவைகளை அவரது நண்பர்கள் பரிசு பொருட்களாக வழங்கினர். அவர்கள் 2 சண்டை ஆட்டு கிடாய்கள், 5 சண்டை சேவல்கள், நாட்டு ரக இனத்தை சார்ந்த கன்னி, சிப்பிப்பாறை நாய்கள் ஆகியவற்றை வழங்கினர்.

    அப்போது மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் அவர்கள் பரிசாக வழங்கிய சண்டை கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக நாய்கள் உள்ளிட்டவைகளுடன் மணமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறும் போது, "தமிழர்களின் வீர விளையாட்டு போட்டிகளான அழிந்து வரும் நிலையில் உள்ள ஆட்டு கிடாய் சண்டை, சேவல் சண்டை உள்ளிட்ட பாரம்பரியமிக்க போட்டிகளுக்கு புத்துயிர் கொடுத்து ஊக்குவிக்கும் விதமாக அவர் விரும்பி வளர்த்து வரும் சண்டை ஆட்டு கிடாய்கள், சண்டை சேவல்கள், நாட்டு ரக இன நாய் ஆகியவற்றை திருமண பரிசாக வழங்கினோம்" என்றனர்.

    • மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது.
    • சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள்

    திருமணத்தின் போது மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்யும் வேடிக்கையான செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது வேகமாக பரவும் வீடியோ ஒன்றில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதில், மணமக்கள் மேடையில் இருப்பதையும், விருந்தினர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்வதையும் காண முடிகிறது. அப்போது மணமகனின் நண்பர்கள் மேடைக்கு கீழே நாற்காலியில் அமர்ந்தவாறு சில திட்டங்களை தீட்டுவது போன்று காட்சி உள்ளது. பின்னர் அவர்கள் ஒரு குளிர்பானத்தில் மது பானத்தை கலக்கிறார்கள்.

    சிறிது நேரத்தில் மணமேடைக்கு சென்று மாப்பிள்ளைக்கு மதுபானம் கலந்த குளிர்பானத்தை கொடுக்கிறார்கள். அதை குடித்த மணமகன் சிரிக்க தொடங்குகிறார். இதை பார்த்த மணமகளும் விஷயத்தை புரிந்து கொண்டு சிரிப்பது போன்று காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வேடிக்கையாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகளை பெற்று வருகிறது. 26 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. இப்படிப்பட்ட நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஒரு பயனரும், மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வேறு லெவல் என ஒருவரும் பதிவிட்டுள்ளனர்.

    • பரமக்குடி வாலிபர் கொலையில் அவரது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் கல்லனி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் பரமக்குடி கோர்ட்டில் ஆஜரான கண்ணன் நேற்று காலை பரமக்குடி எமனேஸ்வரம் அருகே உள்ள சுடுகாட்டில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணனுக்கும், இளையான்குடி அருகே உள்ள ராதாபுளி கிராமத்தை சேர்ந்த விஜயராஜ், தர்மகர்த்தா ஆகியோருக்கும் நகை-பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேரும் கண்ணனை பீர் பாட்டிலால் அடித்துக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் விஜயராஜ், தர்மகர்த்தா ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது.
    • அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    ஒவ்வொரு வாலிபர்களுக்கும் வீட்டின் அருகிலும், பள்ளி, கல்லூரியிலும் நெருங்கிய நண்பர்கள் இருப்பது வழக்கம்.

    அந்த வாலிபர், படிப்பு முடிந்து ஒரு வேலையில் சேர்ந்தாலும் நெருக்கமான நண்பர்களை சந்தித்து அவர்களுடன் அரட்டை அடிப்பதில் அவருக்கு கிடைக்கும் ஆனந்தமே தனி. இரவு 9 மணி ஆனாலும் கூட இந்த அரட்டை கச்சேரிக்கு முடிவு இருக்காது.

    இவை எல்லாம் அந்த வாலிபருக்கு திருமணம் ஆகும்வரை மட்டுமே சாத்தியம். அதன்பின்பு இரவு தொடங்கியதும் அவர் வீட்டுக்கு சென்று விடவேண்டும். இல்லையேல் பெற்றோர் கண்டிப்பார்கள். அடுத்து மனைவியிடம் இருந்து அன்பு கட்டளை பிறக்கும்.

    வீட்டில் நான் தனியாக இருக்கிறேன். எனவே இரவானதும் வீட்டுக்கு வந்து விடுங்கள் என்ற மனைவியின் கட்டளை, அந்த வாலிபரை கொஞ்சம், கொஞ்சமாக நண்பர்களிடம் இருந்து பிரித்து விடும்.

    அதன்பிறகு எங்காவது, எப்போதாவது தான் நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போதும் ஹாய்... ஹாய் என்ற பேச்சுடன் அவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள். அப்போது அந்த நண்பர்களின் மனதில் ஓடும் எண்ணம், திருமணமானால் எல்லாம் மாறிவிடும் என்பதே ஆகும்.

    உலக நடைமுறையான இந்த நிகழ்வுகளில் இருந்து மாற பாலக்காடு, மலையக்கோடு பகுதியை சேர்ந்த ரகு என்பவரின் நண்பர்கள் முடிவு செய்தனர்.

    ரகுவுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம். ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை நண்பர்களுடன் அமர்ந்து அரட்டை அடிக்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. அவருக்கு பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். நிச்சயதார்த்த விழாவில் நண்பர்களும் கலந்து கொண்டனர்.

    அவர்கள் ரகுவின் மனைவியாக போகும் பெண்ணை சந்தித்து பேசினர். அப்போது ரகு தங்களின் நெருங்கிய நண்பன் என்று கூறியதோடு, தங்களுடன் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி வரை அரட்டை அடித்துவிட்டு தான் வீட்டுக்கு போவான் என்று கூறினர். திருமணத்திற்கு பிறகும் அவனை தங்களுடன் அரட்டை அடிக்க அனுமதிக்க வேண்டும் என்று அன்பு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ரகுவின் மனைவியாக போகும் பெண் ஒப்புக்கொண்டார். அப்போது, அவரிடம் பேசிய நண்பர்கள், இப்போது ஒப்பு கொள்வீர்கள், திருமணமானதும் மாறிவிடுவீர்கள் என்று கலாய்த்தனர். அதற்கு அந்த பெண் அப்படியெல்லாம் இல்லை என்றார்.

    உடனே நண்பர்கள் அப்படியானால் ஒரு 50 ரூபாய் பத்திரம் வாங்கி வருகிறோம், அதில் திருமணமானாலும் இரவு 9 மணி வரை கணவரை அவரின் நண்பர்களுடன் அரட்டை அடிக்க அனுமதிப்பேன், அடிக்கடி போன் போட்டு தொந்தரவு செய்யமாட்டேன் என்று எழுதி கையெழுத்திட்டு தாருங்கள் என்றனர். இதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் அந்த பெண், கணவரின் நண்பர்கள் கூறியபடி எழுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகுவுக்கு திருமணம் நடந்தது. அன்று காலையில் ரகுவின் மனைவி, பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்ததை ரகுவின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    அந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி பலரது பாராட்டையும் குவித்து வருகிறது. இப்படியும் நண்பர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    • தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
    • காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.

    கோவை 

    கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

    • போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாகச்சென்று அங்கு மாணவ, மாணவிகளிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. உடுமலை கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி, தலைமை வகித்தார்.கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பேசியதாவது:-

    குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற பெற்றோர் அரும்பாடுபடுகின்றனர்.ஆனால் பெற்றோர்களின் உழைப்பை சிதைக்கும் வகையில் சமூக விரோத நட்புகள் வாயிலாக போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் சிலர், தவறான பாதைக்குச்செல்கின்றனர்.போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக இளைஞர்களிடம் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது.இத்தகைய போதைப்பொருட்களை உட்கொள்வதால் உடல் பலவீனம் அடைந்து பசியின்மை ஏற்படுவதுடன் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது. ஞாபக மறதி அதிகரிக்கும்.படிக்கும் காலத்தில் நல்ல நண்பர்களைத்தேர்ந்தெடுங்கள். போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்க அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • சத்யா வித்யாலயா பள்ளியில் நண்பர்கள்தின விழா நடந்தது.
    • பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் நண்பர்கள் தினவிழா பாலர்வகுப்பு மாணவர்களுக்கு நடந்தது.

    சேர்மன் குமரேசன், டாக்டர் சித்ரா குமரேசன், முதன்மை செயல் அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்தரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர்.

    பாலர்வகுப்பு மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டனர். இதை வெளிப்படுத்தும் வகையில் இனிப்பு வழங்கி, ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

    • சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார்.
    • மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சவுரிபாளையம் பிரிவை சேர்ந்தவர் கைலாஷ்குமார்(22). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு மோட்டார் சைக்கிளில் உடையாம்பாளையம் பகுதிக்கு நூடுல்ஸ் வாங்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் சாவி தொலைந்து விட்டது.

    இதனையடுத்து கைலாஷ்குமார் தனது நண்பர்களான ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் அங்கு வந்து மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுத்து கைலாஷ்குமாரை அவரது வீட்டில் விட்டனர்.

    அப்போது சுரேஷ் மது குடிக்க பணம் தருமாறு கைலாஷ்குமாரிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கைலாஷ்குமார் சுரேசை தாக்கினார். பதிலுக்கு சுரேசும், கைலாஷ்குமாரை தாக்கினார்.

    நடுரோட்டில் தாக்கி கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன் பேரில், போலீசார் கைலாஷ்குமார்(22) மற்றும் ராமநாதபுரம் மருதூரை சேர்ந்த பெயிண்டர் சுரேஷ்(33) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார். 

    தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.

    வெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.

    இவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.

    அப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×