search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    தர்மபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி சாலையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 59). துணை தாசில்தார். இவர் நேற்று காலை அலுவலக வேலையாக சென்னை வந்தார். பின்னர் உயர்நீதிமன்ற பணிகளை முடித்துக் கொண்டு தர்மபுரி செல்வதற்காக நேற்று இரவு கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது சதாசிவம் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது சதாசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் சதாசிவத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை.
    • மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    • வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    காஞ்சிபுரம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சிறுவஞ்சி பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ்(வயது25).

    இவர் திருவேற்காடு அருகே போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து உள்ளார். இவருக்கும் திருவேற்காடு பகுதியைசேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மோகன் ராஜ்-இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. அவர்களது திருமணத்தை வருகிற 26-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வருங்கால மனைவியை சந்தித்து விட்டு மோகன்ராஜ் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது அங்கு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்து கிடந்தார். இதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அந்த வழியாக வந்த போது முன்னால் சென்ற லாரியை திடீரென டிரைவர் நிறுத்தினார். இதில் பின்னால் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த மோகன்ராஜ் நிலை தடுமாறி லாரியின் பின்பக்கத்தில் மோதினார்.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மோகன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் முதியவர் மற்றும் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் ஜேசு ஜெயராஜா(வயது 26). வேன் டிரைவர். இவரது மனைவி கல்பனா(23). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது.

    ஜேசு ஜெயராஜாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். பின்னர் வெளியே சென்ற அவர் மாலையில் மது அருந்திய போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின் அவர் படுக்கை அறையில் சென்று படுத்து தூங்கினார்.

    சிறிது நேரம் கழித்து கல்பனா சென்று பார்த்த போது, ஜேசு ஜெயராஜா மயக்க நிலையில் மூச்சு வராமல் கிடந்தார். இதனால் பதறிய அவர் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

    இதுபற்றி கல்பனா களக்காடு போலீசில் புகார் செய்தார். அவர் கோவிலில் அசைவ உணவு சாப்பிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். அசைவ உணவு சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உண்டா? என்று களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாலை 3 மணி அளவில் கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக பிரத்தீஸ்வரனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • மாணவன் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த அச்சர பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். விவசாயி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பிரத்தீஸ்வரன்(வயது13) . பொன்னேரி கொக்கு மேடு என்னும் இடத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை பிரத்தீஸ்வரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை 3 மணி அளவில் கழிவறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக பிரத்தீஸ்வரனை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவன் பிரத்தீஸ்வரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் குவிந்தனர். மாணவன் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

    நேற்று இரவு மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் திடீர் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமிராகாட்சியை கைப்பற்றினர். அதில் மாலை 3 மணியளவில் மாணவர் பிரத்தீஸ்வரன் கழிவறைக்கு செல்வதும் சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து பதட்டத்துடன் வெளியே வருவதும் பதிவாகி இருந்தது.

    மாணவர் பிரத்தீஸ்வரன் கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவர் பிரத்தீஸ்வரன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் மகன் பிரத்தீஸ்வரன் மாலை 3 மணிக்கு பள்ளியில் இறந்து உள்ளான். ஆனால் இதுபற்றி எங்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. மற்ற மாணவர்கள் கூறிய பின்னரே மாலை 4 மணிக்கு எங்களுக்கு தெரிந்தது. பிரத்தீஸ்வரன் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    நேற்று ஆரணி அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9-ம் வகுப்பு மாணவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளியில் பிரத்தீஸ்வரன் மர்மமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்வர் செட்டி (வயது38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் மர்மமான முறையில் மகேஷ்வர் செட்டி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார்.
    • சாமி கும்பிட்டவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் குருடம்பாளையம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காளிசாமி (57). இவர் தனது மகன் பாலசுப்பிரமணியனுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காளிசாமி வந்திருந்தார். சாமி கும்பிட்ட அவர் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே காளிசாமி இறந்துவிட்டதாக கூறினார்.

    இது குறித்து காளிசாமியின் மகன் பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.
    • 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இரிஞ்சாலக்குடாவை சேர்ந்தவர் இன்னசென்ட்.

    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். 1972-ம் ஆண்டு ஷோபனா பரமேஸ்வரன் நாயர் தயாரிப்பில் ஏ.பி.ராஜ் இயக்கிய நிருதசாலா படத்தின் மூலம் திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

    அதன்பின்பு குணச்சித்திர வேடங்களிலும், நகை ச்சுவை நடிப்பிலும் கொடிகட்டி பறந்தார். 750 படங்களுக்கு மேல் நடித்த இவர் மலையாள சினிமா சங்கத்தின் தலைவராக 15 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.

    இன்னசென்டிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மெல்ல, மெல்ல நோயில் இருந்து மீண்டார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக இன்னசென்டை உறவினர்கள் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த இன்னசென்டுக்கு நேற்றிரவு சுவாச பிரச்சினையும், மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் இன்னசென்ட் மரணம் அடைந்ததாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வயது 75.

    இன்னசென்ட் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் மலையாள திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து சென்றனர். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் இன்னசென்ட் உடல் இன்று கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர், நடிகைகள், ரசிகர்கள், சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்பு இன்னசென்ட் உடல் அவரது சொந்த ஊரான இரிஞ்சாலகுடாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை காலை 10 மணிக்கு தாமஸ் பேராலயத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் நடைபெறுகிறது.

    மரணம் அடைந்த நடிகர் இன்னசென்ட் சாலக்குடி தொகுதியில் முன்னாள் எம்.பி. ஆவார். 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

    அப்போது தொகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.

    நடிகர் இன்னசென்ட் மரணம் பற்றிய தகவல் அறிந்ததும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அதிர்ச்சி அடைந்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் இன்னசென்டின் மறைவு கேரளாவுக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னசென்ட் நடிகர் மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஆவார். இருவரும் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். இன்னசென்ட் இறந்தாலும் அவர் எப்போதும் என்னுடன் தான் இருப்பார் என மோகன்லால் கூறியுள்ளார். 

    • ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியம்மன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ஸ்டீபன், ஜோசப் செல்வராஜ், வெங்கட்ராகவன், கருப்பையா, மீனாட்சி சுந்தரம், ஜெயகாந்தன், பெரியசாமி, ராஜா முகமது, நேரு, வேலாயுத ராஜா, மால் முருகன், சரவணன், மதுசூதனன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி என்பவரும் கலந்து கொண்டார். இரவு வரை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் உள்ள அறையில் தூங்கிய முனிரத்தினம் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தனலட்சுமி சென்று விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர்.

    கொளத்தூர்:

    பெரம்பூர், சபாபதி தெருவை சேர்ந்தவர் முனிரத்தினம்(வயது63). இவருக்கு குழந்தை இல்லை. இவரது வீட்டின் கீழ் தளத்தில் தங்கை தனலட்சுமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அண்ணன்-தங்கை இடையே சொத்து தொடர்பாக பிரசனை இருந்து வந்தது.

    நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூங்கிய முனிரத்தினம் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தனலட்சுமி சென்று விட்டார். இதல் உடல் கருகிய முனிரத்தினத்தை மீட்டு கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முனிரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்தனர்.

    • லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது.
    • உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது.

    விருதுநகர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவர் லலிதா என்ற 56 வயது பெண் யானையை வளர்த்து வந்தார். அந்த யானையை கோவில் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார்.

    இந்நிலையில் தனது யானையை வேறு ஒருவருக்கு விற்க அனுமதிக்க வேண்டும் என்று 2020-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் யானையை விற்பனை செய்ய ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து வழக்கம்போல் கோவில் திருவிழாவுக்கு யானையை அழைத்து சென்று வந்தார்.

    அப்போது யானை லலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி விருதுநகர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக சேக்முகமது, யானை லிலதாவை விருதுநகருக்கு லாரியில் அழைத்து வந்தார்.

    லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது. இதில் யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து யானை லலிதா விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    கால்நடைத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் பிராணிகள் நல ஆர்வலர் துனிதா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் யானை லலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் யானையை நேரில் சென்று பார்வையிட்டார். யானை லலிதாவுக்கு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும், யானைக்கு தேவையான உணவுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும், யானை பாகன்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து விருதுநகரில் தங்கியிருந்த யானை லலிதாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்க இருப்பதால் யானையை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆனால் அதற்கு பிராணிகள் நல ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி யானையை அதே இடத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பார்த்து சென்றனர். அதனை அடக்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    தென்காசி அடுத்த வாசுதேவநல்லூைர சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் வெள்ளவேடு அடுத்த கொத்தியம்பாக்கம் அருகே உள்ள கம்மவார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் தங்கி கணக்குப்பிள்ளையாக பணிபுரிந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வெள்ளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×