search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரணம்"

    • அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது.
    • சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது இரட்டை மகன்கள் அஜித்கபூர் (வயது 28) மற்றும் அனில் கபூர் (28). இதில் அஜித்கபூர் சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மற்றொருவரான அனில் கபூர் சென்னை மவுண்ட் ஆயுதப்படையில் போலீஸ்காரராக கடந்த 2018ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

    அனில் கபூருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊரான லோயர் கேம்ப்க்கு வந்தார். அவரை தந்தை அழகர்சாமி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.

    சிகிச்சையில் இருந்த அனில் கபூர் ரத்த வாந்தி எடுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனுக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை என்றும் அவர் எவ்வாறு இறந்தார்? என உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனிலவுக்கு கன்னியாகுமரி சென்ற கரூர் புதுப்பெண் உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது25). என்ஜினீயர். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்களான நிலையில் தேனிலவுக்காக கன்னியாகுமரிக்கு ெ சன்றனர். அவர்கள் சிற்றாறில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் விடுதி உணவறையில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது கிருபாவுக்கு விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிருபா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கடையாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனிலவுக்க வந்த இடத்தில் புதுப்பெண் இறந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிழக்கு கைலாஷில் வசித்து வந்த அஜய் அர்ஜுன் ஷர்மா என தெரியவந்துள்ளது.
    • சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி ஸ்டேஷனில் நேற்று மெட்ரோ ரயில் முன் பாய்ந்து 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    பலியானவர், கிழக்கு கைலாஷில் வசித்து வந்த அஜய் அர்ஜுன் ஷர்மா என தெரியவந்துள்ளது.

    இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.

    இதனால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில்கள் பின்னர் இயக்கப்பட்டன.

    இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    • செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் கையாண்டுள்ளார்.
    • ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்துக்கு வருவதற்கு முன்னர் நேரடி டி.எஸ்.பி. யாக விஜயகுமார் பணி புரிந்துள்ளார்.

    துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். அவரது திடீர் தற்கொலை தமிழக காவல் துறையையே கலங்கடித்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு ஒரே மகள் நந்திதா. அவரை டாக்டருக்கு படிக்க வைக்க ஆசைப்பட்டார். பிளஸ்-2 முடித்துள்ள மகள் நீட் தேர்வு எழுதி தேர்வாகி இருக்கும் நிலையில் எந்த கல்லூரியில் மகளை சேர்க்கலாம் என்பது பற்றியும் விஜயகுமார் ஆலோசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் அவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக சென்னையில் பணியாற்றிய விஜயகுமார் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக திறம்பட பணியாற்றியவர் ஆவார்.

    தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நீட் முறைகேடு வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி பல்வேறு தகவல்களை திரட்டிய விஜயகுமார் செக்ஸ் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா வழக்கையும் கையாண்டுள்ளார்.

    சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டு பணியாற்றியபோது பொது மக்களின் புகார் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தி பணியாற்றினார்.

    பணி காலத்தின் போது சிறுக... சிறுக சேர்த்து வைத்த பணம் உள்ளது. அதை வைத்து மகளை படிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் கையேந்திவிடக் கூடாது என்பதிலும் உறுதியுடன் இருந்துள்ளார். இதனை அவரது சக ஐ.பி.எஸ். நண்பர்கள் கூறி கண்ணீர்விட்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் சென்னை அண்ணா நகரில் துணை கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு வந்ததும் கோவையில் பணியமர்த்தப்பட்டதை அவர் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்ணாநகரில் அவர் பணியாற்றிய போது பணியில் இருந்தவர்கள் இப்போதும் அங்கு பணியில் உள்ளனர். அவர்கள் விஜயகுமார் மறைவு செய்தி கேட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

    ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்துக்கு வருவதற்கு முன்னர் நேரடி டி.எஸ்.பி. யாக விஜயகுமார் பணி புரிந்துள்ளார்.

    2007-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று நேரடி டி.எஸ்.பி.யான விஜயகுமார், பணியில் இருந்துக் கொண்டே 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வை எழுதினார். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே இந்த தேர்வில் அவர் வெற்றி பெற்று சிறந்த காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
    • வடக்கு மாகாண பகுதிகள் தான் கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    மெக்சிகோ:

    மெக்சிகோவில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து 122 டிகிரி வெயில் கொளுத்தியது.

    கடந்த 3 வாரங்களாக உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல வெயில் வாட்டிவதைப்பதால் பொதுமக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இருந்த போதிலும் கடும் புழுக்கத்தால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கொளுத்தும் வெயிலுக்கு வெப்பம் தாங்காமல் பலர் மயக்கம் போட்டு விழுந்தனர். வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பல நகரங்களில் வெயில் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. வடக்கு மாகாண பகுதிகள் தான் இந்த கடும் வெயிலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

    • லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.
    • இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.

    வாஷிங்டன்:

    லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் மரணம் அடைந்தார். வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் அவரது உயிர் பிரிந்தது.

    செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனப் நோபல் பரிசு பெற்றார்.

    வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை, அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

    1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார். 1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர், அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். 2011-ம் ஆண்டு ஜான் குட்எனப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார். ஜான் குட்எனப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள்.
    • வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    காரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சுகந்தா ஆச்சார்யா (வயது34). கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் ஸ்குருடிரைவர் குத்திய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரை யரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து சுகந்தா ஆச்சார்யாவின் நண்பர்கள் யார்? யார்? அவரது வீட்டுக்கு கடைசியாக வந்தவர்கள் யார்? வேலை பார்த்த இடத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள்(வயது 38). இந்த தம்பதி ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் உள்ளது.

    இவர்களுக்கு பீலா என்ற மகளும், பெல்வின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பிலோமினாளும், ரூபனும் வழக்கம்போல் தூங்க சென்றனர்.

    நேற்று காலையில் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் கார்த்தி நேசன் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ரூபன் கோழிப்பண்ணை ஆரம்பிக்க கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இறந்த பிலோ மினாளின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அசலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது46).

    மீனவரான இவர் இன்று அதிகாலை லைட் ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட கரிமணல் எனும் இடத்தில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.

    திருப்பாலைவனம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர்.
    • விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    காங்கேயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் கோட்டை மாநகரில் 22 வயது இளம்பெண் மற்றும் 17, 16 வயதுடைய சிறுவர்கள் பாட்டியுடன் வசித்து வருகின்றனர். இவர்களது தந்தை இறந்துவிட்டார்.

    தாய் ராஜேஸ்வரி கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் மைசூரை சேர்ந்த மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு பெருமாநல்லூரில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மனோஜ் கடந்த சில மாதங்களாக காங்கயம் பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றி வந்துள்ளார். ராஜேஸ்வரியின் உறவினர்கள் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ராஜேஸ்வரி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறினார்.

    சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள் மனோஜை பிடித்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ராஜேஸ்வரி 2022 மே மாதம் தற்கொலை செய்து கொண்டார் என மனோஜ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த கோரி பலமுறை பெருமாநல்லுார் மற்றும் காங்கயம் போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் ராஜேஸ்வரி சாவில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரியும் காங்கயம் டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அவர்களுடன் பேச்சுவார்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை.
    • கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார்.

    ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கம், செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் மார்க்கிஸ்(வயது50) கொத்தனார். இவரது மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மார்க்கிஸ் திரும்பி வரவில்லை. அவர் கிளாம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள தரைமட்ட விவசாய கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, தத்தங்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனிகுருநாதன் (வயது55). இவர் மங்கைநல்லூர் மெயின்ரோட்டில் கொல்லுப்பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பூராசாமி (65) என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இருவரும் பட்டறையில் மாலை 5 மணிவரை வேலை செய்துள்ளனர். சிறிது நேரத்தில் பட்டறையில் பழனிகுருநாதன், பூராசாமி இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    அவர்களுக்கு அருகில் 2 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது. அதில் ஒன்றில் பாதி மதுபானமும், மற்றொன்று பிரிக்காமலும் அப்படியே இருந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மதுபாட்டில்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், டாஸ்மாக் மதுபானம் குடித்ததால் தான் 2 பேரும் இறந்தனர் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    தொடர்ந்து பழனிகுருநாதன், பூராசாமி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகே மது குடித்ததில் தான் 2 பேரும் இறந்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது தெரியவரும்.

    மேலும், பட்டறையில் இருந்து டாஸ்மாக் மதுபானம் தஞ்சாவூரில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை அருகே நேற்று திடீரென 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் மது குடித்ததால் தான் உயிரிழந்தனர் என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், அந்த மதுபாட்டில்கள் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதற்கட்ட தடயவியல் அறிக்கைபடி அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதியானது.

    அதில், ஒரு மதுபாட்டில் பெவிக்குவிக் கொண்டு ஒட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு ஆய்விக்கு பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே மாவட்ட ஆட்சியர் பொய் சொல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×