என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்"
- மாணவர் மீது தாக்குதல் நடத்த அயர்ன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
- தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள், விடுதி அறைக்குள் இருந்த மற்றொரு மாணவரை இரக்கமின்றி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த வீடியோவில், மாணவர் ஒருவர் கெஞ்சுவதையும், மன்னிப்பு கேட்பதையும், மாணவரை தொடர்ந்து தாக்குவதையும் காட்டுகிறது. அந்த மாணவரின் சட்டை கிழித்து, சட்டையை கழற்றவும் வற்புறுத்துவது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர் அங்கித், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்களும் உள்ளன.
அங்கித் மீது தாக்குதல் நடத்த அயன் பாக்ஸ், கம்பு, பிவிசி குழாய்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் தனியார் விடுதியில் மாணவர்கள் தங்கியிருந்த நிலையில், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
- பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிழவனேரியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் ராம்குமார் (வயது 19). இவர் பசுமலையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று ராம்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை கண்டித்தனர். இதில் அவர்க ளுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபம் அடைந்த ராம்குமார் வீட்டை வெளியேறி அருகே உள்ள சித்தப்பா வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடம் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்.
- கடலோர காவல் படையினர் மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஒத்தாளவெளி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சந்தோஷ் (வயது18).
இவர் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐ.டி.ஐ. ஏ.சி. மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கூழையார் பகுதியில் உள்ள கடலில் தனது நண்பர்கள் 6 பேருடன் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அலையால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி மாயமானார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கூழையார் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அங்கு விரைந்து சென்று கடலில் மூழ்கி மாயமான மாணவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடலில் குளித்த போது மாணவர் மாயமானார்
- போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்
- முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும், மாணவரின் பெற்றோரும் கோரிக்கை
கன்னியாகுமரி:
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலு மூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுமித்திரன் (வயது 19) படித்து வந்தார்.
கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று மர்மமான முறையில் விடுதி யின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
களியக்காவிளை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்த சம்ப வம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவரின் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.
அதில்,சுமித்திரன் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாண வனுக்கு ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது மாணவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் குறிப்பிட்டு உள்ளனர்.
வேறு ஏதாவது மோதலில் தாக்கப்பட்டு சுமித்திரன் இறந்திருக்கலாமா? அதன் பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.
3-வது மாடியில் இருந்து சிறு நைலான் கயிறு மூலம் மாணவர் சுமித்ரன் குதித்து தற்கொலை செய்திருந்தால் கயிறு அறுபட்டு சுமித்திரன் கீழே விழ வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இறந்த அவரை, யாரோ தூக்கி வந்து கயிற்றில் தொங்க விட்டது போல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.
மேலும் மாணவர் தங்கியிருந்த விடுதியில் இரவு 1 மணிக்கு மேல் கஞ்சா வியாபாரிகள் உள்ளே செல்வதாகவும் அந்த ஊர் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும் மாணவரின் பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ராஜேஷ் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.
- பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பண்டரக்கோட்டை சிவாலயாகார்டன் முருகன் என்பவரது மகன்ராஜேஷ் (வயது19) இவர் கடலூர்அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்துபண்ருட்டி கொய்யாப்பழம் லோடு ஏற்றி விடுவதற்காக பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை பல இடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டைபோலீசில் புகார்கொடுத்தனர்.புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறார்.
- தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.
இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.
- திருத்துறைப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- தனது நண்பருடன் சென்ற போது விபத்தில் சிக்கினார்.
ஞ்சையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவருடைய மகன் காளிதாஸ்(வயது19). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று தண்டைலச்சேரி பகுதியில் இருந்து காளிதாஸ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் திருத்துறைப்பூண்டி நோக்கி சென்றனா்.
அப்போது வேலூர்பாலம் பகுதியில் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் காளிதாஸ் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மாணவர் விஜய் படு்காயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
- புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவை:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் வடமாநில வாலிபர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.
போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது குறைந்தது. இந்தநிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் தன்மைய் ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று இரவு இவர்கள் 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்தனர்.
அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா ஆகியோரை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் தாக்கி விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்
- ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி :
நாகர்கோவில் புன்னை நகரை சேர்ந்தவர் சகாய சிம்சன். இவரது மகன் ஷனீஸ் (வயது 26).
இவரது தாயார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிலையில் சகாய சிம்சனும் இறந்து விட்டதால், ஷனீஸ் தனது உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த ஷனீஸ், தினமும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ஷனீஸ், காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் பாபு, பழனி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.
ஷனீஸின் மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது. எனவே ஷனீஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஷனீஸ் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தாரா?
மாணவர் ஷனீஸ் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஷனீஸ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியதாக நண்பர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே இந்த விளை யாட்டில் ஷனீஸ் அதிக பணத்தை இழந்திருக்கலாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்திருக்க லாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மைதீன் கான் நள்ளிரவு தான் வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.
- வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் மைதீன்கான் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம்:
சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூரை அடுத்த வீராணம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் காஜா மைதீன். இவரது மகன் மைதீன்கான்
(வயது 21). இவர் சுரண்டையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
தற்கொலை
தினமும் கல்லூரிக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்துவிடும் மைதீன் கான், அதன்பின்னர் நண்பர் களுடன் சேர்ந்து வெளியில் சென்று விடுவதாகவும், நள்ளிரவு நேரத்தில் தான் தினமும் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மைதீன்கான், வீராணத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த வி.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தூக்கில் தொங்கி கொண்டிருந்த மைதீன்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ் மோதி பைக்கில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். கூலிதொழிலாளி. இவரது மகன் அபிஷேக். இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை அபிஷேக், கல்லூரியை முடித்துவிட்டு நண்பர் செந்திலேஸ் பாபுவுடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். கழுகூரணி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அபிசேக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். படுகாயமடைந்த மாணவர் செந்திலேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.