search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்சநீதிமன்றம்"

    • உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து ெகாண்டாடினர்.
    • ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என தீர்ப்பு வெளியானது.

    திருப்பத்தூர்

    ராகுல்காந்தி எம்.பி.யாக நீடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேருந்துநிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன் தலைமையில் காங்கிரசார் பட்டாசு வெடித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர் காங்கிரஸ் தலைவர் அழகுமணிகண்டன், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார காங்கிரஸ் பொருளாளர் பழனிவேல் ராஜன், மூத்த உறுப்பினர் பழனியப்பன், அழகப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிர்ஸ் தலைவர் சேதுமெய்யப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.

    ஓ.பி.ரவீந்திரநாத் கடந்த 2019ம் ஆண்டில் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 76,319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    ஆனால், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், பண பட்டுவாடா, வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இதைதொடர்ந்து, ஓ.பி.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இதில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த மாதம் 24-ந்தேதி உச்சநீதிமன்றம் ஆய்வு நடத்த தடைவிதித்தது
    • அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மசூதி நிர்வாகத்திற்கு உத்தரவு

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 24-ந்தேதி தொல்லியல்துறை ஆய்வை தொடங்கியது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தது. மேலும், இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுக கேட்டுக்கொண்டது.

    இதனால் மசூதி சார்பில் அலகாபாத்தில் ஆய்வுக்கு தடைவிதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் ஆகஸ்ட் 3-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு சில பெண்கள் ஞானவாபி மசூதிக்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபட அனைத்து நாட்களும் அனுமதிக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் இருந்து இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும்பொருளாகியுள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போது அங்கு சிவலிங்கம் காணப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் மசூதி நிர்வாகம் அவர்கள் கூறும் பகுதி ஒரு நீரூற்று பகுதி. மசூதியில் தொழுகை நடத்த வருபவர்கள், கை கால் கழுவதற்கான தொட்டியில் நீர் நிரப்பப்பட்டுள்ளது எனக் கூறினார். ஆனால், இந்த பிரச்சனை உணர்திறனை மனதில் வைத்து உச்சநீதிமன்றம் அந்த இடத்தை சீல்வைக்க அதே மாதம் உத்தரவிட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து பெண்கள் வழிபாடு செய்ய வேண்டுகோள் விடுத்த நிலையில், தங்களால் அதை பராமரிக்க முடியாது என மசூதி சார்பில் தெரிவித்த தகவலை வாரணாசி நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதை அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் உறுதி செய்தது.

    • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது
    • உச்சநீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்த இருக்கிறது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த மாதம் 11-ந்தேதி உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.

    அப்போது, அனைத்து மனுதாரர்களும் தங்களுடைய எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூலை 27-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் மனுதாக்கல் செய்ய முடியாது என இறுதிக்கெடு விதித்தது. இந்த மனுக்களை தயார் செய்து விசாரணைக்கு தாக்கல் செய்யும் வகையில் மனுதாக்கல் செய்பவர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞரையும், அரசு சார்பில் ஒரு வழக்கறிஞரையும் நியமித்தது.

    இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இன்று முதல் உச்சநீதிமன்ற வேலை நாட்களில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சஞ்சய் கிஷன் கவுல், சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது
    • ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்த கொடூரம் நாட்டையே அதிர்வலைக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு  உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதுடன் பாரட்சமின்றி, நியாயமான விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களது அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று மத்திய அரசு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. அப்போது இரண்டு பெண்கள் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரரிக்கும் எனத் தெரிகிறது.

    இரண்டு பெண்கள் விவகாரம் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு வழக்குகளை சிபிஐ-யும், இரண்டு வழக்குகளை புலனாய்வு முகமையும் விசாரிக்க இருக்கிறது.

    வைரல் வீடியோ பரப்பப்பட்டபோது, உச்சநீதிமன்றம் தனது வேதனைகளை தெரிவித்தது. மேலும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்திருந்தது.

    • பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என உறுதி
    • மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்

    சென்ற மே மாதம் மணிப்பூரில் இரு இனத்தவருக்கிடையே மோதல் உருவானது. பிறகு, இதுபெருங்கலவரமாக மாறியது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும் நிலைமை உருவானது. வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் தாக்கப்பட்டன, வழிபாட்டு தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

    அதிகாரபூர்வமாக இதுவரை 142 பேர் பலியானதாகவும், 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் சுமார் 54 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இம்மாநில கலவரம் தொடர்பாக மே மாதம் நடைபெற்றதாக சொல்லப்படும் ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு அதிர்ச்சி தரும் காட்சி இருந்தது.

    அந்த வீடியோவில் ஆண்கள் நிறைந்த கும்பல் ஒன்றில் இருபெண்கள் ஆடையின்றி அழைத்து செல்லப்படுகிறார்கள். பிறகு அவர்கள் மானபங்கபடுத்தப்படுகிறார்கள்.

    நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இந்த வீடியோ காட்சிகள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் தங்களது வேதனையை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது:-

    இது எங்களை மிகவும் மனதளவில் பாதித்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் உடனடியாக தலையிட்டு அவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்து, அதனை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    நாங்கள் அரசாங்கங்களுக்கு அவகாசம் அளித்து காத்திருக்கிறோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.

    இவ்வாறு அந்த பெஞ்ச் கூறியிருக்கிறது.

    • கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கண்ணூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கடந்த ஒருவார காலத்தில் தெருநாய்கள் கடித்து பலர் காயமடைந்துள்ளனர். கோழிக்கோட்டில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கேரள மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கேரளாவில் தெரு நாய் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆவணங்களை ஜூலை 17-க்குள் சமர்பிக்க உத்தரவு
    • இரண்டு பேரை மனுதாரர் பட்டியலில் இருந்து நீக்க அனுமதி

    மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை ரத்து செய்தது. அதோடு இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், ஐந்து நீதிபகள் கொண்ட பெஞ்ச் விசாரணை நடத்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

    கடந்த மூன்று ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கு பட்டியலிடாமல் இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று பட்டியலிடப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடர்பான விவரங்களை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது.

    அப்போது ஜூலை 27-ந்தேதிக்குள் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 2-ந்தேதியில் இருந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்வலர் ரஷித் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். அதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    • 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து சட்டத்தை மத்திய அரசு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றபட்டது.

    சுமார் மூன்று வருடங்கள் கழித்து இன்று அரசியல் சாசன பெஞ்ச் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. முதற்கட்டாக வழக்கு தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வது போன்ற நடைமுறைக்கான வழிகாட்டுதல்களை நாளை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.

    தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் சஞ்சய் கிஷன், சஞ்ஜீவ் கண்ணா, கவுல் பி.ஆர். கவாய், சுர்ய காந்த் ஆகிய நீதிபகள் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த பெஞ்ச் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கருத்துக்களை கேட்காமல் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லுமா? இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா? என்பது குறித்து ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலையில், மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் ''கடந்த முப்பது வருடங்களாக ஜம்மு-காஷ்மர் பயங்கரவாத தாக்கத்தை எதிர்கொண்டு வந்தது. தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் 370 சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்ததுதான்.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் வழக்கமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தொழில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கு முன் இந்த வழக்கை வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மார்ச் 2020-ல் விசாரித்தது. அப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற மறுத்துவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரான்ஸ்பர், பதவி நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது- உச்சநீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றம் உத்தரவை குறைக்கு வகையில் மத்திய அரசு புதிய உத்தரவு.

    இந்தியாவின் தலைநகர் மாநிலமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. கெஜ்ரிவால் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்- அமைச்சரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது.

    இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது. அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

    முதல்-அமைச்சர் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.

    இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

    இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் கிடையாது. இதனால் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாட இருக்கிறார்.

    இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    • பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர்.
    • பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர் வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவர் தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருக்கும் அதே சோதனை தனது சோதனையுடன் நடத்தப்பட்டால் உண்மையை கண்டறியும் சோதனைக்கு நானும் தயார்.

    என்று பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

    பிரிஜ் பூஷன் சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர். அவர் 2 பேரை மட்டும்தான் சோதனைக்கு அழைக்கிறார். ஆனால் நாங்கள் ஏழு பேரும் இந்த சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என வினேஷ் போகட் கூறியுள்ளார்.


    • மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியான 66 வயது பிரிஜ் பூஷன் சரண் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், விராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக், ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற வினேஷ் போகட் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

     

    "இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு ஆதரவாக இருந்து கொண்டு நாங்கள் பொய் கூறுகிறோம் என்று சொல்பவர்களிடம், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் சரண் சிங்-ஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் தெரிவித்தார்.

    "யார் தப்பு செய்திருந்தாலும், அவர்களை தூக்கிலிடுங்கள். நிர்பயா வழக்கின் போது வழங்கியதை போன்றே நாட்டில் உள்ள மகளிர் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்களும் பெண்களுக்காகவே போராடி வருகிறோம். இதில் நாம் வெற்றி பெற்றால், மிகவும் உறுதியான தகவலை உலகிற்கு தெரிவிக்க முடியும். ஆனால் தோல்வியுற்றால் நாம் 50 ஆண்டுகள் பின்செல்ல வேண்டி இருக்கும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    இன்றைய போராட்டத்தின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கருப்பு நிற பேண்ட்களை அணிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ×