search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    • பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் ஒருவர் அடிக்கடி இரவு நேரத்தில் சம்பந்தமில்லாமல் பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பட்டாசு சத்தத்தால் கால்நடைகள் கயிற்றை அவிழ்த்து கொண்டு ஓடி விடுவதாக பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த நபர் மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசை வெடித்ததாக தெரிகிறது.

    இதில் இருந்த தீ பரவி அங்குள்ள ஊஞ்சலாங்காட்டை சேர்ந்த தங்கராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேலியில் தீப்பிடித்து எரிந்தது.

    இதைகண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்த உடனடியாக சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த நிலையில் அடிக்கடி பொது மக்களுக்கு இடை யூறாக பட்டாசு வெடிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி நேற்று இரவு அம்மாபாளையத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திடீரென சென்னிமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    அப்போது பொது மக்களுக்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீசார் பட்டாசு வெடித்தவரை பிடித்து விசாரணை நடத்தி னர்.

    இதையடுத்து அவரை போலீசார் இது போன்று நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
    • இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 28), டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு சர்மிளா தேவி (25) என்ற மனைவியும், மணிகண்டன் (5), கிருசிகா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அப்புசாமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கு இடையே அங்கு வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது தொடர்பாக தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மேச்சேரி காளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). மளிகை கடை வைத்துள்ளார். அவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு திருமணமான 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜேந்திரன், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தொடர்ந்து தேடியபோது மேச்சேரி தொப்பூர் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு அருகே, ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி பார்த்தபோது ராஜேந்திரன் அதில் பிணமாக மிதந்தார்.

    அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா என்பது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    • குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் குற்றச்ெசயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ரவுடிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, திருந்தி வாழுங்கள் என அறிவுரை கூறியும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதுபோல், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து, உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோ-கோ, பேட்மின்டன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சாமிதோப்பு அருகே வடக்கு தாமரை குளத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து போலீசருக்கான சீருடைகளை அவர் அறிமுகம் செய்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இதில் கலந்து கொண்டனர். தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிசனில் இருந்து 100-க்கு மேற்பட்ட போலீசார் தொடக்க விழா நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.

    முதலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் மற்றும் நாகர்கோவில் சப்-டிவி சனைச் சேர்ந்த போலீ சார் விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சப்- டிவிசன் மற்றும் குளச்சல் சப்-டிவிசனை சேர்ந்த போலீசார் 2-வது போட்டி யில் கலந்து கொண்டு விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், போலீசாரிடம் விளையாட்டை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.தற்பொழுது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடக்கிறது என்றார்.

    வாலிபால், கபடி, கோகோ, பேட்மின்டன் போட்டிகளை படிப்படியாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடத்த போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    • கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
    • திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி அவுரி மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கம் போல நேற்று பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது பஸ்சின் படியிலேயே நின்று கொண்டு சென்றுள்ளார். திருமருகல் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது.

    அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன்குமாரின் கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.

    இதில் அவரின் காலில் மூன்று விரல்கள் எலும்பு நொறுங்கியது.

    இது குறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் பிரவீன் குமாரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பிரவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.
    • இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள தெசவிளக்கு கிராமம், பள்ளிகொண்டான் பாறை பகுதியை சேர்ந்த

    ரவி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பவருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட தகறாரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இருதரப்பை சேர்ந்த குமரவேல், சத்யராஜ்,ரவி, இருசாகவுண்டர், கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
    • கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஏற்காடு:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மீண்டும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து, சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு ஏற்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமை வகித்தார். இதில், 10 வங்களின் பொது மேலாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில், வங்கி, ஏ.டி.எம் மையங்களில் உள்ள பணத்தைக் கண்காணிக்க, மறைமுக காமிராக்களை நிறுவ வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய காமிராக்களை அனைத்து ஏ.டி.எம்.களிலும் பொருத்த வேண்டும். ஏ.டி.எம்.களை உடைக்கப்படும்போது எச்சரிக்கை மணி வங்கியில் மட்டுமின்றி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவற்றை உடனடியாக செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • 2 பெண்களிடம் நகை பறிப்பு நடந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சத்யா (வயது23). இவர் ஸ்கூட்டரில் அரசனூரி லிருந்து தேவிபட்டினம் கம்ப்யூட்டர் சென்டருக்கு போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிக்க சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அரசனூர் காலனி சுடுகாடு அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பைக் மீது மோதி கீழே தள்ளி விட்டனர். இதில் சத்யா கீழே விழுந்தும் கழுத்தில் அணிந்திருந்த 5 ½ பவுன் தாலிச்செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசில் சத்யா புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர் அருகே உள்ள பூதமங்கலத்தை சேர்ந்தவர் அமரல்பீவி என்ற சக்கரை யம்மாள் (60). இவர் நேற்று மேலூர் கணேஷ் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறியபோது அவரது கட்டைபையில் இருந்த 3 பவுன் தங்க செயினைமர்ம நபர் திருடிச்சென்று விட்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழி யாக மோட்டார் சைக்கி ளில் ஹெல்மெட் அணி யாமல் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.அப்போது அந்த 2 வாலி பர்களும் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 2 பேருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் மோட்டார் சைக்கி ளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த வாலிபர்கள் போலீசாரை வசைபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரி வித்திருந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜாஹங்கிர் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சாரிடம் ரகளையில் ஈடுபட்ட ஈத்தாமொழி பெரியகாடு தெற்கு தெருவை சேர்ந்த ஆரோக்கியம் (வயது 40), பெருவிளை பள்ளவிளை விநாயகர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (38) ஆகிய இருவர் மீதும் 2 பிரிவு களில் போலீ சார் வழக்குப்ப திவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 294பி, 353 ஆகிய 2 பிரிவுகளில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பார்சல் வேன் புறப்பட்டுச் சென்றது. அதனை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

    புலியிறங்கி பகுதியில் வேன் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹாரன் ஒலித்தபடி வழிவிட கேட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக வேன் டிரைவர் வழி விடாமல் மெதுவாக சென்றதாக தெரிகிறது.

    திருவட்டார் காங்கரை சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், வேன் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி, தகராறு செய்துள்ளனர். மேலும் கண் இமைக்கும் நேரத்தில் வேனின் சாவியை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.

    இதனால் டிரைவர் சுபாஷ் அதிர்ச்சி அடை ந்தார். வேன் நடு வழியில் நின்றதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்ததால், திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதற்கிடையில் மோட்டார் சைக்கிள் ஆசாமி கள், அங்கு வந்து வேன் சாவியை தூக்கி எறிந்து விட்டு மின்னல் வேகத்தில் சென்றனர். சம்பவம் குறித்து வேன் டிரைவர் சுபாஷ், திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.

    சாவியை பறித்துச்சென்ற நபர்கள் யார்? என்பது பற்றி அப்பகுதி சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ
    • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசார் தினமும் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.பெண்கள் பலரும் இந்த வாகன சோதனையில் சிக்கி னார்கள். குடும்பத்தோடு வந்தவர்களும் ஹெல்மெட் அணியாமல் வந்து போலீ சாரிடம் மாட்டிக் கொண்டனர்.

    மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேரை தடுத்த போலீசார் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கான ஆவ ணங்களை எடுத்து வருமாறு தெரிவித்தனர். அப்போது போலீசார் அவதூறு வார்த்தைகளால் பேசியதாக கூறி அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார்.

    நடு ரோட்டில் தகாத வார்த்தைகளால் பேசி அந்த வாலிபர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க செய்தது. மேலும் வாகன சோதனையில் சிக்கியிருந்த பொதுமக்கள் பலரும் வாலிபரின் இந்த செயலை செல்போனில் படம் பிடித்தனர்.

    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.போலீசாரை வாலிபர் வசைபாடும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
    • கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    வாழப்பாடி:

    சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.

    இந்த கும்பல் தாக்கி யதில், ஆனந்தனுடன் சென்ற பிரபாகரன் படுகாய மடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி

    களை கைது செய்த தனிப்படை அமைக்கப்பட்ட போலீசார் நடத்திய விசா ரணையில், கொலையுண்ட ஆனந்திற்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான அன்பழகன் என்ற மற்றொரு ரவுடி கும்பலுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து, இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து, வாழப்பாடிஅருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காட்டூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் இவரது கூட்டாளிகளான சக்திவேல், வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகனின் கூட்டாளி களான வலசையூரைச் சேர்ந்த சீனிவாசன், (31).

    வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (35). ஆகிய 2 இளைஞர்களையும், காரிப்பட்டி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

    ×