search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • கரூரில் 135 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன
    • 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு, சாலை விபத்துகளில் உயிரிழப்பு குறைந்துள்ளதாக, கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ல் 20 கொலைகள் நடந்த நிலையில், கடந்தாண்டு, 14 கொலைகள் நடந்துள்ளது. அதில், ரவுடிகள் இடையிலான கொலைகள் இல்லை. மேலும், 2021 ல், 230 குற்ற வழக்குகளில், 2 கோடியே, 27 லட்சத்து, 9 ஆயிரத்து 835 ரூபாய் மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்தாண்டு, 200 குற்ற வழக்குகளில், ஒரு கோடியே, 24 லட்சத்து, 42ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பில் பொருட்கள் களவு போனது. கடந்தாண்டு, திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ல் போக்சோ சட்டத்தின் கீழ், 55 வழக்குகளும், கடந்த ஆண்டு 72 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2021 ல் குண்டர் சட்டத்தில், 29 பேர் கைதான நிலையில், கடந்தாண்டு, 27 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 10 பேர் குட்கா வழக்கில் கைதானவர்கள்.கஞ்சா வழக்கில் கடந்த, 2021ல், 91.280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்தாண்டு, 135.635 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 72 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.கடந்த 2021ல் 393 விபத்து வழக்குகளில் 413 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு 368 வழக்குகளில் 377 பேர் உயிரிழந்தனர். சாலை விழிப்புணர்வு மற்றும் தீவிர வாகன சோதனை காரணமாக கடந்த ஆண்டு விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மோட்டார் வழக்குகள் மூலம் 9 கோடியே, 81 லட்சத்து, 93 ஆயிரத்து, 558 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.குற்றத்தடுப்பு பணிக்காக காவலர் ரோந்து நவீனமய மாக்கல் முறையில், மாற்றம் செய்யப்பட்டு, இ-பீட் நடை முறை, 108 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.சைபர் குற்றப்பிரிவு மூலம் கடந்தாண்டு, 12 வழக்குகள் செய்யப்பட்டு, 53 பேரின் வங்கி கணக்குகளில், 65 லட்சத்து, 81 ஆயிரத்து, 199 ரூபாய் முடக்கப்பட்டுள் ளது. மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 11 லட்சத்து, 74 ஆயிரத்து, 762 ரூபாய் மற்றும் 930 மொபைல் போன் உரியவர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தசேர்ந்த தீபக் பரிக், மனோஜ் பிரதான், ரெட்டிகன்டா மஜூஹி , ஆகிய 3 பேரை கைது செய்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர் அவிநாசி மற்றும் பெரமநல்லூர் பகுதிகளில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர் .இவர்களுக்கு வாலிபர்கள் சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக திருப்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் அனுராதா மற்றும் உதவி ஆய்வாளர்கள் மணிமுத்து, குணராஜ், காவலர்கள் விஜயகுமார், ஜீவானந்தம் மற்றும் சரவணகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர் தங்கி இருக்கும் பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தசேர்ந்த தீபக் பரிக், மனோஜ் பிரதான், ரெட்டிகன்டா மஜூஹி , ஆகிய 3 பேரை கைது செய்தனர் .மேலும் அவர்களிடம் இருந்த 3 .5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • விஜயநகரம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.

    அரூர்,

    தருமபுரியை அடுத்துள்ள பொம்மிடி விஜயநகரம் கிராமத்தில், பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக, அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கனேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புனிதவதி, ஏட்டு நதியா ஆகியோர், விஜயநகரம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், அப்பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண் ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை துரத்திப்பிடித்து, வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது, வீட்டின் பின்புறம் சாக்கு பையில் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், விஜயாவை கைது செய்தனர்.

    • 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல்
    • மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா பல இடங்களில் விற்கப்படுவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால சுந்தரம் தலைமையிலான போலீசார் நேற்று காலை கண்ணாட்டு விளை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. 4 பேரிடம் இருந்தும் 600 கிராம் கஞ்சா, ஒரு எலக்ட்ரானிக் எடை மெஷின், சிறிய கவர்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மணவாளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28), கக்கோடு அஜித் (27), தாணுதாஸ் (35), குருந்தன் கோடு காளிதாஸ் (23) என தெரிய வந்தது.

    • சென்னையில் இருந்து வாங்கி வந்தது அம்பலம்
    • போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் ரோந்து

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச் சல் சப்-டிவிசன்களுக் குட்பட்ட பகுதிகளில் போலீ சார் காலை, மாலை நேரங்களில் ரோந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து வருவதுடன் அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்கி வருகிறார்கள்.

    வடசேரி சப்-இன்ஸ் பெக்டர் ஜான்விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்ப டும்படியாக நின்று கொண்டிருந்த 4 வாலி பர்களை பிடித்து விசா ரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் களை தெரிவித்த னர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா பொட் டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்த ஒரு கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 4 நபர்களையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர் கள் தெற்குச்சூரங்குடி யைச் சேர்ந்த ரியாஸ் கான் (வயது 20), முகமது ரியாஸ் (23), முகமது அல்தாப் (24), பூதப்பாண்டியைச் சேர்ந்த பூதலிங்கம் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப் பட்டது? என்பது குறித்து விசா ரணை நடத்தப்பட் டது. முதல் கட்ட விசார ணையில் கஞ்சா சென்னை யிலிருந்து வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர், அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜூ, பார்வதிபுரம் மான்யம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மொத்தம் 7,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட 10 ஆயிரத்து 424 கிலோ கஞ்சா, 133 கிலோ எடையுள்ள திரவ எண்ணெயாக தயார் செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தீயிட்டு எரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி ஹரி கிருஷ்ணா தலைமையில் குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி அதன் மீது கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு எரித்தனர். தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.240 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா கூறுகையில்:-

    கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். 

    • கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட போலீசார் உடனே அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த அபிஷேக் (வயது 20 ) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தி யம் -இன்ஸ்பெக்டர் செல்வம் தலை மையிலான போலீசார், காட்டு எடையாா் பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் காட்டு எடையார் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (20), அரவிந்த் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார்.

    பல்லடம்:

    திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் சங்கர் (வயது 34). இவர் தற்போது பொங்கலூரை அடுத்த தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பருவக்கரைபாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சோதனையிட்டதில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக சங்கரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செஞ்சி அருகே கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    விழுப்புரம்:

    செஞ்சி மற்றும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தங்கம், தீபா ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன் ராஜ், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து சென்றனர், அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபர்களை விசாரித்த போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    இது குறித்து செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அரவிந்தன் (வயது20), நூர்முகமது (19), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரஞ்சித் (15), ஆலம்பூண்டியை சேர்ந்த வினோத்குமார் (18) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • தப்பி ஓடிய நபர் மாடன் கோவில் தெரு சேர்ந்த சஜின் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் கள். கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப் டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர் தலைமையிலான போலீசார் வடசேரி பஸ் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர்கள் தப்பி ஓடினார்கள். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். 3 பேர் பிடிப்பட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட 3 பேரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர்கள் வடசேரியைச் சேர்ந்த அய்யப்பன் (வயது 32) மாடன் கோவில் தெருவை சேர்ந்த மிக்கேல்ராஜ் (46 )ரமேஷ் ராஜா (32) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    தப்பி ஓடிய நபர் மாடன் கோவில் தெரு சேர்ந்த சஜின் என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல்
    • போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஓழிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு போதைப் பொருள் விற்பனையை தடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி இரணி யல் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுந்தர்மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ஆலங்கோடு புளிய மூடு சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் வைத்திருந்த பைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்தப் பைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்க ளிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் ஆலங்கோடு அபினேஷ் (வயது 26), கீழ ஆப்பிக்கோடு ஆன்றோ பிரின்ஸ் (21) என தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×