search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209749"

    • 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
    • மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் மற்றும் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் வியாபாரிகள் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் இடம் தேர்வு செய்வதற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் வலியுறுத்தி மனு அளித்தார். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் உடனுக்குடன் முடித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
    • துணை மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மேலும் இந்த கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கால்வாயை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ராஜா, வெற்றி, வடிவேல், விக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்

    • விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்
    • கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்களின் சிறப்பான வாதத்தால் தடை நீக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு பேரவை, ஆர்வலர்கள் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டையில் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இடையப்பட்டி அருகே உள்ள இடத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதனை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அமைச்சர் மெய்யநாதனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றிக் கொள்ள தங்களுக்கு அனுமதிக்க வேண்டும் என ஆலை நிர்வாகம் தமிழக அரசிடம் அனுமதி கோரியது.

    ஆனால் அதை தமிழக அரசே அகற்றும் என முதல்வர் அறிவித்துள்ளார்.இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முதல்வருக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ள அணுக்கழிவுகளை அகற்றித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில், அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அதை தமிழக அரசு அகற்ற இயலாது. மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் மூலம் துணைப்பையின் பயன்பாடு 25 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.ஆனாலும், ஆங்காங்கே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறது.

    விரைவில் அதையும் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுதான் தமிழகத்தில் புழக்கத்தில் விடப்படுகிறது. விராலிமலை அருகே உள்ள தனியார் மதுபான ஆலையில் இருந்து ஆற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் காவிரி குண்டாறு திட்டப் பணிகளில் தொய்வு இருக்காது. அதன் வழித்தடமும் மாற்றி அமைக்கப்படாது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
    • மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.

    குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.

    • பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.
    • புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    கடலூர்:

    கடலூர் - மடப்பட்டு சாலையில் 230 கோடி மதிப்பீட்டில் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை சாலை விரிவாக்க பணிக்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்து றையினரால் வரையப்பட்ட குறியீடுகள் வரை ஆக்கிரமி ப்புகள் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை தடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அரசியல் கட் சியினர் மற்றும் சமூக அமைப்பினர்கள் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்சாலை திட்ட கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி, தனி தாசில்தார் (நில எடுப்பு) தமிழ்ச்செல்வி மற்றும் சர்வேயர் முன்னிலையில் நெல்லிக்குப்பம் வர சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் வரை சாலை விரிவாக்க பணிக்காக அளவீடு பணிகள் நடைபெற்றன. அப்போது ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி, சத்யா மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்

    இதனை தொடர்ந்து கோட்ட பொறியாளர் சுந்தரி தலைமையில் அரசு வரைபடம் மூலம் அளவீடு பணிகளில் ஈடுபட்டு குறியீடு வரையப்பட்டது. அப்போது ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் சரியான முறையில் அளவீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதை அனைவரும் ஏற்று வரவேற்றனர். பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மடப்பட்டு வரை சாலை விரிவாக்க பணிக்காக அரசிடம் இருந்து அனுமதி பெற்று அதற்கான நிதி பெற்று பணிகள் சரியான முறையில் அளவீடு செய்துசாலை விரிவாக்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் விபத்து இல்லாமலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன்படி அனைத்து பணிகளும் நடைபெற்ற வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை தொடர்ந்து மீண்டும் உரிய முறையில் அளவீடு செய்து குறியீடு வரையப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் பணி தொடங்கப்பட்டு முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மற்றொருபுரத்திலும் உரிய முறையில் அளவீடு நடைபெற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்தது.
    • குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூர் நகரில் ஓட்டுப்பட்டறை சுற்றுவட்டார பகுதிகளில் 27,28 மற்றும் 29-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகளை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கிளை செயலாளர், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குன்னூர் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை

    தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.

    மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

    அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

    பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.

    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    • பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி யில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளிமுதல் திருவனந்தபுரம் ஊரணி வரை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலையினையும், சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள பொது மயானத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.148.80 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி குட்பட்ட காமராஜர் நகர், நகராட்சி குடிநீர் தொட்டி அருகில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் ரூ.7.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொது சமை யலறை கட்டிடங்களையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, இராஜபாளையம் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், வட்டாட்சியர் ராமசந்திரன், இளநிலை பொறியாளர் கோமதிசங்கர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
    • சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணியை ஆய்வு செய்தார்

    கரூர்,

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்., பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். இதில் பெரியதாதம் பாளையத்தில் ரூ.1.05 லட்சம் மதிப்பில் நடந்து வரும் சமையல் கூடம் புனரமைக்கும் பணி, சூடாமணியில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் நுாலக கட்டடம் புனரமைக்கும் பணி, வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை ரூ.3.90 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி, தென்னிலை மேற்கில் ரூ.25.99 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஞ்., அலுவலக கட்டட பணிகளை பார்வையிட்டு விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர்கள் இளஞ்சேரன், பூர்ணமாதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    அரியலூர்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி, வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குட்டை ஏரி தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, வாரணவாசி சமத்துவபுரத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, 15வது நிதிக்குழு மான்யம் வட்டார ஊராட்சி திட்டத்தின்கீழ் ரூ.54,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் பழுது நீக்கம் செய்தல் பணியினை ஆய்வு செய்தார்.

    பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கிபள்ளியில் நடைபெற்றுவரும் கழிவறை கட்டுமானப் பணியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, வாரணவாசி கிராமம், திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமம், சுள்ளங்குடி கிராமம், ள்ளங்குடி கிராமம் ஆகியவறறில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) திரு.முருகண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் திரு.பொய்யாமொழி, திரு.ஜாகிர் உசைன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் எண்ணும், எழுத்தும் பயிற்சியினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார்.

    அரியலூர்,

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை தொடங்கியது. அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி. வட்டார அளவிலான பயிற்சியானது 6 ஒன்றியங்களில் 698 ஆசிரியர்களுக்கு நாளை வரை நடத்தப்படுகிறது.இதில், திருமானூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) முருகண்ணன், மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×