என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209749"
- 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்படுகின்றன.
- 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு பகுதியில் பொதுப்ப ணித்துறை வென்னாற்று பிரிவு அலுவ லகத்தின் மூலம் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
வேதா ரண்யம் தாலுக்கா தலை ஞாயிறு ஒன்றியம் பகுதியில் உள்ள பழவனாறுவெண் மணச்சேரி வடபாதி வடிகால் பொன்னேரி வாய்க்கால் மேட்டுப்பள்ள வாய்க்கால் ஈசனூர் வாய்க்கால் உள்ளிட்ட 54.8 கிலோமீட்டர் தூரம் உள்ள வாய்க்கால்கள் ரூ. 63 லட்சம் செலவில் தூர்வாரப்ப டுகின்றன.
இந்த பணியினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் மதியழகன் மற்றும் பொதுப்ப ணித்துறை பணியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தலைஞாயிறு பகுதியில் 90 சதவீத தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஈரோடு:
ஈரோடுமாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி, புஞ்சை காள மங்கலம், கணபதி பாளை யம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்க வுண்டம் பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஈரோடு மாவட்ட த்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட 225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அந்த வகையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
அதன்படி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ரூ.29.82 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டத்தின் கீழ் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும்,
மொடக்குறிச்சி பேரூரா ட்சிக்குட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதி யில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49.64 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்கு றிச்சி பகுதியில் ஒதுக்க ப்பட்ட வருவாய் திட்டப்ப குதி திட்டத்தின் கீழ் ரூ.307 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்டு வரும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும்,
மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதி யில் நபார்டு திட்டத்தின கீழ் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்க ன்வாடி முதல் பெருமா பாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும்,
புஞ்சைகாளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறு த்தினார்.
மேலும் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் மணல், செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வு செய்தார். முத்துக்கவுண்டம் பாளையம் ஊராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் பாரதி நகர் விநாயகர் கோவில் முதல் முருகேசன் வீடு வரை 2 மெட்டல் அமைத்து தார்சாலை அமைக்கப் பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு தார் சாலையின் தரத்தினையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மொட க்குறிச்சி பேரூராட்சி க்கு ட்பட்ட மேம்படுத்த ப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை நேரில் செனறு பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு நோ யாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்து வர்கள் மற்றும் செவிலி யர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயா ளிகளிடம் நலம் விசாரி த்தார். பின்னர் மொடக்கு றிச்சி கால்நடை மருத்துவ மனையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு கால்ந டைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்து களின் இருப்புகள் குறித்தும் கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மொடக்குறிச்சி கிராமநிர்வாக அலுவல கத்தினை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். ஈஞ்ச ம்பள்ளி ஊராட்சி ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்ட ம்பாளையம், ஆதி திராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு அமை ந்துள்ள மேல்நிலை நீர்த்தே க்க தொட்டி யினையும் பார்வையிட்டு குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசு பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக வேளாண்-பொறியியல் துறையின் சார்பில் கணபதி பாளையம் ஊராட்சி, சாத்தாம்பூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தன் கீழ் ரூ.3.59 லட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.1.43 லட்சம்) சூரிய கூடா ரஉலர்த்தி (சோலார்) அமைக்கப் பட்டுள்ளதையும், தோட்டக் கலை-மலைப்பயிர் களத்துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் அவல்பூந்துறை பகுதியில் ரூ.75,000 மானிய உதவியுடன் சுமார் 1,200 கன மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்பு கட்டமைப் பினையும்,
ஈஞ்சம்பள்ளி ஊரா ட்சியில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 21 பயனாளிகளுடன் கூத்தம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஈஞ்சம்பள்ளி தரிசு நிலத்தொகுப்பினையும் மற்றும் எழுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிக ளிடம் இருந்து பெறப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு களையும் பார்வை யிட்டார்.
முன்னதாக நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம் சார்பில் செயல்படும் தொழிற் பேட்டையினையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கணபதி, மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா, சண்முகப்பிரியா, உதவி செயற்பொறியாளர் சுந்தரம், உதவிபொறி யாளர்கள் ரமேஷ்குமார், பர்கத், மொடக்குறிச்சி தாசில்தார் ரவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிரு ந்தனர்.
- 76 தனியார் பள்ளி பஸ்களில் குறைபாடு கண்டறியப்பட்டு, மீண்டும் ஆய்வுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
- பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்து விட்டே வாகனங்களை இயக்க வேண்டும்
கோவை,
போக்குவரத்து துறை, பள்ளி கல்வித் துறை, காவல் துறை சார்பில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்பணியை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வை யிட்டார்.
பின்னர், கலெக்டர் கிராந்திகுமார்பாடி பள்ளி வாகனங்களின் டிரைவர்க ளிடம் கூறியதாவது:-
தினந்தோறும் வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
பிரச்சினை இருந்தால் அதனை சரிசெய்த பிறகு தான் வாகனங்களை இயக்க வேண்டும். கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக்கூடாது. குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் உங்களு டைய பொறுப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 230 பள்ளிகளைச் சேர்ந்த 1355 தனியார் பள்ளி வாகனங்களில், நேற்று 901 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டன. இதில், 76 வாகனங்களில் அவசர கால கதவுகள் திறக்காதது, தீயணைப்பு கருவி காலா வதி, காமிரா பொருத்தாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, 378 வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே, ஊரக பகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களுக்கு மேட் டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் கூட் டாய்வு நடைபெற்றுள்ளது என்றனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான், கண்காணிப்பு காமிராக்கள் இருந்தாலும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள பயிற்சி பெற வேண்டும். திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய டிரைவராக இருக்க லாம். அத்தகைய அதீத நம்பிக்கையில் மொபைல் போன் பேசிக் கொண்டே பஸ்களை இயக்கினால் கவனம் இல்லாமல் டிரைவர் ஓட்டுகிறார் என குழந்தைகள் நினைப்பர். அவர்களுக்கு பயம் ஏற்படும். நமது நடத்தை மிகவும் முக்கியம். அது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பயத்தை ஏற்படுத்தக் கூடாது.
குழந்தைகள் வீட்டில் இருந்தால் பெற்றோர் பொறுப்பு. பள்ளிக்குள் சென்று விட்டால் ஆசிரி யர்கள் பொறுப்பு. அதேபோல் பஸ்களில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கு டிரைவர்க ளே பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து அவரது செயல் கள், நடத்தை, பாதுகாப்பு உணர்வை அளிக்கும் வகை யில் இருக்க வேண்டும் என்றார்.
- மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் ரத்தினமாலா ஆய்வு செய்தார்.
- ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் மடப்பட்டு கிராம ஊராட்சி யில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சியின் கூட்ட அறிவிப்பு பதிவேடு, தீர்மான பதிவேடு, ஊராட்சி பதிவேடுகள் 1 முதல் 31 பதி வேடுகள் முறையாக பரா மரிக்காதது, மற்றும் ஊராட்சியின் தீர்மானம் செலவினசீட்டுகள் இல்லா மல் செலவினம் மேற்கொள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.
மேலும், இந்த குறை பாடுகள் காரணமாக 1994 -ம் ஆண்டுதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 (1) (அ) மற்றும் பிரிவு 206(1) (அ) -ன் கீழ்ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஊராட்சிகள் சட்டம் 1994-ம் ஆண்டு பிரிவு 203-ன்படி, மடப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் கை யொப்பமிடும் அதிகா ரத்தினை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. மேலும், ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர செய்யாத காரணத்தினால் ஊராட்சி செயலரை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப் பணிகளை கவனிக்க தவறிய சம்மந்தப்பட்ட அலு வலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும், இது போன்று ஊராட்சிகளில் முறைகேடுகளில் ஈடுபடு வோர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
- பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது.
- அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது.
கோவை,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகி ஜூன் மாதம் 7-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கோவையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் விபத்துகள் போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் செய்யும் பணி இன்று நடந்தது.
கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இந்த ஆய்வு பணி நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் பாடி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வில் கோவையில் உள்ள 230-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வின் போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி, சி.சி.டிவி காமிராக்கள் உள்ளதா? படிக்கட்டுகள் குறைந்த உயரத்தில் உள்ளதா? முதலுதவி பெட்டி, மற்றும் டிரைவரின் பணி அனுபவம், வாகனம் ஓட்டுவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பது உள்ளிட்ட 17 அம்சங்கள் கொண்ட வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
மேலும் ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை, உடல் பரிசோதனையும் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
பின்னர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
கோவையில் உள்ள அனைத்து தனியார் பஸ்களிலும் கட்டாயம் கண்காணிப்பு காமிராக்கள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்கள் மற்றும் தீயணைப்பு கருவிகள் போன்றவைகள் வைத்திருக்க வேண்டும்.
மேலும் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும். டிரைவர்கள் பள்ளி நேரத்தை குறித்து வாகனங்களை சரியாக இயக்க வேண்டும்.
மேலும் அவசர நிலையில் இயக்க கூடாது. அவ்வாறு வாகனங்களை இயக்கும்போது தான் விபத்துக்கள் ஏற்படுகின்றது. எனவே டிரைவர்கள் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் வாகனங்களை இயக்கம் டிரைவர்கள் அவ்வப்பொழுது வானங்களை பழுது பார்த்து சரி செய்து விட வேண்டும்.
மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும். ஒரு சில பெற்றோர்கள் 3 குழந்தைகள் மற்றும் 4 குழந்தைகளை மோட்டார்சைக்கிளில் ஏற்றி செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து நடக்கின்றது.
எனவே இதுபோன்ற செயல்களை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செய்யாதீர்கள். மேலும் பள்ளி கல்லூரி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் பள்ளி மாணவ,மாணவிகளிடம் பொறுப்பாக முறையாக பேச வேண்டும். நீங்கள் பேசும்வார்த்தைகளில் தான் அவர்களது எண்ணமும் மற்றும் வாகனங்களில் பயணிக்கும மாணவர்களின் பாதுகாப்பு அடங்கி உள்ளது. எனவே டிரைவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் முறையாக பேச வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
- 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர்.
- அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தனர். 500 படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை சேவையை தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தனர். அடுத்த கல்வியாண்டுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பது தொடர்பாக இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் விதம், ஆய்வகம், போதுமான டாக்டர்கள் உள்ளார்களா, மருத்துவபடிப்பு மாணவர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வசதிகள், சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து மாலை வரை ஆய்வு செய்தார்கள். அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வு குறித்து டீன் முருகேசன் கூறும்போது, அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு முன் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு செய்து, திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவார்கள். நமது கல்லூரியில் உள்ள வசதிகள் குறித்து ஏற்கனவே தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கை அனுப்பி விட்டோம். 5 பேர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். விதிமுறைக்கு உட்பட்டு நாங்கள் திருப்தியாக செய்துள்ளோம். குழு ஆய்வுக்கு பிறகு திருப்தி அளிக்கும்பட்சத்தில் அங்கீகாரம் கிடைக்கும்' என்றார்.
- தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரையூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் பல்வேறு கோவில்களின் கொடை விழாக்கள் நடை பெற்ற நிலையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரை யூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணி யிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆத்தூருக்கு வருகை தந்து போலீசாரின் பாது காப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுரை களை வழங்கினார்.
அப்போது திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால முருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ரகு ஆகியோர் உடன் சென்றனர்.
- கல்குவாரியில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலை பணிக்காக கல் குவாரி அமைக்கப்பட்டது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குவாரியில் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, 4 வழிச்சாலை பணிக்காக அமைக்கப்பட்ட கல் குவாரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களிடம், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்குவாரியில் பணிகளை செய்ய அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஒன்றிய செயலாளர் சசிகுமார், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- மழையூர் கிராம நிர்வாக அலுவலகம், ரேசன் கடையில் கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்
- நகராட்சி பூங்காவை பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், மழையூர் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நியாய விலைக்கடையினை, மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, பட்டா வழங்கப்பட்ட விபரங்கள் முறையாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்பதையும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் மழையூர் கிராம அங்காடியில் பொருட்களின் இருப்பு விபரத்தினையும், மின் அலுவலகத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் இ-சேவை மைய செயல்பாடுகள் குறித்தும் வட்டாட்சியர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 11, 12 ஆம் வகுப்புகளில் இடை நின்ற மாணவர்களிடம், அவர்களின் பெற்றோர்களிடமும் மாவட்ட கலெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக இருப்பதால் தவறாமல் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும் எனவும் 12 ஆம் வகுப்பு என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அடித்தளமாக அமையக்கூடிய கல்வி எனவும் மாணவர்களிடம் மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.
அதனைதொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சியில் ஒட்டக்குளத்தை பார்வையிட்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் புதுக்கோட்டை நகராட்சி கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரில் ரூ.9 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நகராட்சி பூங்காவின் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா பணிகளை நல்ல முறையில் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை, நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா, நகராட்சி ஆணையர் (பொ) பாலாஜி, வட்டாட்சியர்கள் ராமசாமி, விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்