என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209879"
- வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ மூலம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- நாகமலை புதுக்கோட்டையைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர்.
மதுரை
ஊட்டியை சேர்ந்தவர் முகமது தானிஷ் (வயது 28). இவர் மதுரை பாண்டி கோவில் ரோட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முகமது தானிஷ் சக நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில் குடியில் உள்ள ஒரு மலை கோவிலுக்கு சென்றார்.
அங்கு அவர் தோழிகளு டன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முகமது தானிசிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த பெண்களை கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன முகமது தானிஷ் மற்றும் அவரது நண்பர்கள் 'ஜிபே' மூலம் ரூ.10 ஆயிரத்தை அனுப்பி னர். அதனை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இது தொடர்பாக முகமது தானிஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பறித்த நாகமலை புதுக்கோட்டை யைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா்.
- போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அடுத்த சேவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியிடம் கவரிங் சங்கலி பறித்த இருவரை போலீசார் கைது செய்தனா். சேவூா் அருகே உள்ள தாசராபாளையம் நடுத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சிகாமணி (64). இவா் தாசராபாளையம் சாலையோரம் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் சிகாமணி கழுத்தில் அணிந்திருந்த கவரிங் சங்கலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனா். பார்த்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர்.
தகவல் கிடைத்தது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேவூர் போலீசார் இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள்
கோவை சித்தாபுதூா் சரோஜினி நகரைச் சோ்ந்த சின்னமருது (24), அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (27) என்பது தெரியவந்தது. மேலும் மூதாட்டியிடம் பறித்தது கவரிங் நகை என்பதும் தெரிய வந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது.
- போலீசார் பணத்தை தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சரவணம்பட்டி,
கோவை குரும்பபாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் உள்ளது. இந்த ஏ.டி.எம்மிற்கு வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன்(26), லட்சுமி கார்டனை சேர்ந்த சதீஷ்குமார்(30) பணம் எடுக்க சென்றனர். அப்போது மையத்திற்குள் ரூ.7 ஆயிரம் கிடந்தது. இதை பார்த்த அவர்கள் உடனே அதனை எடுத்து சென்று கோவில் பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பணத்தை தொலைத்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
- ஈத்தா மொழி போலீஸ் நிலைத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 19 வழக்குகள் உள்ளது
- ராஜ்குமார் என்னை தீர்த்து கட்டுவதற்கு முன்னர் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி அருகே மாதவலயம் அனந்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36), பிரபல ரவுடி.
இவர் மீது தோவாளையில் நடந்த கணவன்-மனைவி கொலை வழக்கு, ஈத்தா மொழி போலீஸ் நிலைத்தில் ஒரு கொலை வழக்கு உட்பட 19 வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டி யலிலும் ராஜ்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது.ராஜ் குமார் ஜெயிலில் இருந்து சமீபத்தில் தான் ஜாமீனில் வந்தார். இவர், தூத்துக்குடி துறைமுகத்திலும் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமார் ஊருக்கு வந்திருந்தார். ராஜ்குமார் தனது நண்பர் கள் இரண்டு பேருடன் தாழக்குடி-மாதவலயம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ராஜ்குமாரை வழி மறித்தது கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அவரது நண்பர் கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். வெட்டுக்கா யங்களுடன் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டி.எஸ்.பி. ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராஜ்குமார் சந்தவிளை பகுதியில் உள்ள சூப் கடை ஒன்றில் சூப் குடித்த போது அங்கிருந்த தோப்பூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன், முருகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் ராஜ்குமார் கொலை செய் யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர்.
இந்த நிலையில் தோப் பூரை சேர்ந்த பிரவீன் (23), நாகர்கோவில் வடிவீஸ்வரம் மீனாட்சி கார்டனைச் சேர்ந்த சித்தார்த் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரவீனிடம் போலீசார் விசாரணை மேற்கொண் டபோது அவர் கூறியதா வது:-
நானும் எனது நண்ப ரும் சந்தவிளை பகுதியில் உள்ள சூப் கடை ஒன்றில் சூப் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த ராஜ்குமார் எங்களிடம் தகராறு செய்தார் .என்னை அவர் தாக்கியதுடன் மிரட்டல் விடுத்தார். கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக கூறினார். மேலும் என்னை தீர்த்து கட்டுவதாகவும் தெரிவித்தார். நான் இதுகுறித்து எனது நண்பர் களிடம் தெரிவித்தேன். ராஜ்குமார் என்னை தீர்த்து கட்டுவதற்கு முன்னர் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். எனவே சம்பவத்தன்று இரவு ராஜ்குமார் அவரது நண்பர்களுடன் வந்தார்.
அப்போது நானும் எனது நண்பர்களும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் தொடர்புடைய 3 பேரை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர். போலீ சார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.
- ஜவுளி கடையை சூறையாடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மதுரை
மதுரை வடக்கு சித்திரை வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளி கடை வைத்துள்ளார். நேற்று மதியம் இவர் கடையில் இருந்தபோது 2 பேர் வந்தனர். அவர்கள் சரவணனிடம் மாமூல் கேட்டனர். அவர் தர மறுத்தார்.
ஆத்திரமடைந்த 2 பேரும் ஜவுளிக்கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடை மீது கல் வீசி தாக்கினர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சாய் பிரனீத் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஜவுளி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த பைப் குமார் (42), திருமங்கலம் ஆனந்தன் தெரு சிவராஜா(43) ஆகியோரை கைது செய்தனர்.
கைதான இருவர் மீதும் மாநகர போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- பள்ளிபாளையத்தில் ரவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
நாமக்கல்:
நாமக்கல்லை சேர்ந்தவர் பிரபல ரவுடி காசி . இவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்ததாக ஆம்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி பள்ளிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் முத்துக்குமார் (28) ,அஜித்குமார் (25) ஆகியோர் காசிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டினர்.
நகராட்சி அதிகாரிகளி–டமும், போலீசிடமும் உரிய அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக போஸ்டர் ஒட்டியதாக முத்துகுமார், அஜித்குமார் 2 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
- ராஜபாளையம் அருகே மனைவி-குழந்தைகளை தவிக்க விட்டு 2 வாலிபர்கள் மாயமாகினர்.
- இதையடுத்து சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள சம்மந்தபுரம் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் திவான் மைதீன் (வயது32). பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரசிதா யாகீம் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். திவான் மைதீன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு எதிரில் ஜவுளிக்கடை திவான் மைதீனின் பெற்றோரும் இதனை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி முதல் திவான் மைதீனை காணவில்லை.
விசாரித்ததில் அந்த ஜவுளிக்கடை பெண்ணும் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து ரசிதாயாகீம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம் சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன், கட்டிட தொழிலாளி. இவருக்கு சித்திரை செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அவசர வேலையாக வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து சித்திரை செல்வி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.=
- மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
மதுரை
மதுரை மேலவாசல், அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 47). ஜவுளிக்கடை ஊழியர். இவரை நாய் கடித்து விட்டது. தடுப்பூசி போடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பழைய அரசு மருத்து வமனை சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்து மதிச்சியம் போலீசில் புகார் செய்தார்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகநாதன் ஆலோசனையின் பேரில் மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முத்துமாரி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடிய கும்பல் பற்றிய விவரம் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கரும்பாலை பி.டி. காலனியில் பதுங்கி இருந்த மணிமாறன் மகன் தினேஷ் (21), பாண்டி மகன் நாகராஜ் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
மதுரை பரசுராம் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் விக்னேஷ் (24). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அழகர் கோவில் ரோட்டுக்கு வந்தார். ஐ.டி.ஐ சந்திப்பில் பதுங்கி இருந்த வாலிபர் அரிவாள்முனையில் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய சம்பக்குளம் பாண்டியராஜ் என்ற அருண் என்பவரை கைது செய்தனர்.
- வாலிபர்கள் தண்ணீர் தொட்டியை பழுது பார்க்க வந்து இருப்பதாக கூறினர்.
- கதவை பூட்டி விட்டு வேலைக்கு செல்ல முயன்றார்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள திருக்குமரன் நகரை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி செல்வி (வயது 50). கூலித் தொழிலாளி. இவர் தனது 2 மகள்களுடன் 3-வது மாடியில் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டார். பின்னர் வீட்டின் முன் பக்க கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீது செல்விக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வாலிபர்களிடம் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த வாலிபர்கள் தண்ணீர் தொட்டியை பழுது பார்க்க வந்து இருப்பதாக கூறினர்.
இதனையடுத்து செல்வி தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வாலிபர்கள் செல்வியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இது குறித்து செல்வி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணை தாக்கி 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று மறைந்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62) இவரது மனைவி ஜானகி(56) கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சம்பவத்தன்று மாலை ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில், பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அப்பாஸ் (23) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் (திலீப் ராஜ் 30,)ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ‘நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்’ நன்கொடை தருமாறு கேட்டனர்.
- பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர்
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே கீழ்கரை கணியான்விளையை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் விக்னேஷ் (32).எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் இவர் வீட்டிலிருக்கும்போது 2 வாலிபர்கள் அவர் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 'நாங்கள் கோயம்புத்தூர் சிங்காரபாளையம் அன்பு மலர் உடல் ஊனமுற்றோர் சமூக நல வாழ்வு தொண்டு நிறுவனத்திலிருந்து வருகிறோம்' நன்கொடை தருமாறு கேட்டனர். இவர்களது பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ், வாலிபர்கள் கையில் வைத்திருந்த நன்கொடை புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் இரு வாலிபர்களும் கோவை தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என தெரிய வந்தது. வாலிபர்கள் வைத்திருந்த நன் கொடை புத்தகம் போலியாக அவர் கள் அச்சிட்டு கொண்டு வந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே பொது மக்கள் அங்கு திரண்டனர்.பின்னர் விக்னேஷ் பொது மக்கள் உதவியுடன் 2 வாலிபர்களையும் குளச்சல் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசார ணையில் வாலிபர்கள் கர்நாடகா மாநிலம் பிஜப்பூர் குந்தவன் பகுதியை சேர்ந்த சச்சின் திலீப் ஜெகதாப் (24) மற்றும் பிஜப்பூர் மெலடியை சேர்ந்த பாரத் லெட்சுமணன் சவான் (26) என்பதும், இவர்கள் கடந்த 8 மாதமாக தோவாளை பகுதியில் கொட்டகை போட்டு தங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களிடமிருந்து போலியாக நன்கொடை வசூல் செய்தது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் பிடி பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்று ரூ.2 ஆயிரம் வசூல் செய்திருந்தனர். ரூ.2 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி இரு வாலிபர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டம் 420 உள்பட பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட கர்நாடகா வாலிபர்கள் நேற்றிரவு இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- கஞ்சா விற்ற 4 வாலிபர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
- தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
கீரைத்துறை சுடுகாட்டு பகுதியில் கஞ்சா கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வை யில், தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று இரவு மின்சார சுடுகாடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அங்கு 6 பேர் கும்பல் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது 4 பேரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அவர்களிடம் 1.450 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி, சங்கு பிள்ளை மடம் முருகன் மகன் மணிகண்டன் என்ற ஒன்னரை மணி (22), சிந்தாமணி, வீமாபிள்ளை சந்து முருகன் மகன் மணிமாறன் என்ற குட்டை மணி (19), திருப்பரங்குன்றம், வடக்கு ரத வீதி ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (19), மேல அனுப்பானடி, பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆயுதங்களுடன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட 4 பேரையும் கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.
தப்பி ஓடிய வசந்தகுமார், வாழைத்தோப்பு நந்தகோ பால் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்