search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலுதவி"

    • குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
    • குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள்.

    சில குழந்தைகள் கீழே எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டு கொள்வார்கள். எனவே குழந்தைகளை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

    குழந்தைகள் தவறுதலாக ஏதேனும் விழுங்கிவிட்டாலோ அல்லது சாப்பிடும்போது ஏதேனும் உணவுத் தொண்டையில் எக்குத் தப்பாகச் சிக்கிக்கொண்டாலோ, கையை விட்டு எடுக்கவோ, விரலை விட்டு எடுக்கவோ, கண்டிப்பாக முயற்சிக்கக் கூடாது.

    தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால், அதை எடுப்பதற்கு, 'ஹீம்லிக் மெனுவர்' ( HEIMLICH MANEUVER) என்ற செய்முறை இருக்கிறது.

    இந்த முதல் உதவி சிகிச்சை முறைப்படி தெரிந்தவர்கள், அதை உபயோகித்துப் பொருளை எடுக்கலாம்.

    இல்லையெனில் உடனடியாக மருத்துவமனைக்குப் போய்விட வேண்டும்.

    ஏனென்றால், விழுங்கிய எட்டு நிமிடங்களுக்குள் அந்தப் பொருளை வெளியே எடுக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நொடியும், தங்க நொடிதான்.

    எட்டு நிமிடங்களுக்குப் பிறகும் ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்லவில்லை என்றால், விளைவு விபரீதம் ஆகிவிடும்.

    எனவே எதை செய்தாலும் தாமதிக்காமல் செய்வது மிகவும் முக்கியம்.

    • காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நெல்லை:

    விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு, சாலை விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நி லைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்து பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். செயற்கை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்க ப்பட்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செய்து காண்பித்து செயல் முறை விளக்கத்து டன் பயிற்சி யளித்தனர்.

    பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவ ர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.

    பயிற்சியில் மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

    இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

    பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

    500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

    • சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள்.
    • தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    தவழும் வயதில், குழந்தைகளின் உலகம் தனித்துவமானது; பார்க்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரியும். எந்தப் பொருள் அருகில் இருந்தாலும், கையில் கிடைத்தாலும் முதலில் தொட்டுப் பார்ப்பார்கள். பிறகு, கையிலெடுத்து வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது என்னவென்று அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் காரணம்.

    ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ள ஒரு காரணம். உதாரணமாக, கால்சியம் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றைத் தின்பார்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பல்பம், சுவரிலிருக்கும் பெயின்ட் போன்றவற்றைத் தின்னத் துடிப்பார்கள். உடலில் மைக்ரோமினரல்ஸ் குறைபாடு உள்ள குழந்தைகள் சாம்பலையும், சால்ட் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊறுகாயையும் வாயில் போட்டுக்கொள்ளத் துடிப்பார்கள்.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

    குழந்தைகள், ஏதாவது ஒன்றை விழுங்கும்போது நாம் பார்த்துவிட்டால் பிரச்னையில்லை . ஒருவேளை நாம் பார்க்காவிட்டால்தான் பிரச்னை. இதை எப்படி அறிந்துகொள்வது? அதுவரை ஓடி, ஆடி, பேசித் திரிந்த குழந்தை திடீரென அமைதியாக இருக்கும்; அழக்கூடச் செய்யலாம்; அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரியலாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்கள் எதையோ விழுங்கியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.

    பேசக்கூடிய பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடமே கேட்டுவிடலாம். எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.

    ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.

    • முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர். சரவணவேல் மற்றும் குழுவினர்கள் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    • பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள்.
    • மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அருகில் இருப்பவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று புரிவதில்லை.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    இது இரண்டு வகைப்படும். ஒன்று மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு இதன் வித்தியாசம் புரிவதில்லை. மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வரை வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மார்பு பகுதியில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே ஏற்படுவது அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுவது அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவது, உடனே குமட்டிக்கொண்டு வாந்தி வருதல், அதனால் ஏற்படும் படபடப்பு, காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுவது, தலைசுற்றல் மற்றும் உடல் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் காது வைத்தோ அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.

    சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் நாக்கின் அடியில் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும். இது உறைந்த இரத்தத்தை சரி செய்து இதயத்திற்கு சீராக இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். மேலும் உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    ஒருவேளை பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தலையைப் பின்பக்கம் கை கொண்டு உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் மெதுவாக காற்றை உட்செலுத்து வேண்டும். இப்படியாக செயற்கை சுவாசம் தர வேண்டும்.

    அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பு ஏற்பட்ட தாக்கத்தின் அளவு, இதயம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது, மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாட், பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் தேவைப்படலாம்.

    மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்.

    • மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்.
    • நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அவசரகால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது. நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தமிழ்நாடு பார்வையாளர் உமா மகேஸ்வரராவ், திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ. சங்கீதா, வலங்கைமான் பேரிடர் மீட்பு பார்வையாளர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், ரெட் கிராஸ் அமைப்பின் தேசிய பேரிடர் மீட்பு குழு பயிற்றுனர் பெஞ்சமின், ரெட் கிராஸ் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஏழுமலை, வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல், வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், எழுத்தர் வெக்காளிஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு சீருடையில் இல்லாமல் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார்.
    • பொதுமக்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில் சீருடையில் இல்லாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே அவனது உறவினர்களும், அங்கு நின்றவர்களும் கூச்சல் போட்டனர்.

    ஒரு சிலர் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பார்த்து வேகமாக அங்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறுவன் லேசாக கண்ணைத் திறந்தான்.

    அப்போது அங்கு நின்ற சிலர், சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயன்றனர். உடனே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினார்.

    உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறியரக வாகனம் அங்கு வந்தது. உடனே அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் சைலேந்திரபாபு ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கூறினார்.

    அப்போதுதான் பலருக்கு அவர் போலீஸ் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பாக விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய முதலுதவி பெட்டியை விபத்து நடைபெற்ற கொண்டு செல்லும் வகையில் ட்ரோனை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். #designdrone #accidentspots
    சென்னை:

    சென்னையை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் வகையில் புதிய ரக ட்ரோன்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.

    பொதுவாக ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு செல்வதற்கு 13-15 நிமிடங்கள் ஆகும். சரியான முதலுதவி வழங்கப்பட்டால் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவசர நேரத்தில் முதலுதவி வழங்க தெரியாமல் யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

    இந்நிலையில், மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன்கள் முதலுதவி உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை விபத்து நடந்த இடத்திற்கு கொண்டு செல்லும். மேலும், அதிலுள்ள திரை மூலம் முதலுதவு செய்யும் முறைகளை வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வீடியோவை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளலாம்.

    இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்கள் பலரின் உயிரை காப்பாற்ற முடியும். இது 8 கிலோ எடை கொண்ட மருந்துகளை தூக்கி செல்லும். மற்றும் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ரிமோட் மூலம் இயக்கலாம் என மாணவர்கள் தெரிவித்தனர். #designdrone #accidentspots

    ×