என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 217541"
- அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு செல்கிறார்கள்
- கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டு
அரியலூர்,
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம், வினாடி-வினா, வானவில் மன்றம், கலைத்திருவிழா மற்றும் விளையாட்டு விழா போன்றவை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 2022-23-ம் கல்வியாண்டில் பள்ளி அளவில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகள் அனைவரும் மாநில அளவிலான சிறப்பு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் பிரணவ் கார்த்திக் வினாடி-வினா போட்டியிலும், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தீக்ஷிதா பேச்சுப்போட்டி (இலக்கிய மன்ற போட்டியிலும்), புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் நிதிஷ்குமார் வானவில் மன்றம் போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேற்கண்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மேற்கண்ட 3 மாணவ-மாணவிகளும் மற்றும் ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் என்ற ஆசிரியரும் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு பள்ளி கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியரை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஆசிரியர்கள் உடனிருந்தனர். மேலும் இவர்கள் வெளிநாட்டு கல்வி சுற்றுப்பயணமாக பின்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
- கரூரில் பஸ் ஸ்டாண்டில் மயங்கி கிடந்தார்
- போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்
கரூர்,
கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத கண்பார்வை இழந்த மாற்றுத் திறன் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுத்திருந்தார். ரவுண்டானா பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண்டும் காணாமல் சென்ற நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போக்குவரத்து போலீசார்கள் மற்றும் சட்டம் ஒழுங்குபோலீஸ்காரர் அவரை அடையா ளம் கண்டு, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பெயரில் அப்பகுதிக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அந்த முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத அந்த முதியவருக்கு உதவி செய்த மூன்று காவலர்களின் செயல்களை கண்ட பொதுமக்கள் `சபாஷ்' என்று பாராட்டினர்.
- வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன
- இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வாழைக்கொல்லை ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றன. தலைவர் புஷ்பராஜ் தலைமையில் ஆசிரியர்கள் கருணாகரன், அன்பகம், , வள்ளி, கீதா கிருத்திகா ஆகியோர் தமிழக அரசின் அறிவுரையின் படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் , தொடக்கக் கல்வி,மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதலின்படி 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு வாழைக்கொல்லை குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக வீதி வீதியாக சென்று மாணவர்களின் இல்லங்களிலேயே மாணவர்கள் சேர்க்கையை செய்தனர். இச்செயலை ஊர் பொதுமக்கள் வரவேற்றதுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்
- மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது.
- இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கடலூர்:
மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னையில் நடந்தது. இப்போட்டியில் கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கடந்த 18 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
இதற்கு துணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியா ளர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனை படைக்க பல்வேறு திட்டங்களை வழிவகுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஆகையால் நீங்கள் உரிய முறையில் பயிற்சி பெற்று தற்போது செய்துள்ள சாதனைகளை தாண்டி பல்வேறு சாதனைகளை பெற வேண்டும். இவ்வாறு பேசினார். மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ, நிர்வாக அலு வலர் ஞானவேல், பயிற்சி அலுவலர் வேணுகோபால், ராமலிங்கம், விஜயகுமார், முருகன், அஷ்ரப் அலி, சதிஷ், செந்தில், சிலம்பு மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்பயிற்சி அலுவலர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
- காயங்களுடன் இருந்த வெளிநாட்டு பறவை மீட்கப்பட்டது.
- அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குதிரைப்பாதை சாலை அருகே கழிவு நீர் கால்வாயில் ஒரு வெளிநாட்டு பறவை காயங்களுடன் நின்று கொண்டிருந்தது. அதனை கண்ட சமூக ஆர்வலர் அய்யப்பன் அதனை மீட்டு தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ரத்த காயங்களுடன் இருந்த அந்த பறவைக்கு மருத்துவர் கவீன் சிகிச்சை அளித்தார். இந்த பறவை பற்றி மருத்துவர் கூறுகையில், பாலைவன பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் இதுபோன்ற பறவைகளை காணலாம். இமயமலைக்கு வடக்கே ஆசியாவிலும், இந்தோனேசியா மற்றும் சில பசிபிக் தீவுகளிலும் இந்த பறவை காணப்படும் என்றார். இந்த பறவையை மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறை அலுவலர் சங்கையாவிடம், சமூக ஆர்வலர் அய்யப்பன் ஒப்படைத்தார். அவருக்கு வனத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
- கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
- புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி ஜே. ஜே. நகர் பகுதியில் வசித்து வருபவர் பானுமதி. இவர் கணவர் காந்தி. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். அவருடைய மகள் மற்றும் 2 பெண் பேத்திகளுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பானுமதியின் கணவரின் பூர்வீக இடமான 8 சென்ட் வீட்டுமனையை, வேறொரு நபர் பட்டா மாறுதல் செய்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து பூர்வீக இடத்தை மீட்டு தர போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பானுமதி அவருடைய மகள் பாக்கியலட்சுமி மற்றும் 2 பேத்திகளுடன் விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்து முறையிட்டார் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும், புகார் அளிக்க வந்த அப்பெண்மணியின் ஆதரவற்ற ஏழ்மை நிலையை கண்டு மனம் கலங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், அக்குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், பானுமதி அவருடைய மகள் மற்றும் 2 பேத்திகளுக்கு புதிய ஆடைகள் வாங்கித் தந்து, 2 பேத்திகளையும் பள்ளியில் சேர்த்து நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் எனவும் அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என உறுதி அளித்தார். மேலும், ஒரு ஆட்டோவை வரவழைத்து அக்குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். புகார் அளிக்க வந்த பெண்மணியின் ஆதரவற்ற வறுமை நிலையை கண்டு உடனடியாக உணர்ந்து, அரிசி மற்றும் மளிகை பொருட்கள், ஆடைகள் வாங்கித் தந்து ஆட்டோவில் வழியனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புவனேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
- மேலும் மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமம் அறிவியலில் புதுமை கண்டு பிடிப்புகளுக்கான ரூ.50 ஆயிரம் பரிசு தொகை பெற்றமைக்காக பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் 6 முதல் 12 -ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விருதிற்காக அறிவிக்கப்பட்டு, ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வின் புகைப்படங்கள் இணையவழி வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 கட்ட அறிவியல் அறிஞர்கள் வாயிலாக தேர்வு நடைபெற்றது.
இதில் கண்டுபிடிப்புகள் 14 தேர்ந்தெடுக்கப்பட்டதில் தேசிய அளவில் நீலகிரி மாவட்டம் பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி குறைந்த விலையில் புதுமையான மறு சுழற்சி காகித தீப்பெட்டி உற்பத்தி எந்திரம் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
அந்த காசோலையை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதை தொடர்ந்து கலெக்டர் அம்ரித், மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரம், பெற்றோர் பாக்யம் ஆகியோர் உடனிருந்தனர்.
- பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது.
- ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார்,
கடலூர்:
பண்ருட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவமாகி அழகான பெண் குழந்தை பிறந்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முடப்பள்ளியை சேர்ந்தவர் தமிழ்அரசன் மனைவி அனிதா (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அனிதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால், டிரைவர் தவபாலன் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
அதிகாலை 5.45 மணி அளவில் ஆம்புலன்சில் பணியில் இருந்த அவசர கால நுட்புணர் சதிஷ் பிரசவம் பார்த்தார். இதில் அனிதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 2 பேரையும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
திருவாரூர்:
எட்டாம் வகுப்பு மாணவ ர்களுக்கு ஆண்டு தோறும் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு தேர்வு இயக்கத்தால் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றி பெறுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான தேர்வு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 55 கல்வி மாவட்டங்களிலும் 6695 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் திருவாரூர் மாவட்ட த்தில் மட்டும் 86 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 28 வது இடமாகும்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த வகையில் 48 மாதங்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இந்தத் தொகை மாணவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரிய ர்களும், பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஜி.சக்தி கிருபா, தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2023-ம் ஆண்டிற்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.
''மானுட சேவையின் தேவை'' என்ற தலைப்பில் பேசிய அவர் மாவட்ட அளவிலான முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை பெற்றார்.
பரிசு பெற்ற மாணவி சக்தி கிருபாவை, கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் பாராட்டினர்.
- ராஜேந்திரன் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தியுள்ளார்.
- வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமரின் வருகைக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பிற பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அதே தினம் மதியம் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஊட்டிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டபெட்டா காட்சி முனை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அப்போது அங்கு பணியில் இருந்த கோத்தகிரி போக்குவரத்து சப்-இ ன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொட்டபெட்டா முதல் சேரிங்கிராஸ் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தி அங்கிருந்து பிற போலீசார் உதவியுடன் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பாராட்டியதுடன் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.
- அதிகாரிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
- கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுத்துத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர்கள், தலையாரிகள் என அனைவரையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களுக்கு ராஜபாளையம் தொகுதி விவசாயிகள் சார்பிலும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்