search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வின்"

    • சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
    • கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

    டொமினிகா:

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார்.

    இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.

    ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இத்தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

    டொமினிகா:

    வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் இந்திய அணி அசத்தலாக பந்து வீசியது. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா சுழலில் அந்த அணி சிக்கியது.

    அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    • ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார்.

    லண்டன் :

    ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் ஓவர் முடிந்து விட்டது என எண்ணி கிரீசை விட்டு வெளியே வந்தார். அப்போது விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பலரும் இதை கிரிக்கெட் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த நிலையில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. என்றெல்லாம் திட்டக்கூடாது என அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு விக்கெட் கீப்பர் ஸ்டெம்பில் இருந்து அதிக தூரம் நின்று கொண்டு பந்தை எரிந்து சும்மா ஆட்டம் இழக்க செய்திருக்க மாட்டார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து பந்து முடிவதற்குள் கிரீசை விட்டு வெளியே செல்வதை கவனித்து இருந்தால் மட்டுமே இப்படி ஆட்டம் இழக்க வைத்திருக்கக்கூடும். இந்த தருணத்தில் அலெக்ஸ் கேரியின் புத்திக் கூர்மையை நாம் பாராட்ட வேண்டுமே தவிர இது நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. இது நல்ல கிரிக்கெட் கிடையாது என்றெல்லாம் திட்டக்கூடாது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

    அஸ்வினின் இந்த கருத்துக்கு இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார்.
    • ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் 2வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடியதால், அவர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் லபுசேன் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பின்தங்கினார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 4வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே உள்ளார். இந்திய வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் பின்தங்கி, 14வது இடத்தில் உள்ளார். கேப்டன் ரோகித் சர்மா 12வது இடத்தில் உள்ளார்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்திலும், அக்சர் பட்டேல் 4வது இடத்திலும் உள்ளனர்.

    • சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள்.
    • இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன்.

    கோவை:

    அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது விவாதப் பொருளானது.

    இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான அஸ்வின் இது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    "நமது அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்களிப்பும் உள்ளது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அப்போது சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.

    கடந்த முறை எங்களது இங்கிலாந்து பயணத்தில் 2-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. அப்போது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என ஆடும் லெவனில் பவுலர்கள் இருந்தனர். அதுவே இந்த முறையும் அவர்களது எண்ணமாக இருந்திருக்கலாம். போட்டி தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே நான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பில்லை எனக் கருதினேன்.

    கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் வெவ்வேறு விதமான அளவுகோலின் கீழ் நடத்துவது வழக்கம். சிலருக்கு 20 போட்டிகள், சிலருக்கு 10 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியின் ஜெர்சியை நான் அணிந்தபோது எனக்கான வாய்ப்பு குறித்து நான் அறிந்திருந்தேன். அதற்கு தயாராகவும் இருந்தேன். அது என் கையிலும் இல்லை. நான் யார்? என்னால் என்ன செய்ய முடியும் என்பது மட்டுமே என் கையில் உள்ளது.

    சமூக வலைதளத்தில் நான் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தால் நாம் வெற்றி பெற்றிருப்போம் என சொல்லி இருந்தார்கள். ஆனால், அதில் நான் உறுதியாக இல்லை. நான் எனது சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருக்கலாம். இறுதிப் போட்டி முடிந்ததும் எனது கவனம் டிஎன்பிஎல் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார்.

    ஓவலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
    • திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார்.

    கோவை:

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய திருச்சி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    திண்டுக்கல் அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், அஸ்வின், சரவண குமார், சுபோத் பதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து விளையாடிய திண்டுக்கல் அணி 14.5 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஒரே பந்துக்கு இரு முறை ரிவ்யூ கேட்ட அரிய நிகழ்வு நடந்துள்ளது. திருச்சி அணி பேட்டிங் செய்த போது அஸ்வின் ஓவரில் ராஜ்குமாருக்கு அவுட் என கள நடுவர் தீர்ப்பு அளித்தார். உடனே ராஜ்குமார் ரிவ்யூ எடுத்தார். அதில் அவுட் இல்லை என 3-வது நடுவர் தெரிவித்தார். 3-வது நடுவரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த அஸ்வின் மீண்டும் ரிவ்யூ எடுத்தார். அப்போதும் நாட் அவுட் என தீர்ப்பு வந்தது.


    கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்துக்கு இருமுறை ரிவ்யூ கேட்க்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

    • பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • பேட்ஸ்மேன்களில் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது . இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் (163) அடித்தும், 2வது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியைச் சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரே அணியை சேர்த்த வீரர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது அரிதான நிகழ்வு. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இது கடைசியாக 1984-ல் நிகழ்ந்தது. மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் கோர்டன் கிரீனிட்ஜ் (810 ரேட்டிங் புள்ளிகள்), கிளைவ் லாயிட் (787) மற்றும் லாரி கோம்ஸ் (773) ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10-வது இடத்தில் உள்ளார். ரகானே முதல் இன்னிங்சில் 89 மற்றும் 2-வது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் 37-வது இடத்திற்குத் திரும்பினார். ஷர்துல் தாக்கூர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் 6 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    • சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வினை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    • உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கங்குலி குறிப்பிட்டார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீரர் அஸ்வின் இடம்பெறவில்லை. அவரை சேர்க்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு 4 வேகப்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அஸ்வினை நீக்கியது கடினமான முடிவு என்றும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில் அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என்று முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், கங்குலி, ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் தனது டுவிட்டர் பதிவில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வின் இல்லை. அவரை நீக்கியது மிகப்பெரிய தவறு" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி கூறும்போது, "ஒவ்வொரு கேப்டனும் வித்தியாசமாக சிந்திக்க கூடியவர்கள். உலகின் தரம் வாய்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வினை 11 பேர் கொண்ட அணியில் தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் நிக்கி பாண்டிங் கூறும்போது, "ஆடுகள தன்மையை பொறுத்து வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும் அஸ்வின் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் ஆவார்" என்றார்.

    • அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    • சூழ்நிலையை பார்த்து இந்த முடிவை எடுத்ததாக பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்தார்.

    லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணியின் தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களையும் கண்டனத்தையும் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

    அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்கு தகுந்தாற்போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வுசெய்து இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அவரை அணியில் எடுக்காமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

    இந்நிலையில், அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை.
    • இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்த காரணத்தினால் 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

    ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், ஜடேஜா சிறந்த லெக் ஸ்பின்னர். அத்துடன் இரண்டு பேரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். இதனால் யாரை எடுப்பார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அஸ்வினை அணியில் சேர்க்காதது மிக கஷ்டமான ஒன்றுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆடும் சூழ்நிலை மற்றும் அணியின் வெற்றி காம்பினேஷன் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்தியா 4 வேக பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி உள்ளது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிந்து விட்டால் அஸ்வினை சேர்க்காதது குறித்து எந்த விவாதம் எழும்ப வாய்ப்பில்லை.

    ஒரு வேளை போட்டி ஐந்தாவது நாள் வரை நீடித்தால் சுழற் பந்துவீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அஸ்வின் எப்போதுமே சவாலாக இருப்பார். ஆகையால் இந்தப் போட்டி முடிந்தபின் ஒருவேளை இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையாவிட்டால் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து மிகப்பெரிய விவாதம் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • ஆஸ்திரேலியா போட்டிகளில் விளையாடாமல் ப்ரெஷ்யாக வருகிறது
    • இந்திய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி சோர்வாக வந்துள்ளனர்.

    இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் விவரிக்கிறார்.

    இரு அணிகள் குறித்து ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு சற்று அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஓவல் சூழ்நிலை இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவில் பொருத்தமானதாக இருக்கும். இரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோற்றதைவிட அதிக அளவில் எதிர் அணிகளை வீழ்த்தியுள்ளன. இதனால் இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்திற்கும் தகுதியானவை.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அதேவேளையில் இந்திய வீரர்கள் உச்சக்கட்ட போட்டித்தன்மை வாய்ந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளனர்.

    ஒரு அணி ப்ரெஷ் ஆக வருகிறது. மற்றொரு அணி சோர்வாக உள்ளது. இதுபோன்ற பெரும்பாலான காரணிகள் போட்டியை பாதிக்கலாம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் சிறந்த போட்டிகளில் ஒன்று. இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்தியா 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.

    இந்திய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இரண்டு பேரையும் தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா 6-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். அவரது பேட்டிங் திறனை மேம்படுத்தியுள்ளதால், அவரை ஒரு பேட்ஸ்மேனாக கருதலாம். தேவைப்பட்டால் சில ஓவர்கள் வீச வைக்கலாம்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவை விட அஸ்வின் சிறந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜடேஜாவை அணியில் வைத்துக் கொண்டால், போட்டி நான்காவது அல்லது ஐந்தாவது நாள் செல்லும் நிலை ஏற்பட்டு, ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், சிறந்த 2-வது சுழற்பந்து வீச்சு வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    • சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார்.
    • சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

    மும்பை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 36 வயதான அவர் ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    மும்பை வான்சுடே மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றது.

    இந்த ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 27 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் அவர் அனைத்துவிதமான 20 ஓவர் போட்டிகளும் சேர்ந்து 300 விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை புரிந்தார். 300 விக்கெட் எடுத்த 2-வது இந்திய வீரர் அஸ்வின் ஆவார்.

    ராஜஸ்தான் அணியின் சக வீரரான யசுவேந்திர சாஹல் ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 300 விக்கெட்டை தொட்டார். தற்போது அஸ்வினும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

    சர்வதேச அளவில் 17-வது பந்துவீச்சாளர் ஆவார். சுழற்பந்து வீரர்களில் 9-வது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

    அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் கைப்பற்றி உள்ளார். மலிங்கா, அமித் மிஸ்ரா, பியூஸ்சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் இணைந்தார்.

    பிராவோ 183 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், சாஹல் 178 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    ×