search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும்.
    • பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

    நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் அனைத்தும் புழக்கத்தில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

    பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள நகைக்கடைக்காரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதற்கு ஆலோசனை கேட்டு அதிகளவில் அழைப்பு வருவதாக அகில இந்திய ஜெம் மற்றும் ஜூவல்லரி உள்நாட்டு கவுன்சில் தலைவர் சயாம் மெஹ்ரா தெரிவித்தார்.

    இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவாக, நான்கு மாதங்கள் வரை ரிசர்வ் வங்கி நேரம் வழங்கியுள்ளதால் பெரிய அளவில் நகைகள் வாங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் மனைவி அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயி ருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், உடனே பஸ்சில் இருந்து இறங்கி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா நகை திருடியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.

    பஸ்சில் பயணித்து வந்தவர்களில் யாரோ தான் நகையை திருடிவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று கருதிய போலீசார், பஸ் நிறுத்தப்பட்ட நிறுத்தங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள், மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் அவச ரமாக இறங்கிச்செல்வது அதில் பதிவாகியிருந்தது.

    அந்த நபர்கள் தான், பெண்ணிடம் நகைகளை திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் நகையை பறி கொடுத்தவரும், அந்த 2 நபர்களும் பஸ்சில் தங்களின் அருகில் நின்றி ருந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யதில் அவர்கள் அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம் பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை(42) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.
    • அவரை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர்.

    தேனி:

    தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு கனகராஜன் மகள் சூர்யகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கணவர் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சூர்யகலா பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அவர்களை பார்க்க கந்தன்ராஜன் மாமனார் வீட்டிற்கு சென்றார். தனது குழந்தை கள் மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கூறினார்.

    இதில் இருதரப்பின ருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கந்தன்ராஜனை தாக்கி அவர் அணிந்திருந்த நகை, செல்போன் மற்றும் ரூ.2 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கனகராஜன் உள்பட 6 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கனகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 17 வயது சிறுவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி வசந்தா (வயது 58).

    இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் கொள்ளை வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அய்யப்பன் (18) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சூழலில் சி.சி.டி.வி. கேமராவில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் அடிப்படையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நெல்லை டவுனை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட சிறுவனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவனுக்கு நகை திருட்டு வழக்கில் தொடர்பு தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அய்யப்பனையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் விசாரணை நடத்திய போது, அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. அய்யப்பனின் தாயார் வீடு ஆசாரிபள்ளத்தில் உள்ளது. அவர் அடிக்கடி இங்கு வந்து சென்றுள்ளார். சம்பவத் தத்தன்று வந்தபோது செலவுக்கு பணம் தேவைப்பட்ட தால் வசந்தா வின் நகையை பறித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவருக்கும் குமரி மாவட்டத்தில் வேறு வழக்குகளில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும்

    நாகர்கோவில், மே.10-

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாலை நேரங்களில் பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், திருவிழாக்களிலும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் செயலிழந்து இருக்கின்றன. பல மாதங்களாக அண்ணா பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் கடந்த மாதமும், இந்த மாதமும் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க போலீசார் திணறுகிறார்கள். கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும். அவை சரியாக செயல்படாததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். மக்கள் வெளியே நடமாடுவதற்கே பயப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் விழிப்புடன் செயல்பட்டு தனிப்படை அமைத்து பஸ் நிலையங்களிலும் பொது மக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலைகளிலும், திருவிழாக்கள் மற்றும் வியாபாரம் நடைபெறுகின்ற இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நகை பறித்து செல்பவர்கள் அதிகமாக வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் என கருதபடுகின்றது. எனவே சந்தேகத்துக்கு இடமாக யாராவது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றிதிரிந்தால் அவர்களை விசாரித்து அனுப்ப வேண்டும். ஆகவே அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இதுவரையிலும் திருடப்பட்ட நகைகளை உடனடியாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 42 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறி கும்பல் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என்று கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் திருடுபோனது.

    மதுரை எஸ்.ஆலங்குளம், கமலேசுவரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (60). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.

    தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (62). இவர் ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    புதூர் மண்மலை மேடை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கலெக்டர் பங்களா அருகே நின்று கொண்டி ருந்தார். அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பியது.

    மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60). இவர் டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டி ருந்தார். அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள்(74). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடம் மர்மகும்பல் 4 பவுன் நகைைய பறித்து தப்பியது.

    ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவு. இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடமும் மர்ம கும்பல், 5 பவுன் நகையை பறித்து தப்பியது. ஆனையூர் செந்தூர் நகர் சோனைமுத்து மனைவி நாகம்மாள்(70). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தபோது 3 பேர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகம் (53). இவரிடம் மர்ம கும்பல் 9 பவுன் நகையை பறித்து தப்பியது. மதுரை அருகே உள்ள திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தி (64). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தமுக்கம் பஸ் நிறுத்தம் வந்தார். அவரிடம் 2 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இவ்வாறு மதுரை மாநகரில் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதில்ெ ெதாடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதிகளில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் குற்றவாளிள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டை பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பிக்பாக்கெட் அடித்தவர் கைது

    தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் நின்று கொண்டி ருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் செந்தில்தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்ப முயன்றார். செந்தில் தேவன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விளக்குத்தாண் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் செல்லூர் மேலதோப்பை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். சத்துணவு கூடம் ரோட்டில் 3 பேர் கும்பல் பால்பாண்டியை வழிமறித்து கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பியது. இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமிர்தவல்லி (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார்.
    • அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும், பீரோ சாவியை கொடு என கேட்டு, பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 50).          இவர் சம்பவத்தன்று தனது பேரன் திவாகரனை (13) வீட்டில் விட்டுவிட்டு வடலூருக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த வாலிபர், உங்கள் பாட்டி எனக்கு பணம் தர வேண்டும். பீரோ சாவியை கொடு என கேட்டுள்ளார். சாவியை வாங்கி பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அமிர்தவல்லி சேத்தியாதோப்பு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் போலீசார் மடக்கினர்
    • இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடி

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஆண்களிடம் மயக்கும் விதத்தில் பேசி, அவர்களை தனியாக அழைத்துச் சென்று இளம்பெண் ஒருவர் நகை-பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    ஆனால் நகை-பணத்தை இழந்தவர்கள் யாரும் புகார் எதுவும் கொடுக்காததால், இந்த சம்பவம் குறித்து போலீசார் ரகசிய விசார ணையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், நகை-பணத்தை பறி கொடுத்தவரிடம் விசா ரணை நடத்தினர். அப்போது அவர், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னிடம் மயக்கும் வகையில் பேசியதாகவும் பின்னர் அவர், ஆட்டோவில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரி வித்தார். மேலும் அந்தப் பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது நகை-பணத்துடன் பெண் மாயமாகி விட்டது தெரிய வந்ததாகவும் அவர் கூறி னார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடியில் ஈடுபட்ட பெண் வெட்டிக்காடு சிந்து (வயது 34) என தெரியவந்தது. அவர், நகை-பணத்துடன் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிலால் தலைமையிலான போலீசார், தமிழகம் சென்று ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த முகமது ஹாஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். வல்லகடவு பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முறை கூட்டாளி என்பதும், சிந்துவுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆட்டோவில் அழைத்துச் சென்றவருக்கு குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சிந்து கலந்து கொடுத்ததும் அவர் மயங்கியதும் முகமது ஹாஜாவை வரவழைத்து நகை-பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாகர்கோவில் வந்த அவர்கள், தங்கத்தை ஒரு நிறுவனத்தில் விற்று விட்டு கோவா சென்றுள்ள னர். அங்கு பணத்தை ஆடம் பரமாக செலவு செய்து விட்டு நாகர்கோவில் வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் எனக் கருதி புகார் எதுவும் கொடுக்கா ததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை பேரிடம் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளார் என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் செய்யப்பட்டது.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி(வயது52). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொங்கல் திருவிழாவுக்கு சென்றுவிட்டு சிவகாசிக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக மினி பஸ்சில் ஏறினார். அப்போது டிக்கெட் எடுப்பதற்காக தான் கையில் வைத்திருந்த பையில் மணிபர்சை எடுத்தார். அதில் வைத்திருந்த 4½ பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்து 500 காணாமல் போய் இருந்தது. யாரோ மர்மநபர் நகைகளையும், பணத்தையும் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.
    • சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அவர் தப்பி சென்றதாக புகார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை அடுத்த சடையமங்கலம் இறுங்கன் விளாகத்து வீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43), தொழிலாளி.

    இவருடைய மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் வாங்க நடந்து சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வழி கேட்பது போல் நடித்து சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.

    மேலும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அவர் தப்பி சென்றதாக இரணியல் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் குன்னங்காடு பகுதியை சேர்ந்த காய்கறி கடையில் வேலை செய்யும் அனீஸ் (25) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் சிறுமியிடம் நகை பறித்தவர் என தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) விசாரணை நடத்தி அனீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • நடந்து சென்ற‌ பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே கோட்டனம் பட்டியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர் தனது வீட்டுக்கு நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் ஒருவர் சீதாலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து சீதா லட்சுமி மகன் ராம்ராஜ் சாப்டூர் போலீசில் புகார் செய்தார் .

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.
    • விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி செல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 63). வாழப்பாடி உள்பட பல்வேறு பகுதியில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவரது மனைவி விஜயலட்சுமியை திருப்பத்தூரிலுள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது வீட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்றபோது இவரது வீட்டுக்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடிச்சென்றார். அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து அந்த நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றுவிட்டார்.

    சின்னுசாமி தனது வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 1 லட்சம் ஆகியவற்றை அந்த மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றதும், பட்டுப்புடவை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பேக்கிங் செய்து கொள்ளையடித்து செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வீட்டில் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை, அவர் விட்டுச் சென்ற தடயங்களையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×