என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223237"
- வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
- தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000- முதல் நிறுவ னத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நா டுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணிலும், 9442215972 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் :
பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் தாலுகா வடக்குமாதவி கிராமத்தில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகா பரவாய் (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- கரூரில் ஆதார் சேவை-தபால் சேமிப்பு கணக்கு முகாம் நடைபெறுகிறது
- நாளை முதல் வருகின்ற 20-ந்தேதி வரை நடைபெறும்
கரூர்,
கரூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கரூர் அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட மின்னவேலி (கோவில்பட்டி-மணப்பாறை), கோடந்தூர் (தென்னிலை மேற்கு), வளையல்காரன்புதூர் (ரெங்கநாதபுரம்), கூடலூர் (கூடலூர் மேற்கு), வேளாண்செட்டியூர் (தெத்துப்பட்டி), முனையனூர் (சித்தலவாய்), வேலாம்பூண்டி, நெய்தலூர் தெற்கு (நெய்தலூர்), பொறத்தாகுடி (பழையகோட்டை), சுக்காலியூர் (கருப்பம்பாளையம்) ஆகிய கிராமங்களில் கிராம பஞ்சாயத்து தலைவரின் உதவியுடன் அஞ்சல் துறையின் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த முகாம் நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தபால் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மகளிருக்காக மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மகளிர் மேன்மை திட்டம் (அதிக வட்டி விகிதம் கொண்ட 2 வருட சேமிப்பு பத்திரம்), ஆதார் சேவைகள் (புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல்), தபால் ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகள் மற்றும் தபால் துறையின் மூலம் வழங்கக்கூடிய இதர சேவைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.இந்த கிராமங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியும், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
பல்லடம் அரசு மருத்துவ மனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவ முகாமில் பள்ளி கல்விக்குழுத்தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அயிலூர் குடிக்காட்டில் மக்கள் தொடர்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
- பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் குடிக்காடு கிராமத்தில் வருகிற 14-ந்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, அயிலூர் குடிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் 9-ந்தேதி நடக்கிறது
- பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கறவை மாடு வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் அல்லது 9385307022 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து பெயர் பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
- 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் 1969-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (வியாழக்கிழமை) தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பங்ேகற்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அரண்மனை சிறுவயலில் அ.தி.மு.க. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை, மகளிரணி மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் நிர்வாகிகள் பெற்று கொண்டனர். இதில் இளைஞர்-இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், அமல்ராஜ், விவசாய ஒன்றிய செயலாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் ஜின்னா, இளைஞரணி ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணி ஆனந்தவல்லி, சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
- மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 286 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, தீ விபத்தால் வீடு இழந்த நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், திடுமலை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு ரெட்கிராஸ் சார்பில், சமையல் பாத்திரங்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை, கம்பளி, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ரூ.840 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு முழங்கை ஊன்று கோலும், ரூ.2,780 மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவியும், மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் என 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,620 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆண்டிமடம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் திருக்களப்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி (வட்டார ஊராட்சி), ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் பத்மநாபன், திருக்களப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி, ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பம் செல்வமணி, ஊராட்சி செயலாளர் மாயகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி உதயகுமார், கழக முன்னோடி பழனிவேல், கிளைக் கழக செயலாளர்கள் திருநாவுக்கரசு, ராமாமிர்தம், வேணுகோபால், ரங்கநாதன், ஆபிரகாம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
- 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், கீழ்குந்தா கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தாா்.
இதில் வருவாய்த் துறை சாா்பில் 89 பயனாளிகளுக்கு ரூ.70 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நத்தம் பட்டா, 5 பயனாளிகளுக்கு சாலை விபத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ.1.80 லட்சத்துக்கான உதவித்தொகை, விதவை சான்று, புதிய குடும்ப அட்டை, நுண்ணீா் பாசனக் கருவிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மகளிருக்கான சுயதொழில் கடனுதவி, ஊராட்சித் துறை சாா்பில் 28 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை உள்பட மொத்தம் 182 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினாா்.
முன்னதாக நடமாடும் மருத்துவ முகாம், கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, பொது விநியோகத் திட்டம், சமூக நலத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், தோ்தல் பிரிவு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, இ-சேவை மையம், மக்கள் நல்வாழ்வுத் துறை, கீழ்குந்தா பேரூராட்சி, மாவட்ட முன்னோடி திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை கலெக்டர் பாா்வையிட்டாா்.
முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தனப்பிரியா, தோட்டகலைத் துறை துணை இயக்குநா் ஷிபிலாமேரி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் பாலுசாமி, கீழ்குந்தா பேரூராட்சித் தலைவா் சத்தியவாணி, செயல் அலுவலா் ரவி, தூனேரி ஊா்த் தலைவா் ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- அரியலூரில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.
அரியலூர்,
அரியலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா மாணவர்கள் குறித்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பயற்சியை தொடக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் பணிகள் குறித்து விளக்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா பயிற்சி வகுப்பை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்தும், 10, 11, 12-ம் வகுப்பில் பள்ளி செல்லாதவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து கள ஆய்வு செய்து அவர்கள் உடனடியாக தேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்