search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணி–ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டது

    புதுக்கோட்டை :

    முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தற்போது நிலவி வரும் கொரனோ நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, வயிறுவலி, எலும்புவலி, மயக்கம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவனைகளை அணுகி முறையான பரிசோதனை செய்து நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும், கை, கால்களை சுத்தமாக அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும், சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ண வேண்டும், அதிக எண்ணெயில் வறுத்து, பொரித்த உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முககவசம் கட்டாயம் அணியவும், போதுமான அளவு சமூக இடைவெளிவிடவும் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழலாம் என்று மருத்துவர் விளக்கி கூறினார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் சூர்யபிராகாஷ் அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். இம்முகாமில் ரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதுபாலன் செய்திருந்தனர். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கினைப்பாளர் பாண்டியராஜ் நன்றி கூறினார்.


    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
    • அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    அன்னதானப்பட்டி:

    தமிழகத்தில் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்துமாறு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்லப்பாண்டியன், கென்னடி தலைமை தாங்கினர்‌ . இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தையல்நாயகி, ‌சண்முகம், ராஜேந்திரன், சின்னசாமி, இளமுருகன் ஆகியோர் தனித்தனியே புகார் மனுக்கள் பெற்று விசாரித்தனர்.

    24 புகார் மனுக்கள் பெறப்பட்டு, விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது. இது போல மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடந்தது
    • 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டது

    திருச்சி:திருச்சி மணிகண்டம் ஒன்றியம்‌ சோமரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கீழவயலூர் கிராமத்தில் திருச்சி கால்நடை பராமரிப்பு துறை, ஸ்ரீரங்கம் கோட்டம் சார்பில் திருச்சி மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் கணபதி பிரசாத் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாடுகளுக்கு சினை பரிசோதனை, தொண்டை அடைப்பான், நோய் தடுப்பூசி, செயற்கை கருவூட்டல், ஆடுகளுக்கு துள்மாரி நோய் தடுப்பூசி, நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, சினை பிடிக்காத மாடுகளுக்கு தாது உப்பு கலவை போன்றவை வழங்கப்பட்டது. மேலும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கால்நடை புலனாய்வுத்துறை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. முகாமில் பசுந்தீவன வளர்ப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறந்த கன்று, கால்நடை பராமரிப்பு விருது மற்றும் மேலாண்மை விருது ஆகிய விருதுகளை சோமரசம் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் குணவதி துரைபாண்டியன் மற்றும் தி.மு.க. மத்திய மாவட்ட அமைப்பாளர் (விவசாய தொழிலாளர் அணி) துரைப்பாண்டியன் ஆகியோர் கால்நடை பராமரிப்பாளர்களுக்கு வழங்கினார். முகாமில் அதவத்தூர் கால்நடை உதவி மருத்துவர் சரவணன், ராம்ஜிநகர் கால்நடை உதவி மருத்துவர் விஜயராகவன், கால்நடை ஆய்வாளர்கள் கல்பனா, குரள்மணி, உதவியாளர்கள் காதர்பாட்ஷா, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200 மாடுகள், 300 ஆடுகள், 500 கோழிகள் ஆகியவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்ட நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டது.

    • தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்.
    • அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் உள்ள கபிரியேல் மக்கள் மன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முகாமை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    மேலும் தஞ்சை கோட்டத்தில் உள்ள ஒரத்தநாடு புதூரில் இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதியும், திருவையாறு அடுத்த கண்டியூரில் 12-ந்தேதியும், மேலத்திருப்பந்துருத்தியில் ஜனவரி 20-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணத்தை அடுத்த கீழக்கோட்டையூரில் வருகிற 26-ந்தேதியும், திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை கீழ மருத்துவக்குடியில் ஜனவரி 6-ந்தேதியும், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரியில் 10-ந் தேதியும், திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பகுதியில் ஜனவரி 5-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் மதுக்கூர் ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலத்தில் வருகிற 28-ந் தேதியும், பேராவூரணி ஒன்றியம் ஆலத்தூரில் 31-ந் தேதியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் ஜனவரி 4-ந் தேதியும், பட்டுக்கோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்ல பிராணிகளுக்கு முகாம் நடைபெறும் இடங்களை அணுகி இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொடியநோயில் இருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.
    • முடிவில் மக்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்–பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சீனிவாசபுரம் காமராஜர் ரோட்டில் உள்ள லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று தஞ்சாவூர் காவேரி லயன்ஸ் சங்கம்,  அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலரும் லயன்ஸ் சங்க நிர்வாகியுமான தமிழ்வாணன், லயன்ஸ் சங்கம் மலேசியா சுந்தரம் ஜுவல்லரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண் சிகிச்சை முகாமை முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய் கண்டறியும் முகாமை நல்லெண்ணத்தூதுவர் முகமது ரபி தொடங்கி வைத்தார்.லயன் சங்க நிர்வாகிகள் சிவகுமார், பாலமுருககுப்தா, பார்க்கவன் பச்சமுத்து, தலைமை கண் மருத்துவர் ஞான செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி., பேசியதாவது:-

    இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்ததற்கு பெருமைப்படுகிறேன். அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் கண் சம்பந்தப்பட்ட பிரச்–சினைகளை தவிர்க்கலாம்.

    இதேபோல் சர்க்கரை நோய்க்கும் ஆரம்பத்திலே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

    முகாம் நடைபெறும் சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு 2 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க உள்ளேன். வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க உள்ளது.

    விடுமுறை காலத்திற்குள் அந்த பணி நிறைவடையும். புதிய கட்டிடங்களுக்கு தேவையான மேசை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து வகையான பர்னிச்சர்களையும் காவேரி லயன் சங்கம் உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு லயன் சங்கங்களும் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பரிசோதனை முகாம் மாலை வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பரிசோதனை முடிவில் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை காவேரி லயன்ஸ் சங்கம் தலைவர் முருகப்பன், செயலர் சிவ சண்முகசுந்தரம், செயலர் (சேவை) ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது
    • நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தானம் முகாம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உஷா முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். நாம் தமிழர் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் ரத்த தானம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கப்பல் குமார், தொகுதி செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் மணிவண்ணன் நகர தலைவர் சரவணன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். இதில் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் நசியாஹுசேன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவர் ரத்தங்களை சேகரித்தனர்.17 நபர்களிடமிருந்து 17 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    • மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது
    • வீடு வீடாக சென்று மருத்துவ சோதனை செய்தனர்

    கரூர்:

    கரூர் அருகில் நொய்யல் குறுக்குச் சாலை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. ஓலப் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் வீடு வீடாக சென்று முதியவர்கள், பாலுாட்டும் தாய் மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க் கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர். பின்னர் அவர் களுக்கு தேவையான மருந்து, மாத் திரைகள் வழங்கப்பட்டன.

    • இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது
    • தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில்

    திருச்சி:

    அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சில் சார்பில் 2,875-வது இலவச சித்த மருத்துவ முகாம் இன்று திருச்சி தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில் உள்ள மதர் தெரேசா மக்கள் மன்றத்தில் நடந்தது. அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் முகாமினை தொடங்கி வைத்தார். ஜே.கே.சி. அறக்கட்டளை நிறுவனர் பா. ஜான் ராஜ்குமார், சுமதி பப்ளிகேஷன் வசந்தகுமார், பேராசிரியர் ரவி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமினை புனித லூர்து அன்னை தேவாலயத்தின் பாதிரியார் சே.ச.மரிவளன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர்கள் இப்ராஹிம், கீதா கோபி கிருஷ்ணன், கல்பனா, ஆனந்த ஜோதி, கார்த்தி, சுபத்ரா, கணேசன், குமார், மதிகுமார், திருநாவுக்கரசு, ரேவதி, தமிழ்ச்செல்வி, ரபி அகமது, சையது ஹாசன், ராஜசேகரன் , மகேஷ், அஸ்மா, சந்தானம், சகுந்தலா மற்றும் பலர் கலந்து கொண்டு மருத்துவ சேவையாற்றினர்.

    மேலும் நலவாழ்வு நற்பணி இயக்கத்தின் தலைவர் சந்திரசேகர், செயலாளர் அனித்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு அக்குபஞ்சர் ரிசர்ச் கவுன்சிலில் மாநிலச செயலாளர் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் நன்றி கூறினார். இதில் கால் வலி, தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அக்குபஞ்சர் மருத்துவம் பார்க்கப்பட்டது. அது மட்டும் அல்லாமல் சளி, இருமல்,சத்து மருந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர் மருந்துகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • அடிப்படை உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • கிராமப்புற மக்களுக்கு

    திருச்சி:

    இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா, பதுவைநகர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் "மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா திருச்சி மாவட்ட இளையோர் அலுவலர் சே.சுருதி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் த.வீ.பத்ரிநாத் முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தின் செயலர் பொறியாளர் க.ராஜசேகரன், இயக்குநர் ம.க.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    திருச்சி மாநகராட்சியின் துணை மேயர் திவ்யா தனக்கோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் வக்கீல் அமிழ்தினியன் கலந்துகொண்டு அடிப்படை சட்ட உரிமைகள், குழந்தைகளுக்குரிய கட்டாய கல்வி, மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து பேசினார்.

    கல்லூரி உதவிப்பேராசிரியர் தேன்மொழி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். முன்னதாக ப.கௌதம் வரவேற்புரை ஆற்றினார். இதில் நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் மகேஸ்வரன், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டஸ் நிறுவனர் ஜெட்லீ, தீபலக்ஷ்மி, அருணாச்சலம், ஜான்சிராணி, ஹேமலதா, நிகில் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது
    • சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர்.

    கரூர்:

    வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் தவிட்டுப் பாளையத்தில் நடந்தது. மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சரவணக்குமார், கால்நடை பராமரிப் புத்துறை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை டாக்டர் கண்ணன், நொய்யல் கால்நடை மருத்துவமனை டாக்டர் உஷா, கால்நடை ஆய்வாளர் நடராஜன், முத்துக்குமார், உதவியாளர் மீரா ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டனர். விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால் நடைகளுக்கு புரதச்சத்து நிறைந்த பசுந்தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • கமுதி அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில், தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களிலும் திட்டங்களை குறித்து பயன் பெறலாம். தனிநபர் பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகின்றன. உதவிகள் வழங்கப்பட்டன. உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்வி வட்டாட்சியர் சிக்கந்தர் பவிதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வாசுதேவன், நீராவி ஊராட்சி மன்ற தலைவர் வாழ்ராஜ், துணைத் தலைவர் ஏ.பி.நாகராஜன், ஊராட்சி ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால் மண்டல துணை தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×