search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • ஆர்.எஸ்.எஸ்.பேரணி-பொதுக்கூட்டம் இன்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிறது.
    • பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். பேரணி, பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    பி.ஆர்.சி. டெப்போவில் தொடங்கும் பேரணி வடக்கு ரதவீதியில் முடிவடைகிறது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமணன், முருகன், பேராசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்று கிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் சார்பில் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் பகுதியில் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இந்த பொதுக்கூட்டத்திற்கு தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பரமணி தலைமை வகித்தார். நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம் வரவேற்புரை ஆற்றினார்.

    அதனை தொடர்ந்து தி.மு.க. தலைமை பேச்சாளர்கள் சேலம் சுஜாதா மற்றும் தருமபுரி அதியமான் உள்ளிட்டோர் பிறந்தநாள் விழா சிறப்புரை ஆற்றினர்.

    பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் தங்கமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி. சேகர், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவர் பெரியண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜ், சரஸ்வதி துரைசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தன், மல்லமுத்து, நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய துணை செயலாளர்கள் புனிதம் பழனிசாமி, அவை தலைவர் வீரமணி, தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் கௌதம், தடங்கம் இளைய சங்கர் மற்றும் ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் தருமபுரி மாவட்ட மாணவர் அணி என்எஸ். கலைச்செல்வன் நன்றி கூறினார்.

    • இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொதுக்கூட்டம் காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடு என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி "எங்கே எனது வேலை" இளைஞர் எழுச்சி தொடர் பிரசார பயணம் என்ற அமைப்பு பொது க்கூட்டம் சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் தமிழ் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் தினேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விஸ்வநாதன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும், தென்காசி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான லிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.ஒய்.எப். நகர செயலாளர் பால்சாமி, தென்காசி மாவட்ட துணை செயலாளர் முனியாண்டி, சிவகிரி பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை செயலாளர்கள் ராஜேந்திரன், வேலுச்சாமி, குருவு, சங்கரவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகர தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்து சரோஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தில்லை நடராஜன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சேக் தாவூது, சேசுராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமித்துரை, ராஜேஸ்வரன், தமிழ்செல்வி, அருள், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • நாளை நடக்கிறது
    • குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்

    வேலூர்:

    ராணுவ ஓய்வூதிய கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் ராணுவ ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகை சம்பந்தமாக ராணுவ ஓய்வூதிய அதிகாரிகள் மூலமாக விளக்க நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலூர் கோட்டை பின்புறம் உள்ள காவலர் நல வாழ்வு மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இதில் முப்படை ராணுவ ஓய்வூதியம் பெறும் வீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் குறைகளுக்கான தீர்வுகளை கேட்டறிந்து பயனடையலாம்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் சார்தோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இத்தகவலை நெல்சன் அந்தோணி தெரிவித்துள்ளார்.

    • ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.
    • நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    கூடுவாஞ்சேரி:

    காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தி. மு.க. அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ஊரப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளரும் , ஒன்றிய குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன் தலைமையில் நடைபெற்றது. ஊரப்பாக்கம் ஊராட்சி கிளை கழக செயலாளர் மெய்யழகன், ஜான்தினகரன், தமிழ்ச் செல்வன், இன்பசேகரன், கண்ணன், சண்முகம், சாய்ராம், புஷ்பராஜ், வரலட்சுமிமுருகன், ஜே.கே.தினேஷ், சி.ஜெ.கார்த்திக், வாசு, கமலநாதன், செல்வகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் புதுக்கோட்டை விஜயா, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் கருணாகரன், மகளிர் அணி அமைப்பாளர் விஜயலட்சுமி, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் தீபன் மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    விழாவில் கிளை செயலாளர் சி.ஜே.கார்த்திக் ஏற்பாட்டில் 2500 பெண்களுக்கு புடவை, பிரியாணி, சலவைத் தொழிலாளர்கள் 15 பேருக்கு அயன்பாக்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி, இளைஞர்களுக்கு கேரம் போர்டு, வாலிபால், டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் கிட் ஆகிய நல திட்ட உதவிகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவி.எம். இளங்கோவன் நன்றி கூறினார்.

    • ஒரு சில காரணங்களால் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
    • மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசியில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.

    ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.

    இந்நிலையில் தென்காசி யில் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெறும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் மையக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெகந்நாத் அரங்கத்தில் நடைபெற்றது.

    இதில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா , மாவட்ட பார்வையாளர் மகாராஜன்,பாலகுருநாதன், ராமநாதன், பொதுச்செய லாளர்கள் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு கடற்கரை தலைமை தாங்கினார்.
    • நாஞ்சில் சம்பத்,ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    சங்கரன்கோவில்:

    குருவிகுளம் அண்ணா திடலில் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொதுக் கூட்டம் நடைபெற்றது. குருவிகுளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கடற்கரை தலைமை தாங்கினார்.

    தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தராஜ், ராஜ குலராமர்பாண்டியன், ராமகிருஷ்ணசாமி, ராஜா, சுப்பிரமணியன், வேலுச்சாமி, கிருஷ்ண சாமி, மாடசாமி, பார்வதி, கணேசன், சுந்தர பாண்டியன், முத்துலட்சுமி, கண்ணன், கணேசன், செல்வி பாலசுப்ரமணியன், ஜெய்சங்கர், கேவி கணேசன், மாரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன் வரவேற்றார். கலைச்செல்வன், செந்தில்நாதன் ஆகியோர் தொகுப்புரை வழங்கினர்.

    தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் முத்துச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட நிர்வாகிகள் பத்மநாதன், ராஜதுரை, செயற்குழு உறுப்பினர்கள் பராசக்தி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி சரவணன், பேரூர் செயலாளர் மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துச்சாமி, மனோகரன், சண்முக பாண்டி, செந்தூரப்பாண்டி, வக்கீல் அணி பிரபாகரன், ஜெயக்குமார் மற்றும் மூத்த முன்னோடிகள், கிளை செய லாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

    • முன்னதாக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.
    • முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திமுக சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மூவலூரில் நடைபெற்றது.

    இந்த கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் ஆலோசனைபடி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம். மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் பாலு, ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, துணை செயலாளர்கள் சிவக்குமார், பாரதிமதியழகன், அற்புதராஜ், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் நாகம்மை கருப்பையா கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாத னைகளை பொதுமக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்நிலை திட்டகுழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், கழக பேச்சாளர் கோமல் விஜி அறிவழகன், முன்னாள் நகர கவுன்சிலர் மேனகா மாரியப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்தி, தொ. மு. ச. மண்டல செயலாளர் ஆபிரகாம், மாவட்டம் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மும்தாஜ், பதர்நிஷா நஜீம், சிவக்குமார், அர்ஜுன், காமராஜ், கபிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஐயப்பன், முஹம்மது ஹரிப், சபாபதி, தேவராஜன், ராஜேஷ், ரமணி, ஆனந்தி தர்மராஜ், மாலதி கதிரவன், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய கிளை பிரதிநிதிகள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • தொண்டியில் உலக மகளிர் தின பேரணி நடந்தது.
    • இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உலக பெண்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. ராமநாதபுர மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பொருளாளர் ரூபி தலைமை வகித்தார்.

    தமிழக பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவி ராமலெட்சுமி முன்னிலை வகித்தார். எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குநர் பிரிட்டோ ஜெயபாலன் வாழ்த்திப் பேசினார். தமிழக பெண்கள் கூட்டமைப்பின் துணை தலைவி தங்கச்சிமடம் ராஜேஸ்வரி, மாவட்ட மக்கள் அமைப்பு துணை தலைவி செங்கோல்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரமக்குடி ஒன்றிய மக்கள் அமைப்பின் தலைவி ரெஜினா அனைவரையும் வரவேற்றார். மண்டபம் ஒன்றிய மக்கள் அமைப்பு உறுப்பினர் கர்லோபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் முதுகுளத்துார் மக்கள் அமைப்பு உறுப்பினர் இருதயராணி நன்றி கூறினார்.

    டெய்ஸி அருள்ஜோதி உட்பட 8 யூனியனைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    • 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
    • கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம்.பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சந்தைப்பேட்டை கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,கே.பி.பரமசிவம்,எம்.கே.ஆறுமுகம்,ஜெயந்தி லோகநாதன், ஐ.டி. விங்க் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க செயலாளர் சொக்கப்பன் வரவேற்றார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சுமார் 700 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சேலைகள்,இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் குலாப்ஜான்,மாவட்ட நிர்வாகிகள் சிவாச்சலம், அரிகோபால்,பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, கூட்டுறவு சங்கத்தலைவர் பானு பழனிசாமி ,தண்ணீர் பந்தல் நடராஜன்,பிரேமா , பழனிசாமி, ஐ.டி.விங்க் மிருதுளா நடராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 11-ந்தேதி ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கையில் வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். இதற்காக சிவகங்கை-மதுரை 4 வழிச்சாலையில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், சேவியர்தாஸ், செல்வமணி, ஜெகன், கோபி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட பாசறை இணைச்செய லாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    ×