search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி சாம்பவலசு பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர் ஏ.என்.திருச்செந்தில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்துவெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல் என்ற ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூர் பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், காங்கயம் தொகுதிக்குப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    திருமங்கலம்

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நாளை நடைபெறும் பொது கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். திருமங்கலம் வழியாக சிவகாசி சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இதனையொட்டி திரும ங்கலம், மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி வரை எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் நாளை வரவேற்பு அளிக்கும் இடங்களான மேலக்கோட்டை, சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    முன்னதாக சிவரக்கோ ட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் மதுரையில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்றனர். அவர்களை முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மீனவர் அணி மாவட்ட செயலாளர் சரவணபாண்டி, ஒன்றிய கவுன்சிலர்கன் சிவரக்கோட்டை ஆதிராஜா, உச்சப்பட்டி செல்வம், பேரவை நகர செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    • இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் நாளை (29-ந்தேதி) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார்நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    மேடை அமைக்கும் பணிகளை இரவு-பகலாக முன்னாள் அமைச்சர்- விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் நேரம் காலை வேளை என்பதால் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பொதுமக்கள், நிர்வாகிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் கூலிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சிறப்பாக செய்திருக்கிறது.

    முன்னதாக நாளை காலை வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ மேடையில் வந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்து வருகிறார்.            

    • சிவகாசியில் வருகிற 29-ந் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • இதில் பங்கேற்க வருகைதரும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், விலை வாசியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார்நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொது ச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கண்டன பொதுக்கூட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமாரன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் கலாநிதி, நகரச்செயலாளர் முகமது நயினார், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச்செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், சிவகா சிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டம் தி.மு.க. அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். கண்டன பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் பொது மக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வேலாயுதம், அமைப்புசாரா ஓட்டுநா் அணிமாவட்ட செயலாளா் சேதுராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், மிக்கேல்ராஜ், பேரவை சரவணன், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவ ணன், பொதுக்குழு உறுப்பினர் அருணா நாகசுப்பிரமணியன், நகர துணை செயலாளர் கண்ணன், சிவகாசி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரை பழங்காநத்தம் பகுதியில் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகிற 29-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதையொட்டி திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வருகிற 29-ந் தேதி மதுரை வருகிறார். அவருக்கு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும்.

    தி.மு.க. தற்போது மக்கள் மனதில் நம்பிக்கை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    விலைவாசி உயர்வால் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். அவரால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை.

    வருகிற 29-ந் தேதி மாலை மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதில் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், ஒன்றிய செயலாளர் தக்கார் பாண்டி, பொன். ராஜேந்திரன், பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர் பொன்.முருகன், என்.எஸ்.பாலமுருகன், எம். ஆர். குமார், பாலா, எம்.ஜி. பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.
    • மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜா என்ற ராஜி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரீஷ் ரெட்டி வரவேற்றார்.

    பகுதி செயலாளர்கள் பி.ஆர்.வாசுதேவன் ,அசோகா, மஞ்சுநாத் மற்றும் மாவட்ட மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர்கள் அன்புக்கரசு, கொள்கை முரசு கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.சி.வி. ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மதன், ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, மற்றும் புருஷோத்தம ரெட்டி, லட்சுமி ஹேமகுமார் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள்,கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் நன்றி கூறினார்.

    • தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்றது.

    ஊட்டி,

    கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள்

    எம்.எல்.ஏ.வுமான சாந்திராமு தலைமை தாங்கினார்.

    அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் தப்பகம்பை கிருஷ்ணன்,குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், குன்னூர் ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், குன்னூர் நகர மன்ற உறுப்பினர் குருமூர்த்தி மற்றும்கோத்தகிரி நகரம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • பரமக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் காந்திசிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, பரமக்குடி அவைத்தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் எம்.கே.ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

    இக்கூட்டத்தில் அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாலாமணி மாரி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன், நகர்மன்றத் உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் அம்மா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார். 

    • மதுரை சோழவந்தானில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி இந்த கூட்டம் நடந்தது.

    சோழவந்தான்

    அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது.

    தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகை ரஜினி நிவேதா, தலைமை கழக பேச்சாளர் சின்னையா ஆகியோர் பேசினர்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ரவிசந்திரன், ராஜா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவர் அணி கருப்பையா, மணி, மகளிரணி லட்சுமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில், ஓசூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார்.

    மாவட்ட அவைத்தலை வர் வக்கீல் அன்வர் பாஷா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநகர கிழக்கு பகுதி செயலாளர் சாய் கிரண் வரவேற்றார்.

    இதில், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ.ரோகிணி கிருஷ்ண குமார், மாநில நெசவாளர் பிரிவு செயலாளர் தரணி சண்முகம், தலைமைக்கழக பேச்சாளர் திருப்பூர் சுரேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, டி.எஸ்.பாண்டியன், பொருளாளர் சிவகுமார், தேவராஜ் மற்றும், மாவட்ட,, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து தொண்டனர்.

    முடிவில், மாநகர மேற்கு பகுதி செயலாளர் வீரைய்யா நன்றி கூறினார்.

    • அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நாளை 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் கோவை மேற்கு சேலஞ்சர் துரை, நீலகிரி கலைச்செல்வன், கோவை மத்திய மாவட்டம் அப்பாதுரை, கோவை தெற்கு சுகுமார், திருப்பூர் வடக்கு ஆனந்தகுமார், ஈரோடு மாநகர் கிழக்கு சிவபிரசாத், ஈேராடு புறநகர் கிழக்கு சதாசிவ மூர்த்தி, ஈரோடு மாநகர் மேற்கு வெங்கடேசன், ஈரோடு புறநகர் மேற்கு வேலுச்சாமி, கோவை கிழக்கு செந்தில்குமார் , கோவை வடக்கு பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விழா பேரூரையாற்றுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், மருத்துவ அணி இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர்கள் லட்சுமணன், துளசிமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வபாண்டி, நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முடிவில் வாலிபாளையம் பகுதி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

    • ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.
    • பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார்.

    73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார்.

    குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள். காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

    புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.

    இதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

    ஜம்மு காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்-மந்திரி பதவியை குலாம்நபி ஆசாத் கைப்பற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    ×