search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223729"

    • தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
    • செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்

    கன்னியாகுமரி,

    ஜூன்.30-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அதிகாரி முருகன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். வார்டு உறுப்பி னர்கள் சுபாஷ், ஆனி ரோஸ்தாமஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமையை மறு ஏலம் விடுவது, சிலுவை நகர் முதல் சன்செட் பாயிண்ட் வரை உள்ள கருவேல மரங்களை அகற்றி அந்தப்பகுதியில் புல்வெளி அமைத்துஅழகுபடுத்தி மேம்படுத்துவது, குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு ரூ.36 லட்சம்செலவில் 13 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்குவது, ஒற்றையால் விளை அரசு பள்ளியில் ரூ.6 லட்சம்செலவில் மேற்கூரை அமைத்து பராமரிப்பு பணி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் தெருவிளக்குகளை மாற்றி விட்டு ரூ.75 லட்சம் செலவில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

    • கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு
    • கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் நகரசபை அந்தஸ்தில் உள்ள ஒரே பேரூராட்சி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் அமைந்துஉள்ளன.

    இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்வதால் பேரூராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் கன்னியாகுமரிமெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரைச்சாலை, விவேகானந்தா ராக் ரோடு, ரத வீதி உள்பட பல இடங்களில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

    இந்த கடைகள் அனைத்தும் ஏலம் மற்றும் டெண்டர் மூலம் தனியாருக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுஉள்ளது. தற்போது இந்தக் கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் இதற்கு கடையை குத்தகைக்கு எடுத்து இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் வாடகையை நிர்ணயம் செய்வதில் காலம் தாழ்த்தி வந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து பேரூராட்சி கடைகளையும் புதிதாக தற்போதைய வாடகைநிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகைக்கு விடவும் தாட்கோ கடைகளுக்கு செயற்பொறியாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் நிர்ணயம் செய்யும் மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் விடவும் இதர பேரூராட்சிகளின் கடைகள் அனைத்தும் உள்ளூர் வாடகைநிரக்கை ஒப்பீடு செய்து பொதுப்பணித்துறை கட்டிடங்கள் பிரிவு வழியாக மறுமதிப்பீடு பெற்று அதன்படியான மாத வாடகை நிரக்கில் ஏலம் அல்லது டெண்டர் மூலம் குத்தகை விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம் வாயிலாக உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விடுவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    • பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
    • இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 200 வீடுகளில் விதிகளுக்கு புறம்பாக தரை மட்ட தொட்டியில் இணைப்பு கொடுத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி வருவதாகவும், இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் செல்ல வீட்டு இணைப்புகளை ஆய்வு செய்து வீட்டின் வெளியே குடிநீர் குழாய் பொருத்த வேண்டும் என செயல் அலுவலர் குகன் உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியை தடுத்து நிறுத்தினர் இந்த நிலையில் தலைஞாயிறு மேலத்தெரு பகுதியில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரத்துடன் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்தும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடக்கும் என்றும், இதை தடுப்பவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் செயல் அலுவலர் குகன் எச்சரிக்கை விடுத்தார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • அப்பட்டுவிளை அந்தோணியார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டம்

    நாகர்கோவில் :

    தக்கலை ஊராட்சி ஒன்றியம், கோதநல்லூர் மற்றும் திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவு பெற்ற பணிகளை தொடங்கி வைத் தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் அமைச் சர் மனோதங்கராஜ் கூறியதாவது:-

    தக்கலை ஊராட்சி ஒன்றியம், சடையமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ண மங்கலம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிைறவேற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் புதிய இ-சேவை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் வாயிலாக வருமான சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், சாதி சான்றதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், வேலை யில்லாதவர் சான்றிதழ், அடகு வணிகர் சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ், கடன் கொடுப் போர் உரிமம், செல்வநிலை சான்றிதழ், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்து பட்டா மாற்றுதல், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், பெண் குழந்தை கள் பாதுகாப்பு திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற முடியும்.

    அப்பட்டுவிளை அந்தோணியார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட் டுள்ள சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது. மேலும், கோதநல்லூர் பேரூராட்சிக் குட்பட்ட ஈத்தவிளை அங்கன்வாடிக்கு என பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பிலும், திருவிதாங்கோடு பேரூராட் சிக்குட்பட்ட செட்டியார் விளை மற்றும் பரைக்கோடு பகுதிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்பில் 2 புதிய அங்கன் வாடி கட்டிடம் என மொத்தம் ரூ.22 லட்சம் மதிப்பில் 3 புதிய அங்கன் வாடி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    கோதநல்லூர் பேரூராட் சிக்குட்பட்ட ஈத்தவிளை அரசு ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய தினம் மட்டும் ரூ.37.75 லட்சம் மதிப்பில் முடிவற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சிகளில் பேரூ ராட்சி தலைவர்கள் கிறிஸ்டல் பிரேம குமாரி (கோதநல்லூர்), நாசர் (திருவிதாங்கோடு), அரசு வக்கீல் ஜெகதேவ், சடைய மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ராஜ், அப் பட்டுவிளை பங்கு தந்தை மைக்கேல் அேலாசியஸ், ஜாண் பிரைட், அருளானந்த ஜார்ஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
    • வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியில் புதிய சமூக நலக்கூடம்

    கன்னியாகுமரி :

    குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிமலை பேரூராட்சி அம்மாண்டிவிளை இளையான்விளை பகுதியில் புதிய சமூக நலக்கூடம் கட்டும் பணி தொடங்கியது.இந்த பணியை குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், செயல் அலுவலர் சிவகுமார், கவுன்சிலர் சிவ நளாயினி உள்பட ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வேண்டுவது.
    • மழைநீர் ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகள் தோறும் 100 சதம் உறுஞ்சு கிணறு அமைக்க வலியுறுத்துவது

    கன்னியாகுமரி :

    வில்லுக்குறி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் லவுலின் மேபா, துணைத் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வில்லுகுறி பேரூராட்சியில் உள்ள மழைநீர் ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் வீடுகள் தோறும் 100 சதம் உறுஞ்சு கிணறு அமைக்க வலியுறுத்துவது. நபார்டு வங்கி நிதி உதவியில் விவசாயிகள் விளைபொருளை சந்தைப்படுத்த வசதியாக தோட்டியோடு நங்கணை கால்வாயில் இருந்து அக்கினியாகுளம் வரை உள்ள மண்சாலையை தடுப்பு சுவர் அமைத்து தார்சாலை அமைக்க இருக்கும் பணி, மேலப்பள்ளம் தூவலாறின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி ஆகிய பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்வது.

    மாம்பழத்துறையாறு அணை தண்ணீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டுவது. திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கவுன்சிலர்கள் சரிதா, சுதா, புஷ்பாகரன், எட்வர்ட்திலக், ஆன்சிலாவிஜிலியஸ், ஜோஸ்பின்புனிதா, சுப்பிரமணியபிள்ளை, ஸ்டான்லி, கிரிஜாம்பிகா ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்
    • அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும்

    கன்னியாகுமரி :

    கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-வது வார்டு பகுதியான கொட்டில்பாடு கிராமத்தின் ஒனாரிஸ் காலனி மற்றும் நவஜீவன் காலனி பகுதியில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பகுதி மக்களின் குறை கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

    நிகழ்வில் கல்லுக்கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகர் சிங், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் வார்டு கவுன்சிலர் முன்னிலையில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை வைத்தனர்.விரைவில் அரசு விதிகளுக்கு உட்பட்டு தீர்வுகள் எட்டப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் மன்ற தலைவர் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ், சமூக ஆர்வலர் குமார சுதன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பேரூராட்சி ஊழியர் திடீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளராக இருப்பவர் ஆனந்தன் (வயது 56). அலுவலக பணி தொடர்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு பணிக்கு வந்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். அவரை ஆம்புலன்ஸ்மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    • சோழவந்தான் பேரூராட்சியை தூய்மை நகராக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
    • சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    சோழவந்தான்

    நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டு பகுதிகளில் தன்னார்வலர்களுடன், தூய்மை பணியாளர்கள் இணைந்து தெருக்கள் மற்றும் வைகை ஆற்று கரையோர பகுதிகளில் குப்பைகளை அகற்றி "குப்பைகள் இல்லாத தூய்மை நகராக்கும்" முயற்சியில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மேற்பார்வையில் 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    கவுன்சிலர்கள் வக்கீல் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமி சதீஸ், செல்வராணி ஜெயராமன்,தன்னார்வலர்கள் மில்லர் இளமாறன், மணிகண்டன், நாகேந்திரன், பேரூராட்சி கணக்கர் கல்யாண சுந்தரம், கண்ணம்மா, மேஸ்திரி சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
    • குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான குலசேகரம் பேரூராட்சி பகுதியில் 3 மருத்துவ கல்லூரிகள், தனியார் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் உள்ளன. பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பகுதியில் சேகரி க்கப்படும் குப்பைகளை குலசேகரம் சந்தை பகுதி யில் கொட்டி வந்தார் கள். அந்த பகுதியில் சுகாதாரகேடு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அருகில் உள்ள திற்பரப்பு பேரூராட்சிக்கு சொந்தமான திருநந்திகரை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தார்கள். அந்த பகுதியிலும் பொது மக்கள் எதிப்பு தெரிவித்ததால் குலசேகரம் பேரூ ராட்சியினர் மாற்று இடம் தேடினார்கள்.

    மாவட்ட நிர்வா கத்தின் அனுமதி பெற்று பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட பெருஞ்சாணி பகுதியில் செயல்படும் பொன்மனை பேருராட்சி மூலம் செயல்படுத்தி வரும் இயற்கை உரம் தயாரிக்கும் பூங்காவில் கொட்டி வந்தார்கள்.

    குலசேகரம் பேருராட்சியில் இருந்து கொண்டு செல்லும் குப்பை களை கொட்ட அந்த பகுதி யில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இதனால் அடிக்கடி குப்பை வண்டிகளை மடக்கி சிறை பிடித்து வந்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் குப்பை வண்டியை விடு வித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை குலசேகரம் பேருராட்சிக்கு சொந்தமான வண்டி குப்பைகளை ஏற்றி கொண்டு செல்லும்போது பொன்மனை பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர்களும், பொதுமக்களும் சேர்ந்து பெருஞ்சாணி பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வண்டியை சிறைபிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் குலசேகரம் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், செயல் அலுவலர் லிசி, பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த னார்கள் அதன் அடிப்ப டையில் மூன்று மாதம் கால அவகாசம் கேட்டனர்.

    அதற்குள் குலசேகரம் பேருராட்சிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைபடி குப்பை கிடங்கு அமைக்கப்படும். அதுவரை இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட அனுமதி தர வேண்டும் என்று கேட்டனர்.

    பொன்மனை பேரூராட்சி நிர்வாகத்தினரும் பொதுமக்களும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அனுமதி தருவது என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரப்பரப்பாக காணப்பட்டது.

    ×