என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223799"
- தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது.
- ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேலம்:
சேலம் மாவட்டம் தலை வாசல் அருகே வீரகனூரில் நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெரம்பலூர், சின்னசேலம் பகுதிகளில் இருந்து 1000 ஆடுகள், 400 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சேலம், நாமக்கல், திருச்சி மட்டுமின்றி கேரளா வியாபாரிகளும் பங்கேற்றனர். இதன் மூலம் ரூ. 60 லட்சத்துக்கு ஆடுகள், ரூ.27 லட்சத்துக்கு மாடுகள் என ரூ.87 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
- இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் ௬௦ செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா்.
- காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
குண்டடம் :
தாராபுரம் தாலுகா குண்டடம் அடுத்துள்ள இடையன்கிணறு பகுதியை சோ்ந்தவா் சங்கா் (வயது 48). இவா் 60 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றாா். காலை வந்து பாா்த்த போது, பட்டியில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது. எண்ணிப் பாா்த்த போது 7 பெரிய செம்மறி ஆடுகளைக் காணவில்லை. மேலும் தோட்டத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கம்பி வேலியின் ஒரு இடத்தில் அறுத்து உள்ளே நுழைந்து ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
திருடப்பட்ட ஆடுகளின் மதிப்பு ரூ.70 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் மர்மநபர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
- இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
- நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.
- 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் 19-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நளினி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து இருந்தார். பின்னர் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது 2 பெரிய ஆடுகள், 5 குட்டி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது.
நள்ளிரவுநேரம் பட்டிக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 2 பெரியஆடுகள், 5 குட்டி ஆடுகள் செத்து விட்டன. இதுகுறித்து கால்நடை டாக்டரகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பட்டிக்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவாயிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு நாளுக்கு நாள் பல்வேறு தொல்லைகள் அதிகரிக்கிறது. பயிர்களை மயில்கள், மான்கள் ஒரு பக்கம் சேதம் ஏற்படுத்தினாலும், தோட்டத்தில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலையில், வாழ்வாதாரமாக விளக்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொல்வது கவலை அளிக்கிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து சாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடுகள் சிலவற்றை திருடி சென்றனர்.
- பாமர மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆடு திருடும் கும்பலால் ஏழை மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர்.
விழுப்புரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55) ஆடு மேய்த்தல் தொழில் செய்து வருகிறார். இவரிடம் வெள்ளாடு செம்மறியாடு உட்பட மொத்தம் 32 ஆடுகளை தனது வீட்டின் பின்புறம் ஆட்டுக் கொட்டகை அமைத்து மேய்த்து வருகிறார்.நேற்று வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகைகள் அடைத்து வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்மகும்பல் ஆட்டு கொட்டகையில் இருந்து ஆடுகள் சிலவற்றை திருடி சென்றனர். இன்று காலை சுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் ஆட்டுக்கொட்டைக்கு சென்று பார்த்தபோது கோட்டையில் இருந்த ஆடுகளில் 15 ஆடுகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இன்று புதன் கிழமை உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆட்டுச் சந்தையில் விற்பனைக்காக மர்ம நபர்கள் திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்ப டையில் சுப்பிரமணியன் அவரது மகனுடன் உறவினர்களும் சேர்ந்து காலையிலே உளுந்தூர்பேட்டையில் நடக்கும் ஆட்டுச் சந்தைக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு சுப்பிரமணியனின் ஆடுகள் எதுவும் இல்லை.
இது குறித்து சுப்பி ரமணியன் திருவெ ண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருடும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.முன்னதாக ஆனத்தூர் அருகே உள்ள பகுதியில் ஒரு மூதாட்டி வீட்டில் ஆட்டுக்கோட்டையில் இருந்து ஆடுகளையெல்லாம் கார் மூலம் ஆடு திருடும் கும்பல் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பாமர மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த ஆடு திருடும் கும்பலால் ஏழை மக்கள் பெரும் பாதிப்படைந்து உள்ளனர். எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு ஆடு திருடும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென ஏழை விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- ஆடுகளை கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அருகே சுக்கிரவார்பட்டி மேலூரைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 38). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது ஆடுகள் பெரியவீரன், சின்னவீரன் என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில் போய் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் குருணை மருந்து வைத்துள்ளனர்.
அதனை தின்ற 10 ஆடுகள் இறந்து விட்டன. இதுபற்றி அய்யனார் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பெரியவீரன், சின்னவீரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
- 100 பயனாளிகளுக்கு வழங்கினார்.
கரூர்
மண்மங்கலம் அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்மங்கலம் கால்நடை உதவி மருத்துவர் ஜீவரத்தினம் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். கரூர் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார். இதில், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஆடுகள் அப்பகுதியில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது இடி தாக்கி 5 ஆடுகளும் இறந்து போயின.
- தெருக்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் மற்றும் பன்னம்பாறை, கொம்பன் குளம், செட்டிகுளம், நெடுங்குளம், அமுத்துன்னா குடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்களில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதில் மந்திரம் என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் அப்பகுதியில் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது இடி தாக்கி 5 ஆடுகளும் இறந்து போயின. தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் பார்த்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் சாத்தான்குளம் பேரூராட்சியில் உள்ள 15-வது வார்டு தெருக்களிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீர் கானல்களில் தேங்கி நின்ற மழை தண்ணீரை பேரூராட்சி பணியினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- உடல்களில் காயங்கள் இருப்பதாக புகார்
- ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறையினருக்கும் தகவல்
கன்னியாகுமரி:
தோவாளை வில்லிசேரி குளத்தின் அருகே, நாகர்கோவிலைச் சேர்ந்த நல்லதம்பி என்பவருக்கு தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் அய்யாப்பிள்ளை என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 22 ஆடுகளை அவர் பராமரித்து வருகிறார்.
தினமும் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் அய்யாபிள்ளை, மாலையில் அவற்றை தோட்டத்தில் அடைத்து விடுவார். நேற்று மாலையும் அவர் ஆடுகளை அடைத்து விட்டு, தனது வீட்டுக்குச் சென்று விட்டார்.
இன்று காலை அவர் தோட்டத்திற்கு வந்தபோது, 6 ஆடுகள் மர்மமாக இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகளின் உடல்களில் காயங்கள் காணப்பட்டன. ஏதோ மிருகம் கடித்தது போன்று அந்தக் காயங்கள் இருப்பதாக அய்யாப்பிள்ளை தெரிவித்தார்.
இதுபற்றி ஆரல்வாய் மொழி போலீசாருக்கும் பூதப்பாண்டி வனத்துறை யினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
- பள்ளிவாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் சமீப காலமாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. பொது–மக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகன–ங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெரு நாய்கள் முத்துப்பேட்டை தெற்குதெரு அரபு சாஹீப் பள்ளி வாசல் அருகே உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆடுகளை கடித்து குதறியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 ஆடுகள் பலியாகியது. இதனைக்கண்ட எஸ்டி.பி.ஐ கட்சியினர் நகர தலைவர் பகுருதீன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் அப்பகு–தியினர் ஆடுகளை எடுத்து சென்று பேரூராட்சி வாசலில் அடுக்கி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் பேரூராட்சி மூலம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆடுகளின் உரிமையா ளரிடம் புகார் மனு பெற்று இறந்த ஆடுகள் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திட வேண்டும்.
- மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் மற்றும் கழிசல் நோய்க்கான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆடுகளுக்கு டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகளை டாக்டர் விஸ்வேந்தர் மற்றும் அவர்களது குழுவினர் தடுப்பூசி போட்டனர்.மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திடவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.
நிகழ்வில் துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
- நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கீழ புது தெருவை சேர்ந்த பாலாஜி(வயது 27). இவருக்கு சொந்தமாக திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் ஒன்று உள்ளது. அதில் ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இந்த கால்நடைகளை ராமர் என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமரும், பாலாஜியும் வழக்கம்போல் ஆடு, மாடு, கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ராமர் தோட்டத்திற்கு சென்ற போது தோட்டத்தில் இருந்த 55 ஆடுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ராமர், பாலாஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருச் செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்