search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223799"

    • ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம் 20-ந் தேதி நடந்து வருகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பாதிக்கும் ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும், பருவமனை தொடங்க உள்ளதால் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் இன்று (20-ந் தேதி) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில் நடைபெறுகிறது.

    ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி போடப்படும் நாட்களில் முறையாக ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட்டது.
    • அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    தமிழக முதல்-அமை ச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை க்கிணங்கமயிலாடு துறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பரிந்துரையின் கீழ் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச ஆடு வழங்கும் விழா செம்பனார்கோயிலில் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் அன்பரசன் வரவேற்றார். 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இதில் அவரவர் வங்கிக் கணக்கில் ரொக்கமாக ரூ.17 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதை வளர்த்துக்கொண்டு வருமானத்தை மேம்படு த்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ரஜினி, மோகன்தாஸ், கால்நடை மருத்துவர்கள் சிவரஞ்சனி, சரத்குமார், சரவணன், மோகனகிருஷ்ணன் மற்றும் உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் ஆடுகள் வழங்கப்பட்டது.
    • பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் வழங்கப்பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை சிபியோ பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்படுகிறது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் இந்த திட்டத்தின் கீழ் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்100 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆடுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ரகுராமன் எம்.எல்.ஏ. சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பஞ்சவர்ணம், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிசந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தெருவோர வியாபாரிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வங்கிகளில் தமிழ் பேச தெரிந்தவர்களை வங்கி மேலாளராக நியமனம் செய்ய வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நல வாரிய அட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது, சங்க உறுப்பினர்களுக்கு வங்கியின் மூலம் கடன் பெற்று கொடுக்க ஏற்பாடு செய்வது, தெருவோரம் வியாபாரிகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி நகரில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி நகரில் இயங்கி வரும் தேசிய மயமா க்கப்பட்ட வங்கிகளில் தமிழ் பேசத் தெரிந்தவர்களை வங்கி மேலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஏஐடியுசி பொறுப்பாளர் முருகேசன், சித்திரவேல், நீலகண்டன், வசந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
    • காங்கயம் பகுதியிலும் சாலையின் நடுவே ஆடுகள் சுற்றி திரிகின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த உடுமலை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், உடுமலை. கல்பனா அரசு மருத்துவமனை ரோடு கபூர்கான் வீதி முக்கிய வீதிகளில் தினந்தோறும் ஆடுகள் சாலை நடுவே நின்றும், படுத்தும் உள்ளதால், இவ்வழியாக வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    பலமுறை சம்பந்தப்பட்ட ஆட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகையால் நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் சாலையின் நடுவே சுற்றி திரியும் ஆடுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமசாமி நகராட்சிக்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதேப்போல் காங்கயம் பகுதியிலும் சாலையின் நடுவே ஆடுகள் சுற்றி திரிகின்றன. எனவே ஆட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கயம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது.
    • பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரியகோட்டை மற்றும் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆடு மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்தும் சில ஆடுகளை இழுத்து சென்றும் விடுகின்றது. ஜமாபந்தியில் இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட ஆடுகளை மர்மவிலங்குகள் கடித்து கொன்றுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இரவு 2 விவசாயிகளின் நிலங்களில் உள்ள ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து கொன்றுள்ளன. சில ஆடுகளை இழுத்தும் சென்றுள்ளது. இதையடுத்து மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் உடுமலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×