என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223891"
- கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கேப் ரோட்டை சேர்ந்தவர் நிஷார் (வயது 34).
இவர் நாகர்கோவில் அலெக் சாண்டரா பிரஸ் ரோட்டில் செல்போன், கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து உள்ளார். தினமும் காலை யில் கடையை திறந்து விட்டு இரவு பூட்டுவது வழக்கம்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிஷார் வேலை விஷயமாக கோவைக்கு சென்றார்.இதனால் கடையை அவரது உறவினர் கவனித்து வந்தார். நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை கடைக்கு வந்த போது ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் லேப்-டாப் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும் மேஜையில் இருந்த ரூ.30 ஆயிரமும் மாயமாகி இருந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கடையில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. தொடர்ந்து தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதி யில் கொள்ளையர்கள் கை வரிசை காட்டி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
- சரக்கு ரெயிலில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
- கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் சரக்கு ரெயில் மூலமாக ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலையில் காசி நாடாவில் இருந்து 21 பெட்டிகளில் 1300 டன் பச்சரிசி வந்தது. சரக்கு ரெயில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கலெக்டர்-மேயர் பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்
- ஏழை,எளிய மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூல மாக கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. தொடர்ந்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க ப்படுகிறது.
நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாநகராட்சி மேயர் மகேஷ் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வழங்கல் அதிகாரி ஜெகதா, கவுன்சிலர்கள் சோபி, நவீன்குமார், சிஜி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மேயர் மகேஷ் பேசுகையில், ஏழை,எளிய மக்கள் அனைவரும்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார். ரூ.ஆயிரம் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான மக்கள் திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றார்.
கலெக்டர் அரவிந்த் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 675 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 774 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்கனவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
டோக்கன் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து ரேஷன் கடைகளில் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகையை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
- தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்தார்
- ரெயில்வே போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
மதுரையைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 22.)
இவர் சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று இரவு வந்தார். இரவு 9.45 மணிக்கு ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் இங்கிருந்து குருவாயூருக்கு புறப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பாண்டியராஜன் ரெயில் நிலையத்தில் இறங்காமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.
ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சிறிது நேரத்தில் கண்விழித்த பாண்டியராஜன் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு செல்வதை உணர்ந்தார். உடனே ஓடும் ரெயிலில் இருந்து பாண்டியராஜன் குதித்தார். இதைப் பார்த்த சக பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக தேடியும் பாண்டியராஜன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டியராஜன் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.
- பாராளுமன்ற நிலைக்குழுவிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை மனு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையங் களின் மேம்பாடு குறித் தும், பயணிகளின் வசதி கள் குறித்து கேட்டறியவும் கன்னியாகுமரிக்கு வருகை தந்த நாடாளுமன்ற ரெயில்வே நிலை குழு உறுப் பினர்களுடன் விஜய்வசந்த் எம்.பி. கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஆய்வை மேற் கொண்டார்.
அப்போது கன்னி யாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் ரெயில்வே கோரிக்கை சம்பந்தமான மனுவினை நாடாளுமன்ற ரெயில்வே நிலைகுழு தலைவர் ராதா மோகனிடம் அவர் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன நிலை யில் தற்போது ஒன்றரை ஆண்டுகளாக ரெயில்வே சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில்வே அமைச்சகத்திடமும், தென் னக ரெயில்வே அதிகாரிக ளிடமும் எடுத்துக் கூறி வரும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக் கிறது.
ரெயில் பயணிகள் வசதிக்காக தாம்பரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ரெயிலை தின சரி ரெயிலாக இயக்க வேண் டும், வேளாங்கண்ணிக்கு வார இறுதியில் சிறப்பு ரெயில் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலை யத்திலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரும் அதிவிரைவு ரெயிலை குமரி மேற்கு மாவட்ட மக்கள் பயன் பெரும் வகையில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றுக்கு முன்பிருந்தது போல் குமரி மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண் டும். குழித்துறை ரெயில் நிலையத்தை கடந்து செல் லும் வகையில் மேம்பாலம், இரணியல் மற்றும் பள்ளியாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களை மேம்படுத்துதல் வேண்டும். நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் மற்றும் டவுன் ரெயில் நிலையத்தில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டிருந்தது.
- போலீசாருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம்
- போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்ததாக ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்துக்கு இடை யூறாக நிற்கும் வாகனங்க ளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பீச் ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆட்டோ டிரைவர் காந்தி என்பவர் தனது ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் முன்பு நிறுத்தி இருந்தார்.போக்குவரத்துக்கு இடை யூறாக இருப்பதாக கூறி போலீசார் அந்த ஆட்டோவை அங்கிருந்து ஓரமாக நிறுத்துமாறு கூறிய தாக தெரிகிறது.அப்போது போலீசாருக்கும் ஆட்டோ டிரைவர் காந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.
இதையடுத்து போக்கு வரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி இருந்த தாக காந்திக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை கண்டித்து ஆட்டோ டிரைவர் காந்தி தனது மனைவி மகனுடன் மாலையில் பீச் ரோடு சந்திப்பில் மண்எண்ணை கேனுடன் வந்து நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தற்கொலை செய்து கொள்ளப் போவ தாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கு இடையில் அங்கு போக்குவரத்து பணியில் இருந்த போக்குவரத்து பிரிவு போலீஸ்ஏட்டு முத்து சங்கர் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து ஆட்டோ டிரைவர் காந்தி மீது கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- கண்டக்டர் எடுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தார்
- தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்
நாகர்கோவில்:
கருங்கல்லில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்திற்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பயணிகள் சென்றனர். அப்போது கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கிய போது பஸ்சுக்குள் தங்க மோதிரம் ஒன்று கிடந்தது.பஸ்சில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்த கண்டக்டர் இது குறித்து அந்த பகுதியில் நின்ற பயணிகளிடம் கேட்டார்.
அப்போது தங்க மோதிரம் யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து கண்டக்டர் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பஸ்ஸில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்து ஒப்படைத்த கண்டக்டரின் நேர்மையை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.
இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.
அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.
- அதிகாரிகளுக்கு மேயர் மகேஷ் உத்தரவு
- வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து மழை நீர் வடிகாலில் கழிவு நீரை திறந்து விடுவதாகவும், இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் மேயருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை டெரிக் சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டார். அப்போது மழைநீர் வடிகாலில், கழிவுநீர் தேங்கி நிற்பதை கண்டார்.
இதனால் சுகாதார பாதிப்பு ஏற்படும் என்பதால் வணிக நிறுவன உரிமையாளர்களிடம் மழை நீர் வடிகாலில் இனி கழிவுநீர் விடக்கூடாது என கேட்டுக்கொண்டார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளிடம் மழைநீர் வடிகாலில், கழிவுநீர் திறந்து விடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் தேங்காத வகையில் அடைப்புகளை சரி செய்யவும் உத்தரவிட்டார். பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வந்தது. கடந்த 9 மாதத்திற்கு முன்பு இந்த மழை நீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் சில வணிக நிறுவனங்கள் மீண்டும் கழிவு நீரை, மழை நீர் வடிகாலில் திறந்து விட்டுள்ளனர், இனி வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக அவர்களது இடத்திலேயே கழிவு நீரை உறிஞ்சு குழி அமைத்து அதில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வணிக நிறுவனங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
- ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்
நாகர்கோவில்:
நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.
இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.
- உம்மன்சாண்டி மகன் தொடங்கி வைத்தார்
- பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், ரப்பர் தொழிற் சாலை, விவசாயக் கல்லூரி, மீன் வளக் கல்லூரி, தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் 1 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் மார்ஷல் நேசமணி சிலை முன்பு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவரும், அகில இந்திய போலிங் பூத் காங்கிரஸ் மாநில தலைவருமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் அலெக்ஸ், மாணவர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அப்ஜித், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி மகனும், இளைஞர் காங்கிரஸ் வெளிக்கொணர்வு தேசிய தலைவருமான சாண்டி உம்மன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.
- நாற்காலியில் உட்கார வைத்து போலீசார் அழைத்துச் சென்றனர்
- வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில்:
வாரத்தில் புதன் கிழமை தோறும் பொது மக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை தீர்த்து வைக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அலுவல கத்தில் வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார். அதன்படி இன்று (புதன்கிழமை) அவர் பொது மக்களை நேரடி யாக சந்தித்து மனுக்களை பெற்றார்.
ஏராளமானோர் தங்க ளின் புகார் மனுக்களை கொடுக்க வந்த னர். மாற்றுத் திறனாளி ஓருவரும் இன்று மனு கொடுக்க வந்தார். அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அதிவிரைவுபடை போலீசார் நாற்காலியில் அமரவைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளியான அவர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் மனு கொடுத்துச் சென்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்