search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருத்தி"

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்
    • சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.72 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 802 விவசாயிகள், 8,123 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.இவற்றின் எடை 2,596 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 24 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.பருத்தி குவிண்டால் ரூ.5,500 முதல் ரூ.7,819 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 6,600. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.72 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • ஏலத்துக்கு 366 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.
    • ரூ. 2,000 முதல் ரூ. 7,269 வரையில் ஏலம் போனது.

    அவினாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கு பருத்தி வா்த்தகம் புதன்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு மொத்தம் 366 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன.

    இதில், ஆா்.சி.எச். பி.டி. ரகப் பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் ரூ. 7,269 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 6லட்சத்து 25 ஆயிரத்துக்கு பருத்தி வா்த்தகம் நடைபெற்றது. 

    • பூச்சிகள் இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.
    • அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    திருவாரூர்:Methods of pest control in cotton crop

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தற்போது பருத்தி பயிருக்கு மண் அணைத்து உரங்களை இட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக உள்ளது. சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன், வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் மாவுப்பூச்சிகள் அதிக சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

    இளம் பூச்சிகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் பருத்தி இலைகளுக்கு அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் நிறம் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. குறிப்பாக தத்துப்பூச்சி இலைகளின் சாற்றை உறிஞ்சும் போது அதனுடைய உமிழ்நீரில் உள்ள நச்சுக்கள் இலைகளில் ஊடுருவும் போது இலைகள் மஞ்சள் நிறமாகி மேலும் இலைகள் கீழ்நோக்கி குவிந்து திட்டுத்திட்டாக கரிதல் போன்ற அறிகுறியை தோற்றுவிக்கும். இதுவே தத்துப்பூச்சி எரிப்பு என்றும் கூறுவார்கள்.

    சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இலைகள், பூக்கள், பிஞ்சுகள், காய்கள் உதிர்ந்து விடும். இலை, தண்டு மற்றும் பூக்களில் கருமை நிறமாக இருப்பதை காணமுடியும். இதற்கு காரணம் என்னவென்றால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை சுரக்கும். அதனை சாப்பிடுவதற்காக எறும்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    மேலும் அந்த தேன் போன்ற திரவத்தில் இருந்து கேப்நோடியம் என்ற பூஞ்சானம் வளரும். இது போன்ற கருமை நிறமாக இருப்பதால் இலைகள் சுவாசிக்க முடியாமல் இறந்துவிடும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி பயன்படுத்தவேண்டும். மஞ்சள் நிற ஒட்டும் பொறி அசுவினி மற்றும் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்க மஞ்சள் நிற ஒட்டும் பொறியை ஒரு ஏக்கருக்கு 5 என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

    தாவரப் பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது எப். ஓ. ஆர். எஸ். 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம்.

    வெள்ளை ஈக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வெற்றிசீலியம் லெக்கானி என்ற பூஞ்சானத்தை ஒரு எக்டேருக்கு 2.5 கிலோ பயன்படுத்த வேண்டும். செயற்கை பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் புப்ரோபெசின் 1000 மில்லி அல்லது டயபென்தியுரான் 600 கிராம் அல்லது இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு எக்டேருக்கு பயன்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 1216 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.
    • ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.22.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.இந்த வார ஏலத்துக்கு, மொத்தம் 1216 பருத்தி மூட்டைகள் வரத்து இருந்தது.

    இதில் ஆா்.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6,500 முதல் ரூ. 7,856 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2500 முதல் ரூ.3,500 வரையிலும், ஏலம் போனது. மொத்தம் ரூ.22 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

    • அபிராமம் பகுதியில் பருத்தி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது.
    • பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி நிலையிலும் அதிக மகசூல் தரக்கூடிய தன்மை உடையது. இருந்தபோதிலும் இந்த ஆண்டு தொடர் மழையால் பருத்தி விவசாயம் பாதிப்படைந்து உள்ளது.

    இதுபற்றி அபிராமம் பகுதியைச் சேர்ந்த பருத்தி விவசாயி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் கோடை காலங்களில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தி விவசாயத்தை செய்து வந்த நிலையில், இந்தப்பகுதியில் இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது பருத்தி சாகுபடி செய்துள்ளோம். பருத்தி செடியில் இலை சுருட்டல், காய்புழு போன்ற நோய் தாக்குதலால் பருத்தி விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மிகவும் பொருளதார நஷ்டம் ஏற்படுவதுடன் மன உளைச்சலும் ஏற்படுகிறது என்றனர்.

    • விவசாயிகள் தங்களுடைய 12,651 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • 31 வணிகா்கள் இதனை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    மூலனூர் :

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.90 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது.

    கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,205 விவசாயிகள் தங்களுடைய 12,651 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,872 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 31 வணிகா்கள் இதனை வாங்குவதற்காக வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 6,700 முதல் ரூ. 8,572 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,700. கடந்த வார சராசரி விலை ரூ. 7,650. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.90 கோடி.

    ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணி ப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
    • நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    எடப்பாடி:கொங்கணாபுரத்தில்

    ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

    கொங்கணாபுரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பருத்தி மூட்டைகள் 550 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு ஏலம் நடந்தது. இதில் பி. டி. ரக பருத்தியானது குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ. 7 ஆயிரத்து 350 முதல் ரூ. 8 ஆயிரத்து 361 வரை விற்பனையானது. இதேபோல் டி. சி. எச். ரக பருத்தியானது, ஒரு குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 600 முதல் ரூ. 8 ஆயிரத்து 529. வரை விற்பனையானது. கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரத்து 250 முதல் ரூ. 6 ஆயிரத்து 50 வரை விற்பனையானது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ. 75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

    • தரமான பருத்தி குவிண்டால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சந்தை விலை கிடைக்கும்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு உட்பட்ட சுமார் 54 ஏக்கர் பரப்பளவு நிலம் வீரகேரளம் பகுதியில் இயங்கி வருகிறது. மருதமலை சாலையில் 25 ஏக்கரும் உள்ளது. இங்கு பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் பல ஆராய்ச்சிகளும் நடை பெற்று வருகிறது.

    கோவை வீரகேரளம் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் பல தரப்பட்ட பருத்தி ரகங்கள் பயிர் செய்து உள்ளனர்.இதில் தேவை யான பருத்தியை ஆராய்ச் சிக்கு வைத் துக்கொள்வர்.

    மீதம் உள்ளதை அன்னூர் அரசு சந்தையில் விற்பனைக்கு செய்வது வழக்கம். தற்போது ஒரு குவிண்டால் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. நல்ல தரமான பருத்தி குவிண்டால் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சந்தை விலை கிடைக்கும்.

    இந்த நிலையில் வீரகேரளம் பருத்தி ஆராய்ச்சி நிலைய நிலத்தில் பயிர் செய்து உள்ள பருத்திகள் நன்கு முதிர்ந்து வெடித்து உள்ளது. பருத்தி காற்றில் சில பறந்து வீணாகி வருகிறது. விளைந்த பருத்தி சாகுபடி முறையாக பராமரிப்பு செய்யமால் வீணாகி வருகிறது.

    தேவைகள் அதிகமாக உள்ள நிலை உள்ளது. நல்ல விலை இருந்தும் முறையாக சந்தை படுத்த படாமல் உள்ளது. பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் டெண் டர்முறையில் பணி செய்து வருகின்றனர். சரியான நேரத்தில் ஏக்கர் கணக்கில் விளைந்து உள்ள பருத்தி அறுவடை செய்யப்ப டாததால் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே உரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    • 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
    • சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.32.53 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு செங்காட்டூா், சீத்தப்பட்டி, அக்கரைப்பட்டி, காசிபாளையம், கன்னிவாடி உள்ளிட்ட ஊா்களில் இருந்து 67 விவசாயிகள் தங்களுடைய 1,313 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 64,892 கிலோ.காரமடை, ஈரோடு, கோபி, சித்தோடு, காங்கயத்தில் இருந்து 8 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.சூரியகாந்தி விதை கிலோ ரூ.45.49 முதல் ரூ.52.29 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.48.66.

    ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.32.53 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 598 விவசாயிகள் தங்களுடைய 5,675 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,778 குவிண்டால்.

    திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 23 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6,250 முதல் ரூ.8,089 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,350. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.27 கோடி என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • ளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 485 விவசாயிகள், 2500 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு குவிண்டால் ஆர்.சி.எச். ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 8,040 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ.7,600 முதல் ரூ. 8,799 வரையும், கொட்டுப் பருத்தி ரூ. 4,399 முதல் ரூ. 5,999 வரையும் விலை போனது.

    மொத்தம் ரூ.65 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் முகவர்கள் ஏலத்தில் பங்கேற்று விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்தனர்.

    • பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மாவட்டத்தில் முக்கிய பயிராக பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே பருத்தி அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்கிறது. பருத்திக்கு என்று வேப்பந்தட்டையில் ஆராய்ச்சி நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தில்தான் தமிழகத்திலேயே முதன்முறையாக பருத்தியை அறுவடை செய்ய நவீன எந்திரம் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் மாவட்டத்தில் சராசரியாக பருத்தி 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் பருத்திக்கு சரியான விலை கிடைப்பதில்லை என்று விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தற்போது பருத்தி அறுவடை பணி முடியும் தருவாயில் உள்ளது. பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளால் செலவிடப்படுகிறது. பருத்திக்கு மருந்து அதிகம் அடிக்க வேண்டியிருக்கிறது. தற்போது பருத்தி களை எடுக்கும் பணியில் இருந்து அறுவடை வரை போதிய கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள். பருத்தி களை எடுக்கும் எந்திரங்களும் வாடகைக்கு உடனடியாக கிடைப்பதில்லை. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து பருத்தியை காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வருவதற்குள் விவசாயிகள் படாதபாடு படுகின்றனர்.

    பருத்திக்கு விவசாயிகள் இவ்வளவு செலவழித்தும் அதற்கான லாபம் கிடைப்பதில்லை. தற்போது பருத்தி ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தியை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் இடைத்தரகர்கள் எடை மோசடியில் ஈடுபடுகின்றனர். பருத்தியை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்தால்தான் விவசாயிகள் நஷ்டப்படமாட்டார்கள். மாவட்டத்தில் பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு காந்தி நகரிலும், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்திக்கு சரியான விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.

    விவசாயிகளில் சிலருக்கு அந்த ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருக்கிறது என்று கூட தெரிவதில்லை. அங்கு பருத்தியை ஏலத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவு அதிகமாகிறது. பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர்-இரூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கர் நிலத்தில், பெரம்பலூர் மாவட்ட ஜவுளி தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது தற்போதுவரை வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ஜவுளி பூங்கா தொடங்கப்பட்டால் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கு தேவை அதிகமாகும் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

    • ஏலத்துக்கு 2,531 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ரூ.3,000 முதல் ரூ.8,311 வரை ஏலம்போனது.

    அவிநாசி :

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.61 லட்சத்து 33 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2,531 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச். பி.டி.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8,311 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.3,000 முதல் ரூ.5,500 வரையிலும் ஏலம்போனது.

    ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.61 லட்சத்து 33 ஆயிரம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

    ×