search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • அரசு இணைய சேவை உபகரணங்களை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450 கிராம ஊராட்சி களிலும், இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழைவலை யமைப்பு நிறுவனம் (டான்பிநெட்) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது, 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான ரேக்குகள்/யுபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவைமையம் (VPSC) அல்லது அரசுகட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள யுபிஎஸ், ரூட்டர், ரேக்குகள், கண்ணாடி இழை கேபிள் உபகரணங்கள் யாவும் அரசின் கடமைகளாகும்.

    இவற்றை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது காவல்துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.
    • அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் நாட்டின் பார ம்பரிய கலாச்சாரத்தை பாதுகா க்கவும், விசைத்தறியாளர்கள் மற்றும் துணி ஆலைகளின் ஆக்கிரமிப்பிலிருந்து கைத்தறியாளர்களை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 இயற்றப்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தினை விவகார எல்லையாகக் கொண்டு துணை இயக்குநர், அமலாக்க அலுவலகம், சென்னை, குறளகம் 2ஆம் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

    கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 சட்டப்பிரிவு 5-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறிப்பீ டுகளுடன் 11 இரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்திட தடை செய்யப்பட்டுள்ளது. பார்டர் டிசைனுடன் கூடிய பருத்தி சேலை, பட்டு சேலை, வேட்டி, துண்டு, லுங்கி, பெட்சீட், ஜமக்காளம் மற்றும் சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை இரகங்கள் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டம் 1985-ன் படி தண்டனைக்குரிய செயலாகும். இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 6 மாத சிறை தண்டனை அல்லது தறி ஒன்றுக்கு ரூ.5000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை வழங்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டஇரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன.
    • சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு வனத்துறை சாா்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது வனப் பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீருக்காக காலை, மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன. இந்நிலையில், அமராவதி வனச்சரகம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லும் யானைகள் மீது கற்களை வீசுவது, செல்பி எடுக்க முயல்வது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, புகைப்படம் எடுப்பதற்காக அருகில் சென்று யானைகளை தொந்தரவு செய்கின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில் யானைகளை தொந்தரவு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி யானைகளை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எல்லை மீறுபவா்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • காரைக்குடி நகராட்சி எச்சரித்துள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படை யினர் ஆய்வு செய்தனர்.

    இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து

    10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:-

    காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 10 இடங்களில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 112 லிட்டர் வீதம் 12.08 எம்எல்டி அதாவது கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விதியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப் பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    மேலும் காரைக்குடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக 2 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக் குமார், உதவி பொறியாளர் கள் பாலசுப்பிரமணியன், சீமா ஆகியோர் உடனி ருந்தனர்.

    • சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி விவசாய வயல்களில் சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டம், தீர்த்தாரஅள்ளி கிராமத்தை சேர்ந்த ராம்குமார், கவுரன் ஆகியோர் வயலில் அமைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி காட்டுப்பன்றி உயிரிழந்தது.

    இதுதொடர்பாக வன உயிரின பாதுகாப்பு சட்ட த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    சட்டவிரோத மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க வனத்துறை, வருவாய்துறை மற்றும் மின்சார துறை அலுவலர்கள் இணைந்து ரோந்து பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    விவசாய வயல்களில் மனிதர்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மின் இணைப்பு மின்வாரிய த்தால் துண்டிக்கப்படும்.

    வனவிலங்குகளை வேட்டை யாடுதல், வன விலங்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கையை மேற்கொள்ள ப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.
    • சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

     தாராபுரம்:

    தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை எச்சரித்தும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்படுகிறது.

    இது குறித்து தாராபுரம் பகுதியில் இருந்து மதுபிரியர்கள் கோவை மண்டல மேலாளருக்கு புகார் மனுக்கள் அனுப்பினார்கள்.

    இந்த புகாரை தொடர்ந்து டாஸ்மாக் கோவை மண்டல மேலாளர் ெஜகதீசன் தாராபுரம் வந்தார்.பின்னர் அவர் தாராபுரம் ஐந்து முக்கு, என்.என்.பேட்டை வீதி, பஸ் நிறுத்தம், பொள்ளாச்சி ரோடு, உடுமலை ரோடு, அலங்கியம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது டாஸ்மாக் கடைகளில் இருப்பு பதிவேட்டின்படி மது பாட்டில்கள் இருப்பு உள்ளதா? பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுகிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். சோதனையின் போது மது வாங்க வந்த குடிமகன்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    • கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
    • தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    நியூயார்க்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் போர் காரணமாக தடைப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் கருங்கடல் தானிய ஒப்பந்தம் செய்தது. அதன்படி உக்ரைனின் மூன்று துறைமுகங்களில் இருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி செய்ய ரஷியா சம்மதித்தது.

    இந்நிலையில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுத்து அதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

    இந்நிலையில், தானிய ஒப்பந்ததில் இருந்து ரஷியா விலகியதால் தானியங்களின் விலை உயர்வு, கோடிக்கணக்கான மக்களுக்கு பசி மற்றும் மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.வின் அவசர கால நிவாரண ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறும்போது, "தற்போது 69 நாடுகளில் சுமார் 36 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது. தானிய விலை உயர்வு என்பது வளரும் நாடுகளில் உள்ள குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. பசி-பட்டினியால் வாடுவார்கள். இதன் காரணமாக பலர் இறக்கக் கூடும் என்றார்.

    போதுமான உக்ரேனிய தானியங்கள் ஏழை நாடுகளை சென்றடையவில்லை என்று ரஷியா புகார் தெரிவித்து, ஒப்பந்தத்தில் இருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களுக்கு செல்லும் எந்த கப்பலையும் ராணுவ பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பலாக கருதப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.

    • கலப்படம் செய்த, தரம் குறைவான பால் விற்பனை செய்பவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளி–யிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் மாநில உணவுப் பாதுகாப்புதுறை ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டரின் ஆணைக்கிணங்க உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் பால் விற்பனையில் கலப்ப–டம் எதுவும் செய்யப்பட்டுள்ளதா என தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் கடந்த மூன்று மாதங்களில் ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சிவ–காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் விருதுநகர் பகுதிக–ளில் 19 பால் உணவு மாதிரி–கள் எடுக்கப்பட்டது. அதில் 8 பால் உணவு மாதிரிகள் தரம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்ட–றியப்பட்டுள்ளது. தரம் குறைவான பால் விற்பனை–யாளர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப் பட்டு அபராதம் விதித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. பால் விற்பனை யாளர்கள் அனைவரும் உணவு பாது–காப்பு துறையில் பதிவு அல்லது உரிமம் பெற்றிருக்க வேண்டும். தாங்கள் விற் பனை செய்யும் பாலில் தண்ணீர், ஸ்டார்ச், யூரியா மற்றும் அனுமதிக்கப்படாத பவுடர்கள் கலப்படமின்றி தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர் ஆய்வுகளின் போது உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இன் றியோ, தரம் குறைவான பாலினை நுகர்வோருக்கோ அல்லது பிற உணவுப்பொ–ருள் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் அவர்க–ளின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    உணவு பொருட்கள் மற்றும் பால்பொருட்கள் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால், விருது–நகர் மாவட்ட உணவு பாது–காப்புத்துறை அலுவல–கத்திற்கு 04562 252255 அல்லது 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர், அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தனியார் பள்ளி பஸ் டிரைவர், உதவியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • வட்டார போக்குவரத்து அதிகாரி வாகனங்களை ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள பெரிய கோட்டை தனியார் பள்ளி வாகனம் ஓட்டுனரின் கவன குறைவால் விபத்துக் குள்ளானது. இதில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இறந்தான். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் பள்ளி வாகனங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

    தற்போது தனியார் பள்ளியில் இயக்கப்படும் வாகனங்கள், மற்றும் ஓட்டுநர்கள், உதவியா ளர்களுக்கு மாணவர்களை கையாளும் விதம், பாது காப்பான பயணம் குறித்து அறிவுரை கூறப்பட்டுள்ளது. இது போன்ற விபத்து இனி ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், அரசு விதிமுறை களை ஓட்டுநர்கள், உதவி யாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

    அஜாக்கிரதையாக இருந்தால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வணிக வளாக கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தாசில்தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கட்டுமான பணி, எச்சரிக்கை, Construction work, warning

    கீழக்கரை

    கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கீழக்கரை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் பெரிய கட்டுமானங்கள், வணிக வளாகங்கள் கட்டுவ தற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் தெரு பகுதி களில் வணிக வளாகங்கள் அமைப்பது குறித்து உரிய விதிமுறைகள் பின்பற்றி கட்டுமான பணிகளை மேற் கொள்ள வேண்டும்.

    புதிய கட்டுமான பணி களுக்கு அரசின் விதிமுறை கள் தெளிவாக வரையறுக் கப்பட்டுள்ளது. அதன் படி புதிதாக கட்டுமான பணி களில் ஈடுபடுபவர்கள் உரிய அரசு அனுமதி பெற்று கட்டு மான பணிகளில் ஈடுபட வேண்டும்.

    மேலும் விதி முறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக நகரில் அதிக உயரமான கட்டிடங்களை கட்ட கூடாது குறிப்பாக வணிக வளாகங்கள் உரிய அனுமதியோடு கட்ட வேண் டும். நகராட்சி விதிமுறை களை மீறி மிக உயரமான வணிக வளாகங்கள் ஏற் படுத்தியிருந்தால் அதற்கு உரியவர்கள் மீது சட்டரீதி யான நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறதா?
    • போலீசார் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.

    கடலூர்:

    போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு அறிவுறுத்தலின்பேரில் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் இன்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்ப டுகிறதா? ஆகியவை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த டிரைவர்களை அழைத்து, இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து ஏர் ஹாரன்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • போக்குவரத்து விதி மீறிய தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • தேவகோட்டை போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத் தூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து ராம்நகர் வரை மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவல கங்கள், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் இந்தபகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பஸ் நிறுத் தங்களை போலீசார் சில மாற்றங்களை செய்தனர். மேலும் நகர் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன் ஆகியோர் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அவ்வப் போது அபராதம் விதித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் தனியார் பஸ்கள் அதிவேகமாக வரு வதாகவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றுவ தில்லை எனவும் புகார்கள் வந்ததன் அடிப்படையில் ராம்நகரில் இன்ஸ்பெக்டர் சரவணன், போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அகிலன், ஏட்டு யோகராஜா ஆகியோர் சோதனை நடத்தினர்.

    அப்போது போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட தனியார் பஸ்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×