search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறுவடை"

    • பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது.
    • 60 சதவீத சம்பா அறுவடை பணிகள் நிறைவு.

    பாபநாசம்:

    டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் ஆணை முன்கூட்டியே திறக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறையின் மூலம் முக்கிய பாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வார பட்டது. தட்டுப்பா டின்றி தேவையான விதைகள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டது.

    போன்ற காரணங்களால் டெல்டா மாவட்டம் முழுவதும் சம்பா, தாளடி, சாகுபடி பணிகள் மிக சிறப்பாக நடைபெற்றது.

    பாபநாசம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் பருவம் தவறி பெய்த மழைக்கு பிறகு தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

    இதுவரை சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு சம்பா அறுவடை பணிகள் நிறைவு பெற்று உள்ளது.

    இம்மாத இறுதிக்குள் சம்பா அறுவடை பணிகள் முடிவு நிலை எட்டும் என எதிர்பார்க்க படுகிறது.

    • இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
    • பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு வாடகை முறைப்படுத்தப்பட்டு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணிநேரத்திற்கு ரூ. 2 ஆயிரத்து 450 மற்றும் டயர் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் எந்திரங்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஒரு சில இடங்களில் இடைத்தரகர்கள் அதிகமான வாடகை வசூவிப்பதாக புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசு மான்யத்தில் வழங்கப்பட்ட அறுவடை எந்திரங்கள் மற்றும் மாவட்டத்தில் இருப்பில் உள்ள தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்கள் பட்டியல் (மாவட்ட வட்டார வாரியாக உரிமையாளர் பெயர், முகவரி, எந்திர வகை மற்றும் செல்போன் எண்னுடன்) தற்போது உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் செல்போன் மூலம் உழவன் செயலியில் பதிவு செய்து, இடைத்தரகர்கள் இன்றி தனியார் அறுவடை எந்திர உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைகு மிகாமல் செலுத்தி பயன்பெறலாம்.

    மேலும், வேளாண்மை பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880 எனவும் டயர் எடப் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1160 எனவும் அரசால் நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்.

    ேமலும், நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை எந்திர உரிமையாளர்கள் கோரினால் வட்டாட்சியர்கள் வேளாண் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறை நாகப்பட்டினம் செயற்பொறியாளர் தொலைபேசி எண். 94420 49591, உதவி செயற்பொறியாளர் தொலைபேசி எண் 94432 77456 உதவிப் பொறியாளர் (வே.பொ), தொலைபேசி எண் 94452 40064) ஆகியோறை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி முதல் இடத்தை பிடித்தார்.
    • 50 சதவிகித மானியத்தில் பண்ணை கருவிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார பகுதியில் வேளாண்மை துறை மூலம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் சவலாப்பேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின்பிரபாகர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார்அம்மாள், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கயத்தார் வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் கடப்பாரை, மண்சட்டி, கலை கொத்தி, பண்ணருவாள், மண்வெட்டி ஆகிய பண்ணை கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயனடைய வேண்டி வேளாண்மை உதவி இயக்குனர்சுரேஷ் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டார். 

    ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.

    கரூர்

    கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் கோரைப்புல் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை, 6 மாதங்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். பாய் உற்பத்திக்காக கரூர் நெரூர் பகுதியில் அறுவடை செய்த கோரையை பதப்படுத்தும் பணியில் தொழிலாளி ஒருவர் ஈடுபட்டதை படத்தில் காணலாம்.

    • பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வயலில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.

    பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி மேற்கு செங்கமங்கலம் செல்லும் பகுதியில் சுமார் 50 ஏக்கர் வயல்களில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது. தண்ணீரில் மூழ்கிய நிலையில் பயிற்கள் சேதமடைந்தது.

    இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை.
    • வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம் திருவை யாறு, அந்தணர்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது . தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து சாய்ந்த நெற்பயிர்களை தூக்கி நிமிர்த்தி கட்டி காப்பாற்றும் பணியில் விவசாயிகள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் பிரயோஜனப்படாமல் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    எனவே துறை அதிகாரிகள் பாதிப்படைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நிவாரண தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
    • மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் தொடர்ந்து காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது பாபநாசம் தாலுகாவில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

    தற்போது பெய்த மழையால் நெற் கதிர்கள் வயலில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் கூறியதாவது:-

    பாபநாசம் சுற்றுப்பகுதி களில் பெய்த கனமழை காரணமாக வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் உதிர்ந்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பா நெற்பயிர் அறுவடை பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து விழுந்து பாதிக்கப்பட்டுள்ளன.

    மழை நீடித்தால் நெற்பயிர்கள் பெருமளவு பாதிப்பு ஏற்படுவதாகும். இதனிடையே பாபநாசம் தாலுகாவில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் மழை காரணமாக பல இடங்களில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறவில்லை.

    கொள்முதல் நிலைய ங்களில் விவசாயிகள் தாங்கள்கொண்டு சென்ற நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல்தார்ப்பாய் கொண்டு மூடி

    வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறவில்லை.
    • கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 10 சதவீத அறுவடை பணிகள் மட்டுமே நிறைவடைந்தது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மீதமுள்ள 90 சதவீத அறுவடை பணிகள் நடைபெறாமல் கேள்விக்குறி ஆகியுள்ளது.

    இந்நிலையில், காப்பீடு நிறுவனம் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அறுவடை பரிசோதனையை முடித்துவிட்டதாக கூறுவது வேதனை அளிக்கிறது.

    விவசாயிகள் வங்கிகளில் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் சாகுபடி செய்துள்ளனர்.

    எனவே, காப்பீட்டு நிறுவனம் மீண்டும் அந்த பகுதிகளில் புதிய அறுவடை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    பாதிக்கபட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும், மேலும், மேம்படுத்தபட்ட பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் 100 சதவீத இழப்பீடு பெற்று தர வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் கமல்ராம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.
    • 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும்.

    நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

    இதன்படி நெல்லுக்கு ப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யபடுகிறது.

    இவ்வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.

    நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். உளுந்து -ஆடுதுறை 3, ஆடுதுறை 5, ஆடுதுறை 6, வம்பன் 6, வம்பன் 8

    பாசிபயிறு - ஆடுதுறை 3. கோ8 ஆகும்.

    சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது.

    எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.

    ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி உயிர்ப் பூஞ்சாணம் என்ற அளவில் கலந்து 24 மணி நேரம் கழித்து விதைக்கவும்,

    சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும்.

    நெல் தரிசு பயிறுவகைப்பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் கிடைக்கப்படுகிறது.

    ஏக்கருக்கு 4 கிலோ எஏ.பி உரத்தினை 4-6 லிட்டர் தண்ணீரில் ஊர வைக்க வேண்டும்.

    பிறகு தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து 200 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பான் கொண்டு இலைகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.

    பூக்கும் தருணத்தில்(விதைத்த 25ம் நாள்) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து அதாவது காய்கள் பிடிக்கும் தருணத்தில் விதைத்த 40ம் நாள் மறுமுறையும் தெளிக்க வேண்டும்.

    எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும் மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தண்ணீர் தேக்கம்.
    • தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் வேதனை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 மில்லி மீட்டர், செம்பனார்கோவிலில் 15.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மேலும் மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகி இருக்கிறது.

    காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்காலிகமாக பல்வேறு பகுதிகளில் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் நல்லத்குடி,கோடங்குடி ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    சம்பா சாகுபடி தொடங்கும் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் பாதித்து தற்போது அறுவடை நேரத்திலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    • விவசாயிகள் தீவிரம்
    • பசுமையாக வளர்ந்துள்ள அழகு

    கரூர்,

    கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சூரியகாந்தி அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாக்கா பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி, சரவணபுரம், பாம்பன் பட்டி, நடுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செடிகள் பசுமையாக வளர்ந்து சூரியகாந்தி செடிகளில் பூக்கள் பிடித்து, முற்றிய விதைகள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடை பணி நடந்து வருகிறது.
    • வசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் பகுதியில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது இங்கு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிட்டது.இந்நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நிகழ்ச்சி காரையூர் பகுதியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாராணி உத்திராபதி தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் முன்னிலை வகித்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

    இதில் வார்டு உறுப்பினர் கார்த்திக் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×