search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு
    • வீட்டில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதி சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 65). இவர் தனது வீட்டில் பொருட்களை எடுத்து வேறு இடத்தில் வைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மயங்கி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த ஏற்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே ரத்தினவேல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சியில் தொடர்கதையாகும் குடிபோதை சாவுகள்
    • குடிபோதைக்கு அடிமையாகும் இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    திருச்சி,

    திருச்சி அருகே உள்ள சோழங்கநல்லூர் புது பாலம் தெரு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 45). கூலித் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு ஆளானார். தினமும் மது அருந்தாமல் அவரால் இருக்க முடியவில்லைஇந்த நிலையில் வழக்கம் போல் குடிபோதையில் வீடு திரும்பிய அன்பழகன் அருகாமையில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இது தொடர்பாக அவரது தாயார் ஜெ கதாம்பாள் சோமரசம்பேட்டை போலீ–சில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சமீபகாலமாக திருச்சி மாவட்டத்தில் தினமும் குடிப்பழக்கத்திற்கு ஆளான ஒருவர் தற்கொலை செய் வதோ, உடல் நலம் பாதிக்கப் பட்டு மரணம் அடைவதோ தொடர்கதை–யாக நடக்கிறது. குறிப்பாக குடி போதைக்கு அடிமையா–னவர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகின்றனர். இதனால் அந்த குடும்பங்கள் நடுத்தெ–ருவுக்கு வந்து விடுகின்றன.அல்லது குடி போதையால் அனைத்தையும் தொலைத்து விட்டமே என்ற மன அழுத் தத்துக்கு ஆளாகி வாழ பிடிக்காமல் தற்கொலை செய்யும் சம்பவங்களும் சமீப காலமாக நடந்து வரு–கின்றன.எனவே இருக்கும் குடி போதை அடிமைகளை மீட் கவும், இளைஞர்களை அந்த அதல பாதாளத்திற்கு தள்ளி–விடாமல் தடுக்க–வும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    • விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
    • மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் பாலமுருகன்(வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஓசூரில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த பாலமுருகன் வயலுக்கு சென்று அங்கிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று பாலமுருகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி வந்த நிலையில் விபரீதம்
    • முந்திரி காட்டில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசாமி வேன் ஓட்டுநர். இவர் ராங்கியம் கிராமத்தில் இருந்து துக்க நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரிய மணல் கிராமத்திற்கு ஆட்களை ஏற்றி வந்ததுள்ளார்.துக்க நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீண்டும் ஊருக்கு புறப்படும் போது வேன் ஓட்டுநரை காணவில்லை. இதனையடுத்து வேன் ஓட்டுநரை அனைவரும் தேடி வந்தனர். இதற்கிடையே அருகில் உள்ள முந்திரி காட்டில் ஒருவர் தூக்கில் பிணமாக கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்த போது துக்க நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றிவந்த நல்ல சாமி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்துஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் புண்ணியகோடி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ தொட்டியில் நீச்சல் கற்று கொடுக்க சென்றவர் பலி
    • உடலை கைப்பற்றி அரவக்குறிச்சி போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 43) விவசாயி. இவர், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள 20 அடி ஆழ, நீர்த்தேக்க தொட்டியில், தம்பி குழந்தைகளுக்கு, நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்து சென்றார். அப்போது, நீர்த்தேக்க தொட்டியில் முதலில் இறங்கிய வெங்கடேஷ், திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடன் சென்ற குழந்தைகள் கொடுத்த தகவலின்பேரில், அருகில் இருந்தவர்கள் வெங்கடேஷ் உடலை மீட்டனர். வெங்கடேஷ் மனைவி தீபிகா, கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் தீ எதிர்பாராத விதமாக பற்றியதால் விபரீதம்
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் பரிதாபம்

    கரூர்,

    குளித்தலை அருகே, கல்லடை ஊர் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, இவர்களது 5 வயது ஆண் குழந்தையான ரமணாவின் சட்டையில் எதிர்பாராமல் தீப்பற்றிக் கொண்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. துரைராஜ் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

    • சளி மருந்துக்கு பதிலாக கரப்பான் பூச்சி மருந்தை தவறுதலாக குடித்தவர் பலியானார்
    • நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, இருமல் அதிகமாக இருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பண்டரிநா–தன் தெரு பகுதியைச் சேர்ந்த–வர் ராதாகிருஷ்ணன் (வயது58). இவர் நீண்ட கால–மாக சளி பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு சளி, இருமல் அதிகமாக இருந்தது. அப்போது தவறுதலாக சளி மருந்துக்கு அருகாமையில் இருந்த கரப்பான் பூச்சியை கொல்லும் மருந்தை எடுத்து குடித்து விட்டார்.பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை மனைவி ஆண்டாள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்
    • வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள எரிச்சி கருமேனியோடையைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் சொக்கலிங்கம் (வயது 55). இவர் அறந்தாங்கி கத்தக்குறிச்சி பிரதான சாலையில் நடந்து சென்ற போது மயங்கிய நிலையில் கீழே அமர்ந்துள்ளார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சொக்கலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து சொக்கலிங்கம் மனைவி கலைச்செல்வி (45) வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • தங்கை வீட்டிற்கு வந்திருந்த அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருச்சி,

    திண்டுக்கல் மாவட்டம் வேம்பரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50) இவர் கூலி தொழிலாளி. சம்பவத்தன்று தங்கை வீட்டிற்கு வந்திருந்த அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பெற்ற தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    திருச்சி,

    சென்னை தங்க நல்லூர் உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 67). திருச்சி வந்த இவர் அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார். தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் மூழ்கி பலியான சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதமாக அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது
    • கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

     திருச்சி,

    திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 77). இவர் வழக்கம் போல் காலையில் ஸ்டவ்வை பற்ற வைத்து பாலை சுட வைத்துள்ளார். பின்னர் கொதித்த பாலை இறக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆபத்தான நிலையில் திருச்சிஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 55). இவர் மின் மோட்டார்களை சரி செய்யும் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

    இவர் இன்று காலை வரகம்பாடி பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (59) என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பாலசுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×