search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள்"

    • தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
    • தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

     திருப்பூர்:

    தெலுங்கானா மாநிலத்தில் 34-வது தென் மண்டல அளவிலான ஜூனியா் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென் மண்டலங்களைச் சோ்ந்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.

    இதில் 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 போ் பங்கேற்றனா். இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனா். மேலும் சிறந்த தடகள வீரா்களாகவும் தோ்ந்தெடுக்க ப்பட்டனா்.

    இதில் தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அனைத்துப் பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனை பட்டமும் வென்றுள்ளனா்.

    போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூா் மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு, திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் முத்துகுமாா், மூத்த துணைத் தலைவா் மோகன் காா்த்திக், துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், சந்தீப்குமாா், ஜெயபிரகாஷ், மதிவாணன், இணைச் செயலாளா்கள் நிரஞ்சன், அழகேசன், ராமகிருஷ்ணன், தொழில்நுட்பக்குழுத் தலைவா் மனோகா் செந்தூா்பாண்டி, துணைத் தலைவா் சஜீவ் தாமஸ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா் 

    • போட்டியானது 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    கும்பகோணம்:

    ரோஹித் ஷர்மாவின் கிங்டம் கிரிக்கெட் அகாடமி மற்றும்கிரிம்சன்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில்பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர்களின்நேர்முக தேர்வு நடைப்பெற உள்ளது.

    கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் யூத் பிரிமியர் லீக் போட்டி 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெற லாம் என்று பயிற்சியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • வட மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் தி.மு.க. சார்பில் வட மஞ்சு விரட்டுப் போட்டி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் பங்கு கொண்டன. இதில் தனித்தனி குழுக்களாக 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பிலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல், மாநில இலக்கிய அணி் தலைவர் தென்னவன், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணசங்கீதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், துணை அமைப்பாளர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பிளாசா ராஜேஸ்வரி சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான்சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
    • இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 வயதுக்குட்பட்ட இளையோர் கால்பந்து அணிக்கான விளையாட்டு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து வருகிற 3-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில் பங்குபெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் ஆதார் அட்டையுடன் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி முதல் 15ந் தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்பந்து கழகம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட குமரி மாவட்ட கால்பந்து விளையாட்டு வீரர்கள் இந்த போட்டியில் பங்கு பெறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு குமரி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ஆனந்த் ஏ.வில்சன் தலைமையில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.

    இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.

    மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.

    தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.

    பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

    பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
    • இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    மேஜர் தயான் சந்த் 123-வது பிறந்தநாள் ஆகஸ்ட் 29-ந்தேதி (இன்று) இந்திய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தேசிய விளையாட்டு தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் தயான் சந்த் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி கேக் வெட்டி விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது.

    இதில் ஹாக்கி, 100 மீட்டர் ஓட்டப்போட்டி, சதுரங்கம், கேரம், நடை போட்டி ஆகியய விளையாட்டுகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர் சுங்க இலாகா துறை ஆய்வாளர் சத்யராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சட்டக் ராமநாதபுரம் சட்டக் கல்லூரி முதல்வர், ராமநாதபுரம் மாவட்ட ஆக்கி சங்கம் செயலாளர் கிழவன் சேதுபதி, மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் செய்திருந்தார்.

    • பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது.
    • இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    திருப்பூர்

    பள்ளி கல்வித்துறை அந்தந்த மாவட்ட விளையாட்டுத்துறையுடன் இணைந்து தேர்வு போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை தேர்வு செய்கிறது. அவ்வகையில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூரை உள்ளடக்கிய கோவை மண்டல அணிக்கான தேர்வு குன்னூரில் துவங்கியது. செப்டம்பர் 9-ந்தேதி வரை நடக்கிறது.

    4 போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர், வீராங்கனைகள் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்மாதம் 31ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான கூடைப்பந்து வீரர் அணி தேர்வு நடக்கிறது. செப்டம்பர் 4ந்தேதி, கூடைப்பந்து வீராங்கனைகள அணித்தேர்வு நடக்கிறது.

    செப்டம்பர் 2-ந்தேதி நஞ்சப்பா பள்ளியில், மாணவர் கபடி அணித்தேர்வும், ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகள் கபடி அணி தேர்வும் நடக்கிறது.

    இப்போட்டியில் 4 மாவட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.   

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே கீழகபிஸ்தலம், ராமானு ஜபுரம் ஊராட்சி மந்தகாரதெருவில் உள்ள அரியநாச்சியம்மன் கோவிலின் மதுஎடுப்பு மற்றும் சந்தன காப்பு உற்சவ திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் சார்பில் முதலாம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு என 3 பிரிவாக நடத்தப்பட்டது.

    மாடுகள் பிரிவில் பந்தய தூரமானது 8 மைல், 6 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து நடந்த குதிரை வண்டி பந்தயத்தில் நடுக்குதிரை, சிறிய குதிரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    குதிரைக்கு பந்தய தூரமானது 10 மைல், 8 மைல் என நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த பந்தயங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்க தொகை மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப ட்டிருந்தன.

    மேலும், விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் மருத்துவ வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    முன்னதாக குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் செல்வபாண்டியர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பந்தயத்தை காண கபிஸ்தலம் சாலையின் இரு ஓரங்களிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரண்டிருந்து ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    • மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மதுரை வீரர்கள் சிலம்பாட்டத்தில் உலக சாதனை படைத்தனர்.
    • அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பரவை தனியார் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளி, ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி, பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் சாதனை சிலம்ப நிகழ்ச்சியை நடத்தியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் குழு சிலம்பம், மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 32 வகை சிலம்பம், ஆணிப்பலகை யில் ஒற்றை சிலம்பம், நீர்சிலம்பம், நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் என்று 5 மணி நேரம் திறமைகளை வெளிபடுத்தினர்.

    அவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப் பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் மங்கையர்க்கரசி கல்வி குழும செயலாளர் அசோக்குமார், மதுரை இலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத், தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரை வேல்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி அருகே சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.
    • பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடந்தது. இதை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. இந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

    எருது கட்டு விழா ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, பால்கரை, முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரியமடை, கோவிந்தநேந்தல், திருப்புல்லாணி இந்திரா நகர், அச்சடிபிரம்பு, ஆனைக்குடி, வீரன் வலசை, தெற்குதரவை, கொடிக்குளம், வித்தானூர், எல்.கருங்குளம், ஆர்.காவனூர், ராமநாதபுரம் இந்திரா நகர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

    • மாநில அளவிலான 70-வது சாம்பியன்ஷிப் போட்டி தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
    • கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் தியாக இளையரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அளவிலான 70ஆவது சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு திருக்காட்டுப்பள்ளிசர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் 3-ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    வயது வரம்பு கிடையாது.

    தகுதியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×