என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்த்திருவிழா"
- தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது.
- காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் தேர்த்திருவிழா, சித்திரை திருநாளுக்கு சிறப்பாய் அமைகிறது. `விருப்பன் திருநாள்' என்றும் இந்தத் திருவிழா கூறப்படுகிறது. ஒரு வரலாற்று சம்பவத்தினால் இப்பெயர் வந்துள்ளது. தென்னகத்தை முற்றுகையிட்ட மாலிக்கபூர், திருவரங்கத்தில் இருந்து பெருமாளை 1310-ம் ஆண்டில் எடுத்துச் சென்றார். பின்னர் 1371-ம் ஆண்டில் விருப்பண்ண உடையார் என்னும் நாயக்கர் வம்சத்து மன்னரால் அந்த பெருமாள் மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
60 ஆண்டுகள் கோவிலில் இல்லாமல் இருந்த பெருமாள் மீண்டும் வந்தவுடன், சித்திரை மாதத்தில் அந்த பெருமாளை தேரில் வைத்து திருவீதி உலா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை, மன்னர் விருப்பண்ண உடையார் செய்தார். அதனால் இந்த சித்திரை தேர் திருவிழா `விருப்பன் திருநாள்' என்று பெயர் பெற்றது. சித்திரை மாதம் பவுர்ணமி அன்றுதான் திருவரங்கம் காவிரியாற்றில் `கஜேந்திர மோட்சம்' என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.
புராணத்தில் முதலை வாயில் சிக்கிய யானை, 'ஆதிமூலமே' என்று பெருமாளை அலறி அழைக்க, பெருமாள் அந்த யானையை முதலை வாயில் இருந்து மீட்ட புராண கதையின் நினைவாக கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி இன்றும் நடந்து வருகிறது. கோவில் யானையை காவிரி ஆற்றிற்கு அழைத்து வந்து, வெள்ளியாலான முதலை கவ்வுவது போலவும், யானைக்கு நம்பெருமாள் மோட்சம் அளிப்பது போலவும் அந்த நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தப்படும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். மஞ்சள் ஆடை அணிந்து, வேப்பிலை கட்டிக்கொண்டும், பால்குடம் எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி ஏந்தியும், சாரை சாரையாக தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஈரத்துணியுடன் அருள் வந்து, ஆர்ப்பரித்து சென்று, மாரியம்மனை தேரில் கண்டு வழிபடும் பெரும் விழா இதுவாகும்.
மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக சமயபுரத்தில் உற்சவ அம்மன் (பஞ்சலோக) திருவுருவம் 2 உள்ளது. சித்திரை தேருக்கு முதல்நாள் இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவதற்கு ஒரு உற்சவ அம்பாளும், மறுநாள் திருத்தேரில் பவனி வருவதற்கு ஒரு உற்சவ அம்மன் திருவுருவமும் இருப்பது, சமயபுரத்தில் மட்டுமே.
இதுபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெறும். கோவில்களில் இசை, கூத்து, நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள், சித்திரையில்தான் இரவு முழுவதும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- நிறைவு நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரசாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.
இதில், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகம் என 3 மாநி லங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து, சாமியை வழிபட்டு சென்றனர். விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு ஓசூர் தேர்பேட்டையில் பல்லக்கு உற்சவம் விடிய, விடிய நடைபெற்றது.
இந்த விழாவின் போது, விநாயகர், சந்திர சூடேஸ்வரர், மரக தாம்பிகை அம்மன், முருகர், ஆஞ்சநேயர் என 20-க்கும் மேற்பட்ட சாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து வானவேடிக்கை மற்றும் மேள வாத்தியம் முழங்க தேர்பேட்டையில் வீதி உலா நடைபெற்றது.
தேர்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு, தேர்பேட்டையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ மரக தாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வர சாமியை தெப்பத்தில் வைத்து, நாதஸ்வர இசையுடன், குளத்தை சுற்றி 3 முறை வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூஜைப் பொருட்களை வழங்கி சாமியை வழிபட்டனர்.
மேலும் இதில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தெப்ப உற்சவத்தை காண, ஓசூர் மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து மக்கள் குவிந்ததால் ஓசூர் தேர்பேட்டையில் கூட்டம் அலைமோதியது.
- தேரோட்டம் இன்று விமரி சையாக நடைபெற்றது.
- நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வர சாமி மலைக்கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது..
விழாவையொட்டி, கடந்த மாதம் 21-ந்தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால்கம்பம் நட்டு, தேர்கட்டும் பணிகள் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 18-ந்தேதி அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விழா நிகழ்ச்சிகள், கடந்த 19-ந் தேதி ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்றுவரை ஓசூர் தேர்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் இரவு சிறப்பு பூஜைகளும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாக னம், நாக வாகனம் உள்ளிட்ட வாகன உற்ச வங்கள், பூ அலங்காரங்கள் நடைபெற்றது. நேற்று இரவு, சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 10.10 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், சாமியை வைத்து முதலில் விநாயகர் சிறிய தேரையும், அதனை தொடர்ந்து பெரிய தேரையும் பகுதி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.
விழாவையொட்டி தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை யொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
- கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபட்ட காட்சி.
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட அக்னி கம்பத்துக்கு பெண்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு.
- திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
- 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பொக்காபுரம் என்ற அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இந்த கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இந்த கோவிலில் 5 நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் நீலகிரி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.
பழங்குடியின மக்கள் மற்றும் படுகர் சமுதாய மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சருக்கு பழங்குடியி னர் மக்களின் பாரம்பரிய இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த திருவிழாவிற்காக 20-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இரவு 10.30 மணிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
தேர் திருவிழாவில் மேள தாளங்கள் முழங்க, படுகர் இன மக்கள் அவர்களின் மொழிப் பாடல்களைப் பாடி நடனமாடி பங்கேற்றனர்.
வடம் பிடிக்கப்பட்ட தேர், கோவிலை இரண்டு முறை சுற்றி வந்தது. அப்போது வழிநெடுகிலும் தேரில் பவனி வந்த மாரியம்மனுக்கு, பக்தர்கள் உப்பை இறைத்து வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர்.
- 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது.
- 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆலய 124-வது ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. இன்று முதல் தினமும் மாலையில் திருப்பலி நடக்கிறது. வருகிற 8, 9-ந்தேதிகளில் அருட்தந்தை ஸ்டீபன் தச்சீல் சிறப்பு நற்செய்தி கூட்டமும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. வருகிற 10-ந்தேதி நற்கருணை பவனி நடைபெறுகிறது. 11-ந்தேதி லூர்து மாதாவின் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
இந்த 2 நாட்களிலும் மாபெரும் தேர் பவனியானது ஆலயத்தை சுற்றியுள்ள வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ரெயில்வே மைதானத்தில் ஒன்று கூடி திருப்பலியோடு நிறைவுபெறும். 11-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜுடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் எரியும் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியவாறு பவனியாக வந்து பங்கேற்கிறார்கள்.
- 383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டியில் பழமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான 383-வது தேர்த்திருவிழா கடந்த மாதம் 22-ந் ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேர்த்திருவிழாவை யொட்டி நாள்தோறும் பல்வேறு சிறப்பு திருப்பலிகள், ஆராதனைகள் நடை பெற்றது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுப்பிரார்த்தனை நேற்று காலை நடந்தது.
அதை தொடர்ந்து மாலையில் புனித அன்னை ஜெபமாலை திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர் திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்
- 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
கோவை,
கோவை அருகே வரதய்யங்கார்பாளையத்தில் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 6.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க சிறப்பு பணிவிடையுடன் கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டியில் வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
23-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிப்படிப்பு, ஏடுவாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி இரவு 8 மணிக்கு அன்னவாகனம், 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொட்டில் வாகனம், 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூஞ்சரப்ப வாகனம், 27-ந் தேதி சர்ப்ப வாகனம், 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கருடவாகனம் ஆகிய வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.
29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனம் 30-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் வாகனம், அடுத்த மாதம் (அக்டோபர் 1-ந் தேதி) இரவு இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நடைபெறுகிறது.
2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.
- தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் தேர்த் திருவிழா தொடங்கி நடப்பது வழக்கம். மேலும் கோவில் விழாவில் புகழ் பெற்ற கால்நடை சந்தையும் நடக்கும்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டு கோவில் விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்தாண்டு கோவில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான அந்தியூர் புது ப்பாளையம் குருநாதசாமி கோவில் ஆடி தேர்த்திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவுக்கான தேர்கள் தயார் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
இதை தொடர்ந்து இன்று காலை காமாட்சி அம்மன், பெருமாள் சாமி, குருநாத சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு 60 அடி உயரம் கொண்ட மகமேறு தேரில் பெருமாள் சாமி, மற்றொரு தேரில் குருநாத சாமி மற்றும் காமாட்சி அம்மன் தனி தனி தேரில் எழுந்தருளினர்.
இதையடுத்து குருநாதசாமி கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு சென்றது. தேர்களை பக்தர்கள் சுமந்தப்படி சென்றனர். தேர்கள் முக்கிய வழிகளில் கொண்டு செல்லப்பட்டு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடம் வனக்கோவிலை சென்றடைந்தது.
இதில் அந்தியூர், புது ப்பாளையம், கோபி செட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் இன்று கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு வனக்கோவிலில் இருந்து தேர்கள் புறப்பட்டு மீண்டும் குருநாதசாமி கோவிலுக்கு வந்தடைகிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். விழா வரும் 12-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
விழாவையொட்டி கோவில் வளாகத்தில் தென் இந்தியாவிலேயே புகழ் பெற்ற குதிரை மற்றும் மாட்டுச் சந்தை இன்று காலை தொடங்கியது.
இவ்விழா மற்றும் கால்நடை சந்தையை காண தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த கால்நடை சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் குதிரைகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர்.
மன்னர் காலங்களில் போருக்கு பயன்படுத்திய உயர் ரக குதிரைகளான மார்வார், நொக்ரா, கத்தியவார் உள்ளிட்டவை ரூ.1 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மதிப்புள்ள குதிரைகள் விற்பனைக்காக வந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள், நாட்டு மாடுகள், பர்கூர் இன மாடுகள், கலப்பின மாடுகளான சிந்து, ஜெர்சி மற்றும் ஆந்திரா வை பூர்விமாகக் கொண்ட ஓங்கோல் இன மாடுகளும் கால்நடை சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. இவைகளை வாங்கிச் செல்வதற்கு தமிழக மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர்.
இந்த கால்நடை சந்தையை காண ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு கழித்து சென்றனர்
கோவில் திருவிழாவு க்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பி. எஸ்.எஸ். சாந்தப்பன், கோவில் செயல் அலுவலர் மோகனபிரியா மற்றும் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
- தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது.
- மாலை வண்ண, வண்ண விளக்கு களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவால யத்தை சுற்றி வலம் வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேர்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
7, 8 ஆகிய 2 நாட்களில் ஜெபவழிபாடும், திருப்பலியும் வேலுர் மறை மாவட்டத்தை சேர்ந்த அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது.
தேர்த்திருவிழாவின் இறுதி நாளான நேற்று வின்சென்ட் குமார் தலைமையில் கூட்டுத்திருபலி நடை பெற்றது. மாலை வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர்பவனி தருமபுரி மறை மாவட்ட இயக்குநர் ஜாக்சன் லூயிஸ்சால் மந்தரிக்கப்பட்டு தேவாலயத்தை சுற்றி வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, எலத்தகிரி, கந்திகுப்பம், சுண்டம்பட்டி, புஷ்பகிரி மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் வாழும் கிறிஸ்தவ மக்கள் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது.
- முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் சென்னை சாலை சுண்டம்பட்டி புதுவை நகரில் உள்ள கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய 53-ம் ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கிய இந்த தேர் திருவிழாவில், நாள்தோறும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால், நவநாள் ஜெபங்களுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தன. இவ்விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் இரவு திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் புனிதர் அந்தோணியாரின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. வாணவேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவனியை பங்குத்தந்தை ஜார்ஜ், புனித நீர் தெளித்து, மந்திரித்து தொடங்கி வைத்தார். இதில், சுண்டம்பட்டி, கந்திகுப்பம், புதுவை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக வந்த இந்த தேரின் மீது பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவி தங்களது நேர்த்திகடனை செலுத்தினார்கள்.
- விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது.
- இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 27ஆம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 27-ந் தேதி விநாயகர் பூஜையும், 28-ந் தேதி சுவாமி பூத சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி நந்தி காமதேனு வாகன த்திலும், 30-ந் தேதி சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று (1-ந் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று காலை சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இன்று மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். தொடர்ந்து தேர் பெருமாள் கோவில் வீதி, கடைவீதி வழியாக வந்து நிலை சேருகிறது.
நாளை பாரிவேட்டை, குதிரை கிளி வாகன காட்சியும், 4-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும், 5-ந் தேதி புஷ்ப விமானத்தில் சாமி உலா வருதலும், 6-ந்தேதி மஞ்சள் நீர் உற்சவ விழாவும் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்