என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்த்திருவிழா"
- தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது.
- மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு தேர்திருவிழா நடந்தது.
முன்னதாக சீதா, ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு அபிசேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சீதா ராமா, ஆஞ்சநேயர் சுவாமிகளை அலங்கரிக் கப்பட்ட தேரில் அமர்த்தி பூஜைகள் செய்து வேதமந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ராமா, ராமா என கோசமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோயிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.
இதே போல், தேன்கனிக்கோட்டை எஸ்ஆர்ஒ தெருவில் உள்ள பழமை, வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு அதிகாலையில் சிறப்புஅபிசேகம் செய்யப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சீதா ராம லட்சுமன உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து வேதமந்திரங்கள் ஒலிக்க ெசண்ைட மேளங்கள் முழங்க பக்தி கோசங்கள் விண்ணை பிளக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தப்பட்டது. மாலையில் உற்சவமூர்த்திகளை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடல்களை பாடி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு அருள்பெற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.
- கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
- செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
தருமபுரி,
தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடந்தது. பின்னர் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் சாமி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை) நரி வாகன உற்சவமும், நாளை (வெள்ளிக்கிழமை) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) நாக வாகன உற்சவமும் நடக்கிறது.
வருகிற 2-ந் தேதி காலை பால்குட ஊர்வலமும், இரவு சாமிக்கு திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில்வாகனத்தில் சாமி உற்சவம் நடக்கிறது. வருகிற 3-ந் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.
விழாவில் முக்கிய நாளான வருகிற 4-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடக்கிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து பெண்கள் மட்டும் நிலை பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
வருகிற 5-ந் தேதி வேடர்பறி உற்சவமும், 6-ந் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 7-ந் தேதி சயன உற்சவமும், 8-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.
விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவி லில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.
இன்று காலை 10 மணியளவில் கோவிலுக்கு முன்புள்ள கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொ டர்ந்து யாகசாலை பூஜை நடை பெற்றது.
நாளை முதல் வரும் 3-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள், சாமி தேர் வீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 4-ந் தேதி கல்யாண சுப்பிர மணியருக்கு திருக்கல்யாண உற்சவம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணி அளவில் சண்முகருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து 5-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணி அளவில் திருப்படி பூஜை விழாவும் நடைபெற உள்ளது.
காலை 9 மணி அளவில் சண்முகருக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுக்கி றார்கள்.
இதையொட்டி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் அடிவா ரத்தில் அன்னதானம் நடை பெற உள்ளது. 6-ந் தேதி மாலை 5 மணி அளவில் பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சாமி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 6.30 மணி அளவில் வள்ளி தெய்வா னை உடன் சண்முக பெரு மான் மலர் பல்லக்கில் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது.
உடுமலை :
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாட ப்பட்டு வருகிறது. நடப்பாண்டு தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை, 4மணிக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சியும், மாலை, 6மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.ஏப்ரல் 4-ந் தேதி மாலை 7 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு 12மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி மதியம் 1 மணிக்கு கொடியேற்றுதல், மதியம் 2மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி தொடங்கி 11-ந் தேதி இரவு 10மணிக்கு பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. 12ந் தேதி அதிகாலை 4மணிக்கு மாவிளக்கு, மாலை 3 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4மணிக்கு தேரோ ட்டமும் நடக்கிறது.14-ந் தேதி காலை 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு பரிவேட்டை, இரவு 11 மணிக்கு வான வேடிக்கை நிகழ்சிகள் நடக்கிறது.15ந்தேதி காலை 8:15 மணிக்கு கொடியிறக்கம், காலை 11மணிக்கு மகா அபிேஷகம், பகல் 12மணிக்கு மஞ்சள் நீராட்டம், மாலை 7மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
திருவிழா காலங்களில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு அம்பாள் புஷ்ப அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சிகளும், கோவில் வளாகம் மற்றும் குட்டை திடலில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
- 31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.
- 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.
அவினாசி :
கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை 21-ந் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.
31-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5-ந் தேதி காலை அதிர்வேட்டு முழங்க அம்மன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது வீற்றிருக்கும் சாமியை தரிசனம் செய்கின்றனர்.
பின்னர் பிற்பகல் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 6, 7-ந் தேதிகளில் தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது. 8-ந் தேதி பரிவேட்டை மற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 11.10 மணிக்கு கொடி ஏற்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, கோவில் செயல் அலுவலர் லோகநாதன், காரமடை தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.வி.கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இரவு 8.30 மணிக்கு அன்னவாகன உற்சவம் நடக்கிறது. நாளை முதல் வருகிற 3-ந் தேதி வரை தினசரி இரவு 8.30 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், அறுபத்து வாகன உற்சவமும், வெள்ளிக்கிழமை கருட சேவையும் நடக்கிறது.
4-ந் தேதி காலை 10.45 மணிக்கு பெட்டத்தம்மன் அழைப்பு புறப்பாடு நடக்கிறது. 5-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அரங்கநாதருக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
இரவு 8.30 மணிக்கு யானை வாகன உற்சவம் நடக்கிறது.
6-ந் தேதி காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங்கநாதர் திருத்தேரில் எழுந்தருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடக்கிறது.
7, 8-ந் தேதிகளில் பரிவேட்டையுடன் குதிரை வாகன உற்சவமும், தெப்போற்சவமும் மற்றும் சேஷ வாகன உற்சவம் நடக்கிறது. 9-ந் தேதி சந்தான சேவை நடக்கிறது. 10-ந் தேதி காலை 9 மணிக்கு வசந்தம் நடக்கிறது.
- சென்ராய சுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
- தேர் இழுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்ராய சுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி இரவு மற்றும் பகல் நேரங்களிலும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த கொரோனா காலத்தில் நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்து மீண்டும் நடைபெற்ற காலங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் திரண்டனர்.
திருவிழாவிற்கு அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.
திருவிழாவில் இந்து அறநிலையத்துறை சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது.
- 10ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11-ந் தேதி மஞ்சள் நீர் விழா உள்ளிட்டவை நடக்கின்றன.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் திருமுருகன் பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா வருகிற 27-ந்தேதி முதல், தொடங்கி, அடுத்த மாதம் 11ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி வருகிற 27ந் தேதி இரவு கிராம சாந்தி, 28-ந்தேதி காலை கொடியேற்றம், மார்ச் 1ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகள், 2ந் தேதி பூத வாகனம், சிம்ம வாகன காட்சிகள், 3ம் தேதி புஷ்ப வாகன காட்சி, 4ம் தேதி பஞ்ச மூர்த்திகளுடன் ரிஷப வாகன காட்சி, 5ம் தேதி திருக்கல்யாணம் யானை வாகன, அன்ன வாகன, காட்சிகள் உள்ளிட்டவை நடக்கின்றன.
6 மற்றும் 7ந் தேதி மாலை 3 மணிக்கு, திருமுருகநாதர் தேர் வடம் பிடித்தல், 8ந் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சிகள், மாலை தெப்பத்திருவிழா, 9ந் தேதி ஸ்ரீ சுந்தரர் வேடுபறி திருவிழா, 10ம் தேதி பிரம்ம தாண்ட தரிசன காட்சி, 11-ந் தேதி மஞ்சள் நீர் விழா உள்ளிட்டவை நடக்கின்றன.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் சுத்தம் செய்தல், கொடிமரத்தில் பொருத்தப்பட்டுள்ள பித்தளை தகடுகளை கழற்றி பாலிஷ் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
- விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்களுக்கு தேரோட்டம் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு 140-வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
விழாவையொட்டி கடந்த 1-ந் தேதி காலை தேர் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு மேல் பள்ளய பூஜை நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு மேல் அவிட்ட நட்சத்திரத்தில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலைபெயர்த்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) நடைபெறுகிறது. 20-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் 2-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 21-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் திருத்தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி உள்ளூர் ஆந்தை குலத்தவர்கள், 23-ந் தேதி தனஞ்செயக்குலத்தவர்கள், 24-ந் தேதி மாடகுலத்தவர்கள், 25-ந் தேதி தென்முக ஆந்தை குலத்தவர்கள், 26 -ந் தேதி வடமுக ஆந்தை குலத்தவர்கள், 27-ந் தேதி ஓதாள குலத்தவர்கள், 28-ந் தேதி இலுப்பைக்கிணறு தனஞ்செய குலத்தவர்கள், மார்ச் 1-ந் தேதி கல்லி குலத்தவர்கள், 2-ந் தேதி வண்ணக்கன் குலத்தவர்கள், 3-ந் தேதி நரிப்பழனிகவுண்டர் வகையறா ஆந்தை குலத்தவர்கள், 4-ந் தேதி ஆதிகருப்பன்வலசு நஞ்சப்ப கவுண்டர் வகையறா தனஞ்செய குலத்தவர்கள், 5-ந் தேதி பலிஜவார்கள் குலத்தவர்கள், 6-ந் தேதி திருக்கோவில் முறை பூசாரிகள் மண்ட கட்டளையும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. 22-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 13 நாட்கள் குலத்தவர்களின் மண்டப கட்டளைதாரர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேர்த்திருவிழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கலெகடர், காவல்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர். தேர்த்திருவிழாவையொட்டி இன்று முதல் 21 -ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ந்து இரவு புராண நாடகம், இசை நிகழ்ச்சிகள், பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியன நடைபெற உள்ளன.
- தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
- பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர்,
ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா வருகிற மார்ச் மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, தேரோட்டம் நடைபெறும் தேர்ப்பேட்டை பகுதியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, நேற்று மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகளுடன், தேர்பேட்டைக்கு பக்தர்கள் வந்து செல்லும் சாலை, இட வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
- ஏரியில் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மற்றும் வேட்ராயப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வேட்றாய பெருமாள் சோரகை மலையில் புஷ்ப பல்லக்கில் கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து மலைப்பகுதியில் எடுத்து சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள மானத்தால் ஊராட்சிக்கு உட்பட்ட மானத்தால் ஏரியில் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மற்றும் வேட்ராயப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.
இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வேட்றாய பெருமாள் சோரகை மலையில் புஷ்ப பல்லக்கில் கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து மலைப்பகுதியில் எடுத்து சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பின்னர் மறுநாள் காலை கண்காணிபட்டி கோவில் வீட்டில் சாமி சிறப்பொஉ அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டார். இதை தொடர்ந்து துவாதசி அன்று தெப்ப தேர்த்திருவிழா மாலையில் நடைபெற்றது.
- 6- வது ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
- ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டையில் இஸ்கான் சார்பில் பராமரிக்கப்படும் கிருஷ்ணர், பலராம் கோவில் உள்ளது. இக்கோவிலின் சார்பில் 6- வது ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
காலை 10 மணிக்கு, ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, ஹரிநாம சங்கீர்த்தனம், பிரசாத வினியோகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலை 4 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வனத்துறை அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் சாலை, எம்.ஜி., ரோடு வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை அடைந்தது.
தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் முரளிராம்தாஸ் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்