search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227037"

    • மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது.
    • மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    தாராபுரம் :

    தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம், தாராபுரம் நகர் மற்றும் கிராமியம் தாராபுரம் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட, பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் மின் அளவிகள் திருடப்பட்டுள்ளது. அவினாசி பகுதியில் மின்வாரியம் அல்லாத தனிநபர் ஒருவர், புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரரிடம் திருடப்பட்ட மின் அளவியை மின்வாரியத்திலிருந்து மின் அளவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளார்.

    அவினாசி மின்வாரிய பொறியாளர் தகவல் தெரிவி்த்ததால் இது தொடர்பாக அவினாசி, தாராபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல்லடம் மின்பகிர்மான பகுதியில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பதாரரிடம் மின்அளவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி உடுமலை வட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் அளவியை திருடி அதை தனிநபர் ஒருவர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மோசடி செய்து ரூ.6 ஆயிரம் பெற்று சென்றுள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் அளவிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. புதிதாக மின் இணைப்பு பெற விண்ணப்பித்த விண்ணப்பத்தாரர்கள் மின்வாரியம் அல்லாத தனிநபர் தன்னை மின்வாரிய பணியாளர் எனக்கூறி மின் அளவி ஒதுக்கப்பட்டதாக கூறி பணம் கேட்டால் உடனடியாக உதவி மின்பொறியாளர் (விண்ணப்பித்த பிரிவு அலுவலகம்) அல்லது தாராபுரம் செயற்பொறியாளர் செல்போன் எண்: 94458 51562-க்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோல் சந்தேகப்படும் படி மோசடி நபர்கள் தங்கள் பகுதிக்குள் கண்டறியப்பட்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் மற்றும் மின்வாரிய அலுவலர்களிடமும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் அரண்மனை, அச்சுந்தன் வயல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பிரிவு மின்சார உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் உள்ள டவுன் 2, மற்றும் டவுன் 3 பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றியுள்ள பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையர்வலசை, அல்லி கண்மாய், சிவன் கோவில் சுற்றியுள்ள பகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே.நகர், பெரியகருப்பன் நகர், கோட்டை மேடு, சிங்காரதோப்பு, பெரியார் நகர், லாந்தை, அச்சுந்தன் வயல், நொச்சிஊரணி, பயோனீயர் சுற்று பகுதி, எட்டிவயல், ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி துணைமின்நிலையம் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின்நிலையங்களில் மழைகால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 13-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகள் மின்தடை ஏற்படும்.

    ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால் பண்ணை, செண்பகம் மருத்துவமனை சுற்றுப்புறம், ஐராவத நல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர். கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு. எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு மற்றும் கேசவப்பெருமாள் கோவில் பகுதிகள்.

    தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பக்குளம் ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை. ஏ.பி.டி.சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எ.ம்.ஆர்.ரோடு, கொண்டித்தொழு.

    சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், பிசர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1, 2-வது தெருக்கள் வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடியின் கிழக்குபகுதி, தமிழன் தெரு.என்.எம்.ஆர்.புரம்,ஏ.ஏ.ரோடு,பி.பி. ரோடு,டி.டி. ரோடு, மீனாட்சி அவன்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • சோழவந்தான் பகுதியில் நாளை மின்நிறுத்தம் ஏற்படும் இடங்கள்.
    • மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (25-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சோழவந்தான் நகர் பகுதி, தச்சம்பத்து, இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாரப்பட்டி, மேலமட்டையான், கீழமட்டையான், கச்சிராயிருப்பு, நாராணபுரம், திருவேடகம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடி மங்கலம், குருவித்துறை, அய்யப்ப நாயக்கன்பட்டி, சித்தாதி புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் தெரிவித்துள்ளார்.

    • தேவகோட்டை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.
    • தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை உபகோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (20-ந் தேதி) 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே மேற்கண்ட நேரத்தில் தேவகோட்டை டவுன், உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, ஊரணிக்கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை, உதையாச்சி, கோட்டூர், அனுமந்தக்குடி, புளியால் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • இந்த தகவலை மதுரை மேற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பெரியார் பீடர் மற்றும் அனுப்பானடி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட வீட்டு வசதி வாரிய பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (14-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, ரெயில்வே சந்திப்பு பகுதி, டவுன்ஹால்ரோடு, மேல மாரட் வீதி, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மேலமாசி வீதி, காக்கா தோப்பு, தாய்நகர், மாருதி நகர், கங்கா நகர், சோனையாநகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்தை வரை, கண்மாய்க்கரை, ராஜமான் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று மதுரை அரசரடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கூடல் பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காளவாசல் பைபாஸ், குருதியேட்டர், மூக்கையா தெரு, காளியம்மன் கோவில் தெரு, சின்னச்சாமி தெரு, செங்கோல் நகர், மேட்டுத்தெரு, நாகு நகர், பெத்தானியாபுரம், ெகான்னவாயன் சாலை, சிங்கம்பிடாரி கோவில், டவர்லைன் தெரு, களத்துப்பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்வி நகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அன்பு வீதி, கண்மாய்க்கரை ஆகிய பகுதிகளில் நாளை (14-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    • வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர், பேச்சிப்பாறை உப மின் நிலையங்களில் நாளை (10-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்றூர், தேமானூர், திருவட்டார், செருப்பாலூர், வெண்டலிகோடு, வலி யாற்றுமுகம், பிலாவிளை, குமரன்குடி, பூவன்கோடு, வேர்க்கிளம்பி, மணலிக்க ரை, மணக்காவிளை,

    முகிலன்கரை, பெருஞ்சக்கோணம், காயல்கரை, சித்திரங்கோடு, சாண்டம், 'ஆத்துக்கோணம், கடையாலுமூடு, கோதையார், குற்றியார், மைலார், உண்ணி யூர்கோணம், சிற்றார், களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு,

    திருநந்திக்கரை, அரசுமூடு ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தக்கலை மின்வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
    • மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    யானைக்கல் மற்றும் அனுப்பானடி பீடர்களில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (7-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணிநகரம் மெயின் 1-வது, 2-வது தெருக்கள், ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரகாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் அக்ரகாரம், திலகர்திடல் சந்தை, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, மேட்டுத்தெரு, அடைக்கலம் காலனி, ஞானவேல் காலனி, மீனாட்சி நகர், மாணிக்கம் நகர், லட்சுமி தெரு, மாரியம்மன் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார். 

    ×