search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227238"

    • 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை.
    • நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் உள்ள நிலங்களை வக்பு வாரிய நிலம் என கூறி ஊத்துக்குளி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய உள்ள தடையை நீக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊத்துக்குளி சார்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வடுகபாளையம் கிராமத்தில் ராமமூர்த்தி நகர், கே.கே.நகர், செந்தில் நகர், சரசுவதி நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 70 ஏக்கர் விவசாய நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய இயலவில்லை. இந்த பிரச்சினையால் நில உரிமையாளர்கள், குடியிருப்போர், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கான தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை விமான நிலைய விரிவாத்தில் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
    • டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார்.

    அவனியாபுரம்

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் மத்திய மந்திரி வி.கே.சிங் இன்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் இயங்கு வதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் வெளி நாட்டு விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதிகமான விமான சேவைகள் வந்ததும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். இதன் மூலம் மதுரை விமான நிலையத்தில் நள்ளிரவு சேவைக்கான விமானங்கள் வந்தால் ஏற்பாடுகள் செய்ய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தயாராக உள்ளது.

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே சுங்கஇலாகா சேவை இயங்கி வருகிறது. இதனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் கூடுதலாக விமானங்கள் வந்து சென்றால் அதுகுறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

    கொரோனா விதி முறைகள் குறித்து மத்திய அரசு விதிகளை பின்பற்ற அறிவித்துள்ளது. அதனை அனைத்து விமான நிலை யங்களிலும் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை கடைபிடிக்க வேண்டியது பொது மக்களின் கடமை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. நிர்வாகி பேரா சிரியர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் சசிகுமார், கதலி நரசிங்க பெருமாள், ராஜரத்தினம், ஏர்போட் கார்த்திக், கோல்டன் ரவி, அவனி கருப்பையா,சடாச்சாரம், பெருங்குடி முத்துமாரி, முத்துகுமார், சுந்தர் வெற்றி செல்வி, தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

    • மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
    • மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

    உடுமலை :

    மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.

    நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    • சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
    • இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் செவ்வாய்ப் பேட்டை, நரசிம்மன் செட்டி ரோட்டில், சித்திரைச்சாவடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள, 1418 சதுரடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர்.

    இது குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோவில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தர விட்டது.

    இதையடுத்து சேலம் மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை கமிஷனர் மங்கையர்க்கரசி மேற்பார்வையில் உதவி கமிஷனர் ராஜா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டனர். இதற்கான பாதுகாப்பு பணியில் அன்ன தானப்பட்டி போலீசார் ஈடுபட்டிருந்தனர். 

    • நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்” வழங்கப்படுகிறது.
    • விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    2022-23 ஆம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாயநிலம் வாங்க மானியம்" வழங்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம், (தாட்கோ) 2022-23ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டம் மூலம் "200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம்" வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் இனத்தை சார்ந்த 4 நபர்களுக்கு ரூ.20லட்சம் மானியமும், பழங்குடியின இனத்தை சார்ந்த 1 நபருக்கு ரூ.5 லட்சம் மானியமும் ஆக மொத்தம் 5 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மகளிருக்குமுன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர்அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். வயது 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

    விவசாய கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ்இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது.

    ஒருவர் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர். ஒரு திட்டத்தின் கீழ் ஒரு முறை மானிய உதவி பெற்றால், பின்னர் அவர் தாட்கோ செயல்படுத்தும் சிறப்பு மைய உதவியுடனான பெற பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் தகுதியற்றவராகிறார்.

    மேற்கண்ட இத்திட்டம் தொடர்பான www.application.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ , அறை எண்: 501 (ம) 503, 5-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் 641604. தொடர்புக்கு : செல்போன் எண்: 94450 29552, தொலைபேசி : 0421-2971112 என்ற முகவரி , தொலைபேசி எண்ணை அணுகலாம். திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.
    • பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச பட்டா வழங்கல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருத்தி ஊராட்சி மணக்கொல்லை பகுதியில் ரசுப் புறம்போக்கு இடத்தில் சுமார் 23 குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.

    நீண்ட காலமாக அவர்கள் வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கக் கோரி வந்த நிலையில் நேற்று ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன் முன்னிலையில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாவட்ட வருவாய் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தஞ்சை கோட்டாட்சியர் ரஞ்சித் ஆகியோர் 23 பயனாளிகள் வீட்டிற்கே சென்று இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் பழனியப்பன், ஒன்றியச் செயலாளர் கௌதமன், திருப்பூந்துருத்தி பேரூராட்சித்துணைத் தலைவர் அகமதுமைதீன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலன், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் உதவியுடன் அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலங்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இதில் பல நிலங்களை தனியார் ஆக்கிர மித்து வைத்துள்ளனர். அந்த நிலங்களை அறநிலை யத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    கரியமாணிக்கப்புரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் நாகர்கோவிலை அடுத்த வேதநகர் பகுதியில் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது.

    இதனை புத்தளம் பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தார். மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்த அன்னக்கிளி எந்த விவசாயம் செய்யாமல் அப்படியே போட்டு இருந்தார்.

    இந்நிலையில் அறநிலை துறைக்கு அன்னக்கிளி குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் வைத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் சிறப்பு தாசில்தார் சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அலுவலர் ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் இன்று அந்த நிலத்தை மீட்டனர்.

    அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இடத்தில் அதற்கான அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

    • கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்அடுத்த ஆலங்குடி நெடாரில்பிரம்ம புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் வட்டாட்சியர் சங்கர்,

    கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் பணியாளர்கள் கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர் .

    தொடர்ந்து தோப்பு மீட்கப்பட்டு அதே இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அதில் தென்னந்தோப்பு கோவிலுக்கு சொந்தமானது ஆகும்.

    இங்கு யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.

    மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.

    • 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
    • முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக அமைச்சர் வழங்கினர்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ .7.40 கோடி மதிப்பீட்டில் 2,401 பணிகள் முடிவுற்றும் ரூ.9.26 கோடி மதிப்பீட்டில் 816 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், முத்தூர் பேரூராட்சியில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் 20 பணிகள் முடிவுற்றும், ரூ .6.32 கோடி மதிப்பீட்டில் 12 நடைபெற்று வருகிறது. மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக அமைச்சர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் "நெல் ஜெயராமன் மரபு சார் நெல் விதை ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்" கீழ் துர்யமல்லி ரக பாரம்பரிய நெல் விதைகளை 3 விவசாயிகளுக்கு வழங்கியும், வருவாய்த் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதனின் மகன் ஆதவன் ரூ.4லட்சம் மதிப்புடைய 2.72 சென்ட் பரப்பளவு கொண்ட தனக்கு சொந்தமான நிலத்தினை முத்தூர் பேரூராட்சி மாதவராஜபுரத்தில் வசிக்கும் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக, முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பெயரில் நன்கொடையாக வழங்கினர். இதையடுத்து பத்திர பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத்திடம் வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ,உதவி இயக்குநர் ( ஊராட்சிகள் ) மதுமதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி ) வாணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.முத்தூர் பேரூராட்சி மக்களுக்காக தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

    • எங்களுக்கு வீடு, நிலமும் இல்லை, வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.
    • எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது தஞ்சை மாவட்ட த்தை சேர்ந்த திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாங்கள் 100 நபர்கள் உள்ளோம். எங்களுக்கு வீடு, நிலம் இல்லை. வாடகைக்கும் வீடு எதுவும் கிடைக்கவில்லை.

    இருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறோம்.

    எனவே திருநங்கைகள் அனைவருக்கும் அரசு வழங்கும் இலவச மனை வழங்க வேண்டும்.

    இதே போல் எங்களின் வாழ்வாதாரம் உயர அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் லோன் மானியம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • மீட்கப்பட்ட இடங்களில் கோவில் சார்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன.இந்த கோவில்களுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் பல நூறு ஏக்கர்கள் உள்ளன. கோவில்களுக்கான தினசரி பூஜை, பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்கான வருவாயைப் பெறும் வகையில் வழங்கப்பட்ட இந்த கோவில் நிலங்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.அவற்றை மீட்டெடுக்க தற்போது அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக உடுமலை தாலுகா வாகத்தொழுவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் திருப்பூர் இணை ஆணையரின் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த இடத்தின் ஆக்கிரமிப்பாளர்கள் ரூ. 3 கோடி மதிப்புள்ள 10.69 ஏக்கர் நிலத்தை தானாகவே ஒப்படைக்க முன் வந்தனர். மேலும் கொங்கல்நகரம் மாரியம்மன், விநாயகர் கோவிலுக்கு சொந்தமான ரூ. 3 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 17.88 ஏக்கர் புன்செய் நிலத்தையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஒப்படைக்க முன்வந்தனர். இதனையடுத்து திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சரக ஆய்வாளர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் முன்னிலையில் இடம் மீட்கப்பட்டு கோவில் சார்பாக அந்த இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது.

    உடுமலை தாலுகாவில் 2 கோவில்களுக்குச் சொந்தமான ரூ. 6 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 28.57 ஏக்கர் புன்செய் நிலங்கள் மீட்கப்பட்ட தகவலால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர்.
    • நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர். பனங்குடி கிராமத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும்,

    நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும், என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினார். போராட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு புதிய நில எடுப்பு 2013ம் ஆண்டு சட்டப் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.

    ×