என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227270"
- இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் அக்கா மற்றும் அவரது கணவருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்.
இதனால் இளம்பெண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் டீசலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர்.
பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் ெபண்ணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி . இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார்.
இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்
கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்தது
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி வடக்கூர் இந்திரா நகரை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது50). இவர் கணவர் பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்து வந்தார். இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே விழுந்து கால் உடைந்த நிலையில் இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீ வேகமாக பரவ அக்கம் பக்கத்தினர் ஆரல்வாய்மொழி போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். நாகர்கோவில் தீயணைப்பு அதிகாரிகள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.
- தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை:
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். 48 வயதான இவர் தனது மகனுக்காக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இவரது வீடு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் அங்குள்ள வருவாய் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்து முறையிட்டுள்ளார்.
ஆனால் மலைக்குறவன் இனத்தை சேர்ந்த வேல் முருகனுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தி இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் வேல்முருகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐகோர்ட்டுக்கு சென்று உயிரை மாய்த்துக்கொள்ள அவர் திட்டமிட்டார்.
இதன்படி நேற்று மாலை அவர் ஐகோர்ட்டு வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகே சென்றார்.
மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி வேல்முருகன் திடீரென தீக்குளித்தார். தீயில் எரிந்த நிலையில் ஐகோர்ட்டு வளாகத்துக்குள் ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் தீயில் கருகிய வேல் முருகனை காப்பாற்ற முயன்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரனுக்கும் காயம் ஏற்பட்டது. தீக்குளிப்பு சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று காலை 6 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேல்முருகன் சாதி சான்றிதழுக்காக யார் யாரையெல்லாம் சந்தித்து பேசி உள்ளார்? எதற்காக சாதி சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தினாலேயே தீக்குளித்தேன் என்று அவர் கூறுவது பதிவாகி இருக்கிறது.
தீயில் கருகிய நிலையில் வேல்முருகன் அளித்துள்ள இந்த வாக்குமூலம் கண்களை குளமாக்குகிறது.
- தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டுள்ளார்.
- தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக தகவல்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டம் உதவி மையம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததால் அந்த நபர் தீக்குளித்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தீக்குளித்த நபர் படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது.
- முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நபர் பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்துள்ளார்.
இது தொடர்பாக டி.வி. சேனல் ஒன்று கூறும்போது, "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கை நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் கூறிய பின்னர் அந்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் கீழத்தெருவை சேர்ந்தவர் கலீல் ரகுமான் (வயது 58). இவர் வீட்டருகே எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி, மகன் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.மகள் மற்றும் மருமகனுடன் வசித்து வந்தார். கடந்த 17-ந்தேதி இவர் நடத்தி வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையை மூடி விட்டார்.
இதனால் அவர் மனம் உடைந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மகள் மற்றும் மருமகன் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது.பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது கலீல் ரகுமான் சமையலறையில் தீயில் கருகி கிடந்தார்.அவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்ப டுகிறது.
இது குறித்து அவரது மகள் இர்பானா பர்வீன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து கலீல் ரகுமான் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருந்ததி படத்தில் கதாநாயகி எதிரியை பழிவாங்க மறுபிறவி எடுப்பதுபோன்று காட்சி இடம்பெற்றிருக்கும்.
- அருந்ததி படத்தை குறைந்தது 15-20 முறையாவது ரேணுகாபிரசாத் பார்த்திருக்கலாம் என அவரது உறவினர் தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் 'அருந்ததி' பட பாணியில் மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா, கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத் (வயது 23). திரைப்படங்களுக்கு அடிமையான இவர் பியுசி முதல் ஆண்டு முடிந்ததும் படிப்பை நிறுத்தி உள்ளார். அவருக்கு பிடித்த திகில் படங்களை அதிக அளவில் பார்த்துள்ளார். குறிப்பாக, கடந்த சில தினங்களாக தெலுங்கில் பிரபலமான 'அருந்ததி' திரைப்படத்தை பலமுறை பார்த்துள்ளார். அந்த படத்தில், கதாநாயகி தன் சுயவிருப்பத்தால் இறந்து, எதிரியை பழிவாங்க மறுபிறவி எடுப்பதுபோன்று காட்சி இடம்பெற்றிருக்கும்.
அதேபோன்று தானும் சுய விருப்பத்தால் முக்தியடைந்து மறுபிறவி எடுத்து பணக்கார குடும்பத்தில் பிறக்க முடியும் என்று நம்பி உள்ளார். இதுபற்றி தன் குடும்பத்தினரிடமும் கூறியிருக்கிறார். குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை வழங்கி, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஊருக்கு வெளியே சென்ற ரேணுகாபிரசாத், தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற சிலர் இதனைப் பார்த்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் ரேணுகாபிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் 60 சதவீத தீக்காயம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் அவர் குடும்பத்தை மட்டுமின்றி அந்த கிராமத்தையே உலுக்கி விட்டது.
தீக்குளித்த பின்னர் அவர் தன் தந்தையை விரைவில் முக்தி பெறும்படி கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவர் முக்தி பெற்று மறுபிறவி எடுக்கமுடியும் என்ற மூட நம்பிக்கையில் தீக்குளித்திருக்கலாம். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுபற்றி அவரது நெருங்கிய உறவினர் ராஜு கூறும்போது, 'அருந்ததி படத்தை குறைந்தது 15-20 முறையாவது ரேணுகாபிரசாத் பார்த்திருக்கலாம். படத்தில் காட்டப்படும் சில திகில் காட்சிகளில் அவன் வெறித்தனமாக இருந்தான். அவன் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, திரைப்படங்களுக்கு அடிமையானதால் அவன் உயிர் பறிபோய்விட்டது' என்றார்.
- கிருஷ்ண குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கனகவள்ளிக்கு தெரியவந்தது.
- இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கனகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்
திருச்சி :
திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை பெல்சி கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கனகவள்ளி (25) இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கனகவள்ளிக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டு ஆத்திரத்தில் கிருஷ்ணகுமார் மனைவி கனகவள்ளியை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கனகவள்ளி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த கனகவள்ளி ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கனகவள்ளி பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கணவன் கிருஷ்ணகுமார் மீது தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர்.
- மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊஞ்சப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி . இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் சுந்தராம்பாள், மகள் மகாலட்சுமி மற்றும் பேத்தி சவுரபி ஆகியோருடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது திடீரென தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்களுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்று வருகின்றனர் .இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு நீதி வேண்டும் என கோரியிருந்தனர்.மனுவைப்பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்