search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல்"

    • சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதிகாரிகள் வருவதை அறிந்த கும்பல் டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டுவிட்டு தப்பியது.

    தாராபுரம் :

    தாராபுரம் பைபாஸ் ரோட்டில் வீரராகவபெருமாள் கோவில் அருகே அமராவதி ஆற்றையொட்டி உள்ள தனியார், அரசு புறம்போக்கு இடத்தில் சட்டவிரோதமாக செங்கல் சூளைக்கு மண் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ., குமரேசன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த, அவர்கள் மண்ணை கொட்டி விட்டு மண் எடுக்கப்பட்ட டிப்பர் லாரி, பொக்லைன் ஆகியவற்றை விட்டு விட்டு கும்பல் தப்பியது.சட்டவிரோதமாக மண் எடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 டிப்பர் லாரி, 2 பொக்லைனை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் இருந்து, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி வழியாக காவிரியில் தண்ணீர் கலந்து வருகிறது. இந்த ஆற்றில், காங்கயம், கம்புலியாம்பட்டி, கோவில்பாளையம், மயில்ரங்கம், மணலூர், சங்கரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. கடந்த சில வாரங்களாக அமராவதி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் சென்றது. இதனால் , ஆற்றில் மணல் குவியலாக ஆங்காங்கு பரவியிருந்தது.தற்போது, குறைந்த அளவில் தண்ணீர் வரத்து உள்ளது. இதை மணல் திருடர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு கைவரிசை காட்ட துவங்கியுள்ளனர். வேலப்பநாயக்கன்பட்டி ஊராட்சி, மயில்ரங்கத்தில், ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் இரவு நேரத்தில் மர்ம நபர்களால் மணல் திருட்டு நடந்துள்ளது. எனவே உடனடியாக, மாவட்ட நிர்வாகம், போலீசார் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆறும் இணைந்து மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக தண்ணீர் கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இந்த ஆற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்பட்டது. தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .

    இவ்வாறு தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகேஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் புது உச்சிமேடு பகுதியில் சாக்குப் பையில் மணல்களை மூட்டை கட்டி மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலம் சமூகவிரோதிகள் ஆற்றில் மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டிராக்டரை பறிமுதல் செய்து உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
    • மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா செம்போடையை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சரிதா இவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிமணல் ஏடுத்தாகவேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்ஜெயராஜ் பவுலினுக்கு தகவல் கிடைத்ததுசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின்வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி, இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்று டிராக்டரை பறிமுதல் செய்தனர் புகாரின் போரில் டிராக்டர் உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்

    மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்றுபேரை தேடி வருகின்றனர்.

    • விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மேலம்பெரும்பள்ளம், தலச்சங்காடு, மருதம்பள்ளம், காளியப்பன் நல்லூர், அம்மன் ஆற்றுப்படுகை உள்ளிட்ட கிராமத்தை சுற்றி விவசாயத்தை பாழாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மணல்குவாரிகளை மூடக்கோரி மருதம்பள்ளத்தில் காத்திருப்பு போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.பி.எம். ஒன்றிய செயலாளர்கள் மார்க்ஸ், ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் சுதாமன், ஒன்றிய துணை தலைவர் ராமலிங்கம், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

    மண்வளத்தை நாசமாக்கும், நல்ல தண்ணீரில் உப்பு நீர் புகுவதையும் தடுத்திட வேண்டியும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அரசு அறிவித்தும் விவசாயநிலங்களில் மணல் குவாரி அமைப்பதை தடுக்ககோரியும், மணல் குவாரிகளை மூடகோரியும் முழக்கமிட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பொதுக்கூட்டமும், கீழமுக்–கூட்டிலுள்ள வரத ராஜன் நினைவரங்கில் மயிலாடுதுறை மாவட்ட 30-வது மாநாடு தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.

    2-வது நாள் மாநாட்டில் தலைமைக்குழு தேர்வுக்கு பிறகு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நாகையா கொடியினை ஏற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் மேகநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் டி.சிம்சன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியிமாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

    அரசியல், ஸ்தாபன, வேலையறிக்கையை மாவட்ட செயலாளர் துரைராஜ், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் வைரவன் ஆகியோர் வாசித்தனர். விவாதங்கள், தொகுப்புரை, புதிய கமிட்டி தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வுக்கு பிறகு மாநாட்டு தீர்மானங்களை மாவட்ட துணை செயலாளர் ராயர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இளங்கோ வன், ராமலிங்கம் ஆகியோர் முன்மொழிந்தனர்.

    வைக்கோலை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கும் தொழிற்சா லையை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்க வேண்டும். வேளாண் கல்லூரி, மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும், நடமாடும் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும் மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களை எடுப்பது, ஓ.என்.ஜி.சி. கெயில் குழாய்கள் பதிப்பது போன்ற திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் மணல் குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மாநாட்டை வாழ்த்தி பேசினர். பொருளாளராக செல்லப்பா, துணைத்தலை வர்களாக வைரவன், குணசுந்தரி, துணை செயலா ளர்களாக இளங்கோவன், மேகநாதன் உள்ளிட்டோர் அடங்கிய 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் தேர்வு செய்ய ப்பட்ட புதிய நிர்வாகிகளை அறிவித்து மாநில செயலாளர் சாமி நடராஜன் நிறைவுரை யாற்றினார். இறுதியாக வரவேற்புக்குழு செயலாளர் கே.பி.மார்க்ஸ் நன்றி கூறினார்.

    • நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.
    • தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் மருதம்பள்ளம், கிடங்கல், மேலப்பெரும்பள்ளம் சித்தாம்பாடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பகுதி–களில் மணல் குவாரிகள் இயங்கி வருகிறது.

    இதனால் சுற்றி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருவதாகவும், விவ–சாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டது.

    இந்த குவாரிகளை மூட வலியுறுத்தியும், மேலும் இப்பகுதியில் தார் பிளாண்டு இயங்குவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு பொதுமக்களுக்கு நோய் தொற்று உருவாகும் அபாய நிலை உள்ளதால் உடனடியாக அவற்றை மூட வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடை–பெற்றதுவிவசாய சங்க ஒன்றிய செயலாளர் சண்மு–கம் தலைமையில் நடை–பெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சரவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கருணாநிதி, முனுசாமி உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த செம்பனா ர்கோயில் இன்ஸ்பெ க்டர் செல்வி, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு–வார்த்தை நடத்தி னர். பேச்சுவா ர்த்தையில் தாசில்தார் விதிமுறைக–ளுக்கு எதிராக செய ல்படும் குவாரிகளை மூட நடவ–டிக்கை எடுத்ததால் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சாலை மறியல் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சீர்காழிநா கப்பட்டினம் தேசிய நெடுஞ்சா லையில் ஒரு போக்கு வரத்து பாதிக் கப்பட்டது.

    • மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆறுகளை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரெயிலடியில் இன்று ஏ .ஐ. டி. யூ .சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாவட்டத் தலைவர் சேவையா, மின்வாரிய சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய சங்கத்தலைவர் முத்து உத்திராபதி நன்றி கூறினார்.

    • அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்டப்பட்டும், மனவேதனையுடனும் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருந்து கொண்டிருக்கிறோம்.
    • மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணாக்கு வாங்க கூட பணம் இல்லாமல் பராமரிப்பு இன்றி கால்நடைகள் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறைஅடுத்து மணல்மேடு பகுதி திருவா ளப்புத்தூர் மாட்டு வண்டி ஓட்டுனர் சங்கத்தினர் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில், நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க மனு கொடுத்து வருகிறோம். அனுமதி வழங்காததால் தொழிலாளர்கள் கஷ்ட ப்பட்டும், மனவேதனையு டனும் போதிய வருமா னம் இல்லாமல்வறுமை யில் இருந்து கொண்டிரு க்கிறோம். மாடுகளுக்கு பருத்தி தீவனம் புண்ணா க்கு வாங்கி கூட பணம் இல்லா மல் பராமரிப்பு இன்றி கால்ந டைகள் சிரமப்பட்டு கொ ண்டிருக்கிறது. எங்களுடைய வாழ்வா தாரமே கேள்வி க்குறியாகி உள்ளது. எனவே மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம்
    • வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்

    கன்னியாகுமரி :

    காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த 100 ஆண்டுகளாக மணல் ஆலைகள், கடற்கரையிலிருந்து கனிமங்கள் அள்ளியதால் கடலோர கிராமங்கள் கடல் அரிப்பால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 200 மீட்டர் கடற்கரை கடலுக்குள் மூழ்கி விட்டது. கடலோர மக்களின் குடியிருப்புகள் பல ஊர்களில் அழிந்துவிட்டது.

    கடற்கரை மணலை அள்ளுவதால் ஏற்படுகின்ற கதிரியக்கப் பாதிப்புகளால் கடலோர மக்கள் மட்டுமல்லாமல் கடற்கரை கிராமத்தின் அருகில் உள்ள விவசாய மக்களும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் இயற்கை அரணாக இருக்கும் மணல் குன்றுகளை அழிப்பதால் தென்னகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடல்நீர் உட்புகுந்து விவசாயமும் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணமான மணல் ஆலை மணல் அள்ள அனுமதிக்கக்கூடாது என்று குமரி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக அரசு கடலோரங்களில் மணல் அள்ள குறும்பனை முதல் நீரோடி வரையுள்ள கீழ்மிடாலம், மிடாலம், இனையம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களிலுள்ள 1,144 ஹெக்டேர் நிலங்களில் மணல் அள்ள அனுமதி வழங்கியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். மக்களைப் பிரித்தாள வேண்டும் என்ற கொள்கையுடன் மத்தியில் ஆளுகின்ற பாரதிய ஜனதா அரசும் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.

    எனவே குமரி மாவட்ட கடற்கரையையும் விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் இந்திய மணல் ஆலைக்கு மணல் அள்ள வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
    • அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு ஊராட்சி ராஜேந்திரன் வாய்க்காலையொட்டி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் மணலை அள்ளி தனியார் செங்கல் சூளைக்குக்கும் தனியாருக்கும் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணலை அள்ளுவதால் சுற்றியுள்ள மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, குரங்குபுத்தூர், கருவி, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடிநீர் உப்பு நீராவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் இமயம் சங்கர், கிளைச் செயலாளர் வீரகுமார், பொறுப்பாளர் விஜயபாலன், திமுக கிளை செயலாளர் பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மீண்டும் மணல் எடுத்ததால் ஆக்கூர் முக்கூட்டு வழயாக வந்த லாரிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. மணல் குவாரிகளை வலியுறுத்தப்பட்டது.

    • சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • குவாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பள்ளம் அருகே சித்தம்பாடி கிராமத்தில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மணல் கொள்ளையடிக்கும் மணல்குவாரியை விவசா யிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர்.

    செம்பனார்கோவில் ஒன்றியம், மருதம்பளம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம், கிடங்கல், நத்தம் ஆகிய பகுதிகளில் 5 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகின்றது.சட்டவிதிகளை மீறி 20 அடி ஆழத்திற்கும் மேல் மணல் மற்றும் சவுடு மண் தோண்டி எடுப்பதால் அப்பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குவாரிகளின் நடவடி க்கைகளை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் கணிமவளத்துறை அதிகாரிகளோ லஞ்சத்தை பெற்றுக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் உள்ளனர்.இதனிடையே மருதம்பள்ளம் சித்தம்பாடி கிராமத்தில் சாரங்கம் ஆசாரி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது.இதுவரை 20 அடி ஆழத்தையும் தாண்டி மண் எடுத்ததால் நீர் சுரந்து ஏரிப்போன்று அப்பகுதி காணப்படுகிறது. அந்த குவாரியை மூடக்கோரி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம், தலைவர் தெட்சிணாமூர்த்தி, பொருளாளர் பன்னீர்செ ல்வம், சிபிஎம் ஓன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் மற்றும் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்ப ட்டனர். சித்தம்பாடி குவாரியால் சுற்றியுள்ள விளைநிலங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், குவாரியை யொட்டியுள்ள பயிரி டப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்கள் முறையாக வளராமல் உள்ளதாகவும்.

    தொடர்ந்து இப்பகுதியில் மணல் குவாரிகள் செயல்ப ட்டால் வழக்கமாக பயிரிட ப்பட்டு வந்த நிலக்கடலை, பருத்தி, நெல் ஆகியவற்றை கைவிட்டு விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய அபாய நிலை ஏற்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் யூ.சண்முகம் கூறியதோடு பாதுகாக்கப்பட்டவேளாண் மண்டலம் என அறிவித்து விட்டு திரும்பும் திசையெ ல்லாம் குவாரிகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. நான்கு வழிச்சாலை பணிக்காக இப்பகுதியில் ஏராளமான குவாரிகள் செயல்பட அனுமதியளித்துள்ள கணிம வளத்துறை இதைப்ப யன்படுத்தி சட்டவி ரோதமாக செயல்படும் குவாரிகளுக்கும் அனுமதிய ளித்திருக்கிறது.

    இப்பகுதியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலை விலேயே கடற்கரை உள்ளதால் மணல் குவாரிகள் அதிகளவு ஆழத்தை தோண்டுவதால் விவசாய பகுதிகளில் உப்புநீர் புகுந்து வருவதால் சுமார் ஆயிரம் ஏக்கம் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விவசாயம் கடுமையாக பாதிக்கிறது. என்றார். உடனடியாக சித்தம்பாடி குவாரியை மூடவில்லையெனில் போரா ட்டங்களை நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.

    • கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு வலியுறுத்தல்
    • மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது.

    நாகர்கோவில்:

    கடலோர வளர்ச்சி மற்றும் அமைதி குழு இயக்குனர் டன்ஸ்டன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய வகை மணல் ஆலை நிறுவனம் இயங்கி வருகிறது. கடலோரப் பகுதிகளில் கனிம மணல் அள்ளுவதால் கடல் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கடற்கரை கிராமங்கள் கடலுக்குள் மூழ்கும் நிலை உள்ளது. கடலரிப்பு தடுப்புச்சுவர் மற்றும் தூண்டில் வளைவு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    ஆனால் அதே சமயம் நீண்ட கடற்கரையை இயற்கையாக பெற்றிருந்த குமரி மாவட்டம் அதை இழந்துவிட்டது. கடற்கரை மணல் அகழ்வு நடப்பதால் கதிரியக்கம் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோயால் கடற்கரை மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

    மணல் ஆலைக்கு அருகில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் ஆண்டிற்கு ஏறக்குறைய 100 பேர் புற்றுநோய்க்கு உயிரிழந்து வருகிறார்கள். எனவே கடலரிப்பு மற்றும் கதிரியக்க பாதிப்புகளை உருவாக்கும் மணல் ஆலையை உடனே மூடவேண்டும். இதை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக அரசு மணல் ஆலை நிறுவனத்துக்கு கீழ்மிடாலம், மிடாலம், இனயம் புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து 1144 ஹெக்டேர் நிலப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதி மக்களிடம் எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் இந்த அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.

    மக்களிடம் கருத்து கேட்டு இருந்தால் நாங்கள் குறைகளை தெரிவித்து இருந்தி ருப்போம். எனவே சுற்றுச்சூ ழலுக்கும், மக்கள் உயிருக்கும், கடற்கரை கிராமங்க ளுக்கும் அழிவை ஏற்படுத்தும் மணல் அகழ்வு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அதன் பிறகும் அனுமதியை ரத்து செய்யவில்லை எனில் மாவட்ட அளவில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பங்குதந்தை சூசை ஆன்டனி, மீனவர் பிரதிநிதிகள் பிரான்சிஸ், சேவியர் மனோகரன், மரிய தாசன், மெர்பின் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×