search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228109"

    • தோகைமலை அரசுபள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது

    தோகைமலை:

    தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை வளர்மதி பேரணியை தொடங்கி வைத்தார். திருச்சி மெயின் ரோடு, குளித்தலை - மணப்பாறை மெயின்ரோடு, கடைவீதி, தோகைமலை பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில், மனித நேயம் காப்போம், ரத்த தானம் கொடுப்போம், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் கொடுக்க உறுதிமொழி ஏற்போம் என பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு, கையில் பதாகைகளை ஏந்தி, மாணவ, மாணவியர் சென்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில், முசிறி தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் பங்கேற்று பேசினர்.


    • கால்நடை பராமரிப்புதுறை சார்பாக
    • வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ேபரணி நடைபெற்றது

    கரூர்,

    குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.முகாமை குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தொடங்கி வைத்தார், மேலும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகளில் கல்லூரி மாணவிகள், குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, தொடர்ந்து குளித்தலை மணதட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுகிடையே வெறிநோய் தடுப்பூசி, வெறி நோய் பரவுவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது,நிகழ்ச்சியில் குளித்தலை நகர் மன்ற கவுன்சிலர் சையத் உசேன், நகர் மன்ற அலுவலர் கோவிந்தராஜ், நகர்மன்ற மேலாளர் சிவலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோஷங்கள்எ ழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் வாக்குரிமை நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தேர்தல் தனி தாசில்தார் ரஜினி, ஒருங்கிணைப்பாளர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

    • ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரோஸ் அலெக்சாண்டர், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, வி.ஏ.ஓ. வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் செல்லகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது எனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு நோட்டு வாங்க மாட்டோம், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் முழக்கங்கள் செய்தவாரே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா நன்றி கூறினார்.

    • கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
    • எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.பேரணிக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசினார். பேரணியானது கல்லூரியில் துவங்கி அண்ணா சிலை, நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்களை எம்.எல்.ஏ. வாசிக்க பின் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தில் சில குடும்பங்கள் படும் அல்லல்கள் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை வடிவேல், கணினி துறை கார்த்திகேயன், வணிகவியல் துறை சக்திமுருகன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீசார் மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.

    • சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.
    • தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.

    சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்ககிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வி.என்.பாளையம், பட்டறைமேடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பவானி மெயின் ரோடு, பச்சக்காடு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் தலைக் கவசம் அணிவதின் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்குவரத்து), எஸ்.ஐ.க்கள் ஸ்ரீராமன், ராமச்சந்திரன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதன்மை மேலாளர், பொதுஜன தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர்- புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில் மாசில்லா தஞ்சாவூர்-புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். அரண்மனை வளாகத்தில் பேரணி முடிவு அடைந்தது.

    முன்னதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்.

    தேவையில்லாத பொருட்–களை எரிக்க கூடாது.

    மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

    மீறி விற்பனை செய்தால் போலீசார் மூலம் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பேரணியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், டாக்டர்கள் சிங்காரவேலு, ராதிகா மைக்கேல்,

    இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட கிளை சேர்மன் டாக்டர். வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நக ராட்சி சார்பில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட பொது மக்களை அறிவுறுத்தும் வகையில் வாலரைகேட் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் மகாதேவ வித்யாலயா பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி பொறியாளர் சண்முகம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி

    ராஜவேல், தாமரைச்செல்வி, மணிகண்டன், சினேகா ஹரிகரன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, செல்லம்மாள் தேவராஜன், முருகேசன் சுரேஷ்குமார், மற்றும் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் துப்புரவு ஆய்வாளர் குமரவேல், மகாதேவா, வித்யாலயா பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மற்றும்

    மாணவ-மாணவியர்கள், துப்புரவு பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
    • 50-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    கோவை

    தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகிப்பண்டிகையன்று தேவையற்ற பொருட்களை எரிப்பதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு பொதுமக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த அறிவுறுத்தியு ள்ளது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பொதுமக்களிடையே புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மேட்டுப்பாளையம் நகர்மன்றத்தலைவர் மெஹரீபா பானு அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷமிட்டும் ஊர்வல மாக சென்றனர். மேட்டுப்பா ளையம் நகராட்சி பொறியாளர் சோமசு ந்தரம், சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன், மேற்பார்வையாளர் மணி மற்றும் பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தடையை மீறி பேரணி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
    • வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    கரூர்:

    வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூரில் ஆண்டுதோறும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் சைக்கிளில் பேரணியாக சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம். அப்போது அந்த கழகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியவாறு செல்வார்கள்.

    அந்த வகையில் இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் இன்று கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு சைக்கிள் பேரணி செல்ல ஏற்கனவே போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் அளித்து இருந்தனர். இதற்கிடையே கரூரில் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் விதித்துள்ள தடை தற்போது வரை அமலில் இருந்து வருகிறது.

    இருந்தபோதிலும் இன்று காலை வழக்கம் போல் சைக்கிள் பேரணி செல்வதற்காக வீரபாண்டியன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் தாலுகா அலுவலகம் அருகில் திரண்டனர்.

    முன்னதாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பேரணியாக செல்ல முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தடையை மீறி பேரணி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால் இளைஞர்கள் தொடர்ந்து பேரணி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது. வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இதையடுத்து தாலுகா அலுவலகம் முதல் பஸ் நிலையம் வரை 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் சில மணி நேரம் பதட்டம் நிலவியது.

    • சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை, சங்ககிரி அரசு மருத்துவமனை மற்றும் விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி மாணவிகள் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    இப்பேரணியை சங்ககிரி பேரூராட்சி தலைவர் மணிமொழி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்டில் தொடங்கி புதிய இடைப்பாடி சாலை வழியாக சென்று சங்ககிரி அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் திருமா வளவன் முன்னிலையில் சமப்படுத்துதல் என்ற

    உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடியில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய ஸ்டால் நிறுவப்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான்சேட், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் அருண்பிரபு, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், சங்ககிரி அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கோபால், ஆய்வுகள் நுட்பனர் சீனிவாசன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், பேரூர் துணை செயலாளர் ரமேஷ், கல்லூரி மாணவிகள், சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுது அறக்கட்டளை திட்ட மேலாளர் மரியாள், களப்பணியாளர்கள் சசிரேகா, திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்ட திருநங்கைகள் சங்கம் சார்பாக மேட்டூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணி, அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தொழில் பயிற்சி வளாகத்தை வந்தடைந்தது.

    பேரணியை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, எய்ட்ஸ் நோய் பற்றி தேவையான ஆலோசனைகளை வழங்க மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் உள்ளது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

    நிகழ்ச்சியில் மேட்டூர் நகர மன்ற தலைவர் சந்திரா, மேட்டூர் நகர பா.ம.க செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமுதா, நகர வன்னியர் சங்க பொறுப்பாளர் ரமேஷ், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×