என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மஞ்சப்பை"
- மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.
- எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்:
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகளின் நிதிஉதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.
இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன்முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.
இந்த எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கூறும்போது, "ரூ.1, 2, 5 புதிய நாணயம் மற்றும் 10 ரூபாய் நோட்டை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.
- பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
- பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நீலாம்பூர்:
தீபாவளி பண்டிகையை ஒட்டி சூலூர் புறநகர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, கரூர் பகுதிகளுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தீபாவளிக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக பொதுமக்கள் பஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.
அவர்கள் எளிதாக சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகாமல் எளிதாக செல்வதற்காக போக்குவரத்து துறையினர் பஸ் செல்லக்கூடிய வழித்தடங்களையும் தொடர்ந்து ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலும் அனைத்து பணிகளுக்கும் இருக்கைகள் கிடைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சிரமம் இன்றி பஸ்கள் கிடைக்கிறது. மேலும் சிங்காநல்லூர் பஸ் நிலையம் செல்லாமல் புறநகரில் இருந்து செல்வது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு எதுவாக இருக்கிறது என்றனர்.
இதற்கிடையே முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூலூரில் இருந்து திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணித்த பயணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
- நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது.
- தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் தூய்மை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டு ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர், துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, நூல் நிலையம் மற்றும் சேவை மையம் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களிலும் மேற்கூரைகளிலும் தூய்மை பணி நடைபெற்றது
ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் திடக்கழிவு மேலாண்மை மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரித்து அளிக்க கேட்டுக் கொண்டதோடு சுற்றுப்புறத் தூய்மை உடல் நலக்கு நன்மை பயக்கும் திறந்த நிலையில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக முற்றிலும் மாற வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் கழிவறையை பயன்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும். 2025ம் ஆண்டில் தற்பொழுது தேவைப்படும் நீரை விட 2 மடங்கு வேளாண்மைக்கும், 7 மடங்கு தொழிற்சாலைகளுக்கும் தேவைப்படும்
இதனால் ஐம்பது சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஒவ்வொருவரும் கடைக்கு செல்லும் பொழுது தமிழக முதல்அமைச்சரின் உத்தரவுபடி மஞ்சப்பை எடுத்துச் செல்ல வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் கேரி பேக்கை முற்றிலும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
துணைத் தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், முத்துக்குமார், அப்பு, வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அமைச்சா் ராமசந்திரன் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
- நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது.
இதில் வனத்துறை அமைச்சா் ராமசந்திரன் பங்கேற்று வீட்டுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆனந்தகுமாா், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தன்.
நிகழ்ச்சியில் அமைச்சா் ராமசந்திரன் பேசியதாவது:-நீலகிரி மாவட்டத்தில் 99,000 மஞ்சப்பைகள் விநியோகிக்க திட்டமிடப்பட்டு, இதனை மாவட்ட நிா்வாகமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.
இவை உள்ளாட்சி அமைப்புகள் மூலமும், பிறதுறைகள் மூலமும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்பட உள்ளது. நெகிழி இல்லா நீலகிரி மாவட்டமாக தொடா்ந்து நீடிக்க அனைத்து துறை அலுவலா்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, நகா்மன்ற தலைவா்கள் வாணீஸ்வரி, ஷீலா கேத்ரின், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளா் லிவிங்ஸ்டன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இப்ராகீம் ஷா, உதகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் மனோகரி, ஊட்டி நகராட்சி ஆணையா் காந்திராஜன், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் மாயன், சுனிதா நேரு, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுகந்தி பரிமளம் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்ட கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரைப்படி மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகி றது. அதன்படி மதுக்கூர் அருகே ஆலத்தூரில் ஊராட்சி மன்றதலைவர் ஜோதிலட்சுமி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் 250- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், ஊராட்சிசெய லாளர், வட்டார ஒருங்கி ணைப்பாளர், சுகாதார ஊக்குனர்,தூய்மை காவல ர்கள் கலந்து கொண்டு பிளா ஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது, மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். மேலும் பட்டுக்கோட்டை விதைகள் அமைப்புசார்பில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்ப ட்டது.
- கோயம்பேடு மார்க்கெட்டில் மஞ்சப்பை விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது.
- தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது.
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் அதற்கு மாற்றாக துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடம் அதிகரிக்க செய்யும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க வியாபாரிகளுடன் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் கோயம்பேடு மார்க்கெட்டில் 'மஞ்சப்பை' விற்பனை செய்யும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரத்தில் 10 ரூபாய் நோட்டு, நாணயம் செலுத்தினால் 'மஞ்சப்பை' பெற்றுக்கொள்ளலாம்.
கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள தானியங்கி 'மஞ்சப்பை' விற்பனை எந்திரத்தை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மேலும் அதன் அருகிலேயே உபயோகிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை போடுவதற்கு தனியாக மற்றொரு எந்திரமும் வைக்கப்பட்டு உள்ளது. அதனையும் அவர் திறந்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்