search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228973"

    • 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும்.
    • சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்ப ட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச் சாலை அமைக்கப்ப டுகிறது.

    இதற்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப் படுத்தப்படுகின்றன.

    வடக்கு தெற்க்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும் இதன் காரணமாக மேலமங்க நல்லூர் கழனிவாசல் வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் என்றும் பல கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் அப்புறப்படுத்தக்கூடிய நிலைமை உருவாகி உள்ளதாகவும் இதனை தவிர்க்க இப்பகுதியில் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டி தர வேண்டும் என்றும், சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதற்காக நூற்றுக்கு மேற்பட்ட மனுக்களின் நகல்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொ டியுடன் கழனிவாசல் வயல்வெளியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    தங்களது கோரிக்கை நிறைவேற்ற படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் விவசாயி சம்பந்தம் கூறுகையில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் பயிர்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இதனை அழித்து சாலை அமைப்பதால் பெரும் வரலாற்று பிழை ஏற்படும்.

    இங்கே உள்ள தத்தங்குடி கிராமத்தில் தான் நெல் ஆராய்ச்சி நிலையம் வைக்க முற்பட்டது விவசாயம் பாதிக்கப்படும் என்பதால் ஆடுதுறையில் மாற்றியமைக்கப்பட்டனர்.

    எனவே மத்திய மாநில மாவட்ட அரசுகள் இப்பகுதியில் மாற்று அமைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் விவசாயம் அழிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டாம் என அப்பகுதி விவசாயிகளின் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

    • தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளனர் என்பது அவர்களிடம் நடத்த ப்பட்ட பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயத்தில் 17 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 177 பேர் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் காப்பக மீட்பு குழுவினர் விஜயா, சுபா, சரவணன், சங்கர், மைக்கேல் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணை தலைவர் சிவக்குமார், முத்துப்பேட்டை வர்த்தக சங்க கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பத்திரிக்கையாளர் முகைதீன் பிச்சை, வக்கீல் தீன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியோர் இணைந்து முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு
    • தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30-க்கும் மேல் உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    31 பேர் பாதிப்பு

    சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாவட்டம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மொத்தம் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயத்தில் நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    முக கவசம்

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். கொரோனா பரவல் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    • ஆண்கள் 8 பேரும் பெண்கள் 16 பேரும் ஒரு குழந்தையும் பாதிப்பு
    • ஆண்களை விட பெண்களே தற்பொழுது அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 8 பேரும் பெண்கள் 16 பேரும் ஒரு குழந்தையும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களே தற்பொழுது அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    • மீண்டும் பாதிப்பு தலைதூக்கி உள்ளது

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது 2 மாவட்டங்களிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்க தொடங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 பேரும் வீட்டு தனிமையிலும், அரியலூர் மாவட்டத்தில் 3 பேரும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

    • கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
    • அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்

    . விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.   அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    • சரக்கு ஆட்டோ நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு
    • மீன் வியாபாரம் காரணமாக அப்பகுதியில் நாள் தொல்லை அதிகரிப்பு

    திருமானூர்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் விற்கப்படுகிறது.இதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மேலும் மீன்களின் கழிவுகளை சாலையின் ஓரங்களில் கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன் நாய்களின் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
    • நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்படியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படியும், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் ஆன மீட்பு குழுவினர் விஜயா, சக்திபிரியா, சரவணன், பாலா ஆகியோர் அனைவருக்கும் உரிய முன்னறிவிப்பு கொடுத்த பிறகு நேரில் சென்று நீண்ட நாட்களாக புகையிலை, மது பழக்கத்தினால் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிவதுடன் பொதுமக்க ளுக்கும் தொந்தரவும் இடையூறும் செய்து கொண்டிருந்த மூன்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மீட்டெடுத்து நம்பிக்கை மனநலக் காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.முதலில் என்கன் ஊராட்சிக்கு சென்று மது அருந்தி மனநலம் பாதிக்கப்பட்ட குமரவேல் என்பவரை குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டனர்.

    இதேப்போல் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை முன்னிலையில் திருவாரூர் பைபாஸ் ரோட்டில் முகவரி தெரியாத மனநல பாதிக்கப்பட்டவரையும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.இப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை சந்தித்து உரிய ஆவணம் பெற்று மூன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
    • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • வார சந்தை சாலையோரத்தில் நடைபெற்றதால் பாதிப்பு
    • மாற்று இடம் வழங்காததால் குழப்பம்

    அரியலூர்

    அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பஸ் நிலையம் இடிக்கப்படும் என்பதை அறிந்த பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் சென்னை நீதிமன்றத்தில் வருகிற 15-ந் தேதி வரை இடிப்பதற்கு தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் கடைக்காரர்களிடம் நகராட்சி சார்பில் மார்ச் மாதம் வாடகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தையானது நேற்று முன்தினம் திடீரென நகராட்சியில் இருந்து இவ்வாரம் வார சந்தை செயல்படாது எனவும், இடிக்கப்படும் எனவும் அறிவித்தனர். உரிய காலத்தில் அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு கடை போட வந்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வார சந்தை செயல்படாது என தெரிந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் முறையிட்டனர். சந்தை இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தைக்கான குத்தகை இம்மாத இறுதிவரை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. சந்தைக்கும் இடம் எங்கே என தெரியவில்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடமும் எங்கே எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வந்திருந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.
    • அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    மத்திய அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ தொழிலாளர் சங்கம், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆகியவை அடங்கிய சி.ஐ.டி.யூ. சார்பில் 15 நிமிடம் அனைத்து வாகங்களையும் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணைச்செயலாளர் நபி, மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் பாஸ்கர், மனோகரன், அப்துல் ஹமீது, சுல்தான், நவாஸ்கான், புரோஸ்கான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×