search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • மலர்களால் சிறப்பு அலங்காரம் தீபாராதனை
    • பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    கரூர்,

    கரூர் காகிதபுரம் குடியிருப்பில் காசி விஸ்வநாதர் கோவிலில், பிர தோஷத்தை ஒட்டி, நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகை யான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப் பட்டு தீபாராதனை நடந்தது. நன்செய் புகழூர் மேகபாலீஸ் வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திர வியங்களால் அபிஷேகம் செய்யப் பட்டது. பின், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண் பிக்கப்பட்டது. க்தர்கள் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்
    • அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு நடைபெற்றது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி பல்லவராயன் பத்தையில் உள்ள அங்காளம்மன் மற்றும்வலம்புரி விநாயகர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுப்பட்டி பல்லவராயன் பத்தை மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் உள்ள கோட்டைக்காடு கன்னியான்கொல்லை, கடு க்காக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் விநாயகர் கோயிலி ல் இருந்து முளைப்பாரியை தலையில் சுமந்து வந்தனர். மேள தாள இசை முழக்கத்தோடு வந்த இந்த ஊர்வம்அங்காளம்மன் கோயில் வந்தடைந்தது. அங்கு குதிரை நடனத்துடன் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது.
    • நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் நடைபெறும். இந்த ஆட்சிமொழி சட்ட வார விழாவை வரும் 9-ந் தேதி திருப்பூர் நஞ்சப்பா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணிக்கு கலெக்டர் வினீத் தொடங்கி வைக்கிறார். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. இதேபோல் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது
    • மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, துணை தலைவி வேதநாயகி, ஆசிரியர்கள் அலெக்ஸாண்டர், கண்ணன், ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.

    அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா, செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் தேசிய அறிவியல் தினம் குறித்து உரையாற்றினர். மாணவர்கள் அனைவரும் சர்.சி.வி.ராமன் முகமூடி அணிந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக அனைவரையும் ஆனந்தராஜ் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, நிவின், வெள்ளைச்சாமி, கௌரி, தனலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏற்பாடு
    • இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில், 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஜான் சலீவன் நினைவுநாளை கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாகவும், வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாகவும், அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், ஆ.ராசா எம்.பி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    பின்னர் இதுகுறித்து ஆ.ராசா எம்.பி தெரிவித்ததாவது:- முதல்-அமைச்சர் சென்ற ஆண்டு நீலகிரி மாவட்டத்தில், தொடக்க விழாவினை தொடங்கி வைத்து, இவ்விழா கொண்டாடுவதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிறைவு விழாவினையொட்டி புத்தககண்காட்சி, புகைப்படகண்காட்சி, குறும்பட போட்டி, திரைப்பட விழா, பழங்குடியின மக்களின் கலைநிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த வாரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது குறித்து மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் வரை தொடர்ந்து நடைபெறும். மேலும் இந்த 200-வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும் என முதல்-அமைச்சருக்கு கோரிக்கைகள் வைத்துள்ளோம் என கூறினார். மறைந்த ஜான் சலீவன் நினைவினை போற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவானது மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 108 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், இக்கூட்டத்தில், பந்தலூர் வட்டம் கையுண்ணி பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவர் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டையினை கேட்டு மனு அளித்ததை தொடர்ந்து, உடனடியாக பரிசிலனை செய்ய உத்தரவிட்டு, சம்மந்தப்பட்ட நபருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார். தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவினை முன்னிட்டு, குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சார்பில் உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ரூ.30 ஆயிரத்திற்க்கான வங்கி வரவோலையை கலெக்டரிடம் வழங்கினர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ெரயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    மது அருந்துவதன் மூலம் கல்லீரல் பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, குடும்பத்தில் பிரச்சினை, கடன் வாங்குதல், மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்டுவதன் மூலம் விபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். எனவே, மது அருந்துதல் மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, தங்களை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், உதவி ஆனையர் கண்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா நடைபெற்றது
    • கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது

    ராம்ஜிநகர்:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங் கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் நிறைவு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீரங்கம் தொகுதி சட்ட–மன்ற உறுப்பினர் எம.பழனி–யாண்டி கலந்து கொண்டார்

    ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி (பொறுப்பு), ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் குணசேகர், மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் கமலம் கருப்பையா, புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் பல் வேறு துறையை சார்ந்த அரசு அதிகாரிகள், பொது–மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் வருவாய்த்துறை சார்பில் 261 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு பண்ணை கருவிகள் மற்றும் விதைத்தெளிப்பான், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு–பான்மை நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு தையல் எந்திரம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

    தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் பாதுகாப்புத் துறை சார்பில் 2 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர் ஒன்று 60 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம் மற்றும் நல் வாழ்வுத்துறை ஒருங்கி–ணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துறை, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கால்நடை பாதுகாப்பு துறை ஆகிய துறைகளின் சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறையின் சார்ந்த பொருட்கள் காட்சிப்படுத் தப்பட்டன.

    மேலும் அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறை–யில் உள்ள சிறப்பு திட்டங் கள் மற்றும் மானியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.


    • திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது
    • நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது.

    புதுக்கோட்டை,:

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் பிற கோயில்களுக்கு சிகரம் வைத்தாற் போல திகழும் இக்கோவிலில் அம்மன் எழில்மிகு கோலத்தில் வீற்றிருக்கிறாள். சிறப்புமிக்க இக்கோவிலில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசியாக நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள் மற்றும் பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு முழுவதும் புதுக்கோட்டை மாலையீடு, ராஜகோபாலபுரம், டி.வி.எஸ்.கார்னர், சாந்தநாதபுரம் நான்காம் வீதி, பூங்காநகர், மச்சுவாடி, காமராஜபுரம், பிருந்தாவனம், வடக்கு 2ம் வீதி, நெய்கொட்டான்மரம், சமுத்துவபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர். அதே வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    • கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாயண போட்டி நிறைவு விழா நடைபெற்றது
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர்.

    கரூர்:

    கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் ராமாய–ணப் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. தேசிய காவி–யமான ராமாயணத்தை இன்றைய இளைய தலை–முறையினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக கட்டு–ரைப் போட்டி, கதை சொல் லுதல், நாடகம், மாறுவேடம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசி–ரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இம்மாபெரும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஸ்ரீசாரதா நிகேதன் மகளிர் கல்லூ–ரியில் நடைபெற்றது. இவ் விழாவை கல்லூரி செய–லர் யத்தீஸ்வரி நீல–கண்டப்ரியா அம்பா தொடங்கி வைத் தார்.

    சிறப்பு விருந்தினர்களாக சேரன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் பழனி–யப்பன், ஆன்மீக சொற் பொ–ழிவாளர் பிரியா சந்தானகி–ருஷ்ணன் கலந்து– கொண்டனர். விழாவில் ராமனின் பண்பு நலன் களையும், தனித்தன்மை–களையும் மாண–வர்க–ளின் மனதில் பதியும் வண்ணம் பிரியா சந்தா–ன–கிருஷ்ணன் சொற்பொழிவு ஆற்றினார்.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார். ராமாயண போட்டிகளில் அதிக மாண–வர்களை பங்கேற்கச் செய்த வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வெற்றி விநாயகா, லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி, சேலம் ஹோலி மதர், ஸ்ரீ விஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி–களுக்கு விருதுகள் வழங்கப் பட்டது.


    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நட்சத்திரக் கலை விழா நிறைவு நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
    • நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங் களின் சார்பாக நட்சத்தி–ரக்கலை விழா 3 நாட்கள் கோலாகமாக நடைபெற்றது. இதில் விழாவின் 3-ம் மற்றும் நிறைவு நாள் கொண்டாட்டம் நேற்று சினிமா பிரபலங்களுடன் நடைபெற்றது.

    இதனையொட்டி நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நட்சத்திரக்கலை விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சீனிவாசன் தலைமை தாங்கினார். விழா–வானது பாரம்பரிய கலை நிகழ்ச்சியான கரகாட்ட கலையோடு துவங்கப்பட் டது. செயலா–ளர் நீலராஜ், துணைத் தலைவர் அனந்த–லட்சுமி கதிரவன், இயக்கு–நர் மணி, ராஜபூபதி, நிதி அலுவலர் ராஜசேகர் ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர்.

    விழாவில் திரைப்பட பிரபலங்களான நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய், நடன இயகுனர் ராபர்ட், பாடகர்கள் கானா சுதாகர், பூவையார், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மணிமேகலை, அசார் ஆகியோர் கலந்துகொண்டு 20-க்கும் மேற்பட்ட பாடல் கள் பாடி, ஆடி மகிழ் வித்த–னர்.

    நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் அருண் விஜய் ஆகியோர் மாணவ, மாண–வி–களுடன் நடனம் ஆடி–யும், கலந்துரையாடியும் விழாவை சிறப்பித்தனர். பெரம்பலூர் சுற்று வட் டார பகுதியின் பொது–மக்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழு–மத்தைச் சேர்ந்த பொறி–யியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங் கல் லூரிகள், மருந்தியல் கல்லூரிகள், துணை மருத் துவ அறிவியல் கல்லூரி–கள், தொழில் நுட்பக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், உடற்கல்வி–யியல் கல்லூரி ஆகியவற்றில் பயிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாண–விகள் ஆடிப்பாடி மகிழந்த–னர்.

    • 8-ம் நாள் விழாவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், எழுந்தருளினர்.
    • இரவு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது

    இந்த நிலையில்நேற்று எட்டாம் நாள் திருவிழாவில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் எழுந்தருளினர்கள்பின்பு அர்த்தநாரீஸ்வரர் படி இறங்கி ராஜ நாராயண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    இரவு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி அப்பர் சம்பந்தர் சுந்தரருக்கு எழுந்தருளி காட்சி கொடுத்தார்பின்பு சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் மகர தோரணவாயில் உள்ள கதவிற்கு வெள்ளிகவசம் அமைத்துக் கொடுத்த சண்முகானந்தம் குடும்ப த்தினர் செய்திருந்தனர்.

    • கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு கருப்பண்ணசாமி, முத்து மாரியம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் விழா நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    திருச்சி:

    திருச்சி கண்டோ ன்மெண்ட் கான்வென்ட் ரோடு ராஜகணபதி, முன்னுடையான் ,மாசி சப்பாணி கருப்பண்ணசாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவில் 46-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 14-ந்தேதி இரண்டாவது மஞ்சள் காப்பு நிகழ்ச்சி நடந்தது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வீதி உலா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது.நேற்று (புதன்கிழமை)மாவிளக்கு பூஜை, கூழ்வார்த்தல் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று (வியாழக்கிழமை) ஒத்தக்கடை மந்தையில் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பண்ணசாமியை வழிபட்டு சென்றனர். நாளை( வெள்ளிக்கிழமை) அன்னதா னமும், 25-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறை யில் பூவிடும் விழா நடக்கிறது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு விளையாற்றி பூஜை நடக்கிறது.




    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
    • கோவில் மருளாளி பேச்சியம்மன் வேடமணிந்து வந்தார்

    மலைக்கோட்டை:

    திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் பூக்குளம் அங்காள பரமேஸ்வரி கோவில் உள் ளது. இந்த கோவிலில் அங் காள பரமேஸ்வரி, பேச் சியம்மன், மதுரை வீரன், பாலதண்டாயுதபாணி, நவ–கிரகங்கள் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் 87-ம் ஆண்டு மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் கடந்த 18-ந் தேதி தொடங்கியது.அன்று இரவு காப்பு அணிவித்து, கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு முகக்கப்பரை எடுத்து வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19-ந்தேதி மகா அபிஷேக ஆராதனை மற்றும் புஷ்பக்கப்பரை தாங்கும் உற்சவமும் அதை தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் மகா தீபாராதனை நடைபெற்றது. 20-ந்தேதி உற்சவர் அம்பா–ளுக்கு அன்னபூரணி அலங் காரத்துடன் மகா தீபாரா–தனை நிகழ்ச்சி நடைபெற் றது.

    21-ந்தேதியான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் அங்காள பரமேஸ்வரி மற் றும் பேச்சி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மேல் பேச்சி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும் அருட்காட்சி–யுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது.தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு மேல் மயானக்கொள்ளை எனப்படும் அஸ்தி பூஜை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் மருளாளி ராஜேந்திரன், பேச்சியம்மன் வேடத்தில் அங்காள பர–மேஸ்வரி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க, கையில் சூலாயுதம் ஏந்தி பெரிய கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில் தெரு, சிந்தாமணி பஜார், ஓடத்துறை வழியாக ஓயாமரி சுடுகாட்டிற்கு சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ஒரு பிணத்தை சூலாயுதத்தால் குத்தி எடுத்து சாப்பிட்டு, பின்னர் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை–யொட்டி கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    ×