search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவிகளின் கோலாட்டம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி ஊராட்சி மக்கன்டான் கோவில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஈஸ்வரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் மற்றும் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், ராதா ருக்மணி ஆட்டம், தப்பாட்டம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுபாஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி ரஞ்சிதா, செல்வம், கோளம்பழனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.

    • செங்காட்டுப்பட்டியில் நூலக வார விழா நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய, 55- வது தேசிய நூலக வார விழா, செங்காட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புத்தக கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு பயிற்சி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    தமிழ் ஆசிரியர் அனந்தராமன் வரவேற்றார், பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை ஏற்று புத்தக கண்காட்சி திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாஸ்கர் சிறப்புரை வழங்கினார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஏற்புரை வழங்கினார். கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேராசிரியர் வைரமணி வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் பள்ளியில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர் வாசகர் வட்ட தலைவர் ராமராஜன், பள்ளி மாணவ மாணவிகள், ஊர்முக்கிய பிரமுகர்கள் செல்லமுத்து, பெரியசாமி செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செங்காட்டுப்பட்டி கிளை நூலகர் கார்த்திகேயனிடம் ரூ.1000/- வழங்கி புதிய புரவலராக சிலம்பரசன் இணைந்தார். இறுதியாக கீரம்பூர் கிளை நூலகர் நூர் அஹமத் நன்றி கூறினார்.

    • ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழந்தைகள் தினவிழா மற்றும் போட்டிகளில் வெற்றிப்பெற்றோர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து முன்னாள் பிரதமர் நேரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    அப்போது அவர் என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் காரணம் குழந்தைகளை கண்டால் நம் மனதில் உள்ள துன்பங்கள் மறைந்து போகின்றன. சாதிப்பதற்கான காலங்கள் குறைவாக இருந்த காலத்திலேயே நாட்டில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குறிப்பாக ஜவஹர்லால் நேரு, காந்தி, நேதாஜி, பட்டேல் போன்றோர் சாதனைகள் பல கண்டு சரித்திரத்தில் நிலைத்து நிற்கின்றனர். மாணவர்கள் வாய்ப்புகளும், அதற்கான வழி காட்டிகளும் எண்ணிலடங்கா உள்ளன. அதனை பயன்படுத்தி மாணவர்கள் அனைவரும் தேவையற்றவற்றை விடுத்து சாதனைகள் பல படைத்து சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார்.

    விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் செயலாளர் விவேகானந்தன், முதல்வர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், செல்போனின் தீமையினை விளக்கும் விழிப்புணர்வு நாடகமும் நடந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் பயிற்சிக்கு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தந்தை ரோவர் கல்விக்குழுமம் சார்பில் ரோவர் அகாடமி தொடக்க விழா நடந்தது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோவர் அகாடமி தொடக்க விழாவிற்கு ரோவர் கல்விநிறுவன துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலெட்சுமி, அகாடமி இயக்குநனர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

    ரோவர் கல்விநிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து சேர்க்கையை தொடங்கிவைத்து பேசுகையில், இன்றைய சூழலில் உயர்கல்வி பயில்வதும், வேலைவாய்ப்புபெறுவதும் பெரும் சவாலாகவும், போட்டியாகவும் உள்ளது. தந்தை ரோவர் கல்விக்குழுமத்தின் சார்பாக ரோவர் அக்காடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முதல்கட்டமாக நீட், ஜேஇஇ தேர்விற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஏழை,எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் பள்ளி முதல்வர் சந்திரசேகர், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், மேலாளர் ஜெயசீலன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை சங்கத்தில் 69-வது கூட்டுறவு வார விழா நடந்தது
    • மண்டல இணைப்பதிவாளர் தொடங்கிவைத்தார்

    கரூர்:

    தமிழகம் முழுவதும் 69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ராஜாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 'மக்களுக்காக கூட்டுறவு, மக்களைத் தேடி கூட்டுறவு' நிகழ்ச்சியை மண்டல இணைப்பதிவாளர் ப.கந்தராஜா தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு கல்வி, தொழில்முறை மேலாண்மை மற்றும் புத்தாக்கப் பயிற்சி என்ற கருப்பொருளின் அடிப்படையில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பின்னர் இணைப்பதிவாளர் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாக சென்றும், விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்றும் தமிழ்நாடு அரசால் கூட்டுறவுத் துறை மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விரிவாக மக்களிடம் எடுத்துரைத்துத்தனர்.

    • பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
    • வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்

    கரூர்:

    கரூர் கொளந்தா கவுண்டனூர் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் மணிமாலா தலைமை வகித்து பரிசுகளை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி உறுப்பினர் அருள்மணி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா பங்கேற்பு
    • புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும்

    கன்னியாகுமரி:

    பத்மநாபபுரம் நகர வணிகர் சங்க புதிய நிர் வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

    பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு விழா தக்கலையில் உள்ள லலிதா மகால் திரு மண மண்டபத்தில் நடந் தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அலெக்சாண்டர், இணை செயலாளர் விஜயன். மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் விஜயகோபால் வரவேற்று பேசினார்.

    தொடர்ந்து புதிய நிர்வா கிகள் பதவியேற்றனர். தலைவராக ஜெகபர் சாதிக் பொதுச்செயலாளராக விஜயகோபால், பொரு ளாளராக தாணுமூர்த்தி, துணைத்தலைவர்களாக சண்முகம், சுரேஷ்குமார், செயலாளர்களாக மோசஸ் ஆனந்த், எபனேசர், கவுரவ தலைவராக ஆனந்தம் சி.குமார் செயற்குழு உறுப் பினர்களாக ஜெயகுமார், பத்மதாஸ், ஹமாம், ஸ்ரீராம், ஹரி பாலாஜி, வர்க்கீஸ், இளங்கோ, ஜலால், சங்கர மூர்த்தி ஜூட்ஸ் பெர்லின், சேத்திரபாலன், ராஜூ, செய்தி தொடர்பாளராக ஜோஸ்வா ஆகியோர்பதவி யேற்றனர்.

    விழாவின் சிறப்பு விருந் தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் வணிகர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும். வியா பாரிகள் பல கஷ்டங்கள், நஷ்டங்களை சந்தித்து வியா பாரம் செய்கிறார்கள் வணி கவரித்துறை, உணவு பாது காப்பு துறை போன்றவற் றால் ஏற்படும் பிரச்சினை களை சட்டரீதியாக நாம் சந்திக்க வேண்டும்.

    இதுபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை முடக் கும் விதமாக முதலில் வியா பாரிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்தார்கள். அதை விபாபாரிகள் ஓட்டல்கள், டீக்கடை போன்றவற்றிற்கு வியாபாரம் செய்தனர்.

    இப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடியாக விற்கிறார்கள். இதனால் நம் வியாபாரிகள் பாதிக்கப்படு கிறார்கள் இதற்கு முடிவுகட் டுவதற்காக இளம் தொழில் முனைவோர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. நம் குறைகளை அரசிடம் முறை யிடுவோம் அதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் போராடுவோம். நமக்குள் ஒருவருக்கு பிரச்சினை என் றால் அனைவரும் ஒன்று பட்டு நிற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவில் நெல்லை மாவட்ட தலைவர் சின்ன துரை, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் காமராஜ், மண்டல தலைவர் வைகுண்டராஜன், பத்ம நாபபுரம் நகராட்சி தலை வர் அருள் சோபன், ஆணை யர் லெனின், தேர்தல் அதி காரி முருகேசன், சமூகசேவ கர் தக்கலை சந்திரன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் சங்க தலைவர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார். இதில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது
    • மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், வடசேரி மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் டாக்டர் அஜயா மஞ்சு தலைமையில் செவிலியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன், சிலிண்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வடசேரி துருவா கேபிள் டிவி உரிமையாளர் ஆர். ராஜாமணி, தேசிய தடகள உயரம் தாண்டுதல் கோல்டு மெடல் ஆறுமுகம் பிள்ளை மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக குடும்ப நல ஆலோசனை மைய தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
    • குளித்தலை எம்.எல்.ஏ.மாணிக்கம் வழங்கினார்

    கரூர்:

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது,

    அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிவாசல்களில் உள்ள 53 உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையேற்று உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, அரசின் சாதனைகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சந்தியா, கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, குளித்தலை நகர மன்ற தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வட்டாட்சியர் முருகன், குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தி, துணை வட்டாட்சிய வைரப்பெருமாள், அரசு வழக்கறிஞர் சாகுல் ஹமீது, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், நகர் மன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், நங்கவரம் பேரூராட்சி துணை தலைவர் அன்பழகன், நகர பொருளாளர் தமிழரசன், நகரத் துணை செயலாளர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தி செந்தில்குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்த்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்குச்சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது.
    • ஒன்றிய பகுதிகளில் உயிர் நீத்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மேலவெளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

    தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா, மாவட்ட ஒன்றிய குழு தலைவர் வைஜெயந்திமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில், தி.மு.க. தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பது, தஞ்சை வடக்கு ஒன்றிய தி.மு.க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்த கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் முன்னோடிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    நவம்பர் மாதம் 27-ம் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒன்றியம் மற்றும் கிளை கழகங்களால் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் கிளை கழகங்களில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்குசாவடி முகவர்களை நியமிப்பது, ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வார்டு வாக்கு சாவடிகளிலும் பி.எல்.ஏ நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக ஒன்றிய பகுதிகளில் உயிர் நீர்த்த முன்னோடிகளுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது .

    இதில் ஒன்றிய குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மல்லிகா உத்திராபதி, ராமநாதன், பால துரையரசன், கோவி. ராஜேந்திரன், சதீஷ்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மோகன், ஸ்டாலின் ராஜன், செல்வ கலைமணி, ஒன்றிய பிரதிநிதி ஆற்காடு புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் கர்ணன் நன்றி கூறினார்.

    • தேசிய ஒற்றுமை தின விழா நடந்தது
    • வருவாய் துறை சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஒற்றுமை தின நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமை தின நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை வருவாய் துறை சார்பில் கந்தர்வகோட்டை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ஒற்றுமை நாள் ஓட்டத்தை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் தொடங்கிய ஒற்றுமை நாள் ஓட்டம் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஸ்ரீதரன், திலகவதி தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • கந்த சஷ்டி திருவிழாவின் 6-வது நாளையொட்டி இன்று மாலை நடக்கிறது
    • முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்ட லில் ஸ்ரீ முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 37-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது.இதை யொட்டி முருக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

    6-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-30 மணிக்கு மங்கள இசை, தேவ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கலசபூஜை போன்றவை நடக்கிறது. 8 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் 10 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பிற்பகல் 2 மணிக்கு சூரன் பவனி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் ஒற்றைப்புளிசந்திப்பு, சுவாமிநாதபுரம் வழியாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்தகுளம் சந்திப்பு வரை சென்று திரும்பி கோவில் வழியாக பழத்தோட்டம் முருகன்குன்றம் அடிவா ரத்தை சென்றுஅடைகிறது. அங்கு மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக் கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி தேரிவிளை குண்டல் ஸ்ரீமுருகன்கோவில் அறங்காவலர்கள் குழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    இதேபோல நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், மருங்கூர் சுப்ரமணியசாமி கோவில், தோவாளை திருமலை முருகன் கோவில், சொக்கர் கிரி முருகன் கோவில், ஆரல்வாய்மொழி முருகன் கோவில் உள்பட பல முருகன் கோவில்களில் இன்று மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

    ×