search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229948"

    • வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.
    • வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). விவசாயி. இவரது வயலையொட்டி பொது கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது. இவரது வயலையொட்டி வசதியாக பாதை அமைக்க இடத்தை கோவிலுக்காக அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

    ஆனால் இடத்தை கொடுக்க கண்ணன் மறுத்துவிட்டார். சம்பவத்தன்று கண்ணன் தனது குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து மொட்டை போட்டுள்ளார்.

    இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த கென்னடி, அவரது மனைவி கலையரசி, அவர்களது மகன் சிலம்பரசன் (22), மகள் உஷா மற்றும் சிலர் கண்ணனை திட்டி தாக்கினர்.

    மேலும் சிலம்பரசன் தரப்பினர் கண்ணன் வயலில் இறங்கி அங்கு நடப்பட்டிருந்த நாற்றுகளை சேதப்படுத்தினர்.

    இதுகுறித்து கண்ணன் மணல்மேடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேதமடைந்த வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர –வேண்டும்.
    • ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சேதம–டைந்திருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    தரங்கம்பாடி, டிச.18-

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை–களை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

    மோகன்தாஸ்:- மக்கள் கூடும் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாந்தி:- ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த தண்ணீர் தொட்டியை அகற்ற வேண்டும்.

    சக்கரபாணி:- மருதூர் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்து வகுப்பறை கட்டிடம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக ஒரு வகுப்பறை கட்டிடம் தரவேண்டும்.

    ராஜ்கண்ணன்:- மடப்புரம் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடம் சேதமடைந்து இருப்பதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

    முத்துலட்சுமி:-ஆறுபாதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாத இடத்தில் பகுதிநேரஅங்காடி அமைத்து தர வேண்டும். ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் நிலத்தடிநீர் பாதிக்கும் வகையில் மயிலாடுதுறை நகர பாதாள சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரஜினி:-சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை ஆகிய ஊராட்சிகளில் மயான சாலை அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    தற்போது உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் வெண்ணிலா தென்னரசு, துளசிரேகா ரமேஷ் மற்றும் ஒன்றிய பொறியாளர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளநிலை உதவியாளர் முருகன் நன்றி கூறினார்.

    • சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதமானது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    செல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அகிம்சாபுரம் 4-வது தெருவில் சில்வர் பட்டறை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகில் சுவீட் கடை உள்ளது.

    நேற்று இரவு இவர் பட்டறையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பட்டறையில் இருந்து புகை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் பட்டறைக்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து இனிப்பு கடைக்கும் தீ பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரு கடைகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில்வர் பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.
    • கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழப்ப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இந்த கட்டிடம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது.

    இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் தற்போது இந்த அலுவலகம்எந்தவித பராமரிப்பும்இன்றி பழுதடைந்து காணப்ப டுகிறது.

    இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது.இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

    இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ என அஞ்சுகின்றனர்.இந்த பழுதான ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    • சிறிது நேரத்தில் மளமளவென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் வாடி வாசல் கடைத்தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 62). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் இவர் திருப்பதிக்கு சென்று விட்டு இன்று அதிகாலை தஞ்சைக்கு வந்தார். பின்னர் கடையை திறந்து வாசலில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென கடைக்குள் தீ பற்றியது. சிறிது நேரத்தில் மளமள வென பரவி தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. திடுக்கிட்டு எழுந்த கதிரேசன் ஓடி சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி ஊற்றினார்.

    இருந்தாலும் தீ மளமளவென எரிந்த தால் கட்டுப்படுத்த முடியவி ல்லை.இது குறித்து தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இருந்தாலும் கடையின் பெருமளவு பகுதி எரிந்தது. தையல் எந்திரம் மற்றும் அனைத்து பொருட்கள் எரிந்து சேதமானது.

    இது பற்றிய புகாரின் பேரில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவால் தீப்பிடி த்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மர்மநபர்கள், சேதப்படுத்தி கீழே சாய்த்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் 2 வது வார்டு சேடபாளையம் பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது.

     பல்லடம்:

    பல்லடம் 2 வது வார்டு சேடபாளையம் பகுதியில், அரசியல் கட்சி கொடி கம்பங்கள் உள்ளது. இதில் பா.ஜ.க. கொடிக்கம்பமும் உள்ளது. இதனை மர்மநபர்கள், சேதப்படுத்தி கீழே சாய்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் பா.ஜ.க. நிர்வாகி பன்னீர் செல்வகுமார் கொடுத்த புகாரின் பேரில் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மின்மாற்றிலிருந்து உயரழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்பு பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது.
    • மின்கம்பி நிழற்குடை மீது பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதமடைந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலதெரு முக்கிய கடைவீதி பகுதியாகும். இந்த பகுதியில் வங்கிகள் மருத்துவமனைகள் துணிக்கடைகள் பழக்கடை கள் மற்றும் பள்ளி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதி எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.

    நேற்று அப்பகுதியில் தனியார் வங்கிக்கு எதிரே உள்ள மின்மாற்றிலிருந்து மின்சாரம் செல்லும் உயிர் அழுத்த மின் கம்பி திடீரென்று நெருப்புப் பொறிகளுடன் எரிந்து கீழே விழுந்தது. வங்கிக்கு எதிரே பழக்கடை வைத்துள்ள குணசேகரன் என்பவர் தள்ளுவண்டி கடை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் நிழலுக்கு பயன்படுத்தப்படும் மிகப்பெரிய குடை இருந்த காரணத்தால் மின் கம்பி அதில் பட்டு குடை மற்றும் பழங்கள் எரிந்து சேதம் அடைந்தது, உடனே குணசேகரன் அலறியடித்து வெளியேறியதால் உயிர் தப்பினார்.

    தகவல் மின்சாரம் துண்டி க்கப்பட்டு அப்பகுதியில் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதைப்போல் மார்க்கெட் பகுதி செட்டி தெரு, தர்மபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்னணு மற்றும் மின்சாரப் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது காரணமாக மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
    • உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது.

    உடுமலை:

    உடுமலைஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக்கிணறை சேதப்படுத்தி ஆழ்துளைகுழாய்களை உடைத்தெறிந்துள்ள சமூகவிரோத கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளமிக்க ஆழ்துளைக்கிணற்றை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர்விநியோகம் செய்திடவேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது. இதில் சிபிஐ. எம்., செல்லப்பம்பாளையம் கிளைச்செயலாளர் பிரபுராம், உடுமலைஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,டிஓய்எப்ஐ. செயலாளர் தமிழ்த்தென்றல், மாதர்சங்க செயலாளர் சித்ரா, விவசாயிகள் சங்கதலைவர்கள் ராஜகோபால், பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

    • மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
    • கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதமடையும் சூழ்நிலை.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் முள்ளியாறு மற்றும் மாணங்கொண்டான் ஆறு சுமார் 20 கி.மீ தூரம் வரை பாசன மற்றும் வடிகால் ஆறாக ஓடுகிறது.இந்த ஆறுகளில் வாய்மேடு , மருதூர் , ஆயக்காரன்புலம் ,தாணி கோட்டகம் பகுதிகளிலில் 10 கி.மீ தூரம் அதிக அளவில் ஆகாயதாமரை மண்டிக்கிடக்கிறது.

    ஆகாயத்தாமரை ஆற்றுக்குள் தண்ணீர் தெரியாத அளவிற்கு மிக நெருக்கமாக மண்டிக்கி டப்பதால் இந்த பகுதியில் சம்பா சாகுபடி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் செய்யப்பட்டுள்ள நிலையில்தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வயல்களில் தேங்கிய மழைநீர் இந்த ஆறுகளின் வழியாக தான் தண்ணீர் வடிந்து கடலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் ஆறுகளில் ஆகாயத்தாமரை நிரம்பி தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வரும் கனமழையில் சம்பா சாகுபடி நீரில் மூழ்கி சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழக அரசு உடனடியாக ஆற்றில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
    • காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதிகளில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இதனால் காய்கறிப் பயிர்களில் பயிர் சேதம், பூச்சி, நோய் தாக்குதல் உள்ளிட்டவற்றால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய விலையின்மை, பல மடங்கு உயர்ந்த உற்பத்திச் செலவு போன்றவற்றால் தவித்து வரும் விவசாயிகளுக்கு மழை பாதிப்புடன், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் இழப்பும் சேர்ந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    காடுகளில் வசிக்க வேண்டிய காட்டுப் பன்றிகள் காடுகளை விட்டு வெளியேறி கிராமப் பகுதிகளில் தஞ்சமடைந்து, கிட்டத்தட்ட நாட்டுப் பன்றிகளாகவே மாறி விட்டன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அமராவதி, உடுமலை வனச்சரகங்களில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் காட்டுப் பன்றிகள் தற்போது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் ஊருக்குள் ஊடுருவி விட்டன.பகல் நேரங்களில் புதர்களுக்குள் மறைந்து ஓய்வெடுக்கும் காட்டுப் பன்றிகள் இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குள் படையெடுத்து பயிர்களைத் தின்றும், கிளறியும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன.

    தற்போது மடத்துக்குளம், வேடப்பட்டி, கணியூர் உள்ளிட்ட மடத்துக்குளம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மக்காச்சோளம், கரும்பு, நெல், காய்கறிகள் என அனைத்து விதமான பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது இரவு நேரங்களில் மட்டுமல்லாமல் பகல் பொழுதிலும் சில பகுதிகளில் காட்டுப் பன்றிகள் தென்படுகின்றன. இதனால் விவசாயிகளின் பயிர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. மேலும் கால்நடைகளையும் காட்டுப்பன்றிகள் தாக்கி காயப்படுத்தும் நிலை உள்ளது. ஊருக்குள் உள்ள காட்டுப் பன்றிகளை வன விலங்குகள் என்று கருதாமல் சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஒருசில விவசாயிகள் விளை நிலங்களைச் சுற்றி சேலைகளைக் கட்டி வைத்து காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். அதையும் தாண்டி காட்டுப்பன்றிகளால் விவசாயிகளின் பயிர் சேதமடைந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதாக இருப்பதில்லை. அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிர்களை சேதப்படுத்தும் போது இழப்பீடு பெற முடியாத நிலையே உள்ளது. மேலும் விவசாயிகள் நாய்களைப் பயன்படுத்தியோ, பட்டாசு உள்ளிட்டவற்றை வீசியோ, காட்டுப் பன்றிகளை விரட்டும் போது எதிர்பாராத விதமாக அவை உயிரிழக்க நேரிட்டால் விவசாயிகள் குற்றவாளிகளாகும் நிலை உள்ளது. தற்போது காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன் படிப்படியாக வெவ்வேறு பகுதிகள் நோக்கி ஊடுருவி வருகின்றன.இதே நிலை நீடித்தால் விவசாயத்தின் மிகப் பெரிய சவாலாக காட்டுப் பன்றிகள் உருவெடுக்கும் நிலை உள்ளது.எனவே உடனடியாக முடிவெடுத்து, வனத்தை விட்டு வெளியேறிய காட்டுப் பன்றிகளை முழுமையாக அழிக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • ராமேசுவரத்தில் சூறாவளி காற்று வீசியதால் மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல் நீர் புகுந்து சேதமடைந்துள்ளன.
    • இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    பாக்ஜல சந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று கடந்த 2 நாட்களாக வீசி வருகிறது. இதனால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் வடகடல் மற்றும் தென் கடல் பகுதிகளில் கரையோரங்களில் பலத்த அலையுடன் கூடிய காற்று வீசி வருகின்றன. கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை தாண்டி ராட்சத அலைகள் அடித்து வருகிறது. இதன் தாக்கமாக பாம்பன் வடக்கு பகுதியில் கடல் கரையோரங்களில் அமைந்துள்ள மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் ஏறி கூரையால் அமைக்கப்பட்ட வேலிகள் சேதமடைந்தன.

    குடிசை வீட்டிற்குள்ளும் கடல் நீர் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
    • முடிகண்ட–நல்லூரில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மங்கனூர் கிராமத்தில் கடந்த 1997- 98 ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளையும் ஆய்வு செய்து வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சியில் வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது.

    அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும்போது பாலம் உடைந்து சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும்.

    ராணி:-

    திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைப்பதற்கான இடம் உள்ளது.

    அங்கு அங்கன்வாடி அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்–கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் சரியாக வடிகால் வசதி இல்லாத ஊராட்சிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் பொறியா ளர்கள் முத்து, சோமு, மாவட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொன்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இடைநிலை அலுவலர் முருகன் நன்றி கூறினர்.

    ×