search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
    • 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது48).

    இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    பஸ் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்ததனர்.

    இதனை பார்த்த டிரைவர் விஜயகுமார் ஹாரன் அடித்தார். ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் டிரைவர் மற்றும் கண்டெக்டரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    காயம் அடைந்த டிரைவர் மற்றும் கண்டெக்டர் ஆகியோர் தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.
    • பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது.

    சபரிமலையில் மகர விளக்கு திருவிழா நடைபெறும்போது, மலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

    இந்த வனபகுதி வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட பகுதியாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவர் பொன்னம்பலமேடு காட்டுப்பகுதிக்குள் சென்று பூஜைகள் செய்தார்.

    இந்த காட்சிகளை சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலானதை தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜைகள் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோல கேரள வனத்துறையினரும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில் பொன்னம்பலமேட்டிற்குள் செல்ல பூசாரிக்கு உதவிய வனத்துறை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தநிலையில் இந்த வழக்கில் இடுக்கியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் இன்று காலை அவரை கைது செய்தனர். அவரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார்.
    • அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த கொத்தம்பாடியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23), இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார்.

    இவரது நண்பர்களான வாழப்பாடியைச் சேர்ந்த தினேஷ் (24), ஏ.என்.மங்களத்தை சேர்ந்த கில்சன் (24), ரஞ்சித்குமார் (24), இளையராஜா (24), ஆகிய 5 பேரும், நேற்று அதிகாலை மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள டீ கடையில் நின்றிருந்தனர். இவர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அந்த டீ கடைக்கு கள்ளக்கு றிச்சியை சேர்ந்த ஹரினேஷ் (18), பாலா (18), சர்குண பவித்திரன் (18), கோபிநாத் (17), சிபிராஜ் (18), ஆகாஷ் (18), அஜய் (18) ஆகிய 7 பேரும் 3 மோட்டார் சைக்கி ளில் வந்தனர். இவர்கள் அனைவரும் கோவைக்கு சென்று விட்டு, மீண்டும் கள்ளக்குறிச்சி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அங்கிருந்த பிரபாகரன், தான் ஊர்க்காவல் படையில் பணி யாற்றி வருவதாக கூறி, ஹரினேஷ் தரப்பினரிடம் திடீரென தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டுகளை பறிக்க முயன்றதாக தெரிகிறது.

    மேலும் ஹரினேஷ் தரப்பினரை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனடியாக ஹரினேஷ் மற்றும் அவரது நண்பர்கள், இதுகுறித்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ரூமுக்கு தகவல் தெரிவித்த னர். அவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். அதன்படி வாழப்பாடி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.

    தொடர்ந்து பிரபாகரன், தினேஷ், கில்சன், ரஞ்சித்குமார், இளையராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மாலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.

    • கரூர் அருகே பைக் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
    • ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார்

    கரூர்,

    கரூர் அருகே ராமானுாரை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது 52). எலக்ட்ரீஷியனான இவர் கரூர் வடக்கு நரசிம்மபுரம் பகுதியில் உள்ள எலக்ட்ரீக்கடை முன்பு பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆண்டிவேல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பைக்கை திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அப்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார் (31) என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

    • சிலர் வீடுகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவாமூர், எலந்த ம்பட்டுஆகிய கிராமங்களில் சிலர் வீடுகளில்கஞ்சாவை பதுக்கி வைத்துவி ற்பனைசெய்துவருவதாக புதுப்பேட்டை போலீசாரு க்குரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமா ர்தலைமையி ல்போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருவாமூரில் உள்ள ஒரு வீட்டில் வெங்கடேசன் மகன் சிவக்குமார்(20),பெரியஎலந்தப்பட்டு ராஜேந்திர ன்மகன்ராகுல்(22)ஆகியோர் 85கிராம்கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இதேபோல முத்தாண்டி குப்பம் போலீசார் நடத்திய தீவிர கஞ்ச வேட்டையில்கீ ழக்குப்பம்வடக்கு தெரு குமார் மகன் தங்கப்பா ண்டியன் (20)கீழகுப்பம் பகுதியில் கள்ளத்தனமாக கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    • கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
    • ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.

    தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார்.

    கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.

    பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார்.

    அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார். கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார்.

    கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    • போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
    • அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்காக அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் அங்குள்ள பாலாமடம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதனை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனை செய்தனர். இதில் 3 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோட்டை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் (வயது 24), நித்திரவிளை ஆற்றுப்புரம் லிபின் (21) என தெரியவந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.

    எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர். சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
    • ஜனவரி 1-ந்தேதி முதல் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லெட்களை பதுக்கி வைத்து விற்பதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த உக்கடத்தை சேர்ந்த அபுதாகீர்(வயது45) என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 6.250 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா சாக்லேட், ரூ.77 ஆயிரம் மதிப்புள்ள 77.700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அபுதாஹீரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 314 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடமிருந்து சுமார் 483.301 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 177 மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1925.950 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
    • சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு தேவன ஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமாநிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர்.

    பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்து விட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்து உள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரகாசம் பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் டி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (வயது 50) இவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சகாய பன்னீர்செல்வம் (44) என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1லட்சத்து 25ஆயிரம் பணம் வாங்கியிருக்கிறார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பிரகாசம் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தார்.

    இந்நிலையில் பணம் கொடுத்த சகாய பன்னீர்செல்வம் அத்திப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பிரகாசத்திடம் பணத்தைக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாசம் சகாயபன்னீர் செல்வத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைதொடர்ந்து சகாய பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பிரகாசத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை கேலி, கிண்டல் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • சோமரசம்பேட்டை போலீசார் நடவடிக்கை

    திருச்சி,

    திருச்சி சோமர சம்பேட்டை அருகே உள்ள கோப்பு பழக்காட்டு அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது 17 வயது மகள் அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார் (வயது 21) என்பவர் அந்த இளம் பெண்ணை கேலி செய்து கிண்டலடித்தார். அதிர்ச்சி அடைந்த அந்த அவர் வாலிபரை கண்டித்தார்.இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் குமார் இளம்பெ ண்ணை கையால் தாக்கி மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து மோகனா சோம ரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர்.

    • விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.
    • கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அன்சாரி (40). நேற்று முன்தினம் கடைக்கு வந்த மர்ம நபர்கள் செல்போன் சார்ஜர், ஹெட்செட் கேட்டு வாங்கினார்கள்.

    கடை உரிமையாளர் பணம் கேட்டபோது மிரட்டி தாக்கி அடித்து பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர். அவர்கள் மீது கடை உரிமையாளர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொன்னேரி ஜீவா தெருவை சேர்ந்த சுதன் (26), பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அஜித் (21), பொன்னேரி அடுத்த காட்டாவூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21) என்பது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.

    மேலும் தப்பி ஓடிய ரபிக் (22) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×