search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண் பர்களுடன் வந்தார்.
    • ரூ. ஆயிரம் பணத்ைதயும், செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மானடிக்குப் பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி மகன் கலைமகன் (27).இவர் தனது நண்பர்களுடன்வல்லம் ஏரிக்கரையில் நேற்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது கலைமகன் தனது செல்போனில் நெய்வேலி வட்டம் 3-ஐ சேர்ந்த அகிலன் (23) என்பவருடன், நெய்வேலி வடக்குத்து ரவுடியான கோபியுடன் நீபேச் கூடாது என எச்சரித்தார். அதற்கு அவர் ஏன் பேசக்கூடாது, நீ எங்கு இருக்கிறாய் என கேட்டு வல்லம் ஏரிக்கரைக்கு அகிலன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    அப் போது ஏற்பட்ட தகராறில் கத்தி, வீச்சரிவாள் போன்றஆயுதங்களால் சரமாரியாக கலைமகனை வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் காயம்அடைந்தவரை மீட்டு கடலூர் அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். இது பற்றிதகவல்அறிந்ததும்காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் முத்தாண்டிகுப்பம் போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன்மற்றும்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் செல்போன் மூலம் பேசி முந்திரிதோப்பில் மறைந்து இருந்த அகிலன் (23), அவரது நண்பர் பொறி யாளர் வட்டம் 10-ஐ சேர்ந்த தமிழ் அரசன் (29) ஆகிய இருவரையும் கைது செய்து பணம், செல்போனை பறி முதல் செய்தனர்.

    • கூவத்தூர் அருகே 2 பேரிடம் 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர்.

    கூவத்தூர் அடுத்த முகையூர், கோலாவாஞ்சி காட்டுப்பகுதியில் கஞ்சா விற்ற புதுப்பட்டினத்தை சேர்ந்த முபாரக் அலி,தென்பட்டினத்தை சேர்ந்த தனுஷ் ஆகிய 2 பேரை கூவத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங்.
    • லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர்.

    குருகிராம்:

    டெல்லி அரியானா பவனில் குடியுரிமை ஆணையராக இருந்து வருபவர் தர்மேந்தர் சிங். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கடந்த ஆண்டு சோனிபட் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றினார்.

    இந்த சமயத்தில் இவர் கட்டிடங்கள் கட்டுவதற்காக விதி முறைகளை மீறி டெண்டர் தொகையை அதிகரித்து ரூ.1 கோடியே 11 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக டெல்லி ரஞ்சித் நகரை சேர்ந்த லலித் மிட்டல் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குருகிராமில் அரியானா போலீசார் தர்மேந்தர் சிங்கை கைது செய்தனர். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு மற்றும் சீனிவாசன் நகர் பகுதிகளில் மது விற்பனை செய்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கீழக்குடியிருப்பை சேர்ந்த ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகரை சேர்ந்த கோபி (38) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • தகராறை விலக்கி விட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்குதல்

    கரூர்,

    கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது சகோதரர் ஹரிஷ்குமாருக்கும், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் அந்த தகராறை விலக்கி விட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாபாகோவில் அருகே அருண்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயகிருஷ்ணன், முருகன் (42), பாலன் (55) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர்.இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மாயகிருஷ்ணன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பாலனை தேடி வருகின்றனர்.

    • மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.
    • இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேசுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் ரமேஷ் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் ரமேஷ் சந்தேகம் அடைந்தார். இதனால் தினந்தோறும் மணிமேகலையை அடித்து உதைத்தும் வந்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல ரமேஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மணிமேகலையுடன் அவர் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் உண்டானது. அப்போது ரமேஷ், மணிமேகலையை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த குளவி கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டார்.

    இதில் கை, தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரவு முழுவதும் கணவரின் உடலுடன் வீட்டிலிருந்த மணிமேகலை, இன்று காலை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் உள்ள பழங்குடியின மாணவிகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது தன்னார்வலர்கள் அங்குள்ள மாணவிகளிடம் இதுபோன்ற சம்பவம் ஏதாவது உங்களுக்கு நிகழ்ந்து உள்ளதா என கேட்டனர்.

    அப்போது மலைக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் தங்களுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து புகார் எழுதி அவர்கள் வைத்திருந்த பெட்டியில் போட்டனர்.

    மாணவிகள் தங்களிடம் 5 ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து தன்னார்வலர்கள் மாவட்ட கல்வி அதிகாரி சலீம் பாஷாவுக்கு தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் மண்டல கல்வி அலுவலர், பெண் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரிகள் ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    இதில் பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    விசாரணையில் பாலியல் தொல்லை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 5 ஆசிரியர்களை கைது செய்தனர். அவர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    • கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.
    • கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (வயது 40). டிரைவர்.. இவருடைய மனைவி கனகாதேவி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மகாகிருஷ்ணனும், கனகா தேவியும் ஒருவரையொருவர் சந்தேகப்பட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் வாக்குவாதம் முற்றியதில், கனகாதேவியை மகா கிருஷ்ணன் வெட்டிக்கொலை செய்து அப்பகுதியில் ஒரு பிச்சிப்பூ தோட்டத்தில் வீசினார். அவரது முகத்தையும் அடையாளம் தெரியாதபடி சிதைத்தார். பின்னர் தலைமறைவானார்.

    இதுகுறித்து குருவிகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்தார். அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், கணவன்-மனைவி இடையே ஒருவர் மீது ஒருவர் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சினை செய்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே கனகாதேவி, சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகாகிருஷ்ணனை அழைத்து விசாரணை நடத்தி, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் கோபம் அடைந்த மகாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றதும், மனைவி கனகாதேவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அப்போது ஆத்திரத்தில் அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மீனவ கிராமம், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்படி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர். ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் ஆகிய 5 சப்-டிவிஷனில் அந்தந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக வனப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மாவட்டத்தில் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேக பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது நம்பியூர் அருகே ராயர்பாளையம் பகுதியில் நாட்டு சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ராயர்பாளையம் பகுதியில் உள்ள கந்தசாமி (33) என்பவர் வீட்டில் வரபாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அவரது வீட்டில் இருந்து 5 லிட்டர் விஷ வாடையுடன் கூடிய நாட்டு சாராயம் மற்றும் சாராயம் தயார் செய்ய வைத்திருந்த 40 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் வருவதை தெரிந்து கொண்டு கந்தசாமி வீட்டிலிருந்து தப்பிவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ரஞ்சிதாவை (27) போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய கந்தசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகே உக்கடம் பகுதியில் கடத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் இருந்து 5 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் கேன்களில் 10 லிட்டர் சாராயம் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (40) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதைபோல் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சாராயம் விற்றதாக 6 பேரை கைது செய்து உள்ளனர். அவர்களிடமிருந்து 70 லிட்டர் சாராய ஊறல் மற்றும் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுவிலக்கு போலீசார் ஏற்கனவே சாராய விற்பனை சந்தேகப்பகுதிகளான வரபாளையம், ராயர்பாளையம் பகுதிகளில் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? சாராய ஊறல் உள்ளதா? கடத்தப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    பழைய சாராய வியாபாரிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் தற்போதைய தொழில் வேலை குறித்தும் விசாரித்து வருகிறோம். முன்பு கடம்பூர், சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெற்றது. தற்போது மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுதல் குறைந்துள்ளது. சாராயம் குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தாராபுரம் :

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி. சைலேந்திர பாபு அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள்,மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தாராபுரம் டிஎஸ்பி. தன்ராசு உத்தரவின் பேரில் அலங்கியம் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் அலங்கியம், கொங்கு, மனக்கடவு, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தாராபுரம் அருகே அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காங்கயம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அலங்கியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் அலங்கியம் போலீசார் காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டன் (42) என்பவரது வீட்டினை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 10 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதைத்து வைக்கப்பட்டிருந்தஊறல் கைப்பற்றப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது .

    அதன் பிறகு அவரிடம் வேறு ஏதாவது இடத்தில் ஊறல் பதுக்கி வைத்துள்ளாரா என்று விசாரணை நடத்தப்பட்டதில் அவரது வீட்டில் இரண்டு லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். பிறகு 2 லிட்டர் சாராயத்துடன் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் . அதன் பிறகு மணிகண்டன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்ட அலங்கியம் காவலர்களை தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் தனராசு மற்றும் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

    • அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    அவினாசி :

    அவினாசி அருகே சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டு பகுதியில் குன்னத்தூரை சேர்ந்த யோகமூர்த்தி (வயது 38), வஞ்சிபாலயத்தைச் சேர்ந்த சந்தோஸ் குமார்(26), அவினாசி ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கிலி ராஜ்(27) மற்றும் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (27) ஆகியோர் சேவல் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அவர்களிடமிருந்து இரண்டு சேவல் மற்றும் பணம் ரூ. 500 பறிமுதல் செய்யப்பட்டது.

    • கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்தனர்.
    • மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஓசூரை அடுத்த பேரிகை பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அங்கு சென்று சோதனை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது35) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டபோது பாராண்டபள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30), ராசுவீதியைச் சேர்ந்த யுவராஜ் (45), சூளகிரியை அடுத்த மூக்காண்டபள்ளியைச் சேர்ந்த சாத்தப்பா (50), பாலகுறியைச் சேர்ந்த தனுஷ் (22), ஓசூரை அடுத்த தின்னூரைச் சேர்ந்த சரண் (23) ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று சோதனையில் ஈடுபட்டதில் கஞ்சா விற்ற 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×