search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார்.
    • ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்தவர் தனவீரபாண்டியன். இவர் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத்தின் பகுதி தலைவராக இருந்து வருகிறார். இருவரது மகன் சரவணபிரபு (வயது 29). இவர் திருச்செந்தூர் பிரதான சாலை முத்தையாபுரத்தில் இ-சேவை மையம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது ஓட்டல் பக்கத்தில் கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது. இவருக்கும், சரவண பிரபுவுக்கும் நிலம் சம்பந்தமாக கடந்த 2005-ம் ஆண்டு முதல் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஷேக்முகமது, நேற்று முன்தினம் இரவு தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசி உள்ளார். பெட்ரோல் குண்டு கடையின் முன்பு இருந்த விறகுகளில் பட்டு தீப்பற்றி எரிந்து அணைந்தது. இதனால் பெரிய அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

    இது தொடர்பாக சரவணபிரபு அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஷேக்முகமது, தனது கடையில் வேலை செய்யும் மாரிகணேஷ் என்பவரிடம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொடுத்து அனுப்புவதும், அவர் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டை சரவணபிரபுவின் கடை முன்பு வீசுவதும் பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஷேக்முகமதுவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.
    • உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஷாஜகான்பூர்:

    உத்தரபிரதேசத்தில் ஷாஜகான்பூரை அடுத்த தில்ஹார் பகுதியில் அரசு பள்ளி உள்ளது.

    இங்கு 30 வயதான ஆசிரியர் ஒருவர் கம்ப்யூட்டர் பாடம் நடத்தி வந்தார். அவர் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது, அவரிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.

    மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் சுமார் 15 மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளிக்கு செல்லும் நாட்களில் வகுப்பு முடிந்த பின்னர் ஆசிரியர் தங்களை தனியாக அழைத்து உடலை தொடுவதும், தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள். இதையடுத்து கல்விதுறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கம்ப்யூட்டர் ஆசிரியரை கைது செய்தனர்.

    அவரை நேற்று மாஜிஸ்தி ரேட்டு வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கம்ப்யூட்டர் ஆசிரியரின் செக்ஸ் சேட்டைக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • பாரதிய ஜனதா பெண் தொண்டர் சுனிதா அரோரா போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
    • சட்டவிரோத மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த இப்ராகிம் தாமஸ், அவரது மனைவி ரீவா மற்றும் உறவு பெண் பபிதா ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் வசித்து வருகிறார்கள்.

    இப்ராகிம் தாமஸ் அங்கு மத ஊழியம் செய்து வருகிறார். இவர் மீது அதே பகுதியை பாரதிய ஜனதா பெண் தொண்டர் சுனிதா அரோரா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் இப்ராகிம் தாமஸ் மற்றும் அவரது மனைவி ரீவா ஆகியோர் தன்னை ஒரு பார்லருக்கு வரவழைத்து தன்னை மதமாற்ற முயற்சித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இப்ராகிம் தாமஸ், அவர் மனைவி ரீவா மற்றும் உறவு பெண் பபிதா ஆகியோர் மீது சட்டவிரோத மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • எர்ணாவூர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
    • காருடன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவொற்றியூர்:

    எர்ணாவூர் பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 15 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் இருந்த திருவொற்றியூர் அம்பேத்கார் நகரை சேர்ந்த விக்னேஷ், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தருண் கிருஷ்ணா,ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காருடன், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்ததது தெரிய வந்தது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்த போது அவர்கள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்ததது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பா ஜனப்பன் சத்திரம், கிருபா நகரைச் சேர்ந்த சிவா என்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி கடையில் குட்கா பதுக்கி விற்ற நெய்வேலி கிராமத்தை சேர்ந்த அலி என்பவரையும் கைது செய்தனர்.

    • நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் இறந்து விட்டார். தெய்வானையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    நேற்றுமுன்தினம் இரவு தெய்வானையம்மாள் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த உறவினர் ஒருவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது தெய்வானையம்மாளின் கை, தலை பகுதியில் காயங்கள் இருந்தது. அவரை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்த 7 அரை பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.21 ஆயிரம் பணமும் கொள்ளைபோய் இருந்தது. இதனால் நகை, பணத்துக்காக தெய்வானையை யாராவது கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரி (40) என்ற பெண் தெய்வானையம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது ஈஸ்வரியுடன் அவரது மகன் சஞ்சய் பழனி (19), அவரது நண்பர் கவுதமன் (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை, பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரி உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூதாட்டியிடம் இருந்த நகை, பணத்தை அபகரிக்க பல நாட்கள் திட்டமிட்டு இருந்ததாகவும், சம்பவத்தன்று மாலை அவர் தூங்கிக் கொண்டு இருந்த போது கழுத்தை நெரித்து கொள்ளையடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இவர்கள் தவிர பானுமதி (30) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். கொலையாளிகள் பற்றிய விவரம் தெரிந்தும் அதனை மறைத்து அவர்களுக்கு உதவியதாக பானுமதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
    • கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை அருகே பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் விஷால் (வயது31). இவர் அந்த பகுதியில் தங்கப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தனது மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோருடன் பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது, தலைக்கு கருப்பு முகமூடி மற்றும் கையுறைகளால் தலையை மூடி கொண்ட ஒருவர், திடீரென நகை பட்டறைக்குள் நுழைந்தார். அங்கு இருந்த விஷாலை அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். இதையடுத்து பட்டறையில் வேலை பார்த்து கொண்டு இருந்த விஷால், மாமா ரவி மற்றும் ஜிதேந்தர் ஆகியோர் உதவியுடன் முகமூடி கொள்ளையனை மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து முகமூடி கொள்ளையனை பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முகமூடி கொள்ளையன் கோவை ராஜா நகரை சேர்ந்த சுரேஷ் (53) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர்.
    • அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராம பகுதியில் இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் இருந்து இளைஞர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். பின்னர் தப்பியோடிய இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது அவர்களிடம் சுமார் 150 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது.

    கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தடத்தாரை கிராமத்தைச் சேர்ந்த பேட்டப்பா மகன் ராகுல் 22 என்ற இளைஞரை கைது செய்து காஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் (வயது.60)இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை குப்பம்மாள் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டீன் முன்பு கட்டியிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் என் வீட்டீன் முன்பு எதற்கு ஆடுகளை

    கட்டுகிறாய் என மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அருகில் இருந்த விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு

    பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர்.

    இதுகுறித்து மாரண்டஅள்ளி போலிசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர.

    • திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் குணசேகரின் வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • போலீசாரை கண்டதும் 5 பேரும் தப்பியோட முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள செங்குளத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சீட்டு விளையாடி கொண்டிருந்த 5 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்தனர். அதில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (வயது 33), பெரியசாமி (40), சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (48) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 84 ஆயிரத்து 900-ஐ கைப்பற்றினர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பலவேசம் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    செங்கோட்டை

    செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை சட்ட நாதன் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 44).

    இவர் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடையநல்லூர் அருகே அய்யாபுரத்தை அடுத்த கீழே சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36), சங்கரன்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன்.

    இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்ட விரோ தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து அய்யாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    வாசுதேவநல்லூர்

    வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் செம்புலிங்கம் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவர் மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில் காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்த மூக்காண்டி (60) என்பவர் சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் தனியார் பள்ளி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார்.

    அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×