search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • பெண்ணிடம் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
    • இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார்.

    கரூர்,

    கரூர் தான்தோன்றிமலை கடைத்தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது37). இவருடைய கணவர் ராமு பெட்டி கடை முன் பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (19), நவீன் (19), லோகேஷ் (22) ஆகிய 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து ராமு மீது மோதியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற 3 பேரும் மது போதையில் காமாட்சி வீட்டில் புகுந்து தகராறில் ஈடுபட்டதோடு, தட்டி கேட்ட காமாட்சியை கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி தாக்குதல் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    • போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.
    • போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செல்போன் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்து விற்பனைக்கு அனுப்பும் தனியார் நிறுவனத்தின் குடோன் உள்ளது.

    இதில் அடிக்கடி விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது. இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது குடோனில் ஊழியராக வேலை பார்த்து வரும் ஏகாட்டூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் ஒருவரம் குடோனில் கணக்கெடுப்பது போல் நடித்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம்மதிப்புள்ள செல்போன்களை திருட தங்களது ஆடைக்குள் மறைத்து வைத்து செல்வது தெரிந்தது.

    இது குறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஹரிசை கைது செய்தனர். மேலும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள்.

    • நகை திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
    • பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

    கரூர்,

    கரூர் காளியப்பன்னுாரை சேர்ந்த பழனிசாமி (வயது39) என்பவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். செயின் உட்பட தங்க நகைகளை தனது கடைக்கு எடுத்து வந்தார். கடையில் வைத்து விட்டு வியாபாரத்தை மேற்கொண்டுள்ளார். சிறது நேரம் கழித்து பார்த்த போது நகைகளை காணவில்லை. இதையடுத்து கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சத்தியசீலன் (28) என்பவர் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

    • கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யபட்டார்
    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது40). இவரது மனைவி ஜெயசித்ரா (32). இவரது மீது சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு ஜெயசித்ராவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    • கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த அருங்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் முரளி. அ.தி.மு.க பிரமுகர்.

    ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக (பொறுப்பு) ரகுவரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரை ஊராட்சி தலைவியின் கணவர் முரளி அடிக்கடி திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மே1-ந்தேதி நடந்த கிராமசபை கூட்டத்தில் முரளி தலையீடு இருந்ததாக தெரிகிறது.

    இதற்கு கிராம நிர்வாக அலுவலர் ரகுவரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக கிராமநிர்வாக அலுவலர் ரகுவரனுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரகுவரன் திருவாலங்காடு போலீசில் புகார் செய்தார். மேலும் மோசடி புகாரும் கொடுத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவி சரண்யாவின் கணவர் முரளியை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி தொடர்பாக ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் நகரப் பகுதிகளில் போலீசார் ரோந்துபணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான நபரை விசாரணை செய்தனர்.
    • அவர் பயாஸ் அகமது (வயது 23)என்றும்,அவரிடமிருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரப் பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் கிழங்கு விழுப்புரம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ெரயில்வே காலனி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் விழுப்புரம் நாப்பாலைய வீதியை சேர்ந்த சம்சுதீன் மகன் பயாஸ் அகமது (வயது 23) என்பது தெரியவந்ததும். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • கேமரா காட்சியில் பக்தர் ஒருவர் தனது செல்போனில் கோவிலை வீடியோ எடுத்தது பதிவாகி இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

    கடந்த 7-ந்தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர் ஒருவர் பலத்த பரிசோதனையும் மீறி கோவிலுக்குள் தனது செல்போனை கொண்டு சென்றார்.

    மூலவர் மீதுள்ள ஆனந்த நிலையம் கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பலத்த சோதனையை மீறி அவர் எப்படி கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களின் மெத்தனபோக்கால் இந்த சம்பவம் நடந்ததா? என விசாரணை நடத்தி வந்தனர்.

    வீடியோ படம் பிடித்த பக்தர் குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பக்தர் ஒருவர் தனது செல்போனில் கோவிலை வீடியோ எடுத்தது பதிவாகி இருந்தது.

    அவரின் தரிசன டிக்கெட்டில் இருந்த ஆதார் எண்ணை கொண்டு தெலுங்கானாவை சேர்ந்த பக்தரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் செல்போன் எப்படி கொண்டு சென்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
    • தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மேலூர்-சிவகங்கை சாலையில் மலம்பட்டி நான்கு வழிச்சாலை பாலத்திற்கு கீழே நேற்று மாலை 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்திருந்தவர் கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்தார். மேலும் 2 மதுபாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி திரி போட்டு அதனை மோட்டார் சைக்கிளில் பவுச்சில் வைத்திருந்தனர்.

    பாலத்தின் கீழே சென்ற போது அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது, பவுச்சில் இருந்த ஒரு பெட்ரோல் நிரப்பிய பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக அந்த வாலிபர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது ஆத்திரமடைந்த ஒரு வாலிபர், பவுச்சில் இருந்த மற்றொரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த திரியில் தீயை பற்ற வைத்து தூக்கி வீசியுள்ளார். அது வெடித்துசிதறி சாலையோரத்தில் விழுந்து தீப்பற்றியது.

    இதனை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர்கள், தீயை அணைத்து விட்டு அங்கிருந்து வேகமாக தப்பி சென்றனர். பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதனை கொண்டுவந்த வாலிபர்கள் இருவருக்கும் காயமும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்த சம்பவத்தை பார்த்தவர்கள், அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

    பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களின் உருவம் அதில் பதிவாகி இருந்தது.

    மேலும் அவர்கள் சென்ற வாகனத்தின் எண் தெளிவாக தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்ததில், ஒரு வாலிபர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் இருவரும் திருப்பத்தூருக்கு சென்றது தெரியவந்தது.

    அவர்கள் மோட்டார் சைக்கிளில் எதற்காக பெட்ரோல் மற்றும் பெட்ரோல் குண்டுகளை கொண்டு சென்றனர்? ஏதேனும் சதித்திட்டத்துடன் சென்றார்களா? என்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார். தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த வினோத் குமார், பழைய வண்ணாரப்பேட்டை மன்னப்பன் தெருவை சேர்ந்த பாபுலால் ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுரேஷ்குமார் பென்சில் பேக்டரி ரெயில்வே கேட் அருகில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது வினோத்குமாரும், பாபு லாலும் மதுகுடிக்க பணம் கேட்டனர். ஆனால் சுரேஷ் குமார் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    எனினும் ஆத்திரத்தில் இருந்த வினோத்குமாரும், பாபுலாலும் சம்பவத்தன்று சுரேஷ்குமாரை மதுகுடிக்கலாம் என்று கூறி அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சென்றனர். திடீரென அவர்கள் அருகில் கிடந்த கல்லால் சுரேஷ்குமாரை தாக்கினர்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கினார். உடனே வினோத்குமாரும், பாபு லாலும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து வினோத் குமார், பாபுலால் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • வன அதிகாரியை தாக்கினர்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை புதூர் கற்பகம் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல்(வயது65), ஓய்வு பெற்ற வன அதிகாரி. சம்பவத்தன்று இவரது வீட்டு வாசல் முன்பு கே.கே.நகரை சேர்ந்த அரியபுத்திரன் என்பவர் தனது காரை நிறுத்தியிருந்தார். காரை வேறு பகுதியில் நிறுத்துமாறு வெற்றிவேல் கூறினார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரியபுத்திரன், வெற்றிவேலை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரியபுத்திரனை கைது செய்தனர்.

    மதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜா(வயது44). இவர் சம்பவத்தன்று பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ்(24), பழங்காநத்தம் தினேஷ்குமார்(25), தினேஷ்வரன்(30), அஜய்குமார்(19) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே புக்கசாகரம் திப்பேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா (வயது90). விவசாயி. இவருடைய மனைவி பாப்பம்மா. இவர்களுக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். மேலும் வெங்கட்ரமணப்பாவிற்கு சொந்தமாக 16 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மகன்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முடிவு செய்தார். இதையடுத்து சொத்து பிரிப்பு தொடர்பாக வெங்கட்ரமணப்பாவுக்கும், மூத்த மகன் சிவானந்தாவுக்கும் (45) இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சிவானந்தா தனது தந்ைத மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவானந்தா தந்தை வெங்கட்ரமணப்பாவை வீட்டுக்கு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தனியாக அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவானந்தா தந்தை என்றும் பாராமல் அவருடைய கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்டு கிடந்த வெங்கட்ரமணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொன்றுவிட்டு தப்பியோடிய சிவானந்தாவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • அருள் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார்.
    • அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ் (வயது 21) இவர் நேற்று நொலம்பூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். அங்கு சென்ற பயணக்களைப்பில் அந்த பகுதியில் உள்ள குளம் அருகே தூங்கினார். அப்போது ஈச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் அங்கு வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரேம் ராஜை கை, கால்களில் வெட்டினார். பின்னர் அங்கிருந்து அருள் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒலக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கத்தியால் வெட்டுப்பட்டு படுகாயம் அடைந்த பிரேம் ராஜை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிரேம் ராஜுக்கும் அருளுக்கும் ஏற்கனவே முன்விரோத தகராறு இருந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  மேலும் அருள், சிறுத்தை என்கின்ற ஸ்ரீகாந்த் என்பவரும் சேர்ந்து பிரேம்ராஜை அறிவானால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் அருள், ஸ்ரீகாந்தை விலை வீசிதேடிவந்த நிலையில் ஓங்கூர் டோல்கேட் அருகே மறைந்திருந்த அருள் மற்றும் ஸ்ரீகாந்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அருளை போலீசார் விசாரணை செய்ததில் பிரேம்ராஜ் அருளிடம் கடனாக பணம் வாங்கியுள்ளார். அதை அருள் கேட்டதற்கு தர வேண்டிய பணத்தை பிரேம்ராஜ் திருப்பி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அருள்மற்றும் அவரது கூட்டாளியாள ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் பிரேம் ராஜை சரமாரியாக வெட்டியதாக தெரிவித்துள்ளார்.மேலும் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×