search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது
    • அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அத்திபாடி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது இந்துமதி (வயது19).

    ரவியின் உறவினர்களான அதேபகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (60), பிரவீன்குமார் (45). இவர்களுக்கும் ரவிக்கும் இடையே பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் ரவியை தாக்க முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ரவியின் மனைவி இந்துமதியை சரமாரியாக 2 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த இந்துமதியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரவி சிங்காரபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயன், பிரவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • நண்பர்கள் 2 பேரும் மதுகுடித்து விட்டு வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (வயது 33), பிரசாந்த் (23). இவர்கள் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பீர் பாட்டிaலால் பிரசாந்தை தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பிரசாந்த் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மின் இணைப்பு மாற்றம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம்
    • கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

    திருச்சி,

    திருச்சி மேலச்சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கட்டிட காண்ட்ராக்டரான இவர், தனது நண்பர் பாலு என்பவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை ஜெயராம் நகரில் வீடு கட்டி கொடுத்துள்ளார். பின்னர் அந்த வீட்டுக்கான மின் இணைப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளார்.இதற்கிடையே பாலு, அந்த குடியிருப்பினை வணிக வளாகமாக மாற்ற முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து குடியிருப்புக்கான மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி வெங்கடேசனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.உடனே வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை, திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்துள்ளார். விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், காண்டிராக்டர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த கடந்த 17-ந்ேததி அன்று காலை சந்தித்து விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார்.அதற்கு அவர் ரூ.20,000 லஞ்சமாக கொடுத்தால் மின் இணைப்பின் டேரிப் மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார். பின்னர் இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக உதவி பொறியாளர் ராஜேஷ் பதினையாயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு மாற்றம் செய்து தர இயலும் என்று கட்டாயமாக கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையின் காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். வெங்கடேசனின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று காலை 11 மணியளவில் வெங்கடேசனிடம் இருந்து உதவி பொறியாளர் ராஜேஷ் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து ராஜேஷை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த மின் இணைப்பு டேரிஃப் மாற்றம் செய்வதற்கு அரசு கட்டணம் ரூ. 400 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர்

    புதுக்கோட்ட:

    புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரெகுநாதபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா நரங்கியப்பட்டு பகுதியை சேர்ந்த பாரிவள்ளல் (வயது 41), வெட்டிக்காடு தெற்கு தெருவை சேர்ந்த பாஸ்கர் (39), இலுப்பவிடுதி கோவில் தெருவை சேர்ந்த ஞானம் (41) ஆகிய 3 பேர் எரிசாராயத்தை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, 13½ லிட்டர் எரிசாராயம், 5 செல்போன்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 3 பேரையும் ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.




    • கறம்பக்குடியில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்த நிலையில் இருந்தன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் சிறப்பு காவல் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுப்ரமணியன் (வயது 50), சதானந்தன் (48) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    • பெரம்பலூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பெண் உதவியாளருடன் கைது செய்யபட்டார்
    • லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 75), விவசாயி. இவர் தனது வீட்டுமனை பட்டாவை மகன் லோகநாதன் பெயரில் மாற்றம் செய்ய டி.களத்தூர் கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் (33), கிராம நிா்வாக உதவியாளா் ஈஸ்வரி (39) ஆகியோரை நாடியுள்ளார். அப்போது அவர்கள் வீட்டுமனை பட்டாவை பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சின்னதுரையிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னதுரை இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் ஆகியோரிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி சின்னதுரை நேற்று மதியம் 1 மணியளவில் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னதுரை லஞ்ச பணத்தை அலுவலகத்தில் பணியில் இருந்த ஈஸ்வரியிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய ஈஸ்வரி, தீனதயாளனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று தீனதயாளன், ஈஸ்வரி ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து அவர்கள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.கைதான கிராம நிர்வாக அதிகாரி தீனதயாளன் ஈரோடு மாவட்டம், கங்காபுரம், வடக்கு தெருவை சேர்ந்த நடராஜனின் மகன் ஆவார். தீனதயாளன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் டி.களத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இதற்காக தீனதயாளன் திருச்சி மாவட்டம், துறையூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து பணிக்கு வந்து சென்றுள்ளார்.

    இதற்கு முன்பு தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார். கிராம நிர்வாக உதவியாளர் ஈஸ்வரி ஆலத்தூர் தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த பழனியாண்டியின் மனைவி ஆவார். விவசாயிடம் வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர்.
    • கும்பலிடம் இருந்து பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில், வார இறுதி நாளில் 2 சீக்கிய குழுவினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வடக்கு கலிபோர்னியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் இந்தியாவில் நடந்த கொலை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆவர்.

    இந்த கும்பலிடம் இருந்து போலீசார் ஏ.ஆர். 15 மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மிஷின் துப்பாக்கிகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • தமிழகம் முழுவதும் இதுவரை 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் மருத்துவ படிப்பு தகுதி இல்லாமல் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையில் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து கைது நடவடிக்கைகளை மருத்துவ துறையும், போலீஸ் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் உரிய மருத்துவ படிப்பு இல்லாமல் பொதுமக்களை ஏமாற்றி மருத்துவ சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் குறித்து தொடர் புகார்கள் வந்தது. அவ்வாறு செயல்பட்டு வரும் போலி டாக்டர்கள் மீது போலீஸ் துறை சட்டப்படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    அதன்படி காஞ்சிபுரம் மாநகர பகுதியிலுள்ள போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்திட காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மருத்துவ நலப்பணிகள் இயக்குனர் கோபிநாத் தலைமையில் காஞ்சிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர், மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த திடீர் சோதனையில் காஞ்சிபுரம் நிமிந்தகரை தெருவை சேர்ந்த சுதர்சன்பாபு மற்றும் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னதி தெருவை சேர்ந்த சேஷாத்திரி ராஜீ ஆகிய இருவரும் எந்தவித தகுந்த மருத்துவ படிப்பும் இல்லாமல், போலி டாக்டர்களாக செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலி டாக்டர்கள் இருவரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று 17-ந் தேதி சந்தோஷின் தாத்தா முத்து தனது பேரனிடம் சுரேஷ்குமார் சேரக்கூடாது என்று கூறி சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
    • முத்துவின் மனைவி ராணி, ராஜா மற்றும் அவரது தம்பி முனியப்பன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வத்தல்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 56). இவரது மகன் சுரேஷ்குமார் (22).

    அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சந்தோஷ் (17). இந்த நிலையில் சுரேஷ்குமாரும், சந்தோஷும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் சந்தோஷிடம் பழக வேண்டாம் ராஜா கடந்த சில நாட்களாக சுரேஷ்குமாரை மிரட்டியுள்ளார்.

    இதனை மீறி இருவரும் மீண்டும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று 17-ந் தேதி சந்தோஷின் தாத்தா முத்து தனது பேரனிடம் சுரேஷ்குமார் சேரக்கூடாது என்று கூறி சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து தகவலறிந்த முத்துவின் மனைவி ராணி, ராஜா மற்றும் அவரது தம்பி முனியப்பன் ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த சுரேஷ்குமாரையும் தாக்கியுள்ளனர்.

    இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த 2பேரையும் மீட்டு சின்ராஜை பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், சுரேஷ்குமாரை தருமபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து அவரது மகன்கள் ராஜா, முனியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறவைாக உள்ள ராணியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • கரட்டாங்காட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கரட்டாங்கா ட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் கிளினீக்கில் ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    கிளினீக் நடத்தி வந்த அண்ணாதுரை, டில்லியில் சித்த மருத்துவ படிப்பு முடித்ததாக தெரிவித்தார். அதற்கான சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. மேலும் மருத்துவ படிப்பு முடிக்காமல், நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்து, ஊசி செலுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தெற்கு போலீசில் அண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தந்தை, மகனான மகேந்திரன், சதிஷ் ஆகியோர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.
    • அங்கமங்கலம் தோணிபாலம் அருகே சதிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    குரும்பூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் அடுத்த மாரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சதிஷ் (வயது 23). இவரும், இவரது தந்தையும் திருச்செந்தூர் கே.டி.சி. டெப்போ அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த மாசானமுத்து (25) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதிஷ் பைக் வாங்குவதற்காக திருச்செந்தூர் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மாசானமுத்து, உன் தந்தை என்னிடம் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்தை தரவில்லை என்று தகராறு செய்து, அந்த பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சதிஷ் அங்கமங்கலம் தோணிபாலம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார்.
    • அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-ஊட்டி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை எதிரே பிரபல தனியார் மதுபான பார் செயல்பட்டு வருகிறது.

    இந்த பாரில் நீலகிரி மாவட்டம் கேத்தியை சேர்ந்த மனோஜ்குமார்(47) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கேரளாவை சேர்ந்த சதீஷ்குமார், கண்ணன், ராஜன், சந்திரன் ஆகிய 4 பேர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று பாருக்கு ஒரு நபர் வந்து, மது அருந்தியுள்ளார். அவருக்கு பார் ஊழியரான சதீஷ்குமார் மது மற்றும் உணவு பொருட்களை வினியோகம் செய்தார்.

    பின்னர் அந்த நபரிம் அதற்கான பணத்தை சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் கொடுக்க மறுத்ததுடன், பார் ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டிலை உடைத்து தலையில் தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த சக ஊழியர்கள், ஓடி வந்து, அந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனால் அவர், அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றார்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் சேர்ந்த அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும் காயம் அடைந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பி யுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பார் ஊழியரை தாக்கிய நபர், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த சரவணகுமார்(43) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ெஜயிலில் அடைத்தனர்.

    ×