search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    ஆலங்குடியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலூர் பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த கே.வி.கோட்டையை சேர்ந்த முத்து (வயது 40), பள்ளத்திவிடுதி வடக்கு பட்டியை சேர்ந்த நாடியான் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் அடுத்த அமராவதிபாளையம் கருமாங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 39). இவர் அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 60 ஆயிரம் பணம், மற்றும் செல்போன் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் நல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை செய்து வரும் திண்டுக்கல், வேடச்சந்தூரை சேர்ந்த குமார் (20) என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அகமதாபாத்:

    சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக 1992-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டவர் பிரகாஷ் ஜெயின்(வயது56). குஜராத் மாநிலம் போடக்தேவ் பகுதியை சேர்ந்த ஜவுளி வியாபாரியான இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த ஏப்ரல் 9-ந் தேதி, 13.9 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை வைத்திருந்ததற்காக அவரை அகமதாபாத் நகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு ஜெயின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் புலித்தோல் வைத்திருந்ததாக அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர். அவர் மீது வன விலங்குகள் (பாது காப்பு) சட்டம், 1972 இன் பிரிவுகள் 2, 39 (பி), 44, 49 (பி), 50 மற்றும் 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, அவர் தமிழ்நாட்டின் திருச்சி வனச்சரக பகுதியில் விலங்குகளை வேட்டையாடியதாக தெரிகிறது. அவரிடம் இருந்து ஒரு புலித்தோல், 2 யானை தந்தம், இரண்டு கொம்புகள் மற்றும் நரியின் வால்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவரை அகமதாபாத் போலீசார் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    ஜெயினுடன் மேலும் 7 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதனிடையே கைதான ஜெயின் மற்றும் 7 பேரையும் வனத்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். கைதான ஜெயின், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் 2006-ம் ஆண்டு வரை சேலத்தில் முகாமிட்டு வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

    • 3 லிட்டர் கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
    • 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல்களை அழித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(வயது 40) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 லிட்டர் கள்ளச்சாராயம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையத்தை சேர்ந்த சின்னதுரை(45)என்பவர் அவருக்கு கள்ளச்சாராயம் விநியோகம் செய்தது தெரிய வந்தது.இதையடுத்து சுக்கம்பாளையத்திலுள்ள சின்னதுரை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு பதுக்கி வைத்திருந்த 5 லிட்டர் கள்ளச்சாராய பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல்களை அழித்தனர். மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அடுப்பு, சிலிண்டர், பாத்திரங்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரிடமும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பூ பாலன் (வயது 40) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பெருமகவுண்டனூர் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் ரோந்து சென்று சோதணை செய்ததில் அப்பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்த பூ பாலன் (வயது 40) என்பவர் கள்ளச்சாராயம் விற்று வந்தது தெரிய வந்தது.

    உடனே அவரை போலீசார் கைது செய்து 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கைதானவர்களிடம் 3 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • கைதானவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கோவை,

    ஆனைமலை பழைய ஆத்துப்பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கஞ்சா விற்ற சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ஹக்கீம் (39) என்பவரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கொண்டு வந்து ஆனைமலை பகுதிகளில் கஞ்சா விற்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ. 1900 பணம், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை போல கருமத்தம்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த கோண்டுகேவத் (28) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார்.
    • கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமை யிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டி ருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட் டல் விடுத்தார். மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகார ளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். விசாரனை செய்து வழக்குபதிவு செய்து ஒசூர் சிறைசாலையில் அடைத்தனர்

    • ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது54), ஆட்டோ டிரைவர். இவர் அண்ணா பஸ் நிலையம் அருகில் நின்றபோது சிறுவன் உள்பட 2பேர் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரை, 2 பேரும் தாக்கினர்.

    இது குறித்து ரவிக்குமார் மதிச்சியம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தாக்கிய சக்கிமங்கலம் இளமனூரை சேர்ந்த வினோத்குமார் (32) என்பவரையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

    • போக்குவரத்து தலைமை காவலரை தாக்கிய கடை ஊழியரை கைது செய்தனர்.
    • ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சாந்தரூபன்(வயது32). இவர் ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சங்கரன்கோவில் முக்குரோட்டில் வாகன ேசாதனையில் சாந்தரூபன் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு வாலிபர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி ஏன் ஹெல்மெட் அணியவில்ைல என விசாரித்தனர். அவரிடம் சாந்தரூபன் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர் போக்குவரத்து போலீசாரை அவதூறாக பேசி சாந்தரூபனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர்கள் வாலிபரை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்த பிரித்விராஜ்(26) என்பதும் எலக்ட்ரிக் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் என்பவரை கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய முதல்நிலை காவலர் கணேசன் தலைமையிலான போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த வாலிபர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

    மேலும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் காவலர் கணேசன் புகாரளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த பூ வியாபாரி நவீன் குமார் (24), என்பவரை கைது செய்தனர். போலீசார் விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து ஓசூர் சிறைசாலையில் அடைத்தனர் .

    • பட்டாசுகள்-கருந்திரிகள் பறிமுதல் செய்தனர்.
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சாத்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் சேர்மசங்கர்(வயது37). இவர் மதுரை-சிவகாசி ரோட்டில் உள்ள கொங்கலாபுரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக கீழத்திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த கணேசன்(34) என்பவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி டி.கே.எஸ். ஆறுமுகம் ரோட்டை சேர்ந்தவர் முருகன்(48). இவர் சட்டவிரோதமாக கருந்திரிகளை பதுக்கி வைத்ததாக மாரனேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 80 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
    • போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அனுச்சைகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் விமல் (வயது 35) ஆரோவில் உள்ள தனியார் ஓட்டலில் மானேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விமல் ஓட்டலுக்கு வேலைக்கு தனது மோட்டார் சைக்கிளில் அனுமந்தையிலிருந்து ஆரோவிலுக்கு சென்றார்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக விமல் மோட்டார் சைக்கிள் வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை பின்தொடர்ந்து வந்து,ஆரோவில் பொம்மையார்பாளையம் அருகே விமலின் மோட்டார் சைக்கிளை அந்த 6பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். உடனே அந்த கும்பல் விமலை சுற்றிவளைத்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விமலை சரமாரியாக குத்தினர்.

    இதில் விமல் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விமலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்துபோன விமலும், விமலின் அண்ணன் வினோத் இருவரும் புதுச்சேரி மாநிலம் ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்தவர்கள். 2019-ஆண்டு ரவுடி சோழன் குரூப்பிற்கும் மற்றொரு ரவுடி ஜனாகுரூப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ரவுடி சோழன் குரூப்பை சேர்ந்த வினோத்தை ஜனா குரூப்பினர் வெட்டிக் கொன்றது. இதனால் வினோத்தின் சாவிற்கு பழிக்குப்பழி தீர்ப்பதற்காக வினோத்தின் தம்பி விமல் ஜனாவை கொல்வேன் என்று அனிச்சகுப்பத்தில் உள்ள ஜனாவின் மாமாவிடம் சென்று கூறினார். உடனே ஜனாவின் மாமா இந்த செய்தியை ஜனாவிடம் கூறினார்.

    இதனால் ஜனா முதற்கட்டமாக விமலை தீர்த்துகட்ட வேண்டும் என முடிவெடித்து ஜனா குரூப்பை சேர்ந்த கீழபுத்துப்பட்டு செல்வராசு மகன் ஜனா (வயது 32), ரவி மகன் அரவிந்த் (22), புதுச்சேரி லாஸ்பேட்டை தண்டபாணி மகன் உதயகு மார் (26), நாகராஜ் மகன் கார்த்திகேயன் (32), பவழ நகர் சரவணன் மகன் லோகேஷ் (23), காலாப்பட்டு ஜில்பட் மகன் தாமஸ் (23), ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் கடந்த ஒரு வாரமாக விமல் எங்கெங்கு செல்கிறார் என்று நோட்டமிட்டு நேற்று விமலை சுற்றிவளைத்து கொலை செய்தனர் என்பது தெரியவந்தது.

    மேலும் இதுகுறித்து கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனிப்படை அமைத்து அந்த 6 பேர் கொண்ட கும்பலை தேடி வந்த நிலையில் அவர்கள் ஆரோவில் அருகே உள்ள முந்திரிதோப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே முந்திரிதோப்பிற்கு விரைந்த கோட்டக்குப்பம் போலீசார் அங்கு பதுங்கி இருந்த ஜனா, அரவிந்த், உதயகுமார், கார்த்திகேயன், லோகேஷ், தாமசை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ×