search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230640"

    • முன்விரோதம் காரணமாக வடிவேல் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
    • பட்டபகலில் பழனியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள என்.குரும்பபட்டியை சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது27). இவர் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது பழனி அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஒருவரை வெட்டிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறைக்காக ஊருக்கு வந்த வடிவேல் இன்று காலை பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கினர்.

    மேலும் அரிவாளால் வடிவேலை வெட்டத் தொடங்கினர். உயிருக்கு பயந்து வடிவேல் பஸ் நிலையம் நோக்கி ஓடினார். இருந்தபோதும் அவர்கள் விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பஸ் நிலையம் அருகே பக்தர்கள் மற்றும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவத்தை பார்த்து அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து அடிவாரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட வடிவேல் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக வடிவேல் வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சி மூலம் கொலையாளிகளை கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    பட்டபகலில் பழனியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
    • ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசி பாலா முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பொது செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செய லாளர் வக்கீல் வெங்கடா ஜலபதி என்ற குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ஜெட் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா, மண்டல தலைவர்கள் குரு கண்ணன், பெரியதுரை உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

    • தம்பியுடன் கள்ளத்தொடர்பால் வெறிச்செயல்
    • போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

    திருச்சி,

    திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28), ரகுநாத் (25) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடு மேன்களாக பணியாற்றி வருகின்றனர்.இதில் அமர்நாத்துக்கு திருமணமாகி மாரியம்மாள் (25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் இருந்தனர். அமர்நாத் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனியாகவும், ரகுநாத் தனது தாய், தந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்தநிலையில் ரகுநாத்திற்கு, தனது அண்ணியான மாரியம்மாளுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் தங்கள் செல்போன்களில் ஆபாச படங்களை மாறி மாறி பரிமாறிக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. இதை அறிந்து அமர்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மனைவியை கண்டித்தார். ஆனால் கணவரை அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமர்நாத் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டியதில் மாரியம்மாள் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனையடுத்து வெட்டிய கத்தியுடன் அமர்நாத் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரியம்மாள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    • ஜெயிலுக்குள் கொலையுண்ட தில்லு தாஜ்பூரியா மீது கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    டெல்லி திகார் ஜெயிலில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல தாதா கும்பலில் தலைவன் தில்லு தாஜ்பூரியா என்ற சுனில் மான் என்பவன் அடைக்கப்பட்டு இருந்தான். இன்று காலை 6.30 மணி அளவில் ரவுடி கும்பல்களுக்கு இடையே திடீர் மோதல் உருவானது. இதில் அந்த ஜெயிலில் உள்ள மற்றொரு ரவுடி கும்பல் தலைவன் யோகேஷ் துண்டா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தில்லு தாஜ்பூரியாவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினான்.

    இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தில்லுவை ஜெயில் அதிகாரிகள் மீட்டு தீனதயாள் உபாத்தியா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த தாக்குதலில் மற்றொரு கைதியான ரோகித் என்பவர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    ஜெயிலுக்குள் கொலையுண்ட தில்லு தாஜ்பூரியா மீது கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி ரோகினி கோர்ட்டு வளாகத்தில் ஜிதேந்தர் மான் சோகி என்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் இறந்தார். வக்கீல் வேடத்தில் வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தில்லுவின் கூட்டாளிகள் 2 பேரை பாதுகாப்பு படை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தில்லு சேர்க்கப்பட்டார். தில்லுவை போலீசார் வேறு ஒரு வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்து திகார் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அவனுக்கும் மற்றொரு ரவுடியான யோகேஷ் துண்டாவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த சண்டையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் உச்சகட்டமாக இன்று நடந்த மோதலில் தில்லு கொல்லப்பட்டு உள்ளான். இந்த சம்பவம் மற்ற கைதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வசந்தியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.
    • கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் டெபுராய், குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    ஆரல்வாய்மொழி:

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் குளத்தின் அருகே செங்கல்சூளை உள்ளது .

    மிஷின் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் இந்த செங்கல் சூளையை நடத்தி வருகிறார். இங்கு 4 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் மேற்கு வங்காளம் மாநிலம் போல் பூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (வயது 29) என்பவர் கணவர் டெபுராய் மற்றும் 9 வயது மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று அவர்கள் வேலை செய்து விட்டு வீட்டில் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை வசந்தி, தனது வீட்டில் காயங்களோடு பிணமாக கிடந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவர்கள் செங்கல் சூளை உரிமையாளர் சசிக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சம்பவ இடம் வந்து பார்த்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து டெபுராயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது 9 வயது மகனிடம் விசாரித்த போது, இரவில் மது அருந்தி விட்டு வந்த டெபுராய்க்கும், வசந்திக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரம் அடைந்த டெபுராய் கம்பால் வசந்தியை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டெபுராயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வசந்தி, 3-வது மனைவி என்பதும் வசந்திக்கு, டெபுராய் 2-வது கணவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 9 வயது மகன், வசந்தியின் முதல் கணவருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் டெபுராய், குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் தற்போது அவர் மனைவியை கொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வசந்தியின் உடலில் பல்லால் கடித்த காயங்களும் இருப்பதாக தெரிகிறது. எனவே டெபுராய் குடிபோதையில் மனைவியை கடித்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுபற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அண்ணனை கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
    • தாய் மாரியம்மாள் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    மதுரை விராட்டிபத்து அரிஜன காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன்.கொத்தனார். இவரின் தம்பி திரவியம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் திரவியம் சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் தெருவில் நின்று தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட பாலமுருகன் தம்பியை கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.

    இதைத்தொடர்ந்து ஆத்திரத்துடன் சென்ற திரவியம் வேல் கம்புடன் வந்து அண்ணன் பாலமுரு கனை சரமாரியாக தாக்கி னார். இதில் பாலமுருகனுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது தொடர்பாக பால முருகனின் தாய் மாரியம்மாள் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து திரவியத்தை கைது செய்தார்.

    • பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
    • நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி இன்றுநாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

    நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெச வாளர் காலனியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் கூட மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு கொடுக்கப்படும் என்று கூறியது போன்று மதுவை வீடு தேடிக் கொண்டு கொடுக்காமல் இருந்தால் சரி. காங்கிரஸ் ஆட்சியின் மிசா. பா.ஜ.க. ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பிய போது மிசாவின் கொடுமைகளை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆர்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும். பா.ஜ.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கட்டும். இதுதொடர்பாக மாநில தலைவர் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். கலைஞர் முதல்வராக, திரைப்பட தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக பல முகங்கள் அவருக்கு உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய புகழ் சேர்க்க முடியும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து. பேனா மட்டுமல்ல அவருக்கு நிறைய செய்ய முடியும். அதனையும் அவர்கள் யோசிக்க வேண்டும். கலைஞருக்கு உரிய மரியாதை அவருக்கு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கர சம்பவம்
    • குடும்ப தகராறில் நடந்ததா என போலீசார் விசாரணை

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). விவசாயியான இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியும் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை அவரை குடும்பம் நடத்த வருமாறு சண்முகசுந்தரம் நேரிலும், உறவினர்கள் மூலமாக அழைப்பு விடுத்தும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சண்முகசுந்தரம் தனியாகவே வசித்து வந்தார்.அதே பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரத்தின் சகோதரி, அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி அவர், மீண்டும் வெளியில் சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சண்முகசுந்தரம் வெளியில் வரவில்லை.வழக்கம்போல் காலை உணவை தயார் செய்த சண்முகசுந்தரத்தின் அக்காள் சாப்பாட்டை கொண்டு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். அங்கு படுக்கையில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த அறை முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து உடனடியாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் சிறுகனூர் போலீசார் கொலை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இரண்டாவது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று, தனியாக வசித்து வந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாய சங்க பிரதிநிதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேவகோட்டை அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கினர்.
    • தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி 11-ந் தேதி அதிகாலையில் தாய் கனகம், மகள் வேலுமதி ஆகியோரை கொலை செய்து 60 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அருகில் படுத்திருந்த வேலுமதி மகன் மூவரசன் என்ற 13 வயது சிறுவனை மண்டையை உடைத்து காயப்படுத்தி விட்டு குற்றவாளிகள் தப்பினர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த கோரச்சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக நேரடி கண்காணிப்பில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 8 தனி படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையின் போது 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்பொழுது விசாரணை தீவிரமடைந்து முக்கிய நபர்கள் விசாரணை வளையத்தில் சிக்கிருப்பதாக தெரிகிறது. அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சில நாட்களில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்.37 வயது வாலிபரான இவர் நேற்று மதியம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார்.

    சமூக ஆர்வலரான இவர் சென்னை செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் திடீரென கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. இதில் சர்புதீனின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவரால் தப்பமுடியவில்லை. சம்பவ இடத்திலேயே சர்புதீன் துடிதுடித்து பலியானார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து சென்றனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சமூக ஆர்வலர் சர்புதீன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்புதீன் வழக்கு போட்டதும் அதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் மோதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆக்கிரமிப்புகள் விவகாரம் தொடர்பாக இருந்து வந்த மோதல் காரணமாகவே சர்புதீன் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீனை வெட்டிக்கொன்றதாக 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ரகுமான், மன்சூர், இப்ராகிம், அஜிஸ், நஸிம், ரகுமான், வெள்ளை,சலீம், பரூக். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 9 பேரில் சலீம் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.அவர்கள் சர்புதீன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கேமரா காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
    • விவசாய சங்க பிரதிநிதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). விவசாயியான இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியும் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    பலமுறை அவரை குடும்பம் நடத்த வருமாறு சண்முகசுந்தரம் நேரிலும், உறவினர்கள் மூலமாக அழைப்பு விடுத்தும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சண்முகசுந்தரம் தனியாகவே வசித்து வந்தார்.

    அதே பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரத்தின் சகோதரி, அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி அவர், மீண்டும் வெளியில் சென்றார்.

    பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சண்முகசுந்தரம் வெளியில் வரவில்லை.

    வழக்கம்போல் காலை உணவை தயார் செய்த சண்முகசுந்தரத்தின் அக்காள் சாப்பாட்டை கொண்டு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார்.

    அங்கு படுக்கையில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    இதுகுறித்து உடனடியாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சிறுகனூர் போலீசார் கொலை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரண்டாவது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று, தனியாக வசித்து வந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விவசாய சங்க பிரதிநிதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர்.

    சென்னையை சேர்ந்தவர்கள் மணி, பீமா, நரேஷ் மற்றும் நாகராஜ் திரைப்பட நடன கலைஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றனர். அங்குள்ள லாட்ஜில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் இரவு படப்பிடிப்பு முடிந்து லாட்ஜிக்கு வந்த 4 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர். தங்களது செல்போனில் சத்தமாக பாடலை வைத்துவிட்டு நடனம் ஆடியபடி மது குடித்தனர்.

    இதனால் லாட்ஜில் தங்கி இருந்தவர்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. இதுகுறித்து காவலாளி யாதகிரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மொட்டை மாடிக்கு சென்று அங்கு நடனம் ஆடி கொண்டிருந்தவர்களை கண்டித்தார்.

    அப்போது நடன கலைஞர்களுக்கும், காவலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து திடீரென காவலாளி யாதகிரியை மாடியில் இருந்து கீழே தள்ளினர். கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். யாதகிரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னையை சேர்ந்த மணி, பீமா, நரேஷ், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×